V2025

10 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழப்பு ; மே.இந்திய தீவுகள்!

இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் மேற்கு இந்திய தீவுகள் அணி 90 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்சிலும் 10 ஓட்டங்கள்  எடுப்பதற்குள் முதல் 3 விக்கெடுகளையும் இழந்துள்ளது.



முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி, 8 ஓட்டங்கள்  எடுத்திருந்த நிலையில் முதல் 3 விக்கெட்டுகளையும் இழந்தது.

 

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி தட்டுத்தடுமாறி 95 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தது.

 

அதிகபட்சமாக இலங்கையின் நிரோஷன் டிக்வெல்லா, 42 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 16 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்பு இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய மேற்கு இந்திய அணி முதல் 3 விக்கெட்டுகளையும் 10 ஓட்டங்கள்  எடுப்பதற்குள் மறுபடியும் இழந்தது.

 

90 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இரண்டு இன்னிங்சிலும் 10 ஓட்டங்கள்  எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது மேற்கு இந்திய அணி.



இரண்டாவது இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் 93 ஓட்டங்கள்  எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில், 144 ஓட்டங்கள்  இலக்கை நோக்கி இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது.



நேற்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது.

 


Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found