செய்திகள்

'கோட்டா வந்தால் ஆபத்து! சஜித்திற்கு வாக்களியுங்கள்' - பிரபல பாடகர் சுனில் பெரேரா!(VIDEO)

இயற்கை என்ற ஒன்று உள்ளதுதானே. வேறு யார் வந்தாலும் எனக்குப் பிரிச்சினையில்லை, அந்த ஆபத்தான நபர் வந்துவிடக் கூடாது என்றே நான் கூறுகின்றேன். அவர் வந்தால் அவ்வளவுதான். எனவே சற்று சிந்தித்து 16ம் திகதி சஜித்திற்கு வாக்களியுங்கள்” என பிரபல பாடகர் சுனில் பெரேரா தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“புரவெசி பலய” அமைப்பின் கூட்டம் ஒன்றின் போது இந்த வேண்டுகோளை விடுத்த சுனில் பெரேரா, தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,

“இந்த தேர்தலில் நாம் அமைதியாக இருக்கவே இருந்தோம். அல்லது சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு அல்லது ரொஹான் பல்லேவத்தைக்காவது ஓட்டு போடுவதற்கே நினைத்திருந்தோம். ஆனால் அதன் பின்னர் வீட்டாரும் ஏனையவர்களும் இணைந்து நாம் எடுத்த தீர்மானத்திற்கான காரணம் வேறு எதுவுமில்லை, பயமே காரணமாகும். அச்சம், அச்சம், அச்சம்  கடும் அச்சம். ஒரு வேட்பாளருக்கு கடும் பயம்.

பிரதான வேட்பாளர்கள் இருவர்தானே இருக்கின்றார்கள். ஒருவர் மீதுள்ள பயத்தினால் சுயேட்சை வேட்பாளருக்கு நாம் வாக்களித்தோம் என வைத்துக் கொள்வோமே. அப்படிச் செய்தால் நாம் பயப்பட்ட வேட்பாளருக்கு அது சாதகமாக அமைந்துவிடும். அப்போது நாம் எங்கு வாக்களித்தாலும், யாருக்கு வாக்களித்தாலும் அப்போது சஜித் பிரேமதாசாவின் வாக்குகள் குறைந்து போய்விடும்.

எனவே இந்த நேரத்தில் நாம் அனைவரும் சஜித் பிரேமதாசாவுக்கே வாக்களிக்க வேண்டும்” என்றார்.

 

Comment (0) Hits: 1722

'கோட்டா அமெரிக்கராக இருந்தாலும் பிரச்சினையில்லை; ஜனாதிபதியாக்குவோம்' - TNL இஷிணி விக்ரமசிங்க!

“கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அமெரிக்கன் பிரஜையாக இருந்தாலும் அது எமக்குப் பிரச்சினையில்லை. அவர் சந்திரனில் பிறந்திருந்தாலும் பிரச்சினையில்லை. 100 வீதம் அவரை எமது அடுத்த ஜனாதிபதியாக்கிய தீருவோம்” என TNL  தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இஷிணி விக்ரமசிங்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மூத்த சகோதரரின் மகளான இஷிணி, தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 166

"கோட்டாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தினர் மரணிக்கலாம்" - அகிம்ஸா விக்ரமதுங்க!

இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன்.

தோற்கடிக்க முடியாத, அற்புதமான,  அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன்.

கண்டிக்கத்தக்க,  கோழைத்தனமான  பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன்.

தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கின்றேன்.

இதன் மூலம் நான் சஜித் என்ற வேட்பாளர் எப்படி உருவானார் என்பதை சொல்கின்றேன்.

அவரது வேதனை அவரது போராட்டங்கள் அவரது பயணம் ஆகியன எப்படி என்னுடைய போராட்டங்கள் பயணம் வேதனை ஆகியவற்றை ஒத்தவையாக காணப்படுகின்றன என்ற உணர்வு எனக்குள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

இன்றைய சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன, இன்று உள்ள  என்னை இந்த சவால்களும் அனுபவங்களுமே உருவாக்கின.

இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் எனது சொந்த ஆத்மாவை வடிவமைத்த அதே தீயினால் உருவாக்கப்பட்டவர்.

மற்றைய மாற்றீடான வேட்பாளர் எனது தந்தையின் மரணத்தை தொலைக்காட்சியில் கொண்டாடியவர்.

ஜனாதிபதி பிரேமதாசாவின் அர்த்தமற்ற கொலை குறித்து பிரபாகரன்கூட தம்பட்டமடிக்கவில்லை.

ஆனால் கொலைகார கும்பலொன்று எனது தந்தையை கொலை செய்தவேளை கோத்தபாயவினால் தனது மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை.

எனது தந்தையின் கொலைக்கும் படையினருக்கும் இடையிலான  தொடர்புகள் குறித்து தெரியவந்த வேளை அவர் விசாரணைகளை மேற்கொள்வேன் என்றோ அல்லது  பத்திரிகையாளர்களை பாதுகாப்பேன் எனவோ வாக்குறுதி வழங்கவில்லை.

அவர் குற்றவாளிகளை நீதியின் பிடியிலிருந்து காப்பாற்றுவேன்  என சூளுரைத்தார்.

கோழைகள் மாத்திரமே இரத்தகளறியை வார்த்தைகளால் எதிர்கொள்வார்கள்.

எனது வாழ்க்கையில் கோத்தாபய எந்த சவாலையும் எதிர்கொண்டதை நான் காணவில்லை. அவருக்கு எதிராக பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், அவர் தான் குற்றமற்றவர் என்பதை ஒருபோதும் நிருபிக்கவில்லை.

மாறாக அவர் தாமதங்கள் சட்டசிக்கல்கள் மூலம் தப்பி வெளியேறியுள்ளார்.

அவர் அதிகாரத்திலிருந்த வேளை  அவரை எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது, அவர் தனது எதிர்வேட்பாளர்களை எதிர்கொள்வதையோ அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதையோ தவிர்த்துக்கொண்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பினால் அவர் பதிலிற்கு ஏனையவர்களை நாடுகின்றார்.

நீதியுடனான தங்களின் போராட்டங்களில் இருந்து தப்புவதற்காக கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்பும் ஊடக முதலாளிகள் அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உருவாக்குகின்றனர்- தயாரிக்கின்றனர்.

நெருக்கடியான காலத்தின் போது அவர் அமெரிக்காவிற்கு தப்பியோடிவிட்டு, தனது குடும்பத்தவர்கள் செங்கம்பளத்தை விரித்தவேளையே அவர் இலங்கைக்கு திரும்பிவந்தார்.

சஜித் பிரேமதாசாவை நான் பார்த்ததில்லை- அவருடன் நான் பேசியதில்லை ஆனால் தொலைவிலிருந்து பார்க்கும்போதே அவர் வித்தியாசமானவராக தெரிகின்றார்.

அவர் 2000 மற்றும் 2001 இல் அனைத்து தடைகளையும் முறியடித்து அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

2003 ஜனவரி 31 ம் திகதி சஜித் பிரேமதாச பதில் சுகாதார அமைச்சராக தனது அரசியல் வாழ்க்கையை முன்னோக்கி  நகர்த்திக்கொண்டிருந்த வேளை கோத்தபாய ராஜபக்ச இலங்கையை கைவிட்டுவிட்டு  அமெரிக்க கொடிக்கு விசுவாம் வெளியிட்ட பின்னர் அமெரிக்க கனவில் திளைத்திருந்தார்.

நீதிக்காக போராடிய எங்களை போன்ற பலரை கைவிட்டுள்ள இந்த அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய போதிலும், அவர் தனது நடவடிக்கைகள் மூலம் தன்னை வித்தியாசமானவராக காண்பிப்பதை நான் பார்த்திருக்கின்றேன்.

கடந்த வருடம் ராஜபக்ச சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற முயன்ற சதி முயற்சியின் போது தனது தனிப்பட்ட நலன்களை கைவிட்டு அரசமைப்பை காப்பாற்ற சஜித்பிரேமதாச போராடியதை  நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

அவர் தனது கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்காக போராடி புதிய பாதையொன்றை வகுத்தார்.

அவர் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை வழங்கவில்லை. அரசியல்வாதிகள் விலகியிருக்கும் நிலையை உருவாக்கி பொலிஸாரும் தொழில்சார் வல்லுனர்களும்  தங்கள் கடமைகளை நிறைவேற்றக் கூடிய சூழலை ஏற்படுத்த முனைகின்றார்.

எங்களால் இதனைமாத்திரம் கேட்க முடியும்.

நேர்மையான, அச்சமற்ற, அர்ப்பணிப்பு மிக்க அவரை போன்ற ஒருவர் மிகச்சிறந்த ஜனாதிபதியாக விளங்க முடியும் என எனது மனதில் நான் எண்ணுகின்றேன்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் தங்கள் பணியின் போது கோத்தபாய ராஜபக்சவுடன் மோதிய பல துணிச்சலான காவல்துறை அதிகாரிகள், சட்டவாளர்கள், சாட்சிகள், நீதிபதிகள் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என நான் கடுமையான அச்சம் கொண்டுள்ளேன்.

கோத்தபாய ராஜபக்சவினால் தீவிரவாதத்தை தூண்டி, நாட்டை தீமூட்ட முடியும். அதன் பின்னர் அதனை தன்னால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவிப்பார்.

பத்து வருடங்களிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச குறித்து எனது தந்தை, நாட்டை எச்சரிக்க முயன்றார். அதற்காக அவர் மரணத்தை தழுவினார்.

நாளை கோத்தபாயவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் தந்தை, சகோதரன், தந்தை, தாய் அல்லது கணவன், மனைவி காணாமல் போகலாம், அல்லது மரணிக்கலாம்.

அந்த நபர் உங்களை காப்பாற்றுவார் என நம்புவதன் ஆபத்து என்னவென்றால், அவரிடமிருந்து உங்களை யாராலும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது.

அகிம்சா விக்கிரமதுங்க

தமிழில் ரஜீபன் 

Comment (0) Hits: 143

'அரசாங்கத்தை ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடகிழக்கு தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை' - மஹிந்த!

அரசாங்கத்திற்கு எல்லாவிதத்திலும் ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடகிழக்கு தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.தமிழ்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் கல்விகற்பதுடன், அங்கு சுகபோகத்தை அனுபவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாள் 10.11.2019 முல்லைத்தீவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கோத்தாபய ராஜபக்ச ஒருபோதும் தென்பகுதியில் சிங்கள மொழியில் ஒரு விதத்திலும், வடக்கிலே தமிழ மக்களுக்கு வேறு விதத்திலும், சர்வதேசத்திலே ஆங்கில மொழியில் வேறு ஒரு விதத்திலும் கூறியதில்லை.

ஏன் அப்படி கூறுகின்றேன் எனில் ஐக்கியதேசியகட்சி வேட்பாளர், சிங்களமொழியில் ஒருவிதத்திலும், தமிழ்மொழியிலே ஒரு விதத்திலும், ஆங்கிலமொழியில் வேறுவிதத்திலும் கூறிக்கொண்டிருக்கின்றார்.

அதேபோன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு, அரசாங்கத்தோடு இணைந்து எல்லாவிதத்திலும் ஆதரவு வழங்கி, அவர்களுக்கு வாக்குகளைவழங்கி இருந்ததோடு மட்டுமல்லாது, வடகிழக்கு தமிழ்மக்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யவில்லை.

இந்த தமிழ்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் அனைவரும், வெளிநாட்டில்தான் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்தோடு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை.

எமது ஆட்சிக்காலத்திலே நாம் செய்த அபிவிருத்தியைத் தவிர இந்த அரசாங்கம், என்ன அபிவிருத்தியைச் செய்ததென ஒவ்வொருவரும் சிந்தித்துப் பாருங்கள்.

அவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மட்டுல்ல, நாடு முழுவதும் எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.

உண்மையில் எமது ஆட்சிக் காலத்தில் பார்த்தால், இந்தப் பகுதியிலும் சரி, அனைத்துப் பகுதிகளிலும் வீதி அபிவிருத்தி, பாலங்கள், பிரதேசமட்டங்களிலும் எமது அபிவிருத்தியில்தான் இவற்றை நாம் சிறப்பாக அமைத்திருந்தோம்.

அதேபோல இந்தக் கடற்கரைப் பிரதேசம் மிக அழகிய பிரதேசமாகும். இந்தப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் நாம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செய்யவேண்டும்.

இந்தப் பகுதியிலே விசேடமாக, ஜீவனோபாய விடயங்களை முன்னேற்றவேண்டிய கட்டாயம் இருக்கின்து.

விவசாயத்தொழிலை மேம்படுத்த நாம் இலவசமாக உரங்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம். அந்த வேலையை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

அதேபோல இந்த பகுதியில் அபிவிருத்தி வேலைகள் இடம்பெறும்போது, வேலைவாய்ப்புகள் கிடைக்கும்போது, கையில் பணம் கிடைக்கும்போது அது தானாகவே உங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துகின்றது.

நாம் எமது காலத்தில் 14ஆயிரம் விடுதலைப்புலி போராளிகளை புணரவாழ்வளித்து, சமூகமயப் படுத்தினோம். அவர்களுக்கு சிவில் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினூடாக வேலைவாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தோம். சிலரை இராணுவத்தில் சேர்த்துக்கொண்டோம், சிவரை பொரிஸ் திணைக்கத்திலே இணைத்துக்கொண்டோம். அவர்கள் தற்போது நன்றாக சேவைசெய்கின்றனர்.

இந்த அரசாங்கம் வந்தவுடன் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திலிருந்து சிலரை வெளியேற்றினர். அவற்றை சிறந்த முறையில்கட்டியெழுப்ப வேண்டுமென நாங்கள் நினைக்கின்றோம்.

இந்த இடங்களில் காணிப் பிரச்சினைகள் இருக்கின்றது அவற்றை தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

நந்திக்கடல் களப்பு பாலத்தினை மறுசீரமைப்புச் செய்வோம் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன். அந்தக் களப்பையும் நீர்நிலையினையும் மீன்பிடித்துறைக்கென ஒதுக்குவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

யுத்தம் என்று வந்தால் இரு தரப்பிற்கும் காயங்கள் ஏற்படும், தமிழ் இளையோரும் மரணிக்கின்றனர். சிங்கள இளைஞர்களும் மரணிக்கின்றனர்.

அவ்வாறு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களைக்கூட சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழக்கூடியவகையில் ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருதரப்பிலும் இருக்கின்றனர். அங்கவீனர்கள் இருக்கின்றனர். அவர்களை நிர்வகிக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அந்தபொறுப்பையும் நாம் நிறைவேற்றுவோம்.

எனவே எதிர்வரும் 16ஆம் திகதி வாக்குச் சாவடிகளுக்குச்சென்று கோத்தாபயவிற்கு வாக்களித்து  வெற்றிபெற செய்யுங்கள் என்றார் .

Comment (0) Hits: 123

சஜித்துக்கு எதிராக சேறுபூசும் காணொளியை வெளியிட தயாராகும் இராஜ்!

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன, புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சேறுபூசும் காணொளி ஒன்றை வெளியிட தயாராகி வருவதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன, “புதல்வரே! நவம்பர் 13ம் திகதி வடக்கு திசை நோக்கி உங்களது ஸ்மார்ட் போனை சுப நேரத்தில் பார்ப்பீராக?" எனக் கூறியுள்ளார்.

மறுபுறம் ஒரு வேட்பாளருக்கு தேர்தல் நெருங்கும் போது சேறுபூசுவது தார்மீகமானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இராஜ் வீரரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 125

தமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு!

ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே, தமிழ் பேசும் யாழ். முஸ்லிம் மக்களாகிய நாமும் ஆதரவு அளித்து ஒத்துழைப்பு வழங்குவோம் என யாழ்.அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து யாழ்.பள்ளிவாசல் சம்மேளனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கடந்த ஐந்தாம் திகதி யாழ்.முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலில் யாழ்.அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஏ.சி.முபீன் தலைமையில் நடைபெற்ற சம்மேளனத்தின் நிர்வாகிசபை கூட்டத்தில் இனங்களுக்கிடையிலான சமாதான, சமத்துவ புரிந்துணர்வுடன் கூடிய ஐக்கியமான செயற்பாடுகளில் சம்மேளனம் செயற்பட வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட சம்மேளனத்தின் நிர்வாகிகளினால் கருத்து வலியுறுத்தப்பட்டது.

மேற்படி கருத்திற்கு இனங்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்ளினால் விரும்பப்படும் வேட்பாளருக்கே தமிழ்பேசும் யாழ்.முஸ்லிமக்களாகிய நாம் ஆதரவு அளித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 125

'சஜித்தின் வெற்றி மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது' - இராதாகிருஷ்ணன்!

சஜித் பிரேமதாசவின் வெற்றியானது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவுள்ளதென பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறுவது பிரதேச சபைத் தேர்தலோ, நகரசபைத் தேர்தலோ, மாகாண சபை தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ அல்ல. இது இந்த நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் தேர்தல்.

எதிர்வரும் ஜந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டையும் மக்களையும் முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

அவர் அனுபவமும் திறமையும் உள்ளவராகவும் மக்களின் மனங்களை புரிந்தவராகவும் ஊழலற்றவராகவும் இருக்க வேண்டும்.

அப்படியானால் அதற்கு பொருத்தமானவர் அமைச்சர் சஜித் பிரேமதாச என்பதை இன்று இந்த நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். எனவே அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comment (0) Hits: 191

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : யூதர்கள் யார்? கிரிபத்கொடையில் ஆர்ப்பாட்டம்! (VIDEO)

கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்காக மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறி கிரிபத்கொடை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புகள் உள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ பதலளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கி நின்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ள சமூக மற்றும் சமாதானத்திற்கான மையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும், உச்ச நீதிமன்ற சட்டத்தரணியுமான பாதர் அசோக் ஸ்டீவனின் கூற்றுக்கு அமைய  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்கூட்டியே தகவல்களை அறிந்திருந்துள்ளார்.

“சுருக்கமாகச் சொல்லப் போனால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தார். இப்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது கத்தோலிக்க மக்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு செய்யும் வேலைகளைப் பற்றி நாம் வேதனை அடைகின்றோம் என்பதை பகிரங்கமாகவே கூற வேண்டும்” என அவர் அண்மையில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

Comment (0) Hits: 185

ஷங்கிரில்லாவின் 100 கோடி டீல் - ராஜபக்ஷக்கள் கொமிஸ் பெற்ற விதம்! (VIDEO)

(VIDEO)

கொழும்பு, ஷங்கிரில்லா ஹோட்டல் நிர்மாணத்தின் போது ராஜபக்ஷக்கள் பெற்ற கொமிஸ் தொடர்பில் ராஜபக்ஷ ஆட்சியில் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சஜின் வாஸ் குணவர்தன வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராகவும், அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரகசிய செயற்பாடுகளுக்குப் பொறுப்பான அதிகாரியாகவும் கருதப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன இவ்விடயங்களை வெளிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தினை வெளிப்படுத்தினார்.

“இந்த சத்தியக் கடதாசியினை சிதம்பரம் என்ற நபரே வழங்கியுள்ளார். சிங்கப்பூர் டிஜிடல் இண்டர் என்ற நிறுவனம் ஐந்து மில்லியன் டொலர். ஐந்து மில்லியன் டொலருக்கு டிஜிட்டல் நிறுவனமும், ஹெலியாட் என்ற நிறுவனமுமே ஆலோசனைச் சேவையினை வழங்குவதற்காகக் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த எபிடெவிட்டை வழங்குவது இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பங்குதாரரும் மற்றும் உரிமையாளருமாகும். ஏராளமான விடயங்களின் தகவல்கள் இருக்கின்றன. இதில் இந்தக் கொடுக்கல் வாங்கள்களுக்காக ஐந்து மில்லியன் டொலர் வழங்கப்பட்டது என மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து மில்லியன் டொலர் என்பது எமது நாட்டுப் பணத்தில் சுமார் 100 கோடியளவானதாகும்.

இதுதான் அவர்களிடமிருந்து பெற்ற இலஞ்சம் அல்லது கொமிஸாகும். அதே போன்று தேவையான எந்த நேரத்திலும் இலங்கையின் சட்டத்திற்கு முன்னால் வந்து நீதிமன்றத்திற்கு முன்னால் வந்து இது தொடர்பில் சாட்சியமளிப்பத்தற்கோ அல்லது தேவையான எதற்குமோ நான் தயாராகவே உள்ளேன்” என்றார்.

 

Comment (0) Hits: 488

“கோட்டாவின் குடியுரிமை எமக்கு பொருட்டல்ல.மக்கள் நீதிமன்றத்தில் அவரை தோற்கடிப்போம்” - ஐதேக! (VIDEO)

(VIDEO)

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜையா? இல்லையா? என்ற விடயத்தில் கவனத்தைச் செலுத்தாமல் அவரை வரும் 16 ஆம் திகதி மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்பதே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் நோக்கமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளதோடு, அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி அஜித் பி.பெரேரா மற்றும் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் சட்டத்தரணி அஜித் பி.பெரேரா மேலும் கூறியதாவது, “எமது வேட்பாளா சஜித் பிரேமதாசா கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பில் அந்தளவு அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் நாம் கோட்டாவை மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்போம்.  மக்கள் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் மூலம் கோட்டாபயவைத் தோற்கடிக்க நாம் முயற்சிக்கப் போவதில்லை. அவ்வாறான வழியில் கோட்டாபயவைத் தோற்படிப்பது தகுதியற்றது என சஜித் பிரேமதாசா நினைக்கின்றார்.

எனினும் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவு படுத்துகின்றோம். கோட்டாபய ஒரு இலங்கைப் பிரஜையல்ல. இலங்கையின் அரசியலமைப்பின் 31ம் பிரிவுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியானவர் இலங்கை பிரஜைகள் மாத்திரமேயாகும்.

கோட்டாபய அமெரிக்காவின் குடியுரிமையினைப் பெற்றுக் கொண்டார். இலங்கையின் குடியுரிமைச் சட்டத்திற்கு அமைய இலங்கையின் அவரது குடியுரிமை இல்லாமல் போய்விட்டது. அவர் இலங்கையில் அரச பதவியை வகிப்பதாயின் அவர் இலங்கையின் பிரஜையாக இருக்க வேண்டும். அவர் 2005ம் ஆண்டு அவரது சகோதரர் ஜனாதிபதி ஆனதன் பின்னர் இலங்கையின் குடியுரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கு கடைபிடித்த நடைமுறைகள் மோசடியானவையாகும்” என்றார்.

Comment (0) Hits: 156

அமெரிக்காவின் ஆவணம் வெளியானது : கோட்டா இன்னமும் அமெரிக்கரே!

அமெரிக்காவின் திறைசேரி திணைக்களத்தின் தேசிய வருமான வரிச் சேவையினால் வெளியிடப்படும் அந்நாட்டின் குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டவர்களின் புதிய பெயர் பட்டியல், அதாவது 2019ம் ஆண்டின் நவம்பர் மாதப் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்ட அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் இனிமேல் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்த மாட்டார்கள் என அந்தப் பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பெயர் பட்டியலிரும் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனவே கோட்டாபய இன்னமும் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்தும் அமெரிக்க பிரஜையாகும். அவர் தனது குடியுரிமையினை நீக்கிக் கொண்டிருந்தால் இப்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் அவரது பெயர் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.  அப்போதுதான் குடியுரிமை சட்டரீதியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும்.

அமெரிக்காவில் குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்ட அனைவர் தொடர்பான பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிட அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படுவது வருடத்திற்கு நான்கு தடவைகள் அவ்வாறான பட்டியல் வெளியிடப்படும் என்பதேயாகும்.

Comment (0) Hits: 2092

கோட்டாவின் மன்னார் பேரணிக்கு பின்னால் ஈஸ்டர் பயங்கரவாதி?

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிகளுக்கு, வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக தனது செப்புத் தொழிற்சாலையில் இருந்து உலோகங்களை (செப்பு) வழங்கிய, ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியின் மாமனாரான பிரபல கோடீஸ்வர வர்த்தகர் அலாவுதீன் என்பவரினால், இன்று மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு பூரண அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அவரின் ஊடாக மன்னாரில் உள்ள சுமார் 1500 தமிழர்களுக்கு, மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் 1500 ரூபா பணமும் வழங்கப்பட்டு, அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் அலாவுதீனின் மன்னார் வீட்டில் வைத்து விருந்துபசாரமும் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல அரசியல் வர்ணனையாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற அன்றைய தினத்திலிருந்தே, குறித்த தாக்குதலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாக பலமுறை கூறிவந்தார். இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் கலாநிதி தயான் ஜயதிலக்கவின் கூற்று உண்மையானது என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக செயல்படுகிறார்கள் என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது.

Comment (0) Hits: 1971

'முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ சஜித்தை ஆதரிப்பது எமது தார்மீக கடமை' - றிசாட்!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் சிறிபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு முடியும என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்  இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் தலைமையில் சனிக்கிழமை (9) மாலை நிந்தவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சஜித் பிரேமதாச எதிர்வரும் 16ம் திகதி வெற்றிபெறுவது உறுதி செய்யப்பட்ட ஒரு விடயமாகும். இந்த தேர்தல் ஏனைய தேர்தலைகளைப்போல ஒரு சாதாரண தேர்தலல்ல. அன்னச்சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தான் இந்த நாட்டில் சமாதானம், ஜக்கியம், சகோதரத்துவம், இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும்.

அமைச்சர்களோ தவிசாளர்களோ வாக்காளர்கள் ஒவ்வொருவரிடம் வந்து இவ்வாறுதான் வாக்களிக்க வேண்டும் என கூறுவதற்கு காலம் போதாது. ஆதலால் படித்த கற்றறிந்த உங்கள் அனைவரினதும் கடமையாக இதனை ஏற்று எவ்வாறு வாக்களிப்பது என்பதனை உங்கள் தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு இதனை ஒரு்சமுதாய பணியாக மேற்கொள்ளவேண்டும்.

இந்த தேர்தலில் எங்களது வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியுற்றால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியாது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தை ஆதரிப்பதற்கான காரணம் ஜனநாயகத்தை விரும்புகின்ற ஏனைய சமூகங்களை மதிக்கின்ற முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் அவர்களது சமூக சமய கலாச்சார பண்பாட்டு அம்சங்களை பின்பற்றி ஏனைய சமூகங்களுடன் கெளரவமாக வாழ்வதற்கேயாகும்.

1200 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி தனது ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொள்ளுவதற்கு முயற்சிக்கவில்லை. 1990 ம் ஆண்டு பலவந்தமாக சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அப்பாவி முஸ்லிம்கள் தொழுகையில் சுஜுதிலே கொல்லப்பட்டார்கள். பேருவள அளுத்கம கண்டி திகன குளியாப்பிட்டிய அம்பாறை மினுவான்கொட போன்ற இடங்களில்
முஸ்லிம்களின் சொத்துக்கள் வணக்கஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டன.

முஸ்லிம்கள் கடந்த காலங்களில் ஏராளமான  கஸ்டங்கள், துன்பங்களை  அனுபவித்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் முஸ்லிம்கள் அபுஜஹீலுக்கு வாக்களிக்கப்போகிறீர்களா அல்லது அபுதாலிபுக்கு வாக்களிக்கப்போகிறீர்களா என்பதை சிந்தியுங்கள். எமது பாதுகாப்பை எமது ன சமூகத்தின் சுய கெளரவத்தை உறுதிப்படுத்தக்ககூடிய ஓரே வேட்பாளர் சஜித் பிரேமதாச மட்டும்தான். எதிரணி வேட்பாளர் இனவாதத்தை தாரக மந்திரமாக தனது வாக்கு வேட்டைக்கு பயன்படுத்துகிறார். தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு தனது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ள தந்திரமாக செயற்படுகிறார்.
சஜித் பிரேமதாசவும்  ஹம்பாந்தோட்டையை சேர்ந்தவர்தான். ஆனால்  சஜித் பிரேமதாசவிடம் உண்மை வெல்லும். சஜித் ஒரு சிறந்த நிர்வாகி. இந்த நாட்டை நிர்வகிக்க பொருத்தமான ஒருவர்.
திடமான தீர்மானங்களை உடனடியாக எடுக்கக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தலைவரின் புதல்வர். சாய்ந்தமருது கல்முனைப்பிரச்சினையை நன்கு அறிந்தவர். அந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை பெற்றுத்தருவதாக எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

எமது காணிப்பிரச்சினைகளுக்கு புதிய ஆட்சி உருவாகி ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம் ஒரு வருட காலத்தினுள் உடனடி தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார். முஸ்லிம்கள் சமாதானமாக, ஒற்றுமையாக சகவாழ்வுடன் வாழ்வதற்கும் எமது  கல்வி மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கும் எதிர்வரும் 16 ம் திகதி அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து நமது சமூகக் கடமையினை நிறைவேற்றுவது நம்  ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும், என தெரிவித்தார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் பைசால் காசீம், முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலி, முன்னாள் மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 
Comment (0) Hits: 200

மீண்டும் அலி சப்ரியின் அச்சுறுத்தும் பேச்சு; பிரதான இனத்தின் ஆசீர்வாதம் இன்றி எந்த நாடும் முன்னேறியதில்லை!

பிரதான இனத்தின் ஆசீர்வாதம் இன்றி உலகில் எந்த  நாடும் முன்னேறியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் சரியான அணியில் இணைந்திருக்கின்றோம். நாட்டின் பக்கம் நாங்கள் நிற்கின்றோம். பிரதான இனத்தின் ஆசீர்வாதம் இன்றி, பிரதான இனத்தின் விருப்பமின்றி எந்த நாடும் முன்னேறியதில்லை.

நாட்டில் வாழும் 74 வீதமான சிங்கள மக்கள் கோத்தபாய ராஜபக்சவையே விரும்புகின்றனர். அப்படியானால் முஸ்லிம்கள் பிரிந்து தனியாக வாழ வேண்டுமா?. அல்லது அனைத்து இனத்தவருடனும் இணைந்து சகோதரத்துவத்துடன் ஒன்றாக நாட்டை முன்னேற்றி பிரதிபலன்களை பெற வேண்டுமா?. இதற்காகவே நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம் என அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 153

ஜனாதி­பதி தேர்­தலில் நீங்கள் எவ்­வாறு வாக்­க­ளிக்கப் போகி­றீர்கள்?

இம்­மாதம் 16 ஆம் திக­தி­யன்று ஜனாதி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் வாக்­க­ளிக்கத் தகுதி­யுள்­ள­வர்கள் யார்? யார்? என்­பதை தேர்தல் ஆணை­யாளர் உங்­க­ளுக்கு தபால் மூலம் தெரிவித்திருப்பார்.

ஆகவே தேர்தல் தினத்­தன்று நீங்கள் உங்­க­ளுக்கு உரித்­தான அவ் உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையை எடுத்துக் கொண்டு அந்த அட்­டையில் நீங்கள் எங்கே வாக்­க­ளிக்கச் செல்­ல­வேண்டும் என்று குறிக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்குச் செல்ல வேண்டும்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்குச் செல்­லும்­போது கட்­டாயம் உங்­க­ளது அறி­மு­கத்தை உறு­திப்­ப­டுத்தும் பின்­வரும் ஆவ­ணங்­களில் ஒன்றை எடுத்­துச்­செல்ல வேண்டும்.

1. தேசிய அடை­யாள அட்டை

2. செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு

3. செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம்

4. அரச சேவை ஓய்வு ஊதிய அட்டை

5. பிர­தேச செய­லா­ளரால் விநி­யோ­கிக்­கப்­பட்ட முதியோர் அடை­யாள அட்டை

6. மத­கு­ரு­மார்­க­ளுக்­கான ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தால் விநி­யோ­கிக்­கப்­பட்ட அடை­யாள அட்டை

7. தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் விநி­யோ­கிக்­கப்­பட்ட தற்­கா­லிக அடை­யாள அட்டை என்­ப­வற்றில் ஒன்றை கட்­டாயம் நீங்கள் எடுத்­துச்­செல்ல வேண்டும்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் உள்ளே நடை­பெ­று­பவை

உங்­க­ளது உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையில் நீங்கள் வாக்­க­ளிக்க வேண்­டிய நிலையம் குறிக்­கப்­பட்­டி­ருப்­பதால், அந்­நி­லை­யத்­திற்குச் சென்றே உங்கள் வாக்கை நீங்கள் அளிக்­க­வேண்டும். வேறு நிலை­யங்­களில் உங்கள் வாக்கை அளிக்க முடி­யாது என்­பதை மனதில் வைத்­துக்­கொள்­ளுங்கள்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் உள்ளே இருக்கும் தேர்தல் அதி­கா­ரிகள் உங்­க­ளது வாக்­காளர் அட்­டை­யையும் உங்­க­ளது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் அடை­யாள அட்­டை­யையும் பரி­சீ­லனை செய்த பின்னர் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்குத் தேவை­யான வாக்­குச்­சீட்டை வழங்­கு­வார்கள். அவ்­வாக்­குச்­சீட்டைப் பெற்­றுக்­கொண்டு வாக்­க­ளிப்­ப­தற்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்குச் சென்று உங்­க­ளது வாக்கை அளித்த பின்னர் அதனை வாக்குச் சீட்டுப் பெட்­டிக்குள் போட வேண்டும். அத்­துடன் உங்­க­ளது வாக்­க­ளிப்பு வேலை முடி­வ­டை­கி­றது. அமை­தி­யாக வீட்­டுக்குச் செல்ல வேண்டும்.

 

இனி வாக்­குச்­சீட்டில் நீங்கள் எவ்­வாறு வாக்­க­ளிக்க வேண்டும்  எனப் பார்ப்போம்.

முக்­கிய பகுதி இது­வே­யாகும்.

வாக்குச் சீட்டில் அபேட்­ச­கர்­க­ளது பெயர்கள் இருக்கும். அவர்­க­ளது சின்­னங்­களும் இருக்கும். ஆகவே நீங்கள் முதலில் செய்­ய­வேண்­டி­யது, போட்டி போடும் அபேட்­ச­கர்­களில் ஒரு­வ­ருக்கா அல்­லது இரு­வ­ருக்கா அல்­லது மூவ­ருக்கா வாக்­க­ளிக்க விரும்­பு­கி­றீர்கள் என்­பதை தீர்­மா­னித்துக் கொள்­ள­வேண்டும். ஒரு­வ­ருக்கே வாக்­க­ளிக்க விரும்­பினால் வாக்குச் சீட்டில் பின்­வ­ரு­மாறு குறி­யி­டலாம்.

X புள்­ளடி இடு­வதன் மூலம் அதனைத் தெரி­விப்­பது நல்­லது.

மேற்­படி வாக்குச் சீட்டு பரி­பூ­ர­ண­மா­னது. ஆகவே அந்த வாக்குச் சீட்டு செல்­லு­ப­டி­யா­ன­தொன்­றாக எடுக்­கப்­படும். நிரா­க­ரிக்­கப்­பட­மாட்­டாது.

மாதிரி வாக்­குச்­சீட்டு (2) இல் நீங்கள் ஒரு­வ­ருக்கு மேற்­பட்­ட­வ­ருக்கு வாக்­க­ளிக்க விரும்­பு­கி­றீர்கள் என எடுத்­துக்­கொண்டால் அந்த வாக்குச் சீட்டில் இலக்­கங்கள் மூலமே அடை­யா­ள­மிட வேண்டும். X என்று ஒரு­வ­ருக்கும் மற்­றை­ய­வர்­க­ளுக்கு இலக்கம் 2,3 என்­பதன் மூலம் அடை­யா­ளப்­ப­டுத்­தினால் அது செல்­லு­ப­டி­யா­காது.

ஆகவே நீங்கள் கவ­னிக்க வேண்­டி­யது, இலக்­கங்கள் மூலம் தனது வாக்­கு­ரி­மையை தெரி­விக்க விரும்­பினால் இலக்­கங்கள் மூலமே சக­ல­தையும் தெரி­விக்க வேண்டும். இலக்கம் மூலம் சில­வற்­றையும் X என்­பதன் மூலம் மற்­றை­ய­வற்­றையும் தெரி­விக்கக் கூடாது. அப்­படித் தெரி­வித்தால் அவ்­வாக்கு செல்­லு­ப­டி­யா­காது போகும். ஆகவே கவ­ன­மாக உங்கள் வாக்கை அளி­யுங்கள். ஆகவே மாதிரிச் சீட்டு 2 இல் காட்­டி­யுள்ள மாதிரி வாக்­குச்­சீட்டு செல்­லு­ப­டி­யான வாக்­குச்­சீட்­டாகும்.

மாதி­ரிச்­சீட்டு (3) செல்­லு­ப­டி­யா­காது. மாதிரிச்சீட்டு 4 உம் செல்லுபடியாகாது.

கவனத்தில் கொள்ள வேண்டியது

1. வாக்குச்சீட்டில் X என்று மட்டும் எழுதினால் அது செல்லும்

2. வாக்குச் சீட்டில் X என்றும் மற்றும் 2, 3 என எழுதினால் அது செல்லாது.

3. வாக்குச் சீட்டில் 1, 2, 3 என எழுதினால் அது செல்லும்.

4. வாக்குச் சீட்டில் XXX என மூன்று பெயருக்கு அடையாளப்படுத்தினால் செல்லாது.

விளக்கம் எதுவும் தேவையாயின் 077 6705511 க்கு Phone பண்ணி விளக்கத்தை என்னிடம் தெரிந்துகொள்ளலாம்.

சட்டத்தரணி கே.ஜீ.ஜோன்

Comment (0) Hits: 130

கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரத்தில் சேதமில்லாத விட்டு கொடுப்பு – ரவூப் ஹக்கீம்!

கல்முனை தமிழ் பிரதேசசபை விவகாரத்தில் இரண்டு தரப்புக்கும் விட்டுக்கொடுப்போடு சேதம் இல்லாத முடிவு சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனையில் நேற்று (09) இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கல்முனை என்பது தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தாலும் அவ்வப்போது எங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது கல்முனை பிரதேச செயலக விவகாரம். இந்த கோரிக்கையை மிக நியாயமான அடிப்படையில் கல்முனையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அடிப்படை உரிமைகளை இழந்துவிடக் கூடாத நிலையில் கவனமாக இருந்து நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நண்பர்களோடு கதைத்திருக்கிறோம். முக்கியமாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனோடும் ஏனைய உறுப்பினர்களோடும் பேசி ஒரு தீர்க்கமான முடிவுகளை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

எங்கள் ஜனாதிபதியின் ஆட்சி இந்த பிரதேசத்தில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைத் தருகின்ற ஆட்சியாக இருக்கும். இது தொடர்பாக நான் சஜித் பிரேமதாசவுக்கு நீண்டதொரு விளக்கத்தை கொடுத்துள்ளேன். இரண்டு தரப்பும் விட்டுக்கொடுப்போடு சேதம் இல்லாமல் முடிவை எடுக்க தயாராக இருக்கிறார்கள். கௌரவ பிரச்சினையாக பார்க்காமல் வருகின்ற ஆட்சி சஜித் பிரேமதாசவின் ஆட்சியாக இருக்கும். அதில் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

சாய்ந்தமருது மீனவர்களது பிரச்சினை சாதாரண பிரச்சினை இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அடி நாதமாக இருக்கின்ற மக்களின் பிரச்சினை. கல்முனை பிரதேச நீர் நிலைகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் பாரிய நகரமயமாக்கலை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்து காட்டுவோம்.

அன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுத்த ஆதரவைப் போல் நாம் சஜித் பிரேமதாசவுக்கும் வழங்கி வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Comment (0) Hits: 130

கோவத்தில் மைத்திரி - பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தயாசிறியை நீக்க முடிவு! (VIDEO)

கோத்தபாயவின் வெற்றிக்காக ஜனாதிபதி 100க்கு 100 வீதம் ஆதரவாக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை சம்பந்தமாக கோபத்திற்கு உள்ளாகி இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தற்காலிகமாக ஒருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க கூடாது என என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 90 வீதமான தொகுதி அமைப்பாளர்கள் கடுமையான நிலைப்பாட்டில் இருந்த நிலையில், கோத்தபாயவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன தீர்மானித்தன.

இதனையடுத்து ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை, நடு நிலை வகிக்க போவதாக அறிவித்த ஜனாதிபதி, தேர்தல் முடியும் வரை கட்சிக்கு பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை நியமித்தார்.

இதற்கு அமைய ஜனாதிபதி எந்த தரப்புக்கும் ஆதரவு வழங்காது சுயாதீனமாக செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில், குருணாகல் ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கோத்தபாயவின் வெற்றிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100க்கு 100 வீதம் ஆதரவாக இருப்பதாக கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க அல்ல, கட்சி சரியான தீர்மானத்தை எடுத்தது. கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி தொடர்பாக ஜனாதிபதி அடிக்கடி கேட்டு அறிந்து கொள்கிறார் என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

எனினும், தயாசிறி ஜயசேகரவின் இந்த கருத்து முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோத்தபாயவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு தயாசிறி ஜனாதிபதியிடம் கோரியதாகவும் ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 

Comment (0) Hits: 301

மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவா் மீது கூட்டு பாலியல் வல்லுறவு - பெண்களுக்கு நாளைய தினத்தை உருவாக்கும் கொட்டோக்களின் வேலை இதுதான்! (VIDEO)

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பஸ் வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதியை அவளோடு இருந்த சில இளைஞர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், ஹெம்மாதகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவ்விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தனது மனைவியுடன் மொட்டுக் கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற தனது மகள் இரவு 11 மணியாகியும் வீடு திரும்பவில்லை என அவ்யுவதியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  குறித்த யுவதியும், அவளது தாயும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது கூட்டம் நிறைவடைந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பஸ்ஸிலிருந்த  இளைஞர் ஒருவர் குறித்த யுவதியை பஸ்ஸைவிட்டு இறக்கி ஹெம்மாதகம, எல்பிட்டி, பலவத்கம காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என பொலிஸாருக்குத் தெரிய வந்துள்ளது.  சந்தேக நபரான இளைஞரும், அவரது நண்பர்களும் அங்கு வைத்து குறித்த யுவதியை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய ஹெம்மாதகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்தனர்.

Comment (0) Hits: 138

Page 4 of 103