சர்வதேசம்

கிம் ஜாங் அன்னுடன் இணைந்து பல பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னுடன் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

 

இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

 

இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

 

இதையடுத்துஇ இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 48 நிமிடம் பேசினர்.

 

சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.

 

சந்திப்புக்கு பிறகு ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக கூறினார்.

 

கிம் ஜாங் அன்னுடன் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும் என்றும், அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் யூகங்களை கடந்து வந்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் கிம் ஜாங் அன் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்த நிலையில், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்துவதால், பல முக்கிய விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதிக்கலாம் என கூறப்படுகிறது

Comment (0) Hits: 218

கிம் ஜாங்கை சந்திப்பேன் ; ட்ரம்ப் உறுதி!

சிங்கப்பூரில் திட்டமிட்டபடி எதிர்வரும் 12ஆம் திகதி, வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.


கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநிறுத்த தென் கொரியா கடும் முயற்சிகள் மேற்கொண்டது.


அதன் பலனாக வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

 

எனினும் கடந்த மாதம் தொடக்கத்தில் தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன.


பேச்சுவார்த்தைக்கு முன்னர் எல்லா அணுஆயுதங்களையும் அழித்துவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிபந்தனை விதித்தார்.

 

இதனால் கோபம் அடைந்த வடகொரிய அதிபர் கிம் பேச்சுவார்த்தை பேச்சில் இருந்து விலகுவேன் என்று எச்சரித்தார்.


இந்நிலையில் ட்ரம்ப்பை சந்தித்து தென் கொரிய அதிபர் மூன் சமாதானப்படுத்தினார்.

 

இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் நல்ல நண்பராக கருதப்படும் கிம் யாங் சோல்இ கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் ஓவல் அலுவலகத்தில் கிம் யாங்கை, அதிபர் ட்ரம்ப் சந்தித்தார்.

 

அப்போது, அதிபர் கிம் ஜாங் உன் கொடுத்தனுப்பிய கடிதம் ஒன்றை அதிபர் ட்ரம்ப்பிடம் கிம் யாங் சோல் வழங்கினார்.


அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கிம் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

 

பின்னர் சுமூகமான பேச்சு வார்த்தையின் பின்னரே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Comment (0) Hits: 178

நாளைய உச்சி மாநாட்டில் ட்ரம்பை, சந்தித்துப் பேசவுள்ள கிம் ஜாங்..!

நாளை நடைபெறுகிற உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை, கிம் ஜாங் உன் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார்.

 

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முறுகல் நிலையை ஏற்படுத்தியது.

 

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவி ஏற்றது முதல், அவருக்கும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.

 

இந்த நிலையில்தான் சற்றும் எதிர்பாராத வகையில் தென்கொரியாவில் கடந்த பெப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது.

 

அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து பேச தயார் என ட்ரம்ப் முன் வந்தார். இது உலக அரங்கை அதிர வைத்தது.

 

பல அதிரடித் திருப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் பிறகு, ஒருவழியாக இவ்விரு தலைவர்கள் சந்தித்து பேசும் உச்சி மாநாடு நாளை செவ்வாய்க்கிழமை காலை  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் இடம்பெறவுள்ளது.

 

Comment (0) Hits: 172

அயல்நாடுகளை மிரட்டும் சீனா ; அமெரிக்கா குற்றச்சாட்டு !

சீனா தனது அயல்நாடுகளை அச்சுறுத்துவதற்காக சர்ச்சைக்குரிய தென் சீனா கடல்பகுதியில் ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்சீனா கடல்பகுதியில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை சீனா நிலை கொள்ளச்செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா இந்த ஆயுதங்களை மிரட்டுவதற்கும் அச்சுறுத்துவதற்குமே பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் சீனாவுடன் ஆக்கபூர்வமான உறவுகளையே விரும்புகின்றது எனினும் அவசியம் ஏற்பட்டால் அந்த நிலை மாறாலாம் எனவும் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 154

ஒசாமாவை பாக்கிஸ்தான் அமெரிக்காவிடம் ஓப்படைத்தது

ஒசாமா பின்லாடனை பாக்கிஸ்தான் அமெரிக்காவிடம் ஓப்படைத்தது என பாக்கிஸ்தானின் முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


1990 களில் பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவின் ஐஎஸ்ஐயிற்கு தலைமைதாங்கிய அசாட் டுரானி என்பவர் தனது ஸ்பை குரொனிக்கல்ஸ் என்ற நூலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவின் ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாட்டுடன் இணைந்து எழுதிய நூலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட நூலில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.


எனினும் ஒசாமா பின் லாடன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்ற தகவலே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவினரிற்கு ஒசாமா இருக்குமிடம் குறித்து தெரியவந்தது அதன் பின்னர் அவர் இருதரப்பு இணக்கப்பாட்டுடன் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டார் என அந்த நூலில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


பாக்கிஸ்தானிய மக்கள் பெரிதும் மதித்த ஒருவரை அமெரிக்காவிடம் கையளித்தது தெரியவந்தால் கடும் விளைவுகள் ஏற்படலாம் என கருதியதாலேயே பாக்கிஸ்தான் இதனை மூடி மறைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை இதனை தொடர்ந்து தனது முன்னாள் புலனாய்வு அதிகாரிக்கு எதிராக பாக்கிஸ்தான் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


மேலும் டுரானி பாக்கிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கும் பாக்கிஸ்தான் இராணுவம் தடை விதித்துள்ளது.


முன்னாள் அதிகாரி இராணுவநீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comment (0) Hits: 194

தமிழகம் மண்ணோடு மண்ணாகிவிடுமே பரவாயில்லையா?  ரஜினியிடம் ராமதாஸ் கேள்வி !

‘போராட்டங்கள் நடந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும்’ என்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு பா.ம.க நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ”ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் இதன் பிறகு தொடர்ந்து நடந்தால், தமிழகம் மண்ணோடு மண்ணாகிவிடுமே பரவாயில்லையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஒரு போதும் போராட்டங்களே கூடாது, எல்லா போராட்டங்களையும்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்று நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந் நிலையில்  ”பாசிசத்தின் உச்சம் தவறான மனிதர்களைச் சரியான நேரத்தில் அடையாளம் காட்டியதற்காக, காலச்சூழலுக்கு தமிழக மக்கள் நன்றி கூற வேண்டும்” என்று பா.ம.க நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போராட்டங்கள் நடந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு விளக்கம் தெரிவித்துள்ளஅன்புமணி ராமதாஸ், ”ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் இதன் பிறகு தொடர்ந்து நடந்தால், தமிழகம் மண்ணோடு மண்ணாகிவிடுமே பரவாயில்லையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒரு காலத்தில் சட்டப்பேரவையில் தம்பி துரைமுருகன்இ க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய 3 தி.மு.க உறுப்பினர்களைக் கண்டு ஆளுங்கட்சி அ.தி.மு.க நடுங்கியது.

வலிமையான எம்.ஜி.ஆர் அஞ்சினார். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக பினாமி எடப்பாடிக்கு அஞ்சி தி.மு.க அவையைப் புறக்கணிக்கிறது” என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

Comment (0) Hits: 196

நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் ..!

இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய விஷம் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

 

அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

 

ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி  மேற்கொள்ளப்பட்டது.

 

அதில் இந்தியாவிலுள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா விஷம் பரவி இருப்பது கண்டறியப்பட்டது.

 

 

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..

 

 

அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய விஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு லீற்றர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் இருக்க வேண்டும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பதோடு  நைட்ரேட் மாசுவும் கலந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். 

 

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மே.வங்காளம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய விஷம் பரவியுள்ளது.

 

இத்தகைய நிலத்தடிநீர் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் யுரேனியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். 

 

இதனால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கலாம் எனவே இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் அதிக அளவில் யுரேனியம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது

Comment (0) Hits: 196

தூத்துக்குடி துப்பாக்கி சூடு- ஐ.நா.சபை கண்டனம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1 இலட்சம் பேர் பேரணியாக சென்ற போது நடந்த கலவரத்தை அடக்க நடந்த பொலிஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியதோடு பலர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவம்  குறித்து ஐ.நா.சபை மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குழு நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் இங்கிலாந்தில் இயங்கும் வேதாந்தா குழுமத்தின் வர்த்தக நிறுவனமாகும்.

மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தூத்துக்குடியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்றவர்கள் மீது பொலிஸாரால் ஆயுதங்களை பயன்படுத்தி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காலதாமதமின்றி சுதந்திரமான ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் போது போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு உண்டு.

ஐ.நா.வின் வழி காட்டுதல் கொள்கைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழில் நிறுவனங்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அர்த்தமுள்ள உரிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

இந்திய சுற்று சூழல் விதிகளுக்குட்பட்டு நடப்பதாக முழு உத்தரவாதம் அளித்த பிறகே ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 172

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமா?

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வயடிடழனை என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இளவரசர் ஹரிஇ மெர்க்கல் ஆகிய இருவரினதும் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே.


இந்நிலையில்இ பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

 

மேகன் மெர்க்கலின் வயிறு சற்று பெரிதாக இருக்கும் நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு, மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார் அதுவும் அவரது வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தைகள் என கூறியுள்ளது.


மேலும்இ 588 ஆண்டுகளில் முதல் ராயல் இரட்டை குழந்தைகள் என தெரிவித்துள்ள அந்நாளிதழ் இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் ஆகிய இருவரும் ரகசியமாக கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பட்டுள்ளது.


ஆனால்இ இது பொய்யான தகவல் எனவும் மெர்க்கல் கர்ப்பமானது உண்மையென்றால் அது அரசகுடும்பத்தால் முறையாக அறிவிக்கப்படும், அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் முதல் முறையாக சார்லஸின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மெர்க்கல் கலந்துகொண்டபோது அவரது வயிறு பெரியதாக இருக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment (0) Hits: 190

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் - ரஜினி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளை போன்றே ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூகவிரோதிகள் நுழைந்துவிட்டனர், சமூக விரோதிகள் பொலிஸாரை தாக்கிய பின்பு தான் பிரச்சினை தொடங்கியது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை நேற்று சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடந்த தாக்குதல்கள், குடியிருப்புகளை எரித்தது நிச்சயமாக சாமானிய மக்கள் அல்ல. விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இதில் நுழைந்திருக்கிறார்கள் அவர்களது வேலைதான் இது என குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தமிழகத்தில் சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

ஜல்லிக்கட்டில் கூட அதுதான் நடந்தது. இந்த புனிதமான போராட்டம் கூட வெற்றி கிடைத்தாலும் இரத்தக்கரையோடு முடிந்திருக்கிறது.

இந்த சமூக விரோதிகளை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 192

தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய உருக்கமான கடிதம்!

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய 2 பக்கம் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.


நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளுரை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துக்கொண்டார்.


குறித்த பெண் தற்கொலை கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய 2 பக்கம் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. குறித்த கடிதம் பின்வருமாறு….


உங்க அம்மு உங்க கிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி. அப்பா சாரி பா. என்னால ஜெயிக்க முடியல. நீங்க என்மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியல. என்னால திரும்பவும் ஒரு தோல்வியை தாங்குகிற சக்தி இல்லை. எத்தனை முறை பா நான் தோல்வியை தாங்குவேன். தோல்வியடைந்ததால என்னால என் பள்ளிக்கு செல்ல முடியல.
என்னோட ஆசிரியரை பார்த்து பேசுகிற தைரியம் எனக்கு இல்லை. என்னாலதானப்பா மற்றவங்க முன்னாடி நீங்க 2 வருஷமா தலைகுனிந்து வாழ்ந்தீர்கள். என் ஆசை நீங்க மற்றவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும். ஆனால் என்னால அதை செய்ய முடியல.
என் குடும்பம் நீங்க எல்லோரும் எனக்கு கிடைத்த வரம்பா. ஆனால் நான் உங்களுக்கு கிடைத்த சாபம்னு நினைக்கிறேன். எனக்கு தோல்வியை தாங்குகிற சக்தி இல்லை. இந்த 2 வருஷமா எனக்கு அந்த சக்தியை கொடுத்தது நீங்க தான்பா. ஆனால் இதுக்கு மேலயும் நான் உனக்கு பாரமா இருக்க விரும்பவில்லை.
இந்த முடிவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்தப்பவே நீங்க என்னை தடுக்காம இருந்திருக்கலாம். அப்படி நான் செய்திருந்தால் 2 வருஷத்துல என்னை கொஞ்சம், கொஞ்சமாக மறந்துட்டு இருப்பீங்க. அதனால நான் அதை செய்யப்போறேன். ஏன்னா நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையை இழந்துட்டேன். நான் சாக போறேன். ஐயம் சாரி பா. லவ் யூ பா.

எனக்கு வேற வழி தெரியலபா. நம்ம குடும்பம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க எல்லோரு கூடவும் ரொம்பநாள் சேர்ந்து இருக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா எனக்கு அந்த தகுதி இல்லை. இந்த முடிவு மற்றவங்களுக்கு கோழைத்தனமா தெரியலாம். ஆனா அடுத்தவங்க நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கையை நாமே அழிச்சிட்டு வாழ்கிற வாழ்க்கையை விட இந்த முடிவே சரி. எனக்கு ஒரே ஒரு வருத்தம்பா.
என்னால உங்களுக்கு எந்த சந்தோஷத்தையும் தர முடியல. அதுமட்டும் இல்லாம என்னால இருந்த எல்லா சந்தோஷத்தையும் நீங்க இழந்துட்டீங்க. அப்பா எனக்கு நீங்க தைரியம் சொன்னதுக்கு அப்புறமும் நான் இந்த முடிவு எடுக்கிறது தப்பு தான். ஆனால் என்னால தோல்வியை தாங்க முடியல. உங்க எல்லோரையும் விட்டுட்டு போகனும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது.

ஆனா அதை விட அதிகமான வலியை இந்த தோல்வி தந்து விட்டது. என்னால மற்றவங்க மாதிரி கிடைச்சத வச்சு வாழ முடியல. ஏன்னா அப்படி நான் வளரல. நான் மனசுல ஒன்னு வச்சுக்கிட்டு வாழ்க்கை முழுவதும் வேற ஒரு வாழ்க்கையை வாழரவங்க மாதிரி இல்லை. என்னால அந்த வலியை தாங்க முடியாது. என்ன மன்னிச்சுடுமா, மன்னிச்சுடுக்கா, மன்னிச்சுடுணா உங்கள எல்லாரையும் மிஸ் பன்றேன். ஐ லவ் மை பேமிலி.

இப்படிக்கு உங்க அம்மு (பிரதீபா)

Comment (0) Hits: 221

இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி ..!

நாடு முழுவதும் இடம்பெற்ற இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகள் 4 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், கர்நாடக மாநிலம் ஆர்.ஆர்.தொகுதியில் சட்டசபை தேர்தலும் கடந்த வாரம் இடம்பெற்றது.

இந் நிலையில் நடந்து முடிந்த இடைத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

Comment (0) Hits: 151

கையிலிருந்து சிந்திய தேனீரை, தானே சுத்தப்படுத்திய பிரதமர் !

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே கையிலிருந்து சிந்திய தேனீரை, தானே சுத்தப்படுத்திய செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே பாராளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து சிந்திய தேனீரை, சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும்இ அவர் அதனை மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன்வந்து சுத்தம் செய்துள்ளார்.

இச்செயல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியதோடுஇ அனைவரினது பாராட்டையும் பெற்றுள்ளார்.

Comment (0) Hits: 177

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர பூட்டு !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து 22 ஆண்டுகள் இயங்கி வந்த ஆலை மாவட்ட ஆடம்சியாளர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் நிரந்தரமாக  மூடப்பட்டுள்ளது.

ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதியன்று  நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது   பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்திருந்தனர்.

நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

லண்டனில் வசிக்கும் தமிழர்களும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து இலங்கையிலும் பல இடங்களில்  ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

இந் நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து 22 ஆண்டுகள் இயங்கி வந்த ஆலை மாவட்ட ஆடம்சியாளர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் நிரந்தரமாக  மூடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 189

குவாட்டமாலாவில் எரிமலைக் குமுறலில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 75!

குவாட்டமாலாவில் உள்ள பியூகோ எரிமலைக் குமுறலில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் காரணமாக 300 பேர் காயமடைந்துள்ளனர். 2000 பேர் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் 192 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

மேற்படி எரிமலைக் குமுறலால் வெளிப்பட்ட உருகிய பாறைக் குழம்புஇ மண்சக்தி மற்றும் சாம்பல் என்பன காரணமாக பல கிராமங்கள் அழிவடைந்துள்ளன.

இந் நிலையில் காணாமல்போனோரை தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு படைவீரர்களும் படையினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் மேற்படி குமுறல் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Comment (0) Hits: 194

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கண்டு ஆறுதல் தெரிவித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்த இந்த துயர சம்பவம் அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது. அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் ஸ்டெர்லைட் பிரச்னையில் மக்களின் கோரிக்கையினை ஏற்று 2013 ல் ஆலை மூடப்பட்டது. எனினும் அதன் பின்பு ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் சில உத்தரவை பெற்று இயங்கியது.

ஆலையை மூடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

கடந்த மார்ச் மாதம் புதுப்பிக்க வேண்டி வந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு ஆலை மூடப்பட்டது

இந் நிலையில் மக்களின் எண்ணம் போல் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது   பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்திருந்தனர்.

நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லண்டனில் வசிக்கும் தமிழர்களும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து இலங்கையிலும் பல இடங்களில்  ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 190

குவாதமாலாவில் எரிமலை வெடித்ததில் 25 பேர்  பலி!

குவாதமாலாவில் உள்ள பேகோ என்ற எரிமலை கடும் சீற்றத்துடன் வெடித்ததில் மூன்று சிறுவர்கள் உட்பட 25 பேர்  உயிரிழந்துள்ளதோடு 300 பேர் வரை காயமடைந்துள்ளனர்.


‘நெருப்பு எரிமலை’ என்ற அர்த்தம் கொண்ட பேகொ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 கிலோமீற்றருக்கு எரிமலை குழம்பை கக்கியதோடு வானத்தை நோக்கி கறும் புகையையும் சாம்பலையும் உமிழ்ந்தது.


இந்த சாம்பல் தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களிலும் பொழிந்துள்ளது.


குவாதமாலாவின் தலைநகரான குவாதமாலா சிட்டிக்கு தென் மேற்கு திசையில் 40 கிலோமீற்றர் தொலைவிலேயே இந்த எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது.


ஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கொன்ரெட் தெரிவித்துள்ளது.


எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாதமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.


தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 190

வழமைக்கு திரும்பிய தூத்துக்குடி ; இந்திய ஊடகங்கள் செய்தி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலை குறைவடைந்துள்ளதாகவும்  அங்கு படிப்படையாக இயல்பு நிலை திரும்புவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு. அங்கு இயல்புநிலையை கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு படிப்படையாக இயல்புநிலை திரும்புவதாகவும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளதோடு தூத்துக்குடியில் 3 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேரூந்துகள் இன்று முதல் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ்  பாதுகாப்புடன் நெல்லைக்கு செல்லும்  அரசு பேரூந்துகள்  இயக்கப்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்களுக்கு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அதிகாரிகளும் பொலிஸாரும்  அரசு பேரூந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 12 பேரை வடபாகம் போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட  68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 176

Page 2 of 6