V2025

செய்திகள்

கோட்டாவின் குடியுரிமை விவகாரம்; அமெரிக்க சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரணவும் ஏற்றுக் கொண்டது! (VIDEO)

(VIDEO)

கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொள்ளப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் இதுவரை உள்ளடக்கப்படவில்லை என நேற்று (13) மீண்டும் ஒரு தடவை உறுதியாகியுள்ளது. இன்று தெரண ஊடகவியலாளர் இந்தீவரி மற்றும் அமெரிக்க தூதுவராலய பேச்சாளர் நென்சி வென்ஹோன் ஆகியோருக்கிடையில் (13) இடம்பெற்ற நேர்காணலின் போதே இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கத் தூதரகத்தில் இரட்டைப் பிரஜா உரிமையினை நீக்கிக் கொள்வதற்கான சத்தியக் கடதாசியை ஒப்படைத்ததாக அமெரிக்க தூதுவராலய பேச்சாளர் இதற்கு முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்களை அமெரிக்க தூதரகத்தில் கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே ஒப்படைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் இடம்பெறப் போகின்றது என்பதை அறிந்து கொண்ட பின்னரும், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் வழங்கப்படும் என ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்கள் வழங்கிய இணக்கப்பாட்டையும் அடுத்தே அந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர் நியமனம் கிடைக்காவிட்டால் தான் அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் ராஜபக்ஷ குடும்பத்திடம் அழுத்தங்களைக் கொடுத்துள்ளார்.

 

 

 

Comment (0) Hits: 917

மஹிந்தவுக்கு திடீர் 'ஹார்ட் அட்டேக்'; இன்று இரவு அரங்கேறவுள்ள நாடகம்!

இன்று இரவு 12.00மணியோடு ஜனாதிபதி தேர்தலின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள காலம் நிறைவடைந்த பின், சட்டத்தை மீறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக, 'திடீர் மாரடைப்பு' என்று கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதியாக தாயாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மொட்டிற்கு நெருக்கமான அனைத்து ஊடகங்களையும்  பயன்படுத்தி, அவரது  உடல்நலம் குறித்த ஒரு மணி நேர செய்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு அனுதாபம் தெரிவிக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள விகாரைகளில்  போதி பூஜை நடத்துவதாகவும், சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்த தயாராக உள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இந்த திட்டத்தை மாற்றியமைக்கும் அவதானம் உள்ளதனால், இது தொடர்பாக மேலும் கலந்துரையாடல்கள்  நடைபெற்று வருவதாகவும் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

 
 
Comment (0) Hits: 877

முஸ்லிம் பிரதேசங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்; இந்திய புலனாய்வுத்துறை உறுதி!

1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தலின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலிலும் காணப்படுவதாக  புலனாய்வு துறை  உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான அளுத்கம, வெலிகம, பேருவளை, தர்கா நகர் உள்ளிட்ட பிரதேசங்களில் ஆபத்தான நிலைமை காணப்படுவதுடன், இது ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவமாக இருக்கலாம் என புலனாய்வு துறை அறிவித்துள்ளது.

இதை இந்திய புலனாய்வு துறை  உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இந்நாட்டின் முன்னாள் புலனாய்வு துறை பிரதானியான சுரேஷ் சலே உடனடியாக நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசேடமாக இன்று ஜனாதிபதி தேர்தலின் இறுதி பேரணிகள் நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு துறை விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 198

'உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' - சுமந்திரன்! (VIDEO)

(VIDEO)

சிங்கள மக்களை தோற்கடிக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தாம் கூறியதாக, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட மூன்று பத்திரிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தாம் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லையெனவும், இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்கொன்றினை சட்டத்தரணிகளின் ஊடாக பதிவு செய்யவுள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்றிற்கு எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு இனங்களுக்கிடையில் திரிபுப்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக, குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கும் கடிதமொன்றினை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 178

இறுக்கமாக நகரும் தேர்தல் களம்; கோட்டைகளைச் சாய்ப்போருக்கே வெற்றி சாத்தியம்!

சர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும்.தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையிலும் வெற்றி எவரின் பக்கம் என்பதைக் கூறமுடியாதளவு களங்கள் இறுக்கமாக நகர்கின்றன.

இனவாதத்தை ராஜபக்ஷக்களும் சமூக சமவாதங்களை பிரேமதாஸக்களும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும் பிரச்சாரங்களால் ராஜபக்ஷக்களுக்கு தென்னிலங்கையும் பிரேமதாஸக்களுக்கு சிறுபான்மைத் தளங்களும் சாதகமாகவுள்ளன.நல்லாட்சி அரசின் நாலரை வருடக் கெடுபிடிகளை ஞாபகமூட்டி ரணிலின் அரசாங்கத்தைக் கேலி செய்யும் மஹிந்தராஜபக்ஷ,ஈஸ்டர் தாக்குதலை கையிலெடுத்திருப்பது தென்னிலங்கையில் பல வியூகங்களை இழையோட வைத்துள்ளன.

ஜனநாயக தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளை பிரிவினைவாதமாகக் காட்டி தென்னிலங்கை முஸ்லிம்களை அச்சுறுத்துவது,பெளத்தர்கள் அதிகளவு விரும்பும் தலைமைக்கு எதிராகச் செயற்படாமல் நெருக்குவாரங்களைக் கட்டவிழ்ப்பது,கடும்போக்கர்களின் கண்காணிப்பில் ராஜபக்ஷக்களின் கோட்டைகளை சுற்றிவைளைப்பதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கை கொடுத்துள்ளதையே காணமுடிகிறது . இந்தக் கள நகர்வுகள் ஜனநாயக தேசிய முன்னணிக்கு பெரும் தலையிடியாகிறது.

இவ்வினவாத வியூகங்களுக்குச் சமனான வாக்குகளைப் பெற்றேயாக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் சிறுபான்மையினரின் தளங்களைக் கையகப்படுத்துவதன் தீவிரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்படுத்திற்று.இதனால் தமிழ் முஸ்லிம் தலைமைகள் ராஜபக்ஷக்களின் ஒரு தசாப்த ஆட்சியை,தங்களது தளங்களில் நினைவூட்டி,அவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கொடுமையாளர்களாகவும் காட்டி இவர்களின் செயற்படு தளங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

தெற்கு,வடக்குத் தளங்களின் எழுச்சிகளை அலையும் வாக்காளர்கள்
(floating) புரிவதைப் பொறுத்தே வெற்றி,தோல்விகள் அமையலாம்.உண்மையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களை எடுத்துக் கொண்டால் அங்குள்ள சுமார் 18 இலட்சம் வாக்குகளும் தென்னிலங்கையிலுள்ள பெரிய மாவட்டங்கள் ஒன்றுடன் சமப்படக் கூடியதே.உதாரணமாக கொழும்பு அல்லது குருநாகல் மாவட்டங்கள் ஒன்றுக்குச் சமனான வாக்குகளே அவை.எனவே சிறுபான்மைக் கோட்டைகளை மட்டுமன்றி தென்னிலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் வாக்குகளை அதிகப்படியாகப் பெறும் தேவை இத்தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

மேலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் முஸ்லிம் தனித்துவ தலைமைகளுடனும் இல்லை.இங்குள்ளோரில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் அபிமானிகள். இவர்கள் முஸ்லிம் தலைமைகள் கோரும் நிர்வாக அலகு,அதிகார எல்லைகளைப் பிரிவினையாகப் பார்ப்பவர்கள்.தனித்துவத் தலைமைகளை ஆதரிப்பது தென்னிலங்கைச் சிங்களவர்கள் மத்தியில் தங்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துமென அதிகளவு அஞ்சும் மக்களும் இவர்கள்தான் .

மேலும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் எழுந்த கொதி நிலைகள் இந்நிலைமைகளின் விபரீதங்களை இரட்டிப்பாக்கியுமுள்ளது. எனவே எவ்விதக் கோரிக்கைகளையும் முன்வைக்காது அல்லது தாம் வைத்த கோரிக்கைகளை வெளிப்படுத்தாதுள்ள முஸ்லிம் தனித்துவ தலைமைகளின் ராஜதந்திரத்தில் இம்மக்களின் பீதியைப் போக்குவதற்கான தந்திரங்கள் உள்ளதாகவும் எண்ணத் தோன்றுகிறது. ஏன்? 13 அம்சக் கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதே! இவர்களுக்கு மட்டும் ஏனிந்த ராஜதந்திரம் என்றும் சிலர் கோருகின்றனர்.இதுதான் சிந்திக்கத் தூண்டும் விடயம் தென்னிலங்கையில் தமிழர்களை விடவும் முஸ்லிம்களே அதிகம். இதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளை ராஜபக்ஷக்கள் தென்னிலங்கையிலே மூலதனமாக்க முயற்சிக்கின்றனர்.

இம்முயற்சிகளைத் தவிர்க்கவே முஸ்லிம் தலைமைகள் இவ்வியூகத்தைக் கையாண்டிருக்கலாம். மேலும் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளதால் தமிழர் தரப்பிலிருந்தான அச்சுறுத்தல்களை தென்னிலங்கை கடும்போக்கர்கள் கண்டு கொள்ளவில்லை.இருந்த போதும் புலிகளை உயிரூட்டுவதற்கான முயற்சிகளாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் நோக்க வைக்கப்படுவதையும் சிறுபான்மையினர் அவதானிக்க வேண்டும் ."முப்பது வருடப் போரில் புலிகளால் செய்ய முடியாததையா கூட்டமைப்பினர் சாதிக்கப் போகின்றனர். தமிழர்களே அபிவிருத்தி அரசியலுக்காக தம்மோடு இணையுங்கள்"என ராஜபக்ஷக்கள் அழைப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தளங்களைத் தகர்க்கும் முயற்சிகள்தான்.எனினும் இவைகள் பாறைகளில் எறியப்பட்ட பந்துகளாகுமா?அல்லது பசுமரத்தாணிகளாகுமா?எதிரே வரவுள்ள நாட்களே இதற்கு விடை பகரவுள்ளன.உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடாத்திய எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை.உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 49 இலட்சம் வாக்குகளைப் பெற்று உஷாரடைந்த ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கைத் தளங்களை மேலும் கெட்டியாக்கின.

இதனால் ராஜபக்ஷக்களின் குடும்பத் தகராறுகளை தென்னிலங்கைச் சந்திகளுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழிகள் புதிய ஜனநாய முன்னணிக்கு இருக்கவில்லை. குடும்ப ஆட்சி,ஊழல் மோசடிகள்,வாரிசு அரசியலைப் பிரச்சாரம் செய்யும் புதிய ஜனநாய முன்னணி தென்னிலங்கையில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதும் சிறுபான்மையினர் தளத்திற்குள் நுழைந்துள்ள மஹிந்தவின் ஏஜெண்டுகளை முற்றாகக் களைவதும்தான் சஜித்தின் வெற்றியைச் சாதகமாக்கலாம்.

இல்லாவிட்டால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற 36 இலட்சம் வாக்குகளுடன் தோழமைக் கட்சிகளால் கிடைக்கும் வாக்குகளைக் கூட்டுவதுடன் நின்று விட நேரிடும்.எனவே ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் வடக்கு, தெற்கு தளங்களைத் தகர்க்கும் வீதாசாரத்திலே வெற்றிகள் அமைந்திருக்கும்.சந்திரிக்காவின் வருகை ஐக்கிய தேசியக் கட்சியினரை விடவும் அதிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளதை அவதானிக்கும்போது,வீரியமுள்ள தலைவி கிடைத்ததற்கான மகிழ்ச்சி என்பதை விடவும் வெளிநாடுகளின் ஆதரவுகளைப் பெறலாமென்ற நம்பிக்கையே அவர்களைத் தைரியப்படுத்தியுள்ளன.

மறு பக்கம் வெளிநாடுகளின் தலையீடுகள்,டயஸ்பொராக்களின் அழுத்தங்களுக்கு எதிராகப் பேசும் ராஜபக்ஷக்களை இது தைரியமூட்டியுமுள்ளது. எனவே இத்தேர்தலென்பது எவரும் கணிப்பிட முடியாத,எதிர்வு கூற இயலாத மிக இறுக்கமான தேர்தலாகவேயுள்ளது. வெளிவரவுள்ள முடிவுகளே சகலரது எதிர்பார்ப்புக்கும் பதிலளிக்கும்.

 சுஐப் .எம்.காசிம்
Comment (0) Hits: 150

பிரபாகரனை "சேர்" என விழித்துக் கூறவில்லை - சந்திரிக்காவுக்கு எதிரான மஹிந்த அணியின் சதி!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை "சேர்" என விழித்துக் கூறவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் சந்திரிக்கா கூறிய கருத்து திரிவுபடுத்தப்பட்டு, போலிச் பிரச்சாரம் செய்யப்படுவதாக சந்திரிக்காவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவரை சேர் என சந்திரிக்கா கூறவில்லை. சில ஊடங்கள் விசம பிரச்சாரங்களை முன்னெடுக்கிறது. ஜனநாயகத்திற்கு எதிராக பயணித்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள், வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறான போலி பிரச்சாரங்கள் மூலம் சந்திரிக்காவுக்கு எதிராக சேறு பூச முயற்சிப்பதாக அவரது ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறு குற்றம் சுமத்தும் வகையில், தான் கருத்து வெளியிட்டதற்கான ஆதாரங்கள் இருப்பின் நிரூபிக்குமாறு சந்திரிக்கா சவால் விடுத்துள்ளார்.

அரசியல் நன்மைகள் பெறும் போக்கில் இவ்வாறான சேறு பூசும் நடவடிக்கை மேற்கொள்வது வருத்தமளிப்பதாக ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comment (0) Hits: 126

பொதுநலவாய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

அமைதியானதும் வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனுமான, ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைவரும் பங்குதாரர்களாக வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்புக் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

அரசியல் நடவடிக்கை, வாக்களிப்பு, சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள், நீதித்துறை போன்றவற்றில் அங்கத்துவம் வகிப்பவர்கள், தேர்தல்கள் ஆணையாளரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ளனர்.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் சமூக குழுக்கள், பொலிஸார், சர்வதேச சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச காண்காணிப்பு உள்ளிட்ட வாக்களிப்புக்களுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்துகொள்ள இந்தக் குழுவினர் எதிர்ப்பார்த்துள்ளனர்.

நவம்பர் 16ஆம் திகதிக்குப் பின்னர் இந்தக் குழுவின் பிரதிநிதிகள் தமது கண்காணிப்புக்களின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட உள்ளக அறிக்கையை வெளியிடவுள்ளனர்.

இறுதி அறிக்கை பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தக் கண்காணிப்பாளர்கள் குழுவினர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 132

'சிவாஜிலிங்கம் - ஹிஸ்புல்லாஹ் ஒப்பந்தக்காரர்கள்' - மனோ!

சஜித்தும், கோத்­த­பா­யவும் 50 சத­வீத வாக்­கு­க­ளுக்­காகப் போட்­டி­யிடும் போது, 5 சத­வீ­தத்­திற்­காகப் போட்டியி­டு­கின்ற அநு­ர­கு­மா­ர­விற்கு வாக்­க­ளித்து, வாக்­கு­களை விர­ய­மாக்க முடி­யாது. அதே­போன்று வடக்­கி­லி­ருந்து சிவா­ஜி­லிங்­கமும், கிழக்­கி­லி­ருந்து ஹிஸ்­புல்­லாவும் வேட்­பா­ளர்­க­ளாகக்  களமிறங்கியிருக்கி­றார்கள். இவர்கள் ஒப்­பந்­தக்­கா­ரர்கள். 

உண்­மையில் இவ்­வா­றான ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதும், அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­விற்கு வாக்களிப்­பதும், எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் வாக்­க­ளிக்­காமல் பகிஷ்­க­ரிப்­பதும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு அளிக்­கின்ற வாக்­கு­க­ளா­கவே அமையும் என்று தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

சினிவேல்ட் டவரில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை மாலை நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரையாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

 ஜனா­தி­பதித் தேர்தல் திகதி நெருங்­கி­யுள்ள நிலையில் தேர்தல் பிர­சா­ரங்கள் முடி­வ­டை­ய­வி­ருக்­கின்­றன. எனவே இப்­போது சில விட­யங்கள் குறித்து அவ­சியம் பேச­வேண்டும் என்று கரு­து­கின்றேன். தற்­போது ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை உரு­வாக்­கு­வ­தற்­காக நாடு முழு­வதும் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் கலந்­து­கொள்­கின்றோம். தொடர்ச்­சி­யாக ஓடிக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஜனா­தி­ப­தியை உரு­வாக்­கு­வது என்­பதை விடவும், வரப்­போ­கின்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­கான பிர­ளயம் ஒன்றை செய்­கின்றோம் என்­பதே பொருத்­த­மாக இருக்கும். 

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ மீதான நேசம், பற்று என்­ப­வை­யெல்லாம் ஒரு­பு­ற­மி­ருக்க, எதிர்த்­த­ரப்பின் வேட்­பாளர் மீதான வெறுப்பு அதி­க­மாக இருக்­கின்ற கார­ணத்­தி­னா­லேயே அவர் தேர்­தலில் வெற்றி பெற்­று­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக பலரும் சஜித்தை ஆத­ரிக்­கின்­றார்கள் எனத் தோன்­று­கி­றது. எனவே சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­ப­தி­யான பின்னர் எதி­ரணி வேட்­பாளர் மீதான வெறுப்பின் கார­ண­மாக வாக்­க­ளித்­த­வர்­களின் மனங்­க­ளையும் வெற்­றி­கொள்ள வேண்­டிய கடப்­பாடு அவ­ருக்கு இருக்­கின்­றது. அதனைச் செய்வார் என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது.

சஜித் பிரே­ம­தாஸ ஒரு கௌதம புத்தர் என்றோ அல்­லது மகாத்மா காந்தி என்றோ கூறி நாங்கள் அவ­ருக்­காக வாக்கு கேட்­க­வில்லை. மாறாக வர­வி­ருக்­கின்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்­தி­விட வேண்டும் என்­பதே வடக்கு, கிழக்கு, மலை­யகம் உள்­ளிட்ட அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் மன­நி­லை­யாக இருக்­கின்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் கூட காட்­டா­றாக வர­வி­ருக்கும் ஆபத்தைத் தடுப்­ப­தற்­காக அணை கட்­டு­வ­தா­கவும், சஜித் பிரே­ம­தா­ஸவே அந்த அணை என்றும் குறிப்­பிட்டார்.

இம்­முறை தேர்தல் பிர­சா­ரத்தில் நாம் பாரி­ய­தொரு புரட்­சியைச் செய்­தி­ருக்­கிறோம். காலி­மு­கத்­தி­டலில் இடம்­பெற்ற புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஏற்­பாடு செய்­தி­ருந்த தல­வாக்­கலை தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­திற்கே பெரு­ம­ள­வான கூட்டம் கூடி­யது. 

இரத்­தி­ன­புரி, கேகாலை, அவி­சா­வளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய ஐந்து இடங்­களில் பிரம்­மாண்­ட­மான கூட்­டங்­களை சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ர­வாக நடத்­தினோம். அந்த 5 கூட்­டங்­க­ளிலும் பெரு­ம­ள­வான பொது­மக்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். எனவே இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாஸ அடை­யப்­போ­கின்ற பாரிய வெற்­றியில் ஜன­நா­யக மக்கள் முன்­னணி மற்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் பங்­க­ளிப்பு பெரு­ம­ளவில் உள்­ளது என்­பது அவர் நன்கு அறிந்­தி­ருப்பார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குச் சம­ள­வாக தமிழ் முற்­போக்குக் கூட்­டணி வட, கிழக்­கிற்கு வெளியே சுமார் 7 – 8 இலட்சம் வாக்­கு­களை திரட்டி சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு வழங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.

சஜித்­திற்கு ஆத­ரவு வழங்கும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றில் பெரு­ம­ள­வான வாக்­கு­களை சஜித்­திற்குத் திரட்­டிக்­கொ­டுத்­தது எமது தமிழ் முற்­போக்குக் கூட்­டணி என்­பதே உண்­மை­யாகும். எனவே தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் இதனை நான் சஜித்­திடம் கூறுவேன். ஏனெனில் நாம் கடி­ன­மாகப் பாடு­படும் வேளையில், அதற்­கான புள்­ளி­களை வேறொ­ருவர் பெற்­றுக்­கொண்டு போவ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. அதில் நாம் தெளி­வாக இருக்­கின்றோம்.

கடந்­த­கால ஜனா­தி­பதித் தேர்­தல்­களைப் பொறுத்­த­வரை 2010 ஆம் ஆண்டில் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சே­காவை கள­மி­றக்­கினோம். 2015 இல் கள­மி­றக்­கி­யவர் போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்குத் தூக்­குத்­தண்­டனை வழங்­குவேன் என்று கூறி­விட்டு, தற்­போது மது­போ­தையில் அப்­பாவிப் பெண்ணைக் கொலை செய்த நபரை விடு­தலை செய்­து­விட்டுச் செல்­கிறார். 

இந்­நி­லையில் 25 வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து ஒரு­வரைக் கள­மி­றக்­கு­வதன் ஊடா­கவே அக்­கட்சி மீண்டும் எழுச்­சி­பெறும் என்று கருதி, அக்­கட்­சி­யி­லி­ருந்தே வேட்­பாளர் ஒரு­வரைக் கள­மி­றக்­க­வேண்டும் என்று தீர்­மா­னித்தோம். எனவே தமிழ், முஸ்லிம் மக்­களைப் பொறுத்­த­வரை ஒரு கேட­ய­மாக, அணை­யாகத் திகழ்­கின்ற சஜித் பிரே­ம­தா­ஸவை வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்க வேண்­டு­மென்று கோரினோம். ஆனால் அப்­போது சஜித்தைக் கள­மி­றக்­கு­வதை எதிர்த்­த­வர்கள் எல்லாம் இப்­போது அவ­ருக்கு ஆத­ர­வாகக் கூட்டம் நடத்­த­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்டு விட்­டார்கள். இன்­ற­ளவில் நாடு முழு­வதும் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்­கான ஆத­ரவு நாளுக்கு நாள் பெரு­கி­வ­ரு­கின்­றது.

அதே­வேளை தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களால் மாத்­திரம் சஜித் பிரே­ம­தா­ஸவை வெற்றி பெறச்­செய்­து­விட முடியும் என்று கனவு காணக்­கூ­டாது. சிங்­கள மக்­களின் கணி­ச­மான வாக்­கு­க­ளுடன் சிறு­பான்­மை­யின வாக்­குகள் சேரும் போதே சஜித்தின் வெற்­றியை உறு­தி­செய்ய முடியும். எனவே வாக்­கு­ரிமை உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அனை­வரும் தமது வாக்­கு­களைக் கட்­டா­ய­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும். அப்­போது தான் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­குகள் குறைந்­தாலும், எமது வாக்­குகள் ஊடாக ஈடு­செய்யக் கூடி­ய­தாக இருக்கும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அவர்கள் சற்றே தாம­த­மாகத் தீர்­மா­னித்­தாலும் அதில் நியா­ய­மி­ருக்­கி­றது. நாங்கள் அர­சாங்­கத்­திற்குள் இருக்­கின்ற பங்­கா­ளிக்­கட்­சிகள். ஆனால் அவர்கள் நேசக்­கட்­சிகள் மாத்­தி­ரமே. எனவே எம்மைப் போன்று கட்சி என்ற ரீதியில் விரை­வாகத் தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள முடி­யாது. எனினும் அவர்­க­ளுக்கு முன்­ப­தா­கவே வட, கிழக்கு மக்கள் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பதை முடிவு செய்­து­விட்­டார்கள் என்­பதே உண்மை.

இது ஜனா­தி­பதித் தேர்­த­லே­யன்றி, பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்ல. இதில் வெற்றி பெறப்­போ­கின்ற சஜித் பிரே­ம­தாஸ மற்றும் தோல்­வி­ய­டையப் போகின்ற முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்ஷ ஆகிய இரு தரப்­பி­னரே உள்­ளனர். எனது மிக நெருங்­கிய நண்­ப­ரான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, சஜித் பிரே­ம­தாஸ மற்றும் கோத­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை விடவும் தகை­மை­களின் அடிப்­ப­டையில் சிறந்­த­வ­ராவார். ஆனால் மக்கள் விடு­தலை முன்­னணி தற்­போது தமிழ், முஸ்லிம் மக்­க­ளிடம் வாக்கு கோரு­வது பிழை­யா­னது. 

அவர்கள் சிங்­கள மக்­க­ளிடம் சென்று ஓர­ளவு வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்னர் சிறு­பான்மை இனத்­த­வ­ரிடம் வாக்குக் கோரலாம். ஆனால் அவ்வாறு நடக்கும் போது இந்த நாட்டில் தமிழர்களே இல்லாமல் போயிருப்பார்கள். தற்போது சஜித்தும், கோதபாயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வாக்களித்து, வாக்குகளை விரயமாக்க முடியாது. அதேபோன்று வடக்கிலிருந்து சிவாஜிலிங்கமும், கிழக்கிலிருந்து ஹிஸ்புல்லாவும் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள். 

இவர்கள் ஒப்பந்தக்காரர்கள். உண்மையில் இவ்வாறான ஒப்பந்தக்காரர்களுக்கு வாக்களிப்பதும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிப்பதும், எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் பகிஷ்கரிப்பதும் கோதபாய ராஜபக்ஷவிற்கு அளிக்கின்ற வாக்குகளாகவே அமையும்.

நான் ரணிலுக்கோ அல்லது சஜித்திற்கோ காவடி தூக்கவுமில்லை, சாமரம் வீசவுமில்லை. ஆனால் எனது மக்களுக்காக காவடி தூக்குவதற்குத் தயாராகவே இருக்கின்றேன்.

Comment (0) Hits: 133

'கோட்டா ஆட்சிக்கு வந்தால் முள்ளியவாய்காலை விட மோசமான நிலை உருவாகும்'-விஜயகலா!

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் முள்ளியவாய்கலை விட மோசமான நிலை உருவாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 5 வருடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் வடக்கில் 25 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 30 வருடகாலமாக யுத்தத்திற்கு முகம் கொடுத்த தமிழ் பேசும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.

போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள், பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள், அபிவிருத்திகள் எதையும் முன்னெடுக்கவில்லை.

போரை முடித்த அரசாங்கம் வடக்கு, கிழக்கை காட்டி சர்வதேசத்திடம் நிதிகளைப் பெற்று வடக்கு, கிழக்கு தவிர்ந்து ஏனைய 7 மாகாணங்களை அபிவிருத்தி செய்த வரலாறு தான் உள்ளது.

ஆனால், ஆட்சி மாற்றத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் முதலில் கொழும்பு காலிமுகத்திடலில் முதன் முதலாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

தேசிய கீதமானது மாற்று மொழியில் பாடும் வரலாறு தான் இருந்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் அதை மாற்றியமைத்தோம். கடந்த 25, 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 75 வீதமான காணிகளை வடக்கு - கிழக்கு பகுதிகளில் விடுவித்துள்ளோம்.

வலிவடக்கு பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் 5000 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளித்தோம். மீள்குடியேற்ற அமைச்சு, கல்வி அமைச்சு, வீடமைப்பு அமைச்சு ஊடாக பல வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு அதிக நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் 2500 உடற்பயிற்சி ஆசிரியர் கல்வி அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் தொகையை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றோம். சாதாரண தரம் கற்று விட்டு உயர்தரம் கற்க முடியாத மாணவர்களுக்காக 13ம் தரக் கல்விக்காக 26 கற்கை நெறிகளை ஆரம்பித்துள்ளோம்.

வடக்கு- கிழக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 90 ஆயிரம் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள், 12 ஆயிரம் முன்னாள் போராளிகள், 50 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள், பெற்றோரை இழந்து அனாதை இல்லத்தில் 6 ஆயிரம் சிறார்கள் இருக்கிறார்கள்.

கடந்த கால அரசாங்கம் இவர்களுக்கு எந்தவித தீர்வையும் வழங்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் இவர்களுக்கான நிதியை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இவ்வாறான பாதிப்புக்கள் இருக்கின்றது என்பது சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டுமானால் எமது வாக்கை நாங்கள் வழங்க வேண்டும்.

கடந்த கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முள்ளியவாய்கலை விட மோசமான நிலை உருவாகும். மாற்று அரசாங்கம் வந்தால் மீண்டும் எமது இளைஞர், யுவதிகள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். வெள்ளைவான் காலாசாரம் வரும். கிறீஸ் பூதம் வரும்.

வாள்வெட்டு கலாசாரம் வரும். பள்ளிவாசல்கள், ஆலயங்கள் உடைக்கப்படும். ஆகையால் இவற்றை நாம் இல்லாது ஒழிக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கு உங்களது வாக்கை அளிக்க வேண்டும். அதன் மூலம் ஜனநாயக நாட்டை உருவாக்குவோம்” என்றார்.

Comment (0) Hits: 121

கோட்டாவின் பிரஜா உரிமை; உண்மை - பொய் என்ன? BBC சிங்கள சேவையின் ஆய்வு! (VIDEO)

(VIDEO)

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

இதற்கான பிரதான காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை நீக்கப்பட்டுள்ளவர்களது பெயர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படாமையாகும்.

எவ்வாறாயினும் கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்ற விடயத்தை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவோா் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜை அல்ல என்றும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் முன்வைத்தார்.

அந்த ஆவணங்கள் தொடர்பிலும் சமூக ஊடகங்கள் ஊடாக கேள்விகள் எழுப்பப்ட்ட போதிலும் சட்டத்தரணி அலி சப்ரி நவம்பர் 10ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை  விலக்கிக் கொள்ளப்பட்டமைக்கான அனைத்து ஆவணங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை பீபீசி சிங்கள சேவையின் முகநூல் நேரடிநேர்காணலில் கலந்து கொண்டு கூறும் போது, “எந்தவிதமான ஆவணங்களையும் நாம் உத்தியோகபூர்வமாக நாம் கேட்டிருக்கவில்லை. குறைந்தது அவரது அடையாள அட்டையின் பிரதியைக் கூட நாம் கேட்கவில்லை. யாரிடமும் அவ்வாறான ஆவணங்களை நாம் கோரவில்லை என்ற விடயத்தையே நாம் கூற வேண்டியுள்ளது” என்றார்.

Comment (0) Hits: 261

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களின் கவனத்துக்கு; ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த யூதர்கள்!(VIDEO)

(VIDEO)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் தோன்றிய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தை காரணம் காட்டி சிலர் அதிகாரத்திற்கு வருவதற்கு முயன்ற போதிலும் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களுக்கு அமைய, அவ்வாறானவர்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்துள்ளார்களா? என்ற சந்தேகம் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்த்தவ சமூகத்திடம் தோன்றியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் அவர்களது கடும் வெறுப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் (11) நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, இது தொடர்பான விடயங்களைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர்.

இங்கு கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்.

“சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகள் குழு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவைக் கைது செய்து, உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தியவர்கள் யார்? என்பது இன்று தெளிவாகத் தெரிகின்றது.

டீ.ஐ.ஜி நாலக சில்வா ஒரு கத்தோலிக்கராகும். அவரது 109 யிலிருந்து 115 வரையில் சாட்சியங்கள் குறிக்கப்பட்டுள்ள சாட்சிகள், விஷேடமாக கத்தோலிக மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது, பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையினை எடுத்து வாசியுங்கள். இது உங்கள் பொறுப்பாகும். புதிதாக யாரும் இது தொடர்பில் சாட்சிகளைத் தேடித் தரும் வரையில் காத்திருக்கத் தேவையில்லை.

இந்நாட்டு மக்களுக்கும் பொறுப்புள்ளது. இதில் இருக்கும் விடயங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு, தேடிப் பார்ப்பதற்கு. இதில் யார் அமர்ந்திருந்தததல்ல. நாலக சில்வா சஹ்ரானின் குழுவை தெளிவாக இனங்கண்டு கொண்டார். அவர் சஹ்ரான் குழுவைப் பற்றி பல வருடங்களாக பலோ செய்து கொண்டு வருகின்றார்" என்றார்.

Comment (0) Hits: 204

அலி சப்ரியின் போலி ஆவணத்தால் கோட்டாவுக்கு நெருக்கடி!

கோத்தபாய ராஜபக்சவின் பிரதான சட்ட ஆலோசகரும் அவரது ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய நபராக செயற்படும் சட்டத்தரணி அலி சப்றியின் கருத்துக்கள் மற்றும் செயல்கள், பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறி, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கட்சியின் தலைமையிடம் கருத்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இப்படியான முக்கியமான தேர்தல் பிரசார கட்டமைப்பில் அரசியல் தெரியாத அலி சப்றி போன்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பது கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலில் மது மாதவ அரவிந்த பிவித்து ஹெல உறுமயவில் இருந்து நீக்கப்பட்ட போது, தானே கோத்தபாய ராஜபக்சவுக்கு அழுத்தங்களை கொடுத்து அவரை நீக்கியதாக அலி சப்றி கூறியதன் மூலம் சிங்கள வாக்கு வங்கிக்கு சேதத்தை ஏற்படுத்தினார்.

இதன் பின்னர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அடிவாங்க நேரிடும் என கூறி முஸ்லிம் வாக்கு வங்கிக்கும் தேசத்தை ஏற்படுத்தினார்.

மூன்றாவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அடிப்படைவாதிகள் இருப்பதாகவும் மருத்துவர் ஷாபியின் நாடகம் அவர்களின் உருவாக்கம் எனக் கூறி கட்சிக்கு அவமதிப்பை ஏற்படுத்தினார்.

அது மாத்திரமல்ல கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை சம்பந்தமான ஆவணங்களை சாதாரண மக்களுக்கு காட்ட வேண்டிய தேவையில்லை எனக் கூறி, சாதாரண மக்களின் கோபத்தை தூண்டியுள்ளார்.

அத்துடன் அந்த ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்து, மற்றுமொரு சிக்கலை உருவாக்கினார்.

இறுதியாக கோத்தபாய ராஜபக்ச கையெழுத்திடாத சத்திய கடிதம் ஒன்றை பகிரங்கப்படுத்தி அவரது தேர்தல் பிரசாரத்தை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றார் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையிடம் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சட்டத்தரணி என்ற வகையில் அலி சப்றி மிகவும் திறமையானவர் எனவும், தனது தரப்பு வாதிகளை அச்சுறுத்தி கட்டணத்தை தீர்மானிக்கும் விதத்தில் சாதாரண மக்களை அச்சுறுத்தி வாக்குகளை பெற முடியாதென்பது அவருக்கு புரியவில்லை என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அலி சப்றி கோத்தபாயவின் வாக்குகளை சிதறடிக்கும் இயந்திரம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Comment (0) Hits: 297

'ஷங்கிரி-லா கொமிஸில் "தங்காலை பே" ஹோட்டல் விலைக்கு வாங்கப்பட்டது' - சம்பிக்க ரணவக்க!(VIDEO)

(VIDEO)

கொழும்பு காலி முகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகத்தை விற்பனை செய்து பெற்ற பணத்தை ராஜபக்சவினர் சொகுசு வாழ்க்கைக்காக செலவு செய்திருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஷங்கரிலா நட்சத்திர விடுதி அமைப்பதற்காக விற்பனை செய்யப்பட்ட இந்த பெரும் நிலப்பரப்பின் ஊடாக பெற்ற பணத்தில் பல்வேறு சொத்துக்களையும் ராஜபக்சவினர் கொள்வனவு செய்திருப்பதாகவும் அவர் பட்டியலிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“மோசடி குற்றச்சாட்டுக்களை நாங்கள் முன்வைத்தபோது அரசியல் வழிவாங்கல், சேறு பூசல்கள் என்று ராஜபக்சவினர் தெரிவித்துவந்தனர்.

ஒரு டொலரையாகினும் தாம் மோசடி செய்ததாக நிரூபித்தால் கழுத்தை அறுத்துக்கொள்வதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்நிலையில், ஷங்கரிலா விடுதி மற்றும் இராணுவத் தலைமையம் மாற்றலுக்குப் பின்னால் இருக்கின்ற மோசடிகளை அம்பலப்படுத்துகிறேன்.

பிரித்தானியர் காலத்திலிருந்து காலி முகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகத்தை இரண்டு பகுதிகளாக கடந்த அரசாங்கம் விற்பனை செய்தது. 2010ம் ஆண்டில் 06 ஏக்கர் நிலத்தை 8250 மில்லியன்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் 2011ம் ஆண்டில் மேலும் 04 ஏக்கர் வழங்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு காணிகளை விற்பனை செய்வதாக இப்போது கூறுகின்ற மகிந்தவே அன்று இந்த நிலத்தை விற்றார்.

மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பிலிருந்த காணி உரிமம் வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கு இந்தக் காணியை வழங்கியிருக்கின்றார்.

தனியார் நிறுவனங்கள் இரண்டை வைத்து இதற்கான சரியான ஆவணங்கள் சிங்கப்பூரில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. 05 மில்லியன் டொலர்கள் இதற்காக ராஜபக்சவினருக்கு வழங்கப்பட்டது.

இதில் பெறப்பட்ட பணத்தின் மூலம் தங்காலையில் சொகுசு உணவகம் ஒன்றும் நாமல் ராஜபக்சவினால் கொள்வனவு செய்யப்பட்டது.

இராணுவத்தினரை தலைமையகத்திலிருந்து வெளியேற்றி அதில் பெற்ற பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ள மகிந்த ராஜபக்ச, தனது கழுத்தை வெட்டுவாரா இல்லையா என்பதில் பிரச்சினையில்லை.

ஆனாலும் இந்த ஆதாரங்கள், அரசியல் சேறுபூசுதலா இல்லையா என்பதை அவர்கள் கூறவேண்டும். அதேபோலவே இராணுவத் தலைமையகம் விற்பனை செய்யப்பட்டு பெற்ற தரகுப் பணத்திலா பசில் ராஜபக்சவின் மல்வானை இல்லமும் வாங்கப்பட்டது.

அதேபோல நாமல் ராஜபக்சவுக்கு இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பெற்ற தரகுப் பணத்தில் தங்காலையில் சொகுசு விடுதி ஒன்றும் வாங்கப்பட்டமைக்கும் ஆதாரங்கள் அம்பலமாகியுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

Comment (0) Hits: 173

'இனவாதம் பேசியோர் வாக்கிற்காக முஸ்லிம்களுக்கு வாக்குறுதி வழங்குவது வேடிக்கை' - விஜித ஹேரத்!

சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சை, கருத்தடை மருந்து என இனவாதம் பேசியவர்கள் இன்று முஸ்லிம்களின் வாக்கைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருவது நகைப்பிற்குரிய விடயமாகும் என ஜே.வி.பி பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

தம்புள்ள நெம்ரே விலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நீலமும் பச்சையும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். அவர்களின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக பெரும்பான்மை மக்கள் புதிய அரசியல் தலைமையொன்றை எதிர்பார்க்கின்றனர். பிரதான வேட்பாளர்கள் வாக்குறுதி பொதிகளை அள்ளி வழங்கி வருகின்றனர். நாட்டில் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்ப வரும் வேட்பாளர்களின் கூட்டத்திற்கு வரும் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர்.

கோட்டாபய வந்தால் வௌ்ளை வேன் மீண்டும் வரும் என்று கூறி வாக்கு பெற முயன்கின்றனர்.கடந்த முறை ஜெனீவா பிரேரணையை காட்டி வாக்குபெற்றார்கள். இனவாதத்தினூடாக தமது வங்குரோத்தை மறைத்து வாக்கு பெற முயல்கின்றனர். நாவலப்பிட்டி முஸ்லிம்களைச் சந்தித்த மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி தங்களுக்கு 10 வீதமான முஸ்லிம்களின் வாக்குகளே கிடைக்கும் எனவும் அதனை 25 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு கூடுதலான வாக்குகளைப் பெற்றுத்தந்தால், கண்டி நகரில் முஸ்லிம் பாடசாலை அமைப்பதாகக் கூறியுள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை, கருத்தடை மருந்து என இனவாதம் பேசியவர்கள் இன்று வாக்கு பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்குகின்றனர். சாய்ந்தமருதில் தனி உள்ளூராட்சி சபை பெற்றுத் தருவதாக வாக்களித்து ஆதரவு கோருகின்றனர். இரு பிராதான வேட்பாளர்களும் பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். 71 வருடங்கள் பிரதான கட்சிகளிடம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற வேண்டாம் என்று ​கோருகிறோம்.

ரோயல் பார்க் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார்.

போதை வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும் என்று கோரியவர் பெண் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை விடுவித்துள்ளார். வீட்டுக்கு செல்ல தயாராகையில் இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார். கொல்லப்பட்ட பெண் சுவீடன் நாட்டு பெண். இது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. சட்டத்தரணிகள் சங்கம், சிவில் அமைப்புகள் இதனை கண்டித்துள்ளன. ஜனாதிபதியின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதை மாற்ற சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். மக்கள் பிரதிநிதிகள் இலாபமீட்டும் வியாபாரிகளாக மாறியுள்ளனர். ஜனாதிபதியில் இருந்து உள்ளூராட்சி உறுப்பினர்கள் லாபமீட்டும் நிலையை மாற்ற ​வேண்டும்.

நீதிமன்றத்தினால் வழங்கும் தீர்ப்பை மாற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தை நாம் உடனடியாக மாற்றுவோம்.போதைப் பொருள் வர்த்தகர்கள்,பெண்களைத் துஷ்பிரயோகம் செய்வோருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை ஒழிப்போம் என்றும் அவர் கூறினார்.

Comment (0) Hits: 111

கோட்டாவின் குடியுரிமை; தேர்தல் ஆணைக்குழுவிற்கு சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படவில்லை - அலி சப்ரியின் பொய்! (VIDEO)

(VIDEO)

கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை நீக்கிக் கொள்ளப்பட்டதற்கான அனைத்து ஆவணங்களையும் தோ்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாக கோட்டாபயவின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறிய விடயங்கள் அப்பட்டமான பொய் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அமைச்சர் அஜித் பீ.பெரேரா மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ ஆகியோர் இன்று தோ்தல்கள் ஆணைக்குழுவிற்குச் சென்று வினவிய போது, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது அவரது பிரதிநிதியோ அவ்வாறான எந்த சான்றிதழையும் தமக்கு வழங்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவிற்குச் சென்று திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பின்வருமாறு கூறினார்.

“இன்று நாம் தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கச் சென்றோம். விஷேடமாக மொட்டுக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபயவினால் அவரது இரட்டைப் பிரஜா உரிமையை சட்டரீதியான நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வழங்கப்படும் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குமாறு நாம் எழுத்து மூலமான கோரிக்கையினை முன்வைத்தோம்.

நாம் அந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையாளரிடம் வழங்கிய போது, அவ்வாறான எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு எமக்கு வழங்காத ஒன்றை எவ்வாறு நாம் வழங்குவது என அவர்கள் கூறினார்கள். எனவே விஷேடமாக நாம் கூற விரும்புவது என்னவெனில், கோட்டாபய இன்னமும் அமெரிக்கப் பிரஜையேயாகும்.  அவர் ஒரு தவறான வேட்பாளர். இவ்வாறான வேட்பாளர் ஒருவருக்கு நாம் வாக்களித்தால் வெற்றி பெறப் போவது அமெரிக்கர் ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதியாவதாகும்” எனறார்

Comment (0) Hits: 148

'மஹிந்தவை தெரிவு செய்ததைப் போன்று என்னையும் ஜனாதிபதியாக்குங்கள்' - கோட்டா!

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அவரை இரு தடவைகள் ஜனாதிபதியாக்கியதைப் போன்று, என்னையும் ஜனாதிபதியாக்குங்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

கண்டியில் இன்று (12) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அத்துடன் என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தையும் எனது ஆட்சி காலத்தில் நிறைவேற்றுவேன். தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பை நாம் பொறுப்பேற்கின்றோம். 

எமது ஆட்சியின் கீழ் மீண்டும் பயங்கரவாதம் தோன்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதற்கேற்க வகைளில் முப்படை ,பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு என்பன பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

Comment (0) Hits: 130

'கோட்டா இன்னும் அமெரிக்கரே' - மங்கள சமரவீர!

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜா உரிமையை கைவிட்டாரா? அல்லது அவர் தற்போதும் அமெரிக்க பிரஜையா என்பது சந்தேகத்திற்குரியது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை, திக்குவளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கோத்தாபயவின் சட்டத்தரணி அலி சப்றி, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கோத்தாபயவின் அமெரிக்க கடவுச்சீட்டு மற்றும் குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான சான்றிதழ் என காட்டிய ஆவணங்களில் பிழைகள் இருக்கின்றன. அந்த ஆவணங்களை செய்தியாளர்களுக்கு வழங்காததன் மூலம் இந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது.

மக்களை ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்களை காட்டியமைக்காக சட்டத்தரணி அலி சப்றியின் சட்டத் தொழிலுக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய வேண்டும்.

அலி சப்றி காட்டிய கடவுச்சீட்டில் என்ன முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதில் 'CANCEL' என்ற வார்த்தை காணப்பட்டது. CANCEL என்றால் இரத்துச் செய்யுங்கள் என்று பொருள். அமெரிக்கா மாத்திரமல்ல உலகில் எந்த நாடாக இருந்தாலும் கடவுச்சீட்டை இரத்துச் செய்யும் போது 'CANCELLED' என்ற முத்திரை கடவுச்சீட்டில் குத்தப்படும். 'கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டு விட்டது' என்பது இதன் அர்த்தம்.

எனினும், இந்த போலி ஆவணத்தை தயாரித்த நாமல் ராஜபக்ஷ போன்றோருக்கு இதனை கூட சரியாக செய்ய தெரியவில்லை. 'CANCELLED' என்ற சரியான வார்த்தைக்கு பதிலாக 'CANCEL' என்ற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் இது பொய்யானது என்பது உறுதியாகியுள்ளது.

அது மாத்திரமல்ல அமெரிக்காவில் சான்றிதழ்களில் திகதியை எழுதும் போது, முதலில் மாதம் அடுத்ததாக தினம் இறுதியில் ஆண்டு எழுதப்படும். எனினும் இந்த சான்றிதழில் இலங்கையின் முறைப்படி முதலில் தினம், அடுத்ததாக மாதம் இறுதியாக ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்திலும் இந்த செய்தியை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 108

ஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரத்தன தேரர்!

றோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த 34 வயதுடைய தொன் ஷிரமந்த ஜூட் எண்டனி என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வந்தவர் அத்துரலிய ரத்ன தேரராகும்.

ஆயுள் தண்டவை வழங்கப்பட்டிருந்த இவ்வாறானர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது  தொடர்பில்  ஜனாதிபதி  மீது  கடும் எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளதுடன்,  இந்நிலையினுள்  இவ்விடயத்திற்கு தாக்கத்தைச் செலுத்திய காரணங்களைத் தெளிவு படுத்தி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடக நிறுவனங்களுக்கு விஷேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“றோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த 34 வயதுடைய தொன் ஷிரமன் ஜூட் எண்டனி என்பவர் தொடர்பில் இருந்த நியாயமான விடயங்களை மனிதாபிமான முறையில் கவனத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமயத் தலைவர்கள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு எழுத்துமூலமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்விளைஞருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்காக முக்கிய பங்கெடுத்து சிறப்பான செயற்பாடுகளைச் செய்து தேவையான தலையீடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரினால் மேற்கொள்ளப்பட்டதோடு, அவரால் இவ்விளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கவும்  வைத்துள்ளார்.

அத்துடன் ரத்ன தேரரினால் இது தொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கையுடன் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Comment (0) Hits: 220

Page 3 of 103