செய்திகள்

வெற்றி பெற்றாலும் பயனில்லை! கோட்டா இன்னமும் அமெரிக்கரே!

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் அமெரிக்க  பிரஜையே என அறிவிக்குமாறும், அமெரிக்க பிரஜா உரிமைச் செயற்பாடுகளை நீக்கிக் கொள்ளல் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி இலங்கை மக்களை ஏமாற்றுவதை தடுத்து நிறுத்தும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் கோரி, அமெரிக்க நிவ் ஜர்சியில் வசிக்கும் இலங்கையரான அநுர ரூபசிங்க என்பவர் நிவ்யோர்க்கில் அமைந்துள்ள தென் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதியான கோட்டாபய, இராஜாங்கச் செயலாளா் மற்றம் இராஜாங்கத் திணைக்களம் இதவரையில் கோட்டாபயவின் குடியுரிமை விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும், அது இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முறைப்பாட்டாளரின் பிரதான வாதங்கள் சில உள்ளன. அவற்றுள் பிரதானமானது, கோட்டாபயவின் பிரஜா உரிமையை விலக்கிக் கொள்வதற்காக விண்ணப்பிப்பது அமெரிக்கச் சட்டத்தின் கீழ் சுயமாக இடம்பெறும் ஒரு விடயமல்ல. அத்துடன் இதற்கு முன்னர் கோட்டாபயவிற்கு எதிராக அஹிம்சா விக்ரமதுங்கவின் மனுவிற்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய கோட்டாபயவின் குடியுரிமை விவாதத்திற்குரியது என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகும்.

இதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் பெரும்பாலும் வழங்கப்படப் போவது கலிபொர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணையான தீர்ப்பாக இருக்கும். இதனடிப்படையில் கோட்டாபய இன்னமும் அமெரிக்கப் பிரஜையே என உறுதியானால் வரும் 16ம் திகதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றாலும் அதில் பயனேதும் இருக்கப் போவதில்லை.

காரணம் கண்டிப்பான அவரது நியமனத்திற்கு எதிராக தேர்தல் மனு தாக்கல் செய்து நீண்ட காலம் வழக்கு இழுபட்டுச் செல்லாமல் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதைப் போன்று கோட்டாபயவின் நியமனமும் இரத்தாகிவிடலாம்.

(லங்கா ஈ நிவ்ஸ்)

Comment (0) Hits: 267

கம்மன்பிலவின் தேசப்பற்று ஆடை கலைந்தது! (VIDEO)

பெரும் தேசப்பற்றாளர் எனக் காட்டிக் கொள்ளும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், பெற்றோர்கள் மற்றும் தங்கை ஆகியோர் அமெரிக்காவில் வசிப்பதாகவும், அனைத்துச் சொத்துக்களும் வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கொழும்பு பொது நூல் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர் சந்திப்பின் போது லசித பெரேராவினால் இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அவுஸ்திரேலிய பிரஜையான பிரயன் ஷெடிக்கின் சொத்துக்களை போலி அட்டோணி அனுமதிப்பத்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக உதய கம்மன்பிலவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்காகவே லசித பெரேரா வெளிநாட்டுப் பிரஜையான பிரயன் ஷெடிக் என்ற முதலீட்டாளரின் அட்டோணி பொறுப்பாளர் என்ற வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை கூட்டியிருந்ததார்.

தான் வெளிப்படுத்திய இந்த விடயங்கள் தொடர்பில் எந்த ஒரு இடத்திற்கும் தன்னோடு விவாதத்திற்கு வருமாறு லசித பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்தார்.

உதய கம்மன்பில அரசியல் நோக்கங்களுக்காக போலியான கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும், அவர் ஒரு தேசப்பற்றாளராகக் காட்டுவது கவலைக்குரிய விடயம் என்றும் லசித பெரேரா இதன் போது கூறினார்.

Comment (0) Hits: 175

இடதுசாரிகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு!

இன்று ராஜபக்ஷக்கள் 2015ம் ஆண்டை விட ஆபத்தானவர்கள் என்பதால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிக்கு முதலாவது விருப்பு வாக்கினை வழங்கிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குமாறு அரசியல் செயற்பாட்டாளரும், அரசியல் மற்றும் சமூக விமர்சகருமான விதர்ஷன கண்ணங்கர  இடதுசாரி ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  “அனித்தா” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.  

அந்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,

நாம் கடந்த காலங்களில் இடதுசாரி மாற்று சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினோம். 2015ம் ஆண்டு தேர்தலிலிருந்து நாம் இதனைக் கூறினோம். 2015ம் ஆண்டில் அனைவரும் அன்னத்தை அரவணைத்துக் கொண்ட போது நாம் இடதுசாரிகளிடத்தில் ஒன்றுபட்டோம்.

எனினும் இன்று இடம்பெறுவது அன்று தோற்றுப் போன ராஜபக்ஷக்கள் அன்றையதை விடவும் மூச்சு வாங்கிக் கொண்டு களமிறங்கியிருப்பதாகும். எவ்வாறாயினும் இம்முறை நிலைமையினை நாம் பார்ப்பது 2015ம் ஆண்டில் இருந்த நிலையை விட மோசமான வகையிலாகும்.

எமக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடு இல்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வந்தாலும் நாம் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனினும் இப்போதிருக்கும் நடைமுறைத் தெரிவு அதுவாகும். அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டே நாம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். இடதுசாரி கட்சிக்கு முதல் விருப்பு வாக்கினை வழங்கிவிட்டு இரண்டாவது வாக்கினை கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் வழங்குங்கள் என கோருகின்றோம் என்றார்.

Comment (0) Hits: 135

இனவாதத்தை கக்கிய ஆட்சி மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது - கிளிநொச்சியில் மனோ!

நாட்டை நாசமாக்கி, இனவாதத்தை கக்கிய, தமிழ் மக்களை கொன்றொழித்த கொடுமையான ஆட்சி மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேரதல் பிரசாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தோடர்ந்து பேசிய அவர்,

தமிழ் மக்கள் மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் சஜித் தவிர்ந்த பிரிதொரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜபக்ஷக்கள் தமிழ் மக்கள் மத்தியில் தந்திரோபாய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இது ஜனாதிபதித் தேர்தலாகும். வெவ்வேறு நபர்களுக்கு வாக்களிப்பதற்கு இது பொதுத் தேர்தல் அல்ல. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் சஜித் பிரேமதாசவும், தோல்வியடைப் போகும் கோத்தாபய ராஜபக்ஷவுமே இறுதி சுற்றில் இருக்கிறார்கள். இவர்களில் ஏதேனும் ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும். 

காணாமலாக்கப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், இனவாதம் , மதவாதம் உக்கிரமடைவதற்கும், நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்குமே கோத்தாபயவுக்கு வாக்களிக்க முடியும். அனைத்து மத மக்களும் ஒரே நாட்டவர்களாக வாழ வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

 

Comment (0) Hits: 360

"ராஜபக்ஷ யுகத்தின் ஊழல் பற்றி பேசுவோம்" - நாமலுக்கு சஜின்வாஸ் விடுத்த பகிரங்க சவால்!(VIDEO)

(VIDEO)

2010-2015 வரையான காலப்பகுதியில் ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்,மோசடி குறித்து பகிரங்கமாக விவாதிக்க வருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன,நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ முகாமின் தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

அம்பலங்கொடையில் இன்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றி போதே, அவர் இவ்வாறு சவால் விடுத்தார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

"2010-2015 ஆம் ஆண்டில் ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பற்றி பேச நான் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாகி, நான் குற்றமற்றவனாக இருக்க விரும்புகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் நான் ஒரு திருடன் என்று சொல்கிறார்கள். அதனால்தான் நாமல் ராஜபக்ஷ், ரோஹித்த அபேகுணவர்தன, ஷெஹான் சேமசிங்க மற்றும் காஞ்சன இவர்கள் யார் வேண்டுமானாலும் என்னுடன் விவாதத்துக்கு வரலாம். இவர்கள் அனைவரும் ஒன்றாக வந்தாலும் பராவாயில்லை. நான் தனியாகவே வருவேன்.

இறுதியாக, எங்களிடம் இப்போது உண்மை பேசும் 'சிரச' மட்டுமே உள்ளது. நான் முன்னர் சிரச தொலைக்காட்சியை கடுமையாக விமர்சித்துள்ளேன். அதற்காக சிரசவிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன்.

அத்துடன், இந்த விவாதத்தில் கடந்த 2010 - 2015வரை இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக மாத்திரம் கதைப்போம். இந்த விவாதம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெறவேண்டும். யார் மோசடிக்காரர்கள் என்பதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். தைரியம் இருந்தால் 13ஆம் திகதிக்கு முன்னர் வர வேண்டும். பயம் இல்லை என்றால் ஏற்றுக்கொண்டு வாருங்கள். தாங்கள் பிரநிதிதுவப்படுதும் அந்தக் குடும்பம் தூய்மையானது என்று நாட்டு மக்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்டுங்கள்" என்றும் கூறினார்.

Comment (0) Hits: 275

இலங்கையில் அரசியல் மறுபிரவேசத்திற்கு முயலும் சீனாவிற்கு நெருக்கமான குடும்பம்!

ஆசியாவில்  அகலக்கால் பதிக்கும் சீனாவின் முயற்சிகளின் மையமாக இலங்கையை மாற்றிய -கிளர்ச்சியை தோற்கடித்த -சர்ச்சைக்குரிய அரசியல் பரம்பரையொன்று இலங்கையில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றது.

தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் மூன்று தசாப்தகால கிளர்ச்சியை நசுக்கிய கோத்தாபய ராஜபக்ச நவம்பர் 16 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.

தமிழ் சிறுபான்மை இனத்தை சேர்ந்த கெரில்லாக்களிற்கு எதிரான வெற்றியை பெரும்பான்மை பௌத்த சிங்களவர்கள் பாராட்டும் அதேவேளை பாரியளவு மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

ராஜபக்ச அரசாங்கம் சீனாவிடமிருந்து மில்லியன் டொலர்களை பெற்று உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்தது,இதனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டது என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த தந்திரோபாயம் இலங்கையை மோசமான கடனாளியாக்கியது.

கடனிலிருந்து தப்புவதற்காக ராஜபக்சவின் சொந்த ஊரில் உள்ள துறைமுகத்தை இலங்கை சீனாவிற்கு வழங்கியது.

தற்போது மனித உரிமை விவகாரங்களும். இலங்கை   மீண்டும் சீனாவின் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளும் மேற்குலகில் தலைநகரங்களில் கரிசனையை அதிகரித்துள்ளன.

வோசிங்டன்  இந்தியா போன்ற தனது சகாக்களுடன் இணைந்து ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்கொள்ள முயல்கின்றது.பிராந்தியத்;தை சர்வதேச வர்த்தகத்திற்கான பகுதியாக வைத்திருப்பதற்கு முயல்வதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது,புதிய பட்டுப்பாதை திட்டம் ஆசியா முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்க முயல்கின்றது.

ராஜபக்சாக்களை அதிகளவு மேற்குலகு சார்பான அரசாங்கமொன்று தோற்கடித்தது,இந்த அரசாங்கத்தின் கீழ் இலங்கை இந்து சமுத்திரத்தில்  அமெரிக்க கடற்படையின் புதிய தளமாக மாறியது.

இலங்கை புதிய பொருளாதார உதவி திட்டத்தில் கைச்சாத்திடவேண்டும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா தனது படையினரின் பிரசன்னத்திற்கும் இலங்கை இணங்கவேண்டும் என விரும்புகின்றது.

ராஜபக்சாக்களின் ஆட்சியின் கீழ் இந்த ஒப்பந்தங்களிற்கு சாத்தியமில்லை என ஆய்வாளர்களும் இராஜதந்திரிகளும் தெரிவிக்கின்றனர்.

சகோதரர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றனர்.

தங்களது முன்னைய ஆட்சிக்காலத்தில் வேறு நாடுகள் நிதி வழங்காததன் காரணமாக சீனாவை நாடுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இம்முறை அமெரிக்கா உட்பட பல நாடுகளிடமிருந்து மூதலீடுகளை பெறமுயலப்போவதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்.

முன்னைய அரசாங்கத்தின் கீழ் நாங்கள் சில தவறுகளை செய்தோம்,இம்முறை நாங்கள் மாற்றங்களை மேற்கொள்வோம் என்கின்றார் கோத்தபாயவின் பிரச்சாரத்திற்கு பொறுப்பாகவுள்ள அவரது சகோதரரான பசில் ராஜபக்ச

இலங்கையில்  மனித உரிமை விவகாரங்களில் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டால், கடந்த காலத்தை போல இலங்கைக்கான வர்த்தக சலுகையை மீண்டும் நிறுத்தவேண்டியிருக்கும் என ஐரோப்பிய நாடுகள் கவலை கொண்டுள்ளன.

2009 யுத்தவெற்றி மனித உரிமைகள் பெருமளவு மீறப்பட்ட நிலையிலேயே பெறப்பட்டது என தெரிவிக்கும் விமர்சகர்கள்  பொதுமக்கள் இலக்குவைக்கப்பட்டனர்,சரணடைந்த போராளிகள் காணாமல் செய்ய்பபட்டனர் என தெரிவிக்கின்றனர்.

ராஜபக்சாக்கள் இரகசிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,அதிருப்தியாளர்களிற்கு எதிராக அடக்குமுறைகளில் ஈடுபட்டனர்,பௌத்த தீவிரவாத சக்திகளுடன் தொடர்புவைத்துள்ளனர் – குடும்ப ஆட்சியில் ஈடுபட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

ராஜபக்சாக்கள் பெரும் சுமைகளுடன் வருகின்றனர், என தெரிவித்த மேற்குலகை சேர்ந்த சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் அவர்கள் யுத்தத்தை வென்றனர் ஆனால் அமைதியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்தனர்,கடந்த காலங்களில் இருந்து அவர்கள் பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனரா என்பதே பெரும் கேள்வி என்கின்றார்.

கடந்த ஐந்து வருடங்களில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்பு கூறுவதை நோக்கிய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.சிவில் உரிமைகள் முன்னேற்றம் கண்டுள்ளன, ஆனால் ஊழல் குறித்த குற்றச்சாட்கள் காணப்படுகின்றன,ஏப்பிரலில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்த குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன,பொருளாதாரமும் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தனது அரசாங்கம் ஊழல் ஒழிப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவி;ல்லை என்கின்றார் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட வீ;ழ்ச்சி இலங்கையையும் பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளோம்,தற்போது வெளிப்படையான வெளிவிவகார கொள்கையை கொண்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளது.

கடந்த வருடம் பிரதமராவதற்கு மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததுடன் நாட்டை அரசமைப்பு நெருக்கடிக்குள் தள்ளின.

அடுத்த சில மாதங்களில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மகிந்த ராஜபக்ச பிரதமராக முயற்சிக்கலாம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்ட கோத்தாபாய ராஜபக்ச பாதுகாப்பு தொடர்பில் தனக்குள்ள திறமையை தேர்தல் பிரச்சாரங்களில் முன்வைக்கின்றார்.

சர்வதேச அளவில் காணப்படும் வலுவான மனிதர்கள் என்ற போக்கின்  தொடர்ச்சியே கோத்தாபய ராஜபக்ச என்கின்றார் ஜெயதேவ உயாங்கொட, பொதுமக்கள் மத்தியில் காணப்படு;ம் ஆழமான பாதுகாப்பின்மை குறித்த உணர்வுகளை இவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்கின்றார் இவர்.

மனித உரிமை மீPறல்களிற்காக சிறையில் இருக்கும் படைவீரர்களை விடுதலை செய்வேன்,யுத்த குற்றவாளிகளை விசாரணை செய்யும் ஐநாவின் திட்டத்திலிருந்து விலகுவேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்கள் குடும்பம் ஆட்சியை கைப்பற்றினால் ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு திட்டங்களை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக பசில் ராஜபக்ச தெரிவிக்கின்றார்.

கடந்த ஐந்து வருடங்களில் எதுவும் இடம்பெறவில்லை இதன் காரணமாக நாங்கள் எங்கள் பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்கின்றார் அவர்.

ஆனால் இம்முறை கடனிற்கு பதில் முதலீடுகள் குறித்தே நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்,அனைத்து நாடுகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்,என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்கள் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டியுள்ளனர்.

எனினும் இலங்கையும் ஏனைய பல நாடுகளும் சீனாவாலேயே திட்டங்களை துரிதமாக நிறைவேற்றமுடியும் என்பதை உணர்ந்துள்ளன.

சீனாவால் மாத்திரமே இது முடியும், அந்த நாட்டின் வங்கியுள்ள, இலங்கையுடன் அந்த நாட்டிற்கு சிறந்த உறவுள்ளது, புதிய பட்டுப்பாதை திட்டமுள்ளது என தெரிவிக்கின்றார் ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய பேர்னார்ட் குணதிலக.

கோத்தபாய ராஜபக்சவை விட விரும்பத்தகாத  - சட்டபூர்வ தன்மையற்ற நபர்களுடன் அமெரிக்கா உறவை பேணியுள்ளது என சுட்டிக்காட்டும் ஹெரிட்டேஜ் பவுன்டேசனின் ஆய்வாளர் ஜெவ் ஸ்மித் கோத்தாபய ராஜபக்ச குறித்து  மேற்குலகின் கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன ஆனால் அவர் இலங்கையில் உண்மையாகவே பிரபலமானவராக காணப்படுகின்றார்,கோத்தபாய ஏதாவது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளில்  ஈடுபடும்  வரை நாங்கள் இலங்கை மக்களின் விருப்பத்தை மதிக்கவேண்டும் என்கின்றார்.

 

வோல்ஸ்ரீட் ஜேர்னல்

தமிழில் ரஜீபன்

Comment (0) Hits: 132

"சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதியை உருவாக்க முடியாது என்பதை உணர்த்துவோம்' - றிஷாட்!

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும். என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில், சஜித் பிரேமதாசவை ஆதரித்து மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உரையாற்றினார்.

அவர்மேலும் கூறியதாவது,

"நாட்டின் எதிர்கால தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் இந்த தேர்தலில் நீங்கள் அமைதியாகவோ,  அலட்சியமாகவோ  இருந்துவிடக்  கூடாது.

கடந்த காலங்களில் எமது மதஸ்தலங்களை நொருக்கியவர்கள், உரிமைகளை பறித்தெடுத்தவர்கள், வியாபாரஸ்தாபனங்களை நாசப்படுத்தியவர்கள், நிம்மதியை தொலைத்தவர்கள் அனைவரும் கோட்டபாயவுக்கு பின்னால்  அணிதிரண்டுள்ளனர். இவர்களின் கனவுகளை சிதைப்பதற்காகவே சிறுபான்மை தலைவர்களான நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம். எனவே இனவாதிகளின் சதிகளை முறியடிப்பதற்கும் தடுப்பதற்கும் நீங்கள் எம்முடன் கைகோர்த்து சஜித்தை வெல்லவையுங்கள்.

சிறுபான்மை மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோமேயானால் சஜித் பிரேமதாச பாரியவெற்றியை பெறுவார்.நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான இந்த தேர்தலில் நியாயம் வெல்லவேண்டும், நீதி வாழவேண்டும்.

இனவாதிகள் தமது அணிதான் வெற்றிபெறுமென்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். நமது சமூகத்தை அளிப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டு இப்போது வாக்குகேட்டு  வருகின்றார்கள். போதாக்குறைக்கு அவர்களது முகவர்களை வடக்கு,கிழக்குக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். பெருவாரியான பணத்துடன் வந்துள்ள இந்த கோடரிக்காம்புகள் வடக்கு,கிழக்கு பிரதேசத்தில்   முகாமிட்டு வாக்கு கேட்கிறார்கள், கற்றை கற்றையாக காசை அள்ளி  விசுறுகிறார்கள் போதாக்குறைக்கு இங்குள்ள சிலபணக்காரர்களும் இந்த சதிக்கு துணைபோவதாக அறிகிறோம்.பணத்தை காட்டி வாக்குகளை கொள்ளையடிக்கும் இந்த கூட்டத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். சோரம்போய்விடாதீர்கள். அவர்கள் தந்தாள் கனிமத்துப்பொருட்கள் (யுத்தத்தில் விட்டுச்செல்லும் பொருட்கள்) என நினைத்து வாங்கிக்கொள்ளுங்கள்.

நாங்கள் ஊர் ஊராக, வீடு வீடாக வந்து வாக்கு கேட்கமுடியாது போய்விட்டாலும் நீங்கள் உணர்ந்து வாக்களியுங்கள்.சஜித் பிரேமதாசாவை வெல்லவைப்பதன்  மூலம் நமது எதிர்காலம் நமது மண்ணின் எதிர்காலம் சிறக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச,அமைச்சர்களான ஹக்கீம், மனோகணேசன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன். முன்னாள் எம்பிக்களான சபீக் ரஜாப்தீன்,  ஹுனைஸ் பாரூக், அஸ்லம், முத்தலி பாவா  பாரூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான், அலிகான் ஷரீப்,நியாஸ், பாயிஸ், பிரதேசபை தவிசாளர்களான முஜாஹிர், சுபியான், செல்லத்தம்பு உட்பட இங்கு பலர் உரையாற்றினர்.

Comment (0) Hits: 134

மங்களவின் சவால்; மெலேணியாவுக்கு அடுத்தபடியாக மற்றுமொரு அமெரிக்க முதல் பெண்மனி! (VIDEO)

(VIDEO)

கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் அமெரிக்க பிரஜையே என்றும், தற்செயலாக 16ம் திகதி அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாவது மாத்திரமின்றி, மெலேணியா ட்ரம்புக்குப் புறம்பாக மற்றொரு அமெரிக்க ஜனாதிபதி முதல் பெண்மனி கிடைக்கப் போவதாகவும், எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தனது அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொண்ட சான்றிதழை நாட்டு மக்களுக்கு காட்டுமாறும் தான் கோட்டாபயவுக்குச் சவால் விடுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இச்சந்தர்ப்பத்தில் அனைத்து இலங்கையர்களும் கவனத்திற் கொள்ள வேண்டியது MCC என்று மில்லேணியம் சேலேண்ஜ் ஒப்பந்தமன்றி, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரு பிரதான வேட்பாளர் இன்னமும் அமெரிக்க பிரஜா உரிமையினை விலக்கிக் கொள்ளாத நிலையில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜைகளாகவே உள்ளார்கள் என்ற விடயத்தையேயாகும்.

அமெரிக்காவின் கடவுச் சீட்டைக் கொண்டவர் ஒருவர் அமெரிக்க குடியுரிமையினை உரிய முறையில் விலக்கிக் கொண்டால் ஐக்கிய அமெரிக்காவின் “தேசிய தன்மை இழப்புச் சான்றிதழ்” (Certificate of Loss Nationality) வுடன் அமெரிக்க திறைசேரியினால் அதனை அங்கீகரித்து வெளியிடப்படும் DS 4079 என்ற சான்றிதழும் அவரிடத்தில் இருக்க வேண்டும்.

2019ம் ஆண்டின் முதல் ஆறு மாத்தினுள் 1090 பேர் தமது குடியுரிமையினை விலக்கிக் கொண்டதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது.  எவ்வாறாயினும் அமெரிக்கவின் 94 மாவட்ட நீதிமன்றங்கள் எதிலும் மேற்சொன்ன அங்கீகரிக்கப்பட்ட DS 4079 சான்றிதழ் கோட்டாபயவினால் சமர்ப்பிக்கப்படவில்லை."

Comment (0) Hits: 625

மக்களின் உண்மையான பிரதிநிதி சஜித்! - ஜே.வி.பி முன்னாள் எம்.பி ரணவீர பத்திரண! (VIDEO)

(VIDEO)

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டி நிலவுவது சர்வாதிகாரி ஒருவருக்கும், உண்மையான மக்கள் பிரதிநிதி ஒருவருக்குமிடையிலேயே என்றும், மக்களின் உண்மையான தலைவர் சஜித் பிரேமதாசவே என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன தெரிவித்துள்ளார். 

“இன்று இந்த நிமிடம் வரையில் இந்தத் தேர்தல் ஜனநாயகம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் ஒரு தேர்தலாக மாறியிருக்கின்றது. அது மாத்திரமல்ல, மறுபக்கத்தில் நோக்கினால்  பாசிசம் தொடர்பில்,  பாசிசவாதத்தை சமூகத்தினுள் ஊன்றச் செய்கின்ற தேர்தலாகவும் ஆகியிருக்கின்றது.

இந்த தேர்தல் மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாகும். காரணம் ராஜபக்ஷக்கள் இரண்டு தசாப்தங்களாக போட்டியிடும் சந்தர்ப்பத்திற்கு வந்திருக்கின்றார்கள். 2015ம் ஆண்டில் ராஜபக்ஷக்களைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான தேர்தலாக இது மாறியிருப்பது தலைவிதியாகும்.

இந்நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் புறத்திலிருந்து தற்போது கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் இரண்டு குவியல்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்று தேசப்பற்றாளர்களாகவும், மற்றையது நாட்டுக் எதிராகச் செயற்படும் அணியாக சுட்டிக்காட்ட முடியும் ” என்றார்.

Comment (0) Hits: 188

சஜித்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு!

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு பூரண ஆதரவு வழங்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தவறான தீர்ப்பு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம் என  கூட்டமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு கட்சிகளின் தலைவர்களின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் வரவேற்றுள்ளன.

Comment (0) Hits: 133

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? - ஆதரவாளர்களுக்கு சந்திரிகா கூறும் கதை! (VIDEO)

(VIDEO)

வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சியை முன்னேற்றுவதற்கு, பலப்படுத்துவதற்கு அதிகளவான சந்தர்ப்பங்கள் கிடைப்பது யாரிடத்தில் என்பதை நன்கு சிந்தித்துப் பார்த்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கான நேரம் ஸ்ரீ.ல.சு.கட்சியினருக்கு வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் மஹிந்தவின் கும்பல் கடந்த காலங்களில் ஸ்ரீ.ல.சு.கட்சியை அழிப்பதற்கு முயன்ற போதிலும், ஐக்கிய தேசிய கட்சியினால் கடந்த ஐந்து வருட காலத்தில் அவ்வாறான அழுத்தங்கள்  மேற்கொள்ளப்படவில்லை என்றும், தற்போது ஐக்கிய தேசிய கட்சி உண்மையாகவே ஜனநாயகமடைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

UTV தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போதே முன்னாள் ஜனாதிபதி இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி கருத்து தெரிவித்த போது கூறியதாவது,

“இந்நேரத்தில் மிகவும் சிக்கலான தீா்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் என்னாலும் தீர்மானம் ஒன்றை எடுப்பது மிகச்சிரமமாகும். எனினும் வரும்காலங்களில் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கு நூறு வீதமல்லாத தற்காலிக தீா்மானத்தை எடுக்க வேண்டிவரும். இப்போதிருப்பது எனக்கெனில் அந்தளவு வெற்றிகரமானதல்லாத இரண்டு தீர்மானங்களில் ஒரு தீர்மானத்தை எடுப்பதேயாகும். அதில் எதில் அதிக வெற்றி உள்ளது எனப் பார்த்து அதனை எடுக்க வேண்டியுள்ளது.

இத ஒரு தற்காலிகமானது என நினைத்து வரும் காலத்தில் கட்சியை முன்னேற்றுவதற்கு, பலப்படுத்துவதற்கு அதிகளவில் எமக்கு யாரிடமிருந்து வாய்ப்புக்கள் கிடைக்கின்றது எனத் தேடிப்பார்த்து எம்மால் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  நாம் கடந்த நான்கு வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றோம்.  இந்தக் காலத்தில் எனில் ஐக்கிய தேசிய கட்சியினால் எமது கட்சிக்கு எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை.

நாம் கேட்ட நிதிகளை எல்லாம் கேட்கும் நேரத்தில் வழங்கினார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்கிய அளவு நிதியே எமக்கும் வழங்கப்பட்டது. அரசியல் ரீதியில் எமக்கு எந்த பாதிப்புக்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஏற்படுத்தவில்லை. எனினும் எமக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது மொட்டுவின் மஹிந்த அணியேயாகும். அன்றும் பாதிப்புக்களைச் செய்தார்கள். இன்றும் செய்து கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

Comment (0) Hits: 225

சஜித் - கோட்டா; அரச புலனாய்வுச் சேவை கணிப்பீட்டு அறிக்கைகள் போலியானவை!

அரச புலனாய்வுச் சேவையினால் (SIS) மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்புக்களுக்கு அமைய, தத்தமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ஆகியோரின் சமூக ஊடக அணியினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கதைகள் முற்றாக பொய்யானதாகும்.

ஜனாதிபதிக்கு மாத்திரம் பொறுப்புக் கூறுவதற்கு கட்டுப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவை (SIS) யினால் தேசிய தேர்தல்களின் போது, மக்கள் கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்டு அரச தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது சம்பிரதாயமாக இடம்பெற்று வருவதோடு, இம்முறை அவ்வாறான கருத்துக் கணிப்பீட்டினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியிடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும், பிரதான இரண்டு வேட்பாளர்களின் சமூக ஊடக அணிகளால் அரச புலனாய்வுச் சேவை மற்றும் NIB (NIB என்ற பெயரில் எந்த ஒரு பிரிவும் இதுவரையில் செயற்படவில்லை)  சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கை எனத் தெரிவித்து பல அறிக்கைகள் சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 241

"MCC அமெரிக்க ஒப்பந்தம்; பாதக விடயங்கள் இருந்தால் அரசியலிருந்து விடைபெறுவேன்" - மங்கள! (VIDEO)

மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு (MCC) ஒப்பந்தத்தினூடாக அமெரிக்காவுக்கு ஒரு அங்குலம் காணியாவது வழங்கப்படுவதாகவோ அல்லது நாட்டுக்கு பாதகமான எந்த ஒரு வசனமாவது ஒப்பந்தத்தில் இருப்பதாகவோ நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து மட்டுமன்றி அரசியலிலிருந்தே ஒதுங்குவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நேற்று(06) நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

"2006 செப்டம்பரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜோர்ஜ் புஷ்ஷும் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இருந்த போதும் வெள்ளை வேன் கலாசாரம், ஆட்கடத்தல் என்பன உக்கிரமடைந்ததால் அமெரிக்கா இந்த உதவியை வழங்குவதை நிறுத்தியது.

உண்ணாவிரதமிருந்த பிக்குவுக்கு கோட்டாபய வழங்கிய கடிதத்தில் ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சுவசெரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பித்தபோது இந்திய ஆக்கிரமிப்பு இடம்பெறப்போவதாக மருத்துவர் சங்கம் எதிர்த்தது. ஆனால் அந்த சேவை இன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

தற்பொழுது அமெரிக்காவுடனனா எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பிசாசொன்றை காட்டி பயமுறுத்த முயல்கின்றனர். ஒரு பேர்ச் 180.10ரூபா வீதம் அமெரிக்காவுக்கு காணி வழங்கி அமெரிக்க இராணுவத்தை கொண்டுவரப் போவதாக நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமூக ஊடகங்களினூடாக பிரசாரம் நடைபெறுகிறது.

தேர்தலுக்கு முன்னர் அவசரப்பட்டு ஒப்பந்த செய்யப் ​போவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் பல மாதங்கள் அமைச்சரவையில் ஆராய்ந்த பின்னரே அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. டிசம்பர் 2ஆவது வாரத்தில் எம்.சி.சி. பணிப்பாளர் சபை கூடுகிறது. அதற்கு முன்னதாக அமைச்சரவையின் அனுமதியாவது பெற்றுத்தருமாறு கோரப்பட்டது.

தாமதமானால் நாட்டுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை இழக்க நேரிடும். பாராளுமன்ற அனுமதி கிடைத்த பின்னரே இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும். இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற சில மாதங்கள் செல்லும்.

போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு, காணி நிர்வாகம் என்பவற்றிற்கே இந்த உதவி வழங்கப்படுகிறது.

நாட்டுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை தடுக்க எதிரணி முயல்கிறது.

போக்குவரத்து நெரிசலால் வருடாந்தம் 8.1 டிரில்லியன் ரூபா பணம் விரயமாகிறது.

இது 2035 ஆகும் போது அதிகரிக்கும். மகாவலி நிர்மாணிக்க செலவிடப்பட்ட நிதியில் 13 வீதத்தை அமெரிக்கா தான் வழங்கியது. எமது 25.9 வீதமான ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கே செல்கிறது" என்றார்.

அமெரிக்கா அறிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரே மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஒப்பந்தம் கைச்சாத்திடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெறல் ஆகிய செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையுடன் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் மூலம் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையை அமெரிக்கா வரவேற்கின்றது. இது இலங்கையில் வாழும் 11மில்லியன் மக்களுக்கு பயனளிப்பதாக அமையும்.

இந் நிதியுதவியைக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மூலம் நாட்டின் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்கலாம். இது பொது போக்குவரத்தையும் மாகாண வீதிகளையும் மேம்படுத்துவதாக அமையும்.

இலங்கையின் காணி நிர்வாகத்தை மேம்படுத்தும். இந் நிதியுதவி காரணமாக அமெரிக்கா எந்தவொரு காணிக்கும் உரித்துடையதாகவோ குத்தகையை கொண்டதாகவோ இருக்காது. இந்த 05 வருட திட்டத்தை இலங்கையே மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் செய்யும்.

Comment (0) Hits: 197

எஸ்.பி. திஸாநாயக்கவின் இரு மெய் பாதுகாவலர்களும் கைது!

கினிகத்தேனையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மெய் பாதுகாகவலர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (07) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தை கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில் தடுத்த கும்பல் ஒன்றை கலைப்பதற்காக அவரின் மெய் பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது இருவர் படுகாயமடைந்து, தெலிகம வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Comment (0) Hits: 158

"முடிந்தால் ஆவணத்தை சமர்ப்பியுங்கள்" கோட்டாவிற்கு மங்கள சவால்!

கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என்று அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய ராஜபக்ச கைவிட்டமைக்கான சான்றிதழை, பொதுஜன பொரமுன கட்சியால் சமர்பிக்கமுடியுமா? என்று அவர் சவால் விடுத்தார்.

மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

Comment (0) Hits: 149

சந்தியா எக்னெலிகொடவினால் கோட்டாவுக்கு விளக்கம் கோரி கடிதம்!

“போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஏராளமான படை வீரர்கள் சிறைகளில் உள்ளார்கள். 17ம் திகதி காலையாகும் போது அவ்வாறான அனைத்து படைவீரர்களையும் விடுதலை செய்வேன்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது  தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கூறியது தொடர்பில் விளக்கம் கேட்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட உடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் கோட்டாபயவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய தெரிவித்துள்ள விடயத்தின் மூலம் தான் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் “சட்டத்தை அமுல் படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தலும், சட்டத்தின் அரவணைப்பும் நியாயமானதாக இருக்க வேண்டும்” என்ற அரசியல் அமைப்பு உரிமை மீறப்பட்டுள்ளதாக சந்தியா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவின் அந்தக் கூற்றானது, பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஏவ்வகையான குற்றங்களைச் செய்வதற்கும், அவற்றை நியாயப்படுத்துவதற்கும் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குவதோடு, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் திறமையான, நேர்மையான அதிகாரிகளின் துணிச்சலை வெலவீனப்படுத்தும் செய்வதாக உள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 187

சஜித்தின் 'பேட்' பேச்சுக்கு ரொஷான் மகாநாமவின் கருத்து! (VIDEO)

1996ம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னணி கிரிக்கட் வீரரும் ஐ.சீ.சீ யின் மூத்த போட்டி தீா்மானிப்பாளராகவும் பணியாற்றும் ரொஷான் மகாநாம, தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு, இந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய் (பேட்) தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை சனத்தொகையில் 62 வீதமாக இருக்கும் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களை வேறாகப் பார்த்தலுக்கு எதிராக சமூக ஊடகம் மற்றும் ஊடகங்களுக்கு அப்பால் சென்ற செயற்பாடுகள் அவசியம் என்றும், சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் தொழில் சந்தர்ப்பங்களுக்காகவும் அவர்களுக்கு சமத்துவம் வழங்குவது நாட்டுப் பிரஜைகளான எமது பொறுப்பாகும்.

பெண்களினது, பெண் பிள்ளைகளினது ஆரோக்கியத் தேவைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையானவைகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால், அன்றாடம் கல்வி நடவடிக்கைகள் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத பெண்கள் இன்றும் வாழும் நாட்டில், நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் ஆரோக்கிய தலைப்புக்கு அப்பால் சென்ற ஒன்றாக ஆகியிருக்க வேண்டியது என்றாலும் சிலர், இதற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் ரொஷான் மகாநாம தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தினுள் இவ்வாறான விடயங்களைப் பேசுவத்கு உள்ள தயக்கத்தினால் இவை மறைக்கப்பட்டுப் போன பிரச்சினையாகியுள்ளது. புதிய உலகில் வாழும் மக்களாக இந்த குறுகிய எல்லையிலிருந்து விலகி பெண்களது இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூக கருத்துக்களை உருவாக்க வேண்டும்.

மூன்று பெண்பிள்ளைகளின் தந்தை என்ற வகையில், தனக்கு அவர்களது தேவைகள் தொடர்பில் புரிந்துணர்வு உள்ளது என்றும், எனவே ஒட்டு மொத்த பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கு தான் பின்நிற்கப்போவதில்லை என்றும் அவர் அந்தக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 247

சந்திரிகாவின் பதவி நீக்கம் ஒத்திவைப்பு; சு.க தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம்! (VIDEO)

ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவினால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் போன்றவற்றை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் பிற்போடுவதற்கு நேற்று முன்தினம் (5) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டாரங்களில் நேற்று முன்தினம் (5) இடம்பெற்ற “நாம் ஸ்ரீலங்கா” மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக பதில் அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாசாவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த செயற்குழு கூட்டத்தின் போதே, இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவும் கலந்துகொண்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கட்சி ஆலோசகா் பதவியிலிருந்து நீக்குதல் மற்றும் அவரது கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்துவது தொடர்பில், பேச்சுக்கள் அடிபட்டிருந்த நிலையில் மத்திய செயற்குழுவில் இது தொடர்பாக பேசப்பட்ட போதிலும் எந்தவித தீர்மானங்களும் இவ்விடயமாக மேற்கொள்ளப்படவில்லை.

Comment (0) Hits: 156

Page 5 of 103