சர்வதேசம்

சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் குறித்து இன்று அறிவிப்பு

சீனாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இன்று அறிவிக்கவுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக அறிவாற்றல் சொத்துக்களைக் களவாடி பரிமாறுகின்றமை தொடர்பாக இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்படவுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து சீனாவும் அமெரிக்காவும் நீண்டகாலமாக பேச்சு நடத்தியுள்ள போதும், எவ்வித இறுதித் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனையடுத்தே பொருளாதார தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 330

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, தற்போது 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் முதியோருக்கான தேசிய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பின், அதனை ‘முதியோர் சமூகம்’ எனக் குறிப்பிடுவது வழக்கம் எனவும் தற்போது சீனாவும் அந்த நிலைக்கு வந்திருக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் சுமார் 24 கோடியே 10 இலட்சம் பேர், 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பதுடன் சீன மக்கள் தொகையில் முதியவர்கள் 17 தசம் 3 சதவீதமாக வியாபித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடருமானால், 2050 ஆம் ஆண்டு சீனாவில் 48 கோடி முதியவர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, நாட்டு மக்கள் தொகையில் 34.9 சதவீதமாகும்.

இவ்வாறு முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டுக்கு பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு செயற்றிட்டம் வகுத்து வருகின்றது என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் சீனாவில் 1979 ஆம் ஆண்டு ‘ஒரு குழந்தை கொள்கை’ அமுல்படுத்தப்பட்டது. இதன்மூலம் குழந்தை பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், மறுபுறம் முதியோரின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது. எனவே, இந்தக் கொள்கையை 2016 ஆம் ஆண்டு சீன அரசு இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

PTI

Comment (0) Hits: 200

தனிப்பட்ட தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார் மார்க் சக்கர்பேர்க்

முகநூல் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை, முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

கேம்பிரிஜ் ஆய்வுக் குழுவினால் 50 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சக்கர்பேர்க், மிகப்பெரிய நம்பிக்கை முறியடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் முகநூல் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்கள் 'அறுவடை' செய்யப்படுகின்றமைக்கு எதிராக, புதிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது. அவ்வாறு பாதுகாக்க முடியாத பட்சத்தில் தங்களால் சேவை வழங்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் முகநூல் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை அறுவடை செய்த எப் எனப்படும் செயலிகள் தொடர்பான பரந்த அளவிலான விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அத்துடன் புதிய செயலிகளை உருவாக்குகின்றவர்கள், முகநூல் கணக்கிற்குள் பிரவேசிக்கும் எல்லையை வரையறை செய்யவும் பல்வேறு தடைகளை அமுலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 221

மூன்று ஆண்டுகளாக சாலி டாலி செய்த வேலை

கலி­போர்­னி­யா­வைச் சேர்ந்த சாலி டாலி, புகைப்­ப­ழக்­கத்­துக்கு எதி­ரான நடவடிக்­கை­களை மேற்­கொண்டு வருகின்­றார்.

கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளாக, புகைத்­து­ விட்­டுத் தூக்கி எறி­யும் சிக­ரெட் துண்­டு­களை அப்­பு­றப்­ப­டுத்தி, சேகரித்­து வருவதுடன், இது­வரை 10 இலட்­சம் சிக­ரெட் துண்­டு­க­ளை சேக­ரித்­துள்ளதாக டாலி தெரிவிக்கின்றார்.

‘‘பத்து இலட்­சம் சிக­ரெட் துண்­டு­களை மூன்­றரை ஆண்­டு­க­ளில் நான் சேகரித்­ததை எல்­லோ­ரும் சாத­னை­யாக நினைக்­கின்­றார்­கள். என்­னைப் பொறுத்­த­வரை இது வேதனை. சிக­ரெட், பிடிப்­ப­வர்களை மட்­டு­மின்றி, ஏனையவர்களுக்கும் இது தீங்கை விளை­விக்­கின்­றது.

குப்­பைத் தொட்­டி­யில் போடா­மல், தெரு­வில் வீசும் சிக­ரெட் துண்­டு­களே இவ்­வ­ளவு என்­றால், மொத்த எண்ணிக்கையை நினைத்­தால் மலைப்­பாக இருக்­கின்­றது.  சில நாட்களில் 3 ஆயி­ரம் சிக­ரெட் துண்­டு­க­ளைக் கூடச் சேக­ரித்­தி­ருக்­கின்­றேன்.

சிக­ரெட் பிடிப்­ப­வர்­க­ளி­டம் குப்­பைத் தொட்­டி­யில் முறை­யா­கப் போடச் சொல்­வேன். பிறகு சிக­ரெட் எவ்­வ­ளவு தீங்­கா­னது என்­பதை விளக்கி, பழக்கத்தை விட்­டு­ வி­டுமாறு கேட்­டுக்­கொள்­வேன். புகைப் பிடிப்­பதை விடுகிறார்­களோ இல்­லையோ, தெரு­வில் வீசா­மல் குப்­பைத் தொட்­டி­யில் வீசும் வழக்­கத்­தை­யா­வது சிலர் கடை­ப்பி­டிப்­பது என்­னு­டைய முயற்­சிக்­குக் கிடைத்த வெற்­றி­யா­கப் பார்க்­கி­றேன்’’ என்­கி­றார் சாலி டாலி.

Comment (0) Hits: 205

மறைந்த நடராஜன் உடல் நாளை சொந்த ஊரில் நல்லடக்கம்!

சென்னை பெசன்ட் நகரில் வைக்கப்பட்டிருந்த நடராஜனின் சடலம் அம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சசிகலாவின் கணவரும், 'புதியபார்வை' இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல் நலக்குறைவால் அவரது 76 வயதில் சென்னையில் காலமானார். 

கடந்த 17 ஆம் திகதி இரவு, நடராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், சிகிச்சை பலனின்றி நடராஜன் மரணமடைந்தார். 

இதனையடுத்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. நடராஜனது சடலத்துக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, கவிஞர் வைரமுத்து, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பாரதி ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ம.சுப்ரமணியம் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். தமிழர் நலனுக்காக நடராஜன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்றும், அவரது மறைவு பேரிழப்பு என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஈழத்தமிழர் போராட்டத்தை உலக அளவில் கொண்டு சென்ற நடராஜனின் மறைவு, திராவிடத்திற்கு பேரிழப்பு என கி.வீரமணி புகழாரம் சூட்டினார். 

நல்ல தமிழ் காதலனை இழந்து விட்டோம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

அரசியலில் நடராஜனால் பலர் அடையாளம் காட்டப்பட்டதாக நாஞ்சில் சம்பத் கூறினார்.  

தமிழ் இயக்கத்தின் மீது நடராஜன் தீராத பற்று கொண்டவர் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்நிலையில், மரணமடைந்த நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை விளாரில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 240

பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் 1500 இற்கும் மேற்பட்டோர் பிரதமரை பதவி விலகுமாறு கோரி கோஷங்களை எழுப்பிய வண்ணமுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த மாதம் இலஞ்ச ஊழல் மோசடி மற்றும் நம்பிக்கை இழப்பு ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் பென்ஜமின் நெத்தன்யாகு மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comment (0) Hits: 188

நாளை கைத்தொலைபேசிக்கான இணைய சேவை முடக்கப்படும்

இந்தோனேசியாவின் - பாலித்தீவில் வாழும் இந்து சமூகத்தினரின் நாட்காட்டியின் பிரகாரம் நாளை சனிக்கிழமை புதுவருடம் பிறக்கின்ற நிலையில், அதனையொட்டி அந்த நாட்டில் கைபேசி மற்றும் கணனி உபகரணங்களுக்கான இணையத்தள சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபியி புதுவருட தினத்தையொட்டி அந்தத் தீவின் விமான நிலையமும், அந்த நாட்டு நேரப்படி நாளை காலை 6 மணியிலிருந்து 24 மணி நேரத்துக்கு மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நயிபி புதுவருட தினமானது மௌன தினத்தைக் குறிக்கின்ற நிலையில், அந்தப் பிராந்தியத்திலுள்ள பல இந்துக்கள் கைபேசிகளுக்கும் இணையத்தள பக்கங்களுக்கும் அடிமையாகி, புதுவருட நிகழ்வின் தார்ப்பரியத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபடலாம் எனபதனாலே அந்த சேவைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய இந்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹோட்டல்கள், பொதுச்சேவைகள், விமானசேவைகள், வங்கிகள் மற்றும் பாதுகாப்பு சேவைகள் என்பவற்றிலான வைபை சேவைகள் வழமை போன்று செயற்படும் என இந்தோனேசியா தொலை தொடர்பாடல் அமைச்சின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 204

இளைஞர்களுக்கு நிறைய திட்டங்களை வைத்துள்ளேன்; மானாமதுரையில் கமல்

வளமான எதிர்காலத்தை நமக்காக உருவாக்க இளைஞர்களுக்கு அதிகளவான திட்டங்களை வைத்துள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர் மன்றத்தினரால் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மேடை அமைக்கப்பட்டு ஒருவர் மட்டும் அமர இருக்கை போடப்பட்டிருந்தது. அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர்.

இதன்போது, மேடை முன்பாக வந்த கமல்ஹாசன், காரில் இருந்தவாறு கூட்டத்தினரைப் பார்த்து கும்பிட்டார். பின்னர் உரையாற்றினார். அதன்பின், மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்தில், அவரது ரசிகர்கள், பொதுமக்கள் திடீரென கமல்ஹாசனின் காரை மறித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய கமல்,

நான் அரசியலுக்கு வந்ததே எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைதான். அந்த திருப்பு முனையில் இந்த திருப்புவனமும் சம்பந்தப்பட்டுள்ளது. மக்களுக்கு, இளைஞர்களுக்கு நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அதுதொடர்பாக, மதுரை பொதுக் கூட்டத்தில் அறிவிக்கிறேன். இங்கு கூடிய கூட்டமெல்லாம் மதுரைக்கு வாருங்கள். வளமான எதிர்காலத்தை நமக்காக உருவாக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

Comment (0) Hits: 201

ஜேர்மனிய அதிபராக நான்காவது தடவை பதவியேற்றார் ஏஞ்சலா மெர்க்கல்

ஜேர்மனிய அதிபராக ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது தடவையாக பதவியேற்றுள்ளார்.

ஜேர்மனிய அதிராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல்லின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்றது.

இதில் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்க்கல்லுக்கும் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மார்டின் ஷூல்ச்சுக்கும் கடும் போட்டி நிலவியது.

இதில் 33 சத வீத வாக்குகள் பெற்று ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதில் மார்டின் ஷுல்ஸுக்கு 20 சதவீத வாக்குகள் கிடைத்தன.

இந்த நிலையில் ஜேர்மனியின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில் மெர்க்கலுக்கு ஆதரவாக 364 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன் மூலம் 4 ஆவது தடவையாக ஜெர்மனி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஞ்சலா மெர்க்கல் பதவி ஏற்றுக் கொண்டார்.

பதவிப்பிரமாண நிகழ்வின்போது உரையாற்றிய ஏஞ்சலா மெர்க்கல், தான் வேலையை ஆரம்பிப்பதற்கான நாள் வந்துவிட்டது என்பதை அனைவரும் உணர்வீர்கள் என தெரிவித்தார். அத்துடன் ஜெர்மனிக்கான புதிய மாற்றம் ஜெர்மனிக்கான புதிய ஒற்றுமை, இதுதான் முன்னரும் நம்மிடையே இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 261

மாலைதீவில் தேசிய அவசரகால நிலை நீடிப்பு

மாலைதீவில் தேசிய அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை மீளக் கட்டுயெழுப்புமாறு முன்வைக்கப்பட்டுவரும் சர்வதேச அழுத்தங்களை மீறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒன்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 6 ஆம் திகதி ஜனாதிபதி அவசரகால உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவசர கால நிலை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதுடன்இ தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க அந்நாட்டு ஜனாதிபதி நேற்று பாராளுமன்ற அனுமதியைக் கோரியிருந்தார்.

நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணித்து எதிர்கட்சியினர் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வௌியிட்டிருந்தனர்.

நேரமின்மை காரணமாக அவசரகால நிலையை மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும்இ ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர கால நிலையை நீடிக்க அனுமதியளித்துள்ளனர்.

மாலைதீவுகளின் தேசிய அவசர கால நிலை நீடிப்பிற்கு இந்தியா எதிர்ப்பு வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 212

சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருவோரை சட்டத்துக்கு முரணாக விடுவிக்க முடியாது என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே, முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஜீவ்காந்தி கொலை விவகாரத்தில் சிறையில் இருப்பவர்களை மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில், செய்தியாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைவாக இடம்பெறுவதாகவும், சட்டத்தை மீறி அவர்களை விடுவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 191

ரஷ்யாவில் தேவாலயத்திற்கு அருகே துப்பாக்கிச்சூடு: 4 பெண்கள் உயிரிழப்பு

ரஷ்யாவின் தஜெஸ்தானில் தேவாலயத்துக்குக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கிஸ்ல்யார் பகுதியில் உள்ள குறித்த தேவாலயத்தில் வழிபாடு நடத்தி விட்டு திரும்பியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பொலிஸார் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதல்தாரி மீது மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் தாக்குதல்தாரி பலியாகியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட இதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Comment (0) Hits: 190

மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் - அமைச்சர்கள் இன்று ராஜினாமா

சிறப்பு நிதி வழங்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கை விரித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் இன்று (வியாழன்) வெளியேறுகிறது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேச அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது.

அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து இந்த கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் பொறுப்பேற்றது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேசம் சார்பில் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவர் அமைச்சர்களாக உள்ளனர்.

ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு நீதி கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 5ம் தேதிக்குள், ஆந்திர மாநிலத்துக்கு அளித்துள்ள 19 வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக தெலுங்கு தேசம் அறிவித்து இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘‘2019-ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராடி ஆந்திர மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். இதனால் தெலுங்கு தேசத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. பாஜகவுடான கூட்டணியை தெலுங்கு தேசம் முறித்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் பலரும் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், இந்த விவகாரத்தை தற்போது காங்கிரஸ் கையில் எடுத்து இருப்பதால் ஆந்திராவில் தெலுங்கு தேசத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் மூத்த தலைவர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.

இதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குள் மத்திய அரசு தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கெடு விதித்து இருந்தார். ஆனால் தெலுங்குதேசம் கேட்டபடி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் நிலைமை தற்போது இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று இரவு கூறினார்.

இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே தெலுங்குதேசம் முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேச அமைச்சர்களான அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவரும் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்யவுள்ளனர்.

Comment (0) Hits: 200

சிரிய அரசுடன் ஒப்பந்தம் செய்த அந்நாட்டு குர்திஸ் போராளிகள்

சிரியாவின் ஆஃப்ரின் பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஸ் போராளிகள் மீது துருக்கி தாக்குதல் மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் துருக்கியின் தாக்குதலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக குர்திஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் எல்லையை அண்மித்துள்ள ஆஃப்ரின் பகுதியில் தற்போது சிரியாவின் அரசுப் படைகள் இல்லாத நிலையில் தற்போது போராளிகளும், அரசும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தால் துருக்கியை எதிர்கொள்ள ஆஃப்ரின் பகுதிக்கு சிரியாவின் அரசு படைகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சில நாட்களில் அரசுப் படையினர் ஆஃப்ரின் பகுதிக்குள் வருவர் என்றும், எல்லைப் பகுதியை ஒட்டி சில நிலைகளை அவர்கள் அமைப்பார்கள் என்றும் குர்திஸ் படை அதிகாரி பார்தன் ஜியா குர்த் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் போலந்து தூதரக கேட்டில் 'ஸ்வஸ்திக்'

ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சியில் பல இலட்சக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட ஹாலோகாஸ்ட் எனப்படும் இனப்படுகொலை நிகழ்வுக்கு போலந்தை பொறுப்பாக்கிப் பேசுவதற்கு எதிராக போலந்து அண்மையில் ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்துக்கு யூதர்களின் நாடான இஸ்ரேல் கண்டனம் தெரிவித்தது.

இதளனையொட்டி இரு நாடுகளுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில், போலந்து பிரதமர் மத்தேயூஷ் மொராவியட்ஸ்கி யூத இனப்படுகொலைக்கான காரணகர்த்தாக்களில் யூதர்களும் இருப்பதைப் போலப் பொருள் தரும் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ கண்டித்திருந்தார்.

பிபிசி தமிழ்

Comment (0) Hits: 194

அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் விற்பனையாகவில்லை

புதிதாக அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கள் இந்தியாவின் சென்னையில் அதிகமாக விற்பனையாகாமல் தேங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ரியல் எஸ்டேட் சேவை அமைப்பான ஜே.எல்.எல் என்ற நிறுவனம் நாடு முழுவதும் விற்பனையாகாமல் தேங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மொத்தம் 42,594 வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதில் 8,476 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.

அதேபோன்று பெங்களூருவில் விற்பனையாகாமல் இருக்கும் 69,877 வீடுகளில் 9,014 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் அவை விற்பனையாகவில்லை.

இந்த பட்டியலில் நவி மும்பை மூன்றாம் இடத்தில் உள்ளது. நவி மும்பையில் மொத்தம் 24,577 வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதும் அதில் கட்டி முடிக்கப்பட்டவை 2,654 வீடுகள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 28,199 வீடுகள் விற்பனையாகாமல் ஹைதராபாத் நகரம் நான்காவது இடத்திலும், 25,951 வீடுகள் விற்பனையாகாமல் கொல்கத்தா 5ஆவது இடத்திலும் உள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை மகாபலிபுரம் சாலை மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளில் உள்ள சுமார் 30,000 வீடுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.

ஜி.எஸ்.டி சாலை பகுதியில் உள்ள சுமார் 8,000 வீடுகளும் விற்பனையாகாமல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் அதிகளவில் விற்பனையாகாமல் தேங்கியுள்ளமை இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Comment (0) Hits: 218

காவிரி வழக்கில் தமிழகத்திற்கான நீரின் அளவு குறைப்பு

காவிரி வழக்கில் தமிழகத்திற்கான நீரின் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சியும், கர்நாடகாவிற்கு 184.75 டி.எம்.சி தண்ணீரும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமித்தவராய் மற்றும் ஏ.எம்.கன்வீல்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

காலை சுமார் 10.30 மணியளவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காவிரி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினர். அப்போது, காவிரி நதியைக் உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதில் 14.75 டிஎம்சி நீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்க உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், அதன்படி கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி காவிரிநீர் அளிக்க உத்தரவிடுவதாக கூறினர். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க பரிந்துரைந்த நீதிபதிகள், குடியரசு தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காவிரி வழக்கில் தமிழகத்திற்கான நீர் முறையாக பெற்றுத்தரப்படும் என்று மிகுந்த எதிர்ப்புடன் இருந்த தமிழக விவசாயிகளிடையே தீர்ப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comment (0) Hits: 190

சிரியாவில் போர் நிறுத்தம் மீறல்: கிளர்ச்சியாளர்கள் - அரச படையினர் பரஸ்பர குற்றச்சாட்டு

சிரியாவில் அரச படையினர் போர் நிறுத்தத்தை மீறியதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், சிரிய அரச படையினரோ கிளர்ச்சியாளர்களே போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மக்கள்வரும் பாதையில் தாக்குதல்  நடத்தியதாக குற்றம் சாட்டி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்ததன் விளைவாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதன்படி தினமும் 5 மணித்தியால போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்கள் வெளியேறும் பாதை மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசத்துக்கு ஆதரவு தெரிவித்து போர் தொடுத்து வரும்  ரஷ்யா கூறியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் தரப்போ, போர் நடைபெறும் பகுதிகளில் மக்களை வெளியேற்றுவதற்காகவும், மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தில் சிரிய - ரஷ்ய படைகள்  வான்வழித் தாக்குதல் நடத்துவதாக பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சிரிய கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

Comment (0) Hits: 202

பதவி விலகினார் ஜேக்கப் ஷூமா

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா பாரிய அழுத்தத்தின் பின்னர் பதவி விலகியுள்ளார்.

அந்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் தமது பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளார்.

ஜேக்கப் ஷூமா துணை ஜனாதிபதியாக இருந்தபோது, 1999 இல் இராணுவத்திற்காக ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அரசு ஒப்பந்தங்களை தனியார் குழுமத்திற்கு முறைகேடாக ஒதுக்கியமை உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஷூமா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உயர்நிலைக் கூட்டம் பிரிட்டோரியா நகரில் நடைபெற்றது.

13 மணித்தியாலம் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ஜேக்கப் ஷூமா 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், பதவி விலகுமாறு உத்தியோகபூர்வ அறிவித்தலும் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று முதல் ஆறு மாத இடைவௌியில் பதவி விலக ஷூமா இணங்கியுள்ளதாக ஆளுங்கட்சியின் செயலாளர் Ace Magashule தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 194

Page 4 of 6