சர்வதேசம்

தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை தேவை: ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை தேவை என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகிறார். இதற்காக சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். ‘நேற்று இன்று நாளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி 12ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து அவர் கூறும்போது, 'நான் அயல்நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது, சென்னையில் எப்போது இது போன்று இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் ஏற்படும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்துள்ளது'' என்றார்.

மேலும் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பற்றி கூறும்போது, ‘

ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி. அவர்களுக்குள் ஏதோ ஆதங்கம் இருக்கிறது. அதனால் தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ரஜினிகாந்த் அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், இசை, கலைகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்க்கை இன்னும் மேம்பட வேண்டும். அதிசயம் நிகழ வேண்டும் என்று நான் உணர்கிறேன்'' என்றார்.

Comment (0) Hits: 172

கனடா ஸ்கார்பாரொ நகரில் வாகன விபத்து - இருவர் பலி!

கடனா, ஸ்கார்பாரொவில் நகரில் இன்று(03) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து, உள்ளூர் நேரப்படி இன்று(03) அதிகாலை 4.00 மணிக்கு முதலுதவியாளர்கள் விபத்து நடந்த நெடுஞ்சாலை 401 வார்டன் அவென்யூவிற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், வாகனம் வீதி சமிக்ஞ்சை பலகையுடன் மோதியதில் பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்து நடந்த வார்டன் அவென்யக்கும்10 கென்னடிரோடுக்கும் இடைப்பட்ட பகுதி மூடப்பட்டடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 30 ஆம் திகதியும் கனடா நாட்டின், ஒன்றாரியோ நகரில் கலெடன் பகுதியில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகியதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனா்.

கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் நிலவிய குளிர் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் வீடுகள் மற்றும் வீதிகள் பனியில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 178

அமெரிக்காவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 05) அதிகாலை 2:39 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை.

Comment (0) Hits: 192

பிரித்தானியா முழுவதும் பல ஆயிரம் வீடுகள் வெறுமை! ஆய்வில் தகவல்!

பிரித்தானியாவில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகின்ற நிலையில் 11 ஆயிரம் வீடுகள் வெறுமையாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 11 ஆயிரம் வீடுகள் வெறுமையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக Liberal Democrats கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

இது மட்டுமன்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 60,000 வீடுகள் வெறுமையாக உள்ளது எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 23,000 குடியிருப்புக்கள் வெறுமையாக உள்ளது எனவும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 216,000 குடியிருப்புகக்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறுமையாக உள்ளது எனவும் குறித்த கட்சியினர் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சுமார் 9,000 ஆதரவற்ற மக்கள் தங்களது இரவுப் பொழுதை தெருக்களிலே கழிப்பதாகவும் இது கடந்த ஆறு ஆண்டுகளில் 134 விழுக்காடுகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நாடு முழுவதும் பல ஆயிரம் குடியிருப்புக்கள் வெறுமையாக பாவனை அற்று கிடக்கும் நிலையில் ஆதரவற்ற மக்கள் தெருக்களில் குளிரில் தங்களது பொழுதை கழிப்பது என்பது தேசிய முறைகேடு என Liberal Democrats கட்சியின் தலைவர் Vince Cable குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு ஆவண செய்யவேண்டும் எனவும் வெறுமையாக உள்ள வீடுகள் உடனடியாக தேவையானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 186

தான் அமைத்த வாக்காளர் மோசடி கமிஷனை தானே கலைத்த டிரம்ப்

சட்டவிரோத வாக்களிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, வாக்காளர் மோசடி கமிஷன் ஒன்றை அமைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அதனை கலைத்துள்ளார்.

அமெரிக்காவின் பல மாநில அரசுகள், இக்கமிஷனுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்கள் மோசடி நடைபெற்றதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தேர்தல் ஆணையம் சான்றிதழ் அளித்து வெளியிட்ட முடிவுகளில், டிரம்பை விட அவரது போட்டியாளர் ஹில்லாரி க்ளின்டன் மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
"வரிசெலுத்துவோரின் பணத்தில், இந்த முடிவில்லாத சட்டப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக தேர்தல் ஒருங்கிணைப்பிற்கான ஆலோசனை கமிஷனை கலைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்" என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் மோசடி கமிஷனை அமைத்தது, இடது சார்புடைய வாக்காளர்களை ஒடுக்கும் சூழ்ச்சியென ஜனநாயகவாதிகள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு உண்மையா?
இப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?
கடந்த தேர்தலில், மக்கள் அளித்த வாக்குகளில் ஹில்லாரி கிளின்டன் வெற்றி பெற்றிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த டிரம்ப், "சட்டவிரோதமாக வாக்களித்த லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளை நீக்கினால்" தாம்தான் அதிலும் வெற்றி பெற்று இருப்பேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். சட்டவிரோத வாக்குகள் குறித்த கருத்திற்கு எந்த ஆதாரமும் அவர் அளிக்கவில்லை.

டிரம்பின் இந்த சர்ச்சைக்குரிய கூற்று, மாநில தேர்தல் அதிகாரிகளால் பலமுறை விவாதிக்கப்பட்ட நிலையில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், அவரது பெயர்கள், முகவரி, மற்றும் அரசியல் தொடர்பு குறித்த தகவல்களை மோசடி கமிஷனுக்கு அளிக்க பல மாநில அரசுகள் மறுத்துவிட்டன.

Comment (0) Hits: 185

பிரித்தானியாவில் வீசிய எலினோர் புயலினால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

பிரித்தானியாவை தாக்கிய எலினோர் சூறாவளியினால், சுமார் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை அச்சுறுத்தி வந்த எலினோர் புயல் பல பகுதிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் வட அயர்லாந்தில் குறித்த புயலின் தாக்கத்தினால் சுமார் 12 ஆயிரம் வீடுகளுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானியாவில் வட அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் தென்மேற்கு பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காற்று 145 கிலோ மீற்றர் வேகத்தில் வீசத் தொடங்கியுள்ள நிலையில், மக்களை அவதானமாக இருக்குமாறு பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலின் சீற்றத்தினால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Comment (0) Hits: 185

பிளாஸ்ரிக் பாவனைக்குத் தடை விதித்தது மொன்றியல்

கனடாவின் மொன்றியலில் மலர்ந்திருக்கும் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பை பாவனைக்கு தடைவ விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பாவனை அதிகரித்துவருவதனால் பிரதிகூலங்கள் அதிகரித்துகொண்டே செல்கின்றன.

கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிப்படைகின்றன. இந்நிலையில் கனடாவின் முக்கிய நகரமான மொன்றியில் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2018 தை முதலாம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. எனினும் கடைகளில் பழம் மற்றும் காய்கறிகளுக்கு பயன்படுத்தப்படும் மெல்லிய பைகளுக்கும் இறைச்சி மூட பயன்படுத்தும் பைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடை அழுலுக்கு வந்துள்ள நிலையிலும் வணிகர்களுக்கு ஆறு மாத காலம் சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் தடையை மீறினால் ஒரு தனிநபருக்கு 1,000 டொலரும் நிறுவனத்திற்கு 2,000 டொலர் வரையும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று விக்டோரியா மாகாணத்திலும் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் இத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கனேடிய பிளாஸ்டிக் தொழில் சங்கத்தின் வலைத்தளத்தில் பெரும்பாலான பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதாக பதிவிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 184

அமெரிக்காவின் GSP வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும்

அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி வரி சலுகை நிறுத்தப்பட்டதற்கும் ஜெருசலம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த நிலைப்பாட்டுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை துணைப்பேச்சாளர்களான டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இது தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளிக்கையில் விளக்கமளித்தனர்.
 
மத்திய கிழக்கு விஜயம் தொடர்பில் பண்டாரநாயக்க காலம் முதல் அரசாங்கம் அணிசேராக்கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது.
 
இதனடிப்படையிலேயே சமகால நல்லாட்சி அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட இஸ்ரேலின் தலைநகரம் ஜெருசலம்; தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு இலங்கை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
 
128 நாடுகளில் 120 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்தன. இலங்கையும் இவ்வாறே செயற்பட்டது.
 
எனவே மத்திய கிழக்கு தொடர்பாக வழமையான அணிசேரா கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
 
பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு பின்னர் பதவிக்கு வந்த யுஎன்பி அரசாங்கமும் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்று டொக்டர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
 
அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில்,
 
அமெரிக்கா இந்த ஜிஎஸ்பி சலுகையை 9 நாடுகளுக்கு வழங்கிவருகின்றன. இதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியாக வழங்கப்படும் ஒன்றல்ல. இடைக்கிடையே அமெரிக்காவினால் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை. இருப்பினும் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
 
அமெரிக்காவின் சலுகை ஆடைத்தொழிற்சாலைக்கு மாத்திரமே கிடைக்கப்பெற்றது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 2.8பில்லியன் பெறுமதியான ஏற்றுமதிப்பொருட்களில் 128 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மாத்திரமே ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்கப்பெறுகின்றது. இது ஒரு சதவீத பங்காகும். இது எமக்கு பெரும் பாதிப்பு அல்ல.
 
இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்கப்பெறும் ஜிஎஸ்பி சலுகை தொடர்ந்தும் எமக்கு கிடைத்து வருகின்றது என்றும் குறிப்பிட்டனர்.
Comment (0) Hits: 185

Page 6 of 6