V2025

சென்னையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 85 வீடுகள் சேதம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரண்டாவது நாளாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மேலும் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன.



சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

 

தொடா் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பணம், நகை, சான்றிதழ்கள் கடலில் அழித்துச் செல்லப்பட்டது.

 

அந்த பகுதியில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட மீனவக்குடியிருப்புகள் உள்ளன. 

செவ்வாயன்று ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 35 வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் சீற்றம் தணியவில்லை.

 

இதன் காரணமாக மேலும் 50 வீடுகள் சேதமடைந்தது. இருக்க இடம் இல்லாமல், தற்போது சொந்த ஊரிலே பட்டின்பாக்கம் மக்கள் அகதிகளாகி உள்ளனர்.

 

இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியள்ளனர்.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found