விளையாட்டு

தோனியின் செயல் ; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்தியாவின் நட்சத்திர வீரரான தோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது சக வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் வோட்டர் போயாகவும் செயல்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

 

அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
 
 
முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
 
இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
 
 
தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி, 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.
 
 
நேற்றைய போட்டியில் இந்திய அணியில் முன்னாள் கேப்டனான தோனி விளையாடவில்லை.
 
 
அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த போட்டியில் விளையாடாத டோனி, இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, பேட்ஸ்மேன்களின் கிட்பேக் சுமந்தபடி மைதானத்திற்குள் வந்தார். அதோடு பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீரும் கொண்டு வந்தார்.
 
 
அணியின் புதிதாக இடம்பிடித்தவர்களே இந்த வேலையை செய்யும் நிலையில், உலகின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி இவ்வாறு செய்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Comment (0) Hits: 515

3ஆவது தடவையாக வெற்றி வாகை சூடியது சென்னை !

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கட் வித்தியாசத்தில அபார வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதரபாத் அணியை துடுப்பெடுத்தாடும்படி கூறியது.

கடந்த அரையிறுதி போட்டியில் கொல்கத்தாவை இலகுவாக வீழ்த்திய நம்பிக்கையில் இறுதி போட்டியில் களமிறங்கியது ஹைதரபாத் அணி.

இருப்பினும் இப்போட்டியில் ஹைதரபாத் சன்ரைசர்சுக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை ஆரம்ப வீரர் கோஸ்வாமி குறைந்த ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வில்லியம்ஸன் தவானுடன் ஜோடி சேர்ந்நு அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்.

இருப்பினும் தோனியின் சிறந்த தலைமைத்துவத்தினால் கரன் சர்மாவின் பந்தில் ஸ்டம்ப் செய்யப்பட்டு 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து தவானும் நடையைக் கட்ட மிகவும் மோசமான நிலையை நோக்கி பயணித்த சன்ரைசைஸ் அணிக்கு யூசுப் பதானின் அதிரடி ஆட்டம் கைகொடுத்தது.

20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து பலமான 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆபாரமாக விளையாடிய யூசுப் பதான் 25 பந்துகளில் 4 பௌண்டரிகள் 2சிக்ஸர் அடங்களாக 45 ஓட்டங்களை பெற்றார்.

சென்னை அணி சார்பில் இங்கிடி தாகூர் பிராவோ ஜடேஜா கரன்சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியைத் தந்தது.

புவனேஸ்வர்குமார் வீசிய முதல் ஓவரில் ஓட்டங்களை பெறாமல் அதிர்ச்சியளித்தார் வொட்சன்.

வொட்சனின் மந்தமான ஆட்டத்தினால் அதிரடி காட்ட முற்பட்ட டூபிளசிஸ் 3 ஆவது ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து அதிர்ச்சி அளித்த வொட்சன் முதல் 10 பந்துகளிலும் ஓட்டமெதுவும் பெறாமல் திணறினார்.

சென்னை அணி முதல் 5 ஓவர்களில் வெறும் 20 ஓட்டங்களை பெற்று தடுமாறியது.

சிதார்த் கௌல் வீசிய 7 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களை பெற்று சரிவிலிருந்து மீளத் தொடங்கியது சென்னை அணி.

புவனேஸ்வர்குமார் மற்றும் ரஷித்கான் ஆகியோரின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட சென்னை அணி ஏனைய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தது.

சந்திப் சர்மா வீசிய 13 ஆவது ஓவரில் 3 சிக்க்ஸர்கள் 2 பௌண்டரிகள் உள்ளடங்களாக 27 ஓட்டங்களை பெற்ற வொட்சன் சென்னையை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

18.3 ஓவர்களில்   2 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்று  சென்னை அணி அபார வெற்றியீட்டியது.

தனது வாழ்நாளின் அதி சிறந்த IPL இன்னிங்சை ஆடிய வொட்சன் வெறுமனே 57 பந்துகளில் 11 பௌண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்களாக 117 ஓட்டங்களை குவித்ததோடு ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாவது முறையாக செம்பியன் ஆன சென்னை அணி மும்பையின் அதிக பட்ச வெற்றியை சமன்செய்தது.

இதில் இரண்டு தொடர்களில் சென்னை அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 444

இலங்கை அணி சரித்திர வெற்றி..!

மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

 

நாணய சுழற்சியில் வென்ற ​மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதல் இன்னிங்சில் ​மேற்கிந்திய தீவுகள் அணி 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் லஹிரு 4 விக்கெட்டுக்களும் ராஜித 3 விக்கெட்டுக்களும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 


இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 59 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ​மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளும், கெப்ரியல் 3 விக்கெட்டுகளும், ரோச் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


இதையடுத்து, ​மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 


ஆனால் இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். இதனால் முதலில் இருந்தே ​மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்தது. 


இறுதியில் ​மேற்கிந்திய தீவுகள் அணி 31.2 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 


எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 144 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 


இந்நிலையில், இலங்கை அணி 40.2 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்ருவான் பெரேரா 23(68), குசால் பெரேரா 28(43) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற செய்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருதும், ஷேன் டவ்ரிச் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

 

ஆசிய அணிகளில் குறித்த மைதானத்தில் இதுவரையில் எந்நவொரு அணியும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 531

ஓய்வு பெற்றார் ஏ.பி. டி விலியர்ஸ் …!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான ஏ.பி. டி விலியர்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக  அறிவித்துள்ளார்.

34 வயதான விலியர்ஸ் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 க்கு மேற்பட்ட துடுப்பாட்ட சராசரியைக் கொண்டுள்ளார்.

114 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்களுடன் 8,765 ஓட்டங்களைக் குவித்துள்ள டி விலியர்ஸ் 228 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9,577 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 427

10 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழப்பு ; மே.இந்திய தீவுகள்!

இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் மேற்கு இந்திய தீவுகள் அணி 90 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்சிலும் 10 ஓட்டங்கள்  எடுப்பதற்குள் முதல் 3 விக்கெடுகளையும் இழந்துள்ளது.முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி, 8 ஓட்டங்கள்  எடுத்திருந்த நிலையில் முதல் 3 விக்கெட்டுகளையும் இழந்தது.

 

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி தட்டுத்தடுமாறி 95 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தது.

 

அதிகபட்சமாக இலங்கையின் நிரோஷன் டிக்வெல்லா, 42 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 16 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்பு இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய மேற்கு இந்திய அணி முதல் 3 விக்கெட்டுகளையும் 10 ஓட்டங்கள்  எடுப்பதற்குள் மறுபடியும் இழந்தது.

 

90 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இரண்டு இன்னிங்சிலும் 10 ஓட்டங்கள்  எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது மேற்கு இந்திய அணி.இரண்டாவது இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் 93 ஓட்டங்கள்  எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில், 144 ஓட்டங்கள்  இலக்கை நோக்கி இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது.நேற்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது.

 


Comment (0) Hits: 488

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.

சாஹார் வீசிய முதலாவது ஓவரின் முதலாவது பந்திலே தவான் ஆட்டம் இழந்தார்.

அத்துடன் அடுத்து வந்த அணித் தலைவர் வில்லியம்சன் அதே ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

140 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வொட்சன்இ புவனேஸ்குமார் வீசிய முதலாவது ஓவரில் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

சென்னை அணியின் விக்கெட்டுக்களும் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனியும் பெரிதாக சோபிக்கவில்லை.

இறுதியாக 8 விக்கெட்டுக்களை இழந்து 6 பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் என்ற நிலையில் 140 என்ற இலகுவான இலக்கை எட்ட முடியாது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறியது.

இந் நிலையில்  புவனேஸ்குமார் வீசிய 20 ஆவது ஓவரின் முதல் பந்திலே சிக்ஸர் அடித்த டுப்ளெஸ்ஸி சன்ரைஸ் அணியை கதிகலங்க வைத்தார்.

டுப்ளெஸ்ஸின் உறுதியான ஆட்டமும்இ ஷர்துல் தாக்கூரின் இரண்டு அதிர்ஷ்ட பவுண்டரிகள் ஆகியவற்றினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Comment (0) Hits: 429

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சந்திமாலுக்கு விளையாட முடியாத நிலை !

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு, நிராகரிக்கப்பட்டுள்ளது. 

 

அதனை விசாரணை செய்த நீதித்துறை குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

 

இதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக தினேஷ் சந்திமால் மீது நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

 

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தினேஷ் சந்திமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்இ போட்டிக்கான பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

 

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் மேன்முறையீடு செய்தார்.

 

இந் நிலையில் அதனை விசாரணை செய்த நீதித்துறை குழுவால் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதாக  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

 

Comment (0) Hits: 463

சென்னை சூப்பர் கிங்ஸ்ஸை வீழ்த்துமா சன் ரைசர்ஸ் ஹைதரபாத் ? இன்று களத்தில்…!

2018 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸின் மீள் வருகை, மும்பை இந்தியன்சின்; அதிர்ச்சி தோல்விகள், சன் ரைசர்ஸ் ஹைதரபாததின்; அபாரமான பந்துவீச்சு, மீண்டும் வாய்ப்பை தவற விட்ட ரோயல் செலன்ஜர்ஸ் பெங்கள+ர் என பல்வேறுப்பட்ட சுவாரசியமான நிகழ்வுகளுடன் இன்று அரையிறுதி போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

8 அணிகள் பங்குபற்றிய இந்த போட்டித்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்;, ராஜஸ்தான் ரோயல்ஸ; மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதரபாத; ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேரியுள்ளன.

mந்த வகையில் இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் இடம்பெறும் முதலாவது அரையிறுதி போட்டியில்; சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.

மகேந்திர சிங் தோனியின் தலைமையும், துடுப்பாட்டத்தில் மிளிரும் வாட்சன் ராயுடுவின் ஆட்டத்திறனும், தோய்வடைந்திருந்த பந்து வீச்சுக்கு லுங்கி இங்கிடியின் இணைப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இப் போட்டித்தொடரில் முதலாவது அணியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் அணித்தலைவர் வில்லியம்சனின் அதிரடி துடுப்பாட்டமும் பந்துவீச்சாளர்களின் அபரீத பந்துவீச்சும் சென்னை அணிக்கு பலத்த சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை

கடந்த 3 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு ஏற்பட்ட தோல்விகள் சற்று பின்னடைவை தந்தாலும் புவனேஸ்வர்குமார் தவான் மற்றும் ரசித் கான் ஆகியோர் மீண்டும் தங்களது ஆட்டத்திறனுக்கு திரும்பும் பட்சத்தில் சென்னை அணியின் வெற்றி கேள்விக்குறியாகும்.

Comment (0) Hits: 412

இங்கிலாந்து அணி வாரலாற்று சாதனை !

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று வாரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

 

 

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி இங்கிலாந்தின் நொட்ங்ஹேம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

 

 

இப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நாணய சுழட்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா, இங்கிலாந்தை துடுப்பெடுத்தாட பணித்தது.

 

 

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 481 என்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்று அவுஸ்திரேலியா அணி விரர்களின் பந்துகளை துவம்சம் செய்தது.

 

 

இதன் மூலம் இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

 

 

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜே.எம் பேர்ஸ்டோ 139 ஓட்டங்களையும், ஏ.டி. ஹெல்ஸ் 147 ஓட்டங்களையும், ஜே.ஜே. ரோய் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

 

 

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, அடில் ரஷித், மொயின் அலி சுழலில் சிக்கி சிதைந்தது.

 

 

37 ஓவரில் 239 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த அவுஸ்திரேலியா, 242 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

 

 

அதிகபட்சமாக ஹெட் 51 ஓட்டங்களை எடுத்தார். இங்கிலாந்தின் அடில் ரஷித் 4, மொயின் அலி 3 விக்கெட் வீழ்த்தினர்.

Comment (0) Hits: 480

மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துமா சென்னை சூப்பர் கிங்ஸ் ?

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் காயம் காரணமாக நிதிஷ் ராணா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அதேநேரம், சென்னை அணி கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் களமிறங்குகின்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிதாக ஜொலிக்காத நிலையே முதல் 7 போட்டிகளில் தொடர்ந்தது.

இதையடுத்து டெல்லி அணிக்கெதிரான 8 ஆவது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாக்குர் ஆகிய இருவரையும் மாற்றி, புதிதாக லுங்கி இங்கிடி மற்றும் கே.எம்.ஆசிஃப் ஆகியோரை தோனி களமிறக்கினார். இந்த ஜோடி சிறப்பாகவே செயற்பட்டது. இதனால், அதே வேகக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து சென்னை அணி களமிறங்குகின்றது. 

கடந்த முறை இவ்விரு அணிகளும் மோதியது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். அந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆல் ரவுண்டர் ரஸலின் அதிரடியால் 202 ஓட்டங்களைக் குவித்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், சாம் பில்லிங்ஸில் கேமியோவால் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 425

சந்திமாலிற்கு 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை!

பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலிற்கு 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன்   போட்டிப்பணத்தில் 100 வீதத்தை செலுத்த வேண்டும் என அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

செய்ன்ற் லூசியாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக மத்தியஸ்தர்களான இயன் கல்ட், அலிம் தார் ஆகியோர் முறைப்பாடு் செய்ததுடன் காணொளிகளை பார்வையிடவேண்டும் எனவும் பொது மத்தியஸ்தர் ஸ்ரீநாத்திடம் கோரியிருந்தனர்.

 

சம்பவம் தொடர்பான காட்சிகளைப் பார்வையிட்டபோது சந்திமால் செயற்கை பதார்த்த்தைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியமை தெளிவாகின்றது என போட்டி பொது மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

 

சந்திமாலின் வாயில் இருந்த ஒருவகை இனிப்பில் சாலிவா என்ற பதார்த்தம் உமிழ்நீருடன் கலந்ததாகவும் இது ஐ.சி.சி. ஒழுக்கக் கோவையில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீநாத்  குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பான விசாரணையின்போது இலங்கை அணி முகாமைத்துவத்தினர் மற்றும் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் வீடியோ காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.

 

இந்த விசாரணையின்போது தனது வாயில் ஏதோ ஒன்றைப் போட்டதாகவும் அது என்னவென்று நினைவுகூற முடியாதுள்ளதாகவும் சந்திமால் ஒப்புக்கொண்டதாக ஐ.சி. சி. யின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 422

இலங்கையை பின்தள்ளி முன்னேறியது ஆப்கானிஸ்தான்

ஐ.சி.சி. T20 தரவரிசை பட்டியலில் இலங்கை அணியை 8 ஆவது இடத்தில் இருந்து 9 ஆவது இடத்துக்கு பின் தள்ளி ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியுள்ளது.

இலங்கை அணி விளையாடிய கடந்த கால போட்டியில் பல போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தமையே இந்த பின்னடைவுக்கு காரணம்.

ஐ.சி.சி. இன்று T20 தரவரிசை பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் பாகிஸ்தான் அணி 130 புள்ளிகளை பெற்று 1 ஆம் இடத்திலும், 126 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா அணியும், 123 புள்ளிகளுடன் இந்திய அணியும் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.

மேலும், 4 ஆவது இடத்தில் 116 புள்ளியுடன் நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து 115, தென் ஆபிரிக்கா 114, மேற்கிந்திய தீவுகள் அணி 114, அப்கானிஸ்தான் 87, இலங்கை, 85 புள்ளிகளுடனும் 10 ஆவது இடத்தில் பங்களாதேஷ் அணி 75 புள்ளிகளுடனும் உள்ளது.

மேலும் நேற்றைய தினம் வெளியான டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி முதலிடத்தையும், இலங்கை அணி 6 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 488

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்!

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என சச்சின் டென்டுல்கர் தெரிவித்துள்ளார்.


சச்சின் டெண்டுல்கரின் மகன்இ அர்ஜூன் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்.


நீண்ட நாட்களாக கிரிக்கட்டில் விளையயாடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர்இ தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.


உள்ளூர் கிரிக்கெட்டில் திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும்இ எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். ஏன சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 434

லா லிகா பட்டத்தை வென்ற பார்சிலோனா அணி!

லா லிகா தொடரில் பட்டத்தை வென்று 25 ஆவது முறையாகவும் பார்சிலோனா அணி சம்பியனாக தெரிவாகியுள்ளது.

லா லிகா கால்பந்து தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வந்துள்ளது. இத் தொடரில் கடந்த 2017 மற்றும் இந்த வருட போட்டிகளில் தொடர்ந்து தோல்வியின்றி வெற்றி நடைபோட்ட பார்சிலோனா அணி, நேற்று இரவு டெபோர்டிவோ அணியுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் 2 ற்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பார்சிலோனா அணி, தொடர்ந்து நடைபெற்ற இறுதி பாதி ஆட்டத்தில் 4 ற்கு 2 என்ற கணக்கில் டெபோர்டிவோ அணியை வெற்றி பெற்று, லா லிகா தொடரின் சம்பியனாக தெரிவாகியுள்ளது.

மேலும் போட்டியில் பார்சிலோனா அணி வீரர் மெஸ்ஸி 3 கோல்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 25 தடவையாகவும் லா லிகா தொடரின் சம்பியன் பட்டத்தை பார்சிலோனா அணி கைப்பற்றியுள்ளது. போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலும், புள்ளிகளின் அடிப்படையிலே பார்சிலோனா அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 446

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு ஐவர் அடங்கிய தெரிவுக்குழு நியமனம் !

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு ஐவர் அடங்கிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவுக்கு, கிரேம் லெப்ரோய் தலைவராக செயற்படவுள்ளார்.

காமினி விக்ரமசிங்க, எரிக் உபஷாந்த, சந்திக ஹத்துருசிங்க, ஜெரில் வொட்டர்ஸ் ஆகியோர் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

விளையாட்டு மற்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவுக்கு, கிரேம் லெப்ரோய் தலைவராக செயற்படவுள்ளார் என்பதோடு, தொடருக்கான தெரிவாளராக சந்திக ஹத்துருசிங்க செயற்படவுள்ளார்.

ஒரு வருட காலத்திற்கு பெயரிடப்பட்டுள்ள குறித்த குழுவின் பதவிக் காலம் மே மாதம் 16 ஆம் திகதி முதல் அமுலாவதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 414

பார்சிலோனா சம்பியன் பட்டத்தை மீண்டும் தனதாக்கினார் நடால்

பார்சிலோனா பகிரங்க டெனிஸ் கிண்ணத் தொடரின் சம்பியன் பட்டத்தை சர்வதேச ரீதியில் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் 11 ஆவது முறையாகவும் தனதாக்கியுள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், கிரேக்க வீரரான ஸ்டெஃபனொஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தியதன் மூலம் நடால் இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

பார்சிலோனா பகிரங்க டெனிஸ் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் கிரேக்க வீரரான ஸிட்ஸிபாஸ் மற்றும் நடால் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

ஏற்கனவே பத்து முறை பார்சிலோனா கிண்ணத்தைச் சுவீகரித்திருந்த நடால், இந்த முறையும் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பிலும், நடாலை வீழ்த்தி அவரது கிண்ணக் கனவைச் சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிட்டிஸிபாசும் போட்டியை ஆரம்பித்து இருந்தனர்.

எனினும் களிமண் தரையில் தனது வழமையான அதிரடி ஆட்டத்தை நடால் வெளிப்படுத்தியிருந்தார்.

அவரது அதிரடி ஆட்டம் ஸிட்ஸிபாஸுக்கு கடும் சவாலாக அமைந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நடால், 6 க்கு 2, 6 க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் ஸிட்ஸிபாஸை வீழ்த்தினார்.

இதற்கமைய மிக இலகுவாக ஸிட்ஸிபாஸை வீழ்த்தி 11 ஆவது முறையாக பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

Comment (0) Hits: 660

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பொறுப்பு கமல் பத்மசிறியிடம்..!

விளையாட்டு அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் உயர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது.

எனினும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஜுன் 14ம் திகதி வரை பிற்போடப்பட்டது.

இந் நிலையில் இந்த இடைப்பட்டக்காலப்பகுதியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அலுவல்களுக்கு விளையாட்டு அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி பொறுப்பாக  இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 430

கிறிஸ் கெயில் செய்த வேலையால் மைதானத்தில் பரபரப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிரபல வீரர் கிறிஸ் கெயில் விக்கெட் காப்பாளர் ராகுலின் கையுறையை அணிந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது பஞ்சாப் அணி விக்கெட் காப்பாளர் கே.எல் ராகுல் ஓய்வறை சென்று வந்தார்.

அந்த சமயத்தில் விக்கெட் காப்பாளர் ராகுலின் கையுறையை பஞ்சாப் வீரர் கெய்ல் எடுத்து கையில் மாட்டிக் கொண்டார்.

இதனையடுத்து பார்வையாளர்கள் அனைவரும் கெய்ல் தான் விக்கட் காப்பாளராக செயற்படப் போகின்றார் என நினைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

பின்னர் தான் தெரிந்தது அவர் நகைச்சுவைக்காக அணிந்து கொண்டார் என்று இதனையடுத்து மைதானத்துக்குள் வந்த ராகுலிடம் கையுறையை கெய்ல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 454

Page 1 of 4