சர்வதேசம்

ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டு லண்டனில் போராட்டம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது   பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் லண்டனில் வசிக்கும் தமிழர்களும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

லண்டனில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குனர் அணில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த  வீட்டை முற்றுகையிட்ட லண்டன் வாழ் தமிழர்கள்இ ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Comment (0) Hits: 174

தமிழ் மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

ரஷ்யாவில் முதுநிலை மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். 

சென்னை - நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நவீன். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் ஜெய்வந்த். இருவரும் இளநிலை மருத்துவம் பயின்றுள்ளனர். 

முதுநிலை மருத்துவம் பயில கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதினர். அதில் இருவரும் தேர்ச்சியடையவில்லை. இதனையடுத்து இருவரும் ரஷ்யாவில் முதுகலை மருத்துவம் பயில சேர்ந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நவீன், ஜெய்வந்த் ஆகியோர் நண்பர்களுடன் ரஷ்யாவில் உள்ள கடலில் குளித்தனர். அப்போது பெரிய ராட்சத அலையில் சிக்கி இருவரும் பலியாகிவிட்டனர். 

அவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment (0) Hits: 200

தூத்துக்குடியில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 25ம் திகதி வரை 144 தடை உத்தரவு !

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வருவதோடு அதனை நிரந்தமாக மூட வலியுறுத்தி 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டம் 100வது நாளை கடந்த நிலையில் 18 கிராமமக்கள் இணைந்து பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதற்கு ஆதரவாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் வணிகர்களும், நாட்டு படகு மீனவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இத்தகைய மாபெரும் பொதுமக்களின் போராட்டத்தினை கலைத்திடும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அதனை பொருட்படுத்தாது தடையை மீறி போராட்டத்தினை மேற்கொண்ட பொலிஸார்  பொதுமக்களை கலைக்க பொலிஸார் முயற்சி செய்திருந்தனர்.

இந் நிலையில் நேற்றைய போராட்டத்தின் போது சுமார் 12 பொதுமக்கள் பொலிஸாரினால்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந் நிலையில்  தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியாளர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டுஇ இன்று பகல் 1 மணி முதல் நாளை மறுதினம் இரவு 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 185

ஆப்கானிஸ்தானில் குண்டுத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இரு வேறு குண்டுத் தாக்குதல்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் காபூலில் நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதலின் போது சம்பவ இடத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களும் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

ஷாஷ்டராக் பகுதியில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு முகவரகத்திற்கு அருகில் முதலாவது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சுக்கு அருகே மற்றைய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காயமடைந்தவர்கள் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஆயுததார அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபரில் நடைபெறவுள்ள நிலையில், இத்தகைய குண்டு வெடிப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 455

மாதம் 9 இலட்சம் சம்பளம் - கூகுள் நிறுவனத்தில் வேலை

இந்தியாவின் பிகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு மாதம் ஒன்பது லட்சம் ரூபாய் சம்பளத்துளடன் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

பிகாரை சேர்ந்த 25 வயதுடைய மதுமிதா பெங்களுரில் உள்ள ஏ.பி.ஜி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வருடத்துக்கு ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் வேலை வழங்கியிருக்கிறது.

இது தொடர்பாக மதுமிதாவின் தந்தை தெரிவிக்கையில் :- என்ஜினியரிங் துறை; பெண்களுக்கு ஒத்துவராது என இருந்தேன் ஆனால் அந்த துறையை பல பெண்கள் நாடி செல்வதை பார்த்ததால் அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு மதுமிதாவை பொறியியல் படிப்பில் சேர்த்தேன். 2014 இல் மது கணிணி பொறியியல் துறையில் பட்டம் பெற்று தற்போது இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என அவருடைய தந்தை பெருமதிதமாக தெரிவித்துள்ளார்.

மேலும் மதுமிதாவின் ஆதர்ச மனிதர் என்றால் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்தான். அப்துல்கலாம் எழுதிய புத்தகங்கள் அவருடைய சுயசரிதைகளை விரும்பி படிக்கும் மதுமிதாவிற்கு அவருடைய எண்ணங்கள் தாக்கத்தை ஏறபடுத்தி உத்வேகம் அளித்தன என அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.

கூகுளின் சுவிட்சர்லாந்து அலுவலகத்தில் மதுமிதாக திங்கள்கிழமை வேலைக்கு சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 197

வழமைக்கு மாறான பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத் தனது 92 ஆவது பிறந்த நாளை வழக்கத்திற்கு மாறாக கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

பிரித்தானியாவில் இரண்டாம் எலிசபெத் 66 ஆண்டுகளாக ராணியாக உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான மற்றும் நீண்ட காலம் ராணியாக இருக்கும் பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்த இவர் 1952 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் ராணியாக பதவியேற்றார். 

தனது பிறந்த நாளை எப்போதும் பெரிதாக கொண்டாட விரும்பாத இவர் தற்போது தனது 92 ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறாக தனது பிறந்தநாளை கொண்டாடிய எலிசபெத் மகாராணி!

லண்டனில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில் இசைக் கலைஞர்களின் கச்சேரி இடம்பெற்றது. அதில் பிரபல இசைக்கலைஞர்களான டாம் ஜோன்ஸ், கெய்லி மினோக், ஸ்டிங் ஆகியோர் கலந்து கொண்டு கச்சேரி நடத்தினர். மேலும் அரச குடும்பத்தினர் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

வழக்கத்திற்கு மாறாக தனது பிறந்தநாளை கொண்டாடிய எலிசபெத் மகாராணி!

வழக்கத்திற்கு மாறாக தனது பிறந்தநாளை கொண்டாடிய எலிசபெத் மகாராணி!

Comment (0) Hits: 254

மீண்டும் கோர தாண்டவம் ஆடவுள்ளதா வடகொரியா? அதிர்ச்சியில் உலக நாடுகள்!

வடகொரியா அமைதி பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்ததற்கு, அமெரிக்க நெருக்கடி காரணம் அல்ல, அவ்வாறு அந்த நாடு நினைத்தால் மீண்டும் பழைய நிலையை எடுக்க தயங்க மாட்டோம் என வடகொரியா தெரிவித்துள்ளமை உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகநாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தன்னிச்சையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. இதனையடுத்து வடகொரியா மீது அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தது.

இந்நிலையில் தென்கொரியாவில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்களின் பின்னர் வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் இணக்கமான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 27 ஆம் திகதி வடகொரிய மற்றும் தென்கொரிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அத்துடன் வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபருடனான சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் வடகொரியாவுக்கு அரசியல் ரீதியில் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்ததால்தான் அணு ஆயுத சோதனைகளை நிறுத்தவும், சமரசப் பேச்சுவார்த்தைக்கும் வடகொரியா முன் வந்ததாக அமெரிக்கா கூறி வருகிறது. இது வடகொரியாவை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அதிபர் கிம் ஜோங் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் சந்தித்து பேசிய பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. கொரிய தீபகற்பம் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. அதை சீர்குலைக்கும் விதத்தில் அமெரிக்காவின் பேச்சு உள்ளது. இதுபோன்று அமெரிக்கா தொடர்ந்து பேசினால், வடகொரியா மீண்டும் தனது பழைய பாதையில் பயணிக்கத் தயங்காது, என்றார்.

இது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் அமைதி முயற்சிகளில் லேசான பின்னடைவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 720

சவுதி அரேபியா - திரையரங்கு நுழைவுச்சீட்டுக்கள் 15 நிமிடங்களில் விற்பனை

சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் சவுதி அரேபியோவின் தலைநகர் ரியாத் நகரில் முதன்முதலாக கட்டிமுடிக்கப்பட்ட முதல் திரையரங்கில் முதல்நாள் முதல் காட்சிக்கான நுழைவுச்சீட்டுக்கள் 15 நிமிடங்களில் விற்பனைசெய்யபட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட இந்த திரையரங்கில் ஹாலிவூட் திரைப்படமான 'பிளாக் பான்தர்ஸ்' முதல் படமாக திரையிடப்பட்டது.

இந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுக்களும் முதல் 15 நிமிடங்களில் இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மற்ற காட்சிகளும் 'ஹவுஸ் புல்' ஆக ஓடிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி அரேபியா அரசாங்கம் கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை திரையிட தடை விதித்தது.

இஸ்லாமிய கலாச்சரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் சவூதி அரேபியாவில் 1980ஆம் ஆண்டு திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த தடை நீக்கப்படாமல் இருந்தது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் மேற்கொண்டுவரும் திருத்தங்களின் ஒரு நடவடிக்கையாக மீண்டும் அந்நாட்டில் சினிமா திரையரங்குகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் ஒருகட்டமாக சினிமா திரையிடல் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கியது.

சினிமா தணிக்கை குழு அமைக்கவும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் கலைசார்ந்த பொருளாதாரத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும் என்று அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அவாத் அல்அவாத் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 15 நகரங்களில் 40 சினிமா திரையரங்குகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் 2000 திரையரங்குங்கள் கொண்ட 300 வளாகங்களை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Comment (0) Hits: 1339

96 வயதில் படித்து பட்டம் பெற்ற ராணுவ வீரர்

ஸ்பெயினை சேர்ந்த ராணுவ வீரரான பாப் பார்கர் என்பவர் தனது 96 ஆவது வயதில் பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

குறித்த ராணுவ வீரர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தபோது இரண்டாம் உலகப்போர் தீவிரமாக இருந்தநிலையில் போருக்கு அனுப்பப்பட்டார்.

போர் முடிந்த பின்னர் டொலீடோ நகருக்கு திரும்பிய அவர் தொடர்ந்தும் ராணுவ பணியில் தீவிரமாக இருந்துள்ளார். அதனால் அவரால் பட்டப் படிப்பை முடிக்க முடியவில்லை.

இதற்கிடையே வயது முதிர்ந்த நிலையில் இருந்த அவர் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என விரும்பி டொலீடோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அதைதொடர்ந்து 68 ஆண்டுகளுக்கு பின்னர் தனது 96 ஆவது வயதில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 199

மைக் பொம்பேயோ - கிம் ஜோன் உன் இரகசிய பேச்சு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பேயோ வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் உடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய தலைநகர் பியாங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த சந்திப்புகள் அண்மையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் ஏற்றுக் கொண்டார்.

புளோரிடாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

உயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த அவர் கிம் ஜோன் உன்னுடனான சந்திப்புக்கு ஐந்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடும் வட கொரியாவின் அண்டை நாடுமான ஜப்பானுக்கு இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் இல்லாமல் போகலாம் என ஜப்பானில் அச்சங்கள் எழுந்துள்ளன.

எனினும் டிரம்ப் மற்றும் அபேவுக்கு இடையில் சுமுகமான உறவு தொடர்ந்து வருகின்றது.

டிரம்ப் இரண்டாவது முறையாக அபேவை தனது 'மார் அ லாகோ' ஓய்வு விடுதிக்கு அழைத்துள்ளதுடன் அதில் அவர்கள் கோல்ஃப் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 216

வெண்கலம் வென்ற வீரனுக்கு வவுனியாவில் அமோக வரவேற்பு

தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற வவுனியா மாணவனுக்கு சிறந்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

வெற்றியீட்டி வடமாகாணத்திற்கும், வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் சிவானந்தன் கிந்துசன் இன்று பிற்பகல் 1 மணியளவில் தனது சொந்த இடமான வவுனியா புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியதும் வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்களால் மலர் மாலை அணித்து வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விளையாட்டு வீரன் சி.கிந்துசன்,

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளேன்.

இதனையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றேன். எனது இலட்சியம் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதே. எனக்கு பயிற்றுவித்த நவனீதன் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை பல திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள், எமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு எமக்கு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார். அவருக்கு மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும், விளையாட்டு அமைச்சினால் எமது பயிற்றுவிப்பாளருக்கு எவ்விதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை, எமது வீரர்களுக்கு எமது பயிற்றுவிப்பாளர் இலவச சேவையினையே மேற்கொண்டு வருகின்றார்.

அவருக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் மேலும் பல திறமையான விளையாட்டு வீரர்களை எமது மாவட்டத்தில் உருவாக்க முடியும் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 190

ஐ.எஸ் ஆயுததாரிகள் ஆறு பேர் கைது

ஈராக்கில் ஐ.எஸ் ஆயுததாரிகள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ் ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக்கின் முக்கிய நகரங்கள் விடுவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் ஈராக்கில் தொடர்ந்தும் ஐ.எஸ் ஆயுததார செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஈராக்கின் நினிவே மாகாணத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மொசூல் உட்பட்ட பகுதிகளில் 6 தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை சிரியாவின் பல்வேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் 7 இராணுவ வீரர்கள் உட்பட 18 பேர் மரணித்துள்ளதாக சிரிய மனித உரிமை கண்கானிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Comment (0) Hits: 292

அமெரிக்க அதிபரின் சாதனையை எட்டிய புட்டின்

ரஷ்ய கூட்டமைப்பின் நான்காவது அதிபராக இன்று பதவியேற்றுள்ளார் விளாடிமிர் புட்டின்.


ஏற்கனவே நான்கு தடவைகள் அமெரிக்காவின் அதிபராகப் பதவி வகித்த பிராங்க்ளின் டிலானோ ரூசெவேல்டின் சாதனையை எட்டியுள்ளார் புடின்.


ஐந்தாவது தடவையாகப் பதவியேற்று, எதிர்காலத்தில் அந்த ஜனநாயக சாதனையை புட்டின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அதிபர் ரூசெவேல்ட் தனது 1933-1945 ஆட்சிக்காலத்தில், பல மோசமான அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டார்.


இதே போன்ற பல சர்வதேச அரசியல் நெருக்கடிகளுக்கு குறிப்பாக சிரியப்போர், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளுக்கு முகங்கொடுக்கிறார் அதிபர் புட்டின்.


எண்ணெய் விலையேற்றத்தால் வருவாய் அதிகரித்தாலும், அமெரிக்கவின் பொருளாதாரத் தடையை எவ்வாறு எதிர்க்கொள்ளப்போகிறார் புட்டின் என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி.

Comment (0) Hits: 333

இந்தியர்களுக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டைனை விதித்தது டுபாய் நீதிமன்றம்

டுபாய் நாட்டில் நிதி நிறுவனமொன்றை நடத்தி அதன்மூலம் முதலீட்டாளர்களது பல கோடி ரூபா நிதியை மோசடி  செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த இந்திய நாட்டவர்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கோவாவை சேர்ந்த தொழிலதிபர் சிட்னி லிமோஸ் இந்தியாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் விளம்பரதாரராக இருந்து வந்தார். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு இவரது நிறுவனம் விளம்பரங்களை வாரி வழங்கியது.

அத்துடன் சச்சின் டெண்டுல்கர் அபிஷேக் பச்சன் ரன்பீர் கபூர் என பல பிரபலங்களுடன் லிமோஸ் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் லிமோஸ் ரியான் டி சோஸாவுடன் இணைந்து கோவாவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களில் முதலீடு செய்தால் 120 சதவீதம் இலாபம் தருவதாக கூறி பலரை இதில் இணைத்துள்ளார்.

இதனால் இதில் ஈர்க்கப்பட்ட பலர் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட தொகையை மீள வழங்கிய அந்த நிறுவனம் பின்னர் முதலீட்டாளர்களுக்குரிய இலாபத் தொகையை மீள வழங்கவில்லை. இதனையடுத்து முதலீடு செய்த பணத்தை மீள வழங்குமாறு கோரி கோரியுள்ளனர். ஆனால் குறித்த நிறுவனம் பணத்தை மீள வழங்கவில்லை. இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து லிமோஸ், ரியான் டி டிசோஸா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குறித்த வழக்கை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண் டுபாய் நீதிமன்றம் நிதி நிறுவன உரிமையாளர்களான லிமோஸ் மற்றும் ரியோசிற்கு 515 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவர்களது நிறுவனத்தில் ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நன்றி – த ஹிந்து

Comment (0) Hits: 228

சுவிட்சர்லாந்தில் 5300 மாணவர்கள் பங்குபற்றிய தமிழ் மொழிப் பொதுத் தேர்வு

சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச் சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு 24 ஆவது ஆண்டாக கடந்த 5 ஆம் திகதி சுவிட்சர்லாந்து நாடுதழுவிய ரீதியில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.

இத்தேர்வில் முதலாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித் தேர்வுடன் சைவசமயம் றோமன் கத்தோலிக்க சமயம் ஆகிய சமயத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர்.

11 ஆம் வகுப்புத் தேர்வில் 166 மாணவர்களும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் 127 மாணவர்களும் தோற்றியமை சிறப்பாகும்.

தமிழ்க் கல்விச் சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக் கல்வியில் தமிழ்க் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91 1

இத்தேர்வின் போது தமிழ்ப் பாடசாலைகள் முதல்வர்கள் ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராகக் கடமை புரிந்தனர். குறிப்பாக பழைய மாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர்.

தமிழ்க் குழந்தைகள் தாய்மொழிக் கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக உள்ளது.

இவ் ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் இந்தியாவின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி இளங்கலைமாணி பட்டப்படிப்புக்கான தகமைத் தேர்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கல்விச்சேவை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளையும் பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ் மொழி நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில் மேற்கொள்கின்றது.

625.0.560.350.390.830.053.800.670.160.91 2

Comment (0) Hits: 996

சவுதி அரேபியாவில் மீண்டும் திரையரங்குகள்

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளின் பின்னர் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

மதக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி கடந்த 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.

எனினும் தற்போது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவ்வாறான நிலையில் சுமார் 35 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Comment (0) Hits: 226

கனடாவில் தமிழ் மாணவிக்கு கிடைத்த வாய்ப்பு!

கனடா நாட்டில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த துறைக்கு விண்ணப்பிப்பார்கள். அதில் 10 பேர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர்.

அந்த 10 பேர்களில் ஒருவராக ஈழத்தை சேர்ந்த மாணவியான விதுசா யோகதாசன் என்பவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஈழத் தமிழர்களாகிய எமக்கு பெருமை சேர்ப்பதாகும்.

இந்த மருத்துவப்படிப்பிற்கு எற்றுக்கொள்ள உயர்நிலை பள்ளியில் எடுக்கப்படும் அதி உச்ச மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தால் போதாது. இதர பாடத் திட்டங்கள் சாராத செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்க வேண்டும் (Extra curricular activities)

சாதாரணமாக 4-5 வருடங்கள் இளங்கலை (undergraduate) படித்து விட்டு தான் மருத்துவத்துறைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், இந்த QuARMS ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் 2 வருட இளங்கலை படித்து விட்டு நேரடியாக கனடாவின் பிரசித்தி பெற்ற மருத்துவத்துறைக்கு செல்ல முடியும்.

இதேவேளை, கனடாவில் மருத்துவத்துறைக்கு மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது Queen’s பல்கலைக்கழகம் ஆகும்.

Comment (0) Hits: 187

நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதி

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்தவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

டாடா நிறுவனம் மூலம் செயற்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இத்திட்டம் குறித்து கடந்த கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதியும் மார்ச் மாதம் 5 ஆம் திகதியும் நடைபெற்ற நடைபெற்ற மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதனையடுத்து இந்த திட்டத்தைச் செயற்படுத்தலாம் என மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்ததையடுத்து, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையின் அனுமதியைப் பெறவேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கூறியுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளாந்தம் 340 கிலோ லீட்டர் நீரை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விதித்துள்ளது.

நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பிருந்தால் 30 நாட்களில் பசுமை தீர்ப்பாயத்தை அனுகலாம் என்றும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

Comment (0) Hits: 235

Page 3 of 6