செய்திகள்

கோட்டா ஜனாதிபதியாகி 3 மாதத்தில் முஸ்லிம் திருமண சட்டம் திருத்தம் - பைஸர் முஸ்தபா!

கோட்டாப‌ய‌ வெற்றி பெற்றால், தற்போதைய அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம் திரும‌ண‌ச் ச‌ட்ட‌ திருத்த‌த்தை மூன்று மாத‌த்துக்குள் பாராளும‌ன்றில் ச‌ம‌ர்ப்பிக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்பதாக, முன்னாள் அமைச்ச‌ர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்த‌பா தெரிவித்தார். 

நேற்று முன்தினம் இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் ந‌டைபெற்ற‌ ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பின் போதே அவ‌ர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

மேலும் கூறுகையில், இந்த‌ அர‌சில், அம்பாறை ப‌ள்ளி உடைப்பு, திக‌ன‌ க‌ண்டி என‌ப் ப‌ல‌ தாக்குத‌ல்க‌ளுக்கும் முக‌ம் கொடுத்தோம். இத்த‌னைக்கும் முழு முஸ்லிம் எம்.பீ.க்க‌ளும் அமைச்ச‌ர்க‌ளும் இந்த‌ அர‌சில் இருந்தும், முஸ்லிம்க‌ளைப் பாதுகாக்க‌ முடிய‌வில்லை.

மாற்ற‌த்தை எதிர்பார்த்த‌ முஸ்லிம்க‌ள் வன்முறையையே க‌ண்டன‌ர். ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்குப் பின் முஸ்லிம் ச‌மூக‌ம் பாரிய‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம்கொடுத்த‌து. பெண்க‌ள் உடைக‌ளுக்கு க‌ட்டுப்பாடு, அர‌ச‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு முஸ்லிம் பெண்க‌ள் த‌ம‌து க‌லாசார‌ ஆடையை அணிந்து செல்ல‌ முடியாமை, முஸ்லிம் வியாபார‌ நிலைய‌ங்க‌ளில் பொருள் வாங்க‌ முடியாம‌ல் த‌டுத்த‌மை என‌ ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌.  முஸ்லிம்க‌ளுக்குப் பாதுகாப்பு முக்கிய‌ம். ஆனால், ஐ.தே.க‌. அர‌சால் முஸ்லிம்க‌ளைப் பாதுகாக்க‌ முடியாது என்ப‌தே உண்மை.

நாட்டின் வ‌ர‌லாற்றைப் பார்க்கும்போது, ஐ.தே.க‌. ஆட்சியிலேயே சிறுபான்மை ம‌க்க‌ள் அதிக‌மான பாதிப்புக்களைக் க‌ண்ட‌ன‌ர் என்றார்.   

Comment (0) Hits: 167

நடுநிலை விவகாரம் நிறைவு - மைத்திரி ஆட்டத்திற்கு தயார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா நடுநிலை அரசியிலிருந்து விடுபட்டு ஜனாதிபதி தேர்தல் மேடையில் ஏறுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் சிங்கள இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு இம்மாதம் 28ம் திகதி நாடு திரும்ப உள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை வழங்கி, அரசியல் பிரசார மேடையில் ஏறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கைகள் சில ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும், அவைகளையும் கவனத்திற் கொண்டு தான் ஆதரவளிக்கப் போகும் வேட்பாளர் யார்? என்பதையும் தீர்மானித்து விட்டதாகவும் அவர் தொடர்ந்து  கூறினார்.

இதனடிப்படையில், அடுத்த வாரத்தில் ஜனாதிபதி தோ்தல் பிரசார மேடைகளில் ஏறுவது உறுதியானது என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான அந்த பிரமுகர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில், ஜனாதிபதி சுயாதீனமாக இருக்கப் போவதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரதானிகள் கூறியிருந்த போதிலும் ஜனாதிபதி, அந்த தீர்மானத்தை தற்போது மாற்றிக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

Comment (0) Hits: 198

கோட்டாவைப் பாதுகாப்பதற்கு ஞானசார தேரர் களத்தில்!

நான் இரண்டில் ஒன்றை நல்ல முறையிலோ அல்லது கூடாத முறையிலோ தீர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் அதற்காக இந்நாட்டு மக்கள் தயார்” என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  நாவல வீதி, ராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்மராஜித விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமேந்திரன் உள்ளிட்ட குழுக்களுக்கு  இனிமேலும் அடிபணிய முடியாது என்றும், அவர்கள் விதைக்கும் தீவிரவாதத்தை நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ துரிதமாக ஒழிக்க வேண்டும் என்றும், தற்போது அரசாங்கத்தினுள் மற்றொரு அரசும், சட்டத்தின் உள்ளே மற்றொரு சட்டமும் உள்ளது என்றும், இந்நிலையினை மாற்றுவதற்கு நாட்டு மக்கள் அடுத்த மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் அவர் இதன் போது கூறினார்.

கடந்த தேர்தல்களின் போது ராஜபக்ஷக்களுக்கு பகிரங்கமாகவே ஆதரவைத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பு, இம்முறை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் மௌனமாக இருந்து வந்ததோடு, நேற்றிலிருந்து மீண்டும் களத்திற்கு வந்திருப்பது மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பின்னடைவுக்கு உள்ளாகியிருப்பதன் காரணமாகவே என அவ்வமைப்பின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

Comment (0) Hits: 154

"ஆணையிறவிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாவுக்கு விவாதத்திலிருந்து தப்பிச் செல்வது ஆச்சரியமானதல்ல "- மங்கள!

தன்னுடன் நேருக்கு நேர் நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவினால் விடுக்கப்பட்ட சவாலை நிராகரித்து மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தப்பிச் செல்வது ஆச்சரியமான விடயமல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அந்த ட்வீட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவாது,

“அன்று பிரபாகரன் அனைத்து யுத்தங்களினதும் தாய் எனக் கருதிய ஆணையிறவு சண்டை ஆரம்பித்து ஒரு வாரத்தினுள் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய, சஜித்தின் விவாத அழைப்பை தவிர்த்து தப்பிச் செல்வது ஆச்சரியமான ஒன்றல்ல. காரணம் அவர் அன்றும் இன்றும் பயத்தினால் தப்பி ஓடுவதேயாகும்”

சஜித்தின் சவால்!

தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் ட்வீட்டர் பதிவொன்றை வெளியிட்டு பின்வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்,

“எமது கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேசுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நான் நேருக்கு நேர் மோதும் தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். பலமிக்க வேட்பாளராயின் எதிர்த்தரப்பினருடன் ஒரே மேடையில்  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு எவ்வித அச்சமும் இருக்கக் கூடாது”

Comment (0) Hits: 214

கோட்டா ஆபத்தானவர் என்பதை விளங்கிக் கொண்டனர் : ஜயம்பதி சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம்!

இலங்கையின் ஜனநாயகத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவினாலும், அவருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படைவாத சக்திகளினாலும் தோன்றியிருக்கும் தெளிவான ஆபத்தைக் கருத்திற் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு அதிகூடிய வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு தமது கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரான  ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தேசிய அமைப்பாளர் பதவியை வகிக்கும் ஐக்கிய இடதுசாரி முன்னணி இதற்கு முன்னர்  தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களித்து கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு கூடிய வாய்ப்புள்ள வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும் அண்மையில் (23) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கீழ் வரும் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

“இலங்கையின் ஜனநாயகத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவினாலும்,  அவருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படைவாத சக்திகளாலும் தோன்றியிருக்கும் தெளிவான ஆபத்தைக் கருத்திற் கொண்ட ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிக்கக் கூடிய அதிக வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய இடதுசாரி முன்னணியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுப்பது”

Comment (0) Hits: 405

தோட்ட தொழிலாளர்களுக்கான மேலதிக தீபாவளி முற்பணம் தேர்தல் சட்ட மீறல் அல்ல!

தோட்டத்தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையின் மேலதிக  முற்பணமாக  5000 வழங்குவதற்கு  எடுக்கப்பட்டுள்ள  முடிவுக்கு எதிராக,  தேர்தல் சட்டவிதிகளின் கீழ் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை எனசுயாதீன  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்தார். 

தோட்டத்தொழிலாளர்களுக்கு 10,000 ருபாவிற்கு  மேலதிகமாக, 5 ,000  ரூபாவை    வழங்க    தேயிலை  சபையினுடாக  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருந்தது.  இதற்கான  அங்கீகாரத்தை அமைச்சரவை  வழங்கியிருந்தது.  

இவ்விவகாரம்  தொடர்பாக  பல  தரப்பிலும் தேர்தல் காலத்தில்  மேலதிகமாக  5 ஆயிரம் ரூபாய்  வழங்க  முடியுமா  என்ற    வாத  விவாதங்கள்   நடைபெற்று வரும் நிலையில்  இது  குறித்து  சுயாதீன  தேர்தல்கள்  ஆணையாளர் மஹிந்த  தேசப்பிரியவை  சந்தித்து  கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Comment (0) Hits: 242

ராஜபக்ஷக்களின் சூழ்ச்சி; சபாநாயகர் கருவுக்கு கௌரவம்!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், ஜனநாயக விரோதமான முறையில் ராஜபக்ஷக்களினால் அபகரிக்கப்பட்டு இந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதியுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.
 
இலங்கை  அரசியல் வரலாற்றில் மிகவும் இருண்ட நாளாக ஒக்ரோபர் 26 கருதப்படுகின்றது.
 
இந்த துரதிஸ்டவசமான தினத்தை நினைவு கூரும் வகையில், சில வெகுசன அமைப்புக்கள், பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நெருக்கடியான நிலைமைகளின் போது, திடசங்கற்பத்துடன் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய கௌரவிக்கப்படவுள்ளார்.
 
1948ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், முதல் தடவையாக ஜனநாயக ரீதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்று சூழ்ச்சி மூலம் கவிழ்க்கப்பட்டிருந்தது.
 
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் போது, உயிரை பணயம் வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, இந்த இருண்ட 52 நாட்களை நினைவு கூரும் வகையில், சிவில் அமைப்புகள் சில நிகழ்வுகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. எதிர்வரும் 26ம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
 
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில்  அமர்த்தப்பட்டதன் மூலம், இலங்கையில் அரசியல்  அமைப்பில் கடுமையான சர்ச்சை நிலைமை உருவாகியிருந்தது.
 
அதிகார பேரசை காரணமாக ராஜபக்ஷக்கள், இந்த சூழ்ச்சித் திட்டத்தை முழு வீச்சுடன் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எவ்வாறெனினும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு பத்து தடவைகள் சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி மைத்திரி கோரிய போதிலும், அதனை அவர் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment (0) Hits: 172

CEYLON TODAY மற்றும் மவ்பிம பத்திரிகைகள் அஹிம்சாவின் புகைப்படங்களை திரிபுபடுத்தியுள்ளன!

"சிலோன் டுடே" (CEYLON TODAY) மற்றும் "மவ்பிம" ஆகிய பத்திரிகைகள் புகைப்படங்களை திரிபுபடுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் திரிபுபடுத்தப்பட்டவை என குறிப்பிடப்படுகிறது.
 
கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், செய்தி அறிக்கையிட்ட குறித்த ஊடகங்கள், புகைப்படத்தை திரிபுபடுத்தியுள்ளன.
 
நேற்றைய தினம் (23) இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
maubima p  
அஹிம்சா, தனது தந்தையின் புகைப்படத்தை ஏந்தியவாறு வெளியிட்ட புகைப்படமொன்றை எடுத்து, அதில் தந்தையான லசந்தவின் புகைப்படத்திற்கு பதிலீடாக அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
z p04 Ex Defence 
அஹிம்சாவின் செயற்பாடுகளில் சிலருக்கு முரண்பாடு இருந்தாலும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பான ஊடக ஒழுக்க நெறிகளுக்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில், செய்தி அறிக்கையிடுவது ஏற்புடையதல்ல.
 
கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாக அஹிம்சா தெரிவித்துள்ளார்.
 
வழக்கு எதனால் நிராகரிக்கப்பட்டது?
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் பல காரணங்களைக் கூறியுள்ளது.
 
சந்தேக நபர் இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக கடயைமாற்றியமை,
 
கோத்தாபயவின் இரட்டைக் குடியுரிiமை தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடுதல்,
 
லசந்த கொலையுடன் கோத்தாபய நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக முறைப்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தாமை,
 
வழக்கின் குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு பொருத்தமற்றது,
 
ஆகிய காரணிகளின் அடிப்படையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
அஹிம்சாவின் பதிவு!
 
“எனது தந்தையான லசந்த படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக போராடும் முயற்சியில் துக்ககரமான ஓர் தருணம் இதுவாகும். எனது தந்தை நடு வீதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார், செய்தி அறிக்கையிடுதலின் அடிப்படையில், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்வது அரச செயற்பாடாக கருதப்பட முடியாது. குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. நானும் எனது சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தை தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
 
 twiter
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பதிவு!
 
மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டமை குறித்து, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
  
"கோத்தாபய ராஜபக்ஷ குற்றமற்றவர் என அமெரிக்க நீதிமன்றம் அறிவிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
 
sri lanka 50137250 
கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அரசாங்க அதிகாரி என்ற காரணத்தினால், அமெரிக்காவில் தண்டனையிலிருந்து தப்புதவற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
Comment (0) Hits: 167

கோட்டா ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் ஓய்வு பெற்றுக்கொண்ட லெப்டினன் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தப்படுவார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
தம்மை பாதுகாப்புச் செயலாளர் பதவியில் அமர்த்துவதாக கோத்தாபய உறுதியளித்துள்ளார் என தமக்கு நெருக்கமான சில வர்த்தகர்களிடம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
 
கோத்தாபய முன்னாள் படைவீரர்களை பயன்படுத்தி, ஒர் வலையமைப்பினை உருவாக்க உள்ளதாகவும், அவர் பதவிக்கு வந்தால் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Comment (0) Hits: 186

கோட்டாவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சு.க அமைப்பாளர்கள் விரக்தியில் - தயாசிரி!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியினால் மேற்கொள்ளப்பட்டது கடினமான தீர்மானம் என்றும், அந்த தீர்மானம் தொடர்பில் சில பிரதேச தலைவர்கள் விரக்தியில் உள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களுக்கு பணம் மற்றும் பதவிகளை வழங்கி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்குத் தெரிவு செய்ய வேண்டியது சமமான கருத்துக்களையுடைய கட்சி என்பதால்  பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு தீர்மானித்ததாகவும் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா கடந்த 04ம் திகதி கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒரு சில அமைப்பாளர்களைத் தவிற ஏனைய அனைத்து அமைப்பாளர்களும் மொட்டு கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

(மூலம் - லங்கா சீ நிவுஸ்)

Comment (0) Hits: 210

ஈஸ்டர் தாக்குதல்; பாராளுமன்ற தெரிவுக் குழு அறிக்கையின் 8 பரிந்துரைகள்!

ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை தாக்குதல் நடத்த இலங்கையின் மத அடிப்படைவாத முரண்பாடுகள் காரணம்  என கடந்த ஆறு மாத காலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலை தடுக்காது போனமைக்கு  அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளினுள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் இராணுவப் புலனாய்வு பணிப்பகத்தினர் ஆகியோர் தமது பொறுப்புகளை தவற விட்டுள்ளனர். 

மேலும் இந்த ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் நாட்டில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குவதற்கான தன்னல அக்கறைகளை கொண்டவர்கள்,  புலனாய்வு தகவல்கள் தொடர்பாக செயற்படவில்லையா? என்பதை புரிந்து கொள்வதற்காக மேலும் விசாரணைகள் தேவைப்படும். 

அப்போது அத்தகைய ஒரு நிலைமை இத்தகைய பயங்கரவாத செயல்களை கட்டுப்படுதத்துவதற்கான  ஒரு பலமான ஆட்சி மாற்ற கோரிக்கைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் தெரிவுக்குழு அந்த அறிக்கையில் அவதானப்படுத்தியுள்ளது. 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கை நேற்று  பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலை அடுத்து அதனை கண்டறிய நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கடந்த ஆறு மாதங்களாக தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் இன்று புதன்கிழமை தமது விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பித்தனர். தெரிவுக்குழுவின் பிரதித் தலைவர் ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவுக்குழு அறிக்கையை சபைப்படுதினார், 

இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. 

இதில் தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், ரவூப் ஹகீம், நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களின் மூலமாக தெரிவுக்குழு அறிக்கை தெளிவுபடுத்தப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மூன்று தேவாலயங்கள், மற்றும் மூன்று ஹோட்டல்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஆகக்குறைந்தது 277 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 40 வெளிநாட்டவர்கள், 45 குழந்தைகள் உள்ளடக்கப்பட்ட எண்ணிக்கையாகும். அத்துடன்  400க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 164

ஜேவிபி யின் அன்ஜான் உம்மாவுடன் மேலும் மூன்று உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற

உறுப்பினர் அன்ஜான் உம்மாவுடன் வடமேல் மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் மேல் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் இணைந்து கொண்டனர்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (22) இடம்பெற்ற சமூக நீதிக்கான  சிகப்பு நட்சத்திர மக்கள் சக்தி, ஜனநாயக இடதுசாரி அமைப்பின் தேசிய மாநாட்டின் போதே இவர்கள் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

மேல் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் எராஜ் கிருஷாந்த அல்விஸ், வடமத்திய மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் அநுர திசாநாயக்கா, வடமேல் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் சமன் புஷ்பகுமார ஆகியோரே இவ்வாறு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தவர்களாவர்.

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய அக்கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட சிகப்பு நட்சத்திர மக்கள் சக்தி அமைப்பின் சுமார்  400 பேர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக நேற்று இதன் போது இணைந்து கொண்டனர்.

Comment (0) Hits: 689

சஜித்தின் தோ்தல் விஞ்ஞாபணம் 30ம் திகதி வெளியிடப்படும்!

ஐக்கிய தேசிய முன்னணியிள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபணம் ஒக்டோபர் 30ம் திகதி வெளியிடப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஜனாதிபதி தேர்தல் கொள்கைப் பிரகடணக் குழுவின் பிரதானி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவாகும். இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி ஹர்ச த சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பலரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழு அண்மையில் பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களைச் சந்தித்து குறித்த தேர்தல் விஞ்ஞாபண வரைவினைக் கையளித்துள்ளனர். பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்கா, ரவுப் ஹக்கீம், பீ. திகாம்பரம் ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கட்சித் தலைவர்களால் குறித்த வரைவில் பல திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு அங்கீகாரத்தையும் வழங்கியிருந்தனர்.

Comment (0) Hits: 208

அடுத்த ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 4 மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் 4 மாத காலத்திற்கான அரச செலவுக்கென 1,474 பில்லியன் ரூபாவிற்கான இடைக்கால கணக்கறிக்கையை  நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார்.


 அரசாங்கத்தின் செலவிற்கு மேலதிகமாக அடுத்த வருடத்தில் முதல் 4 மாதத்தில் கடனை செலுத்துவதற்கான வரையறையாக 721 பில்லியன் ரூபாவிற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 
 
 
 
Comment (0) Hits: 163

என்னை எவ்வளவு விமர்சித்தாலும் நான் நேர்மை தவறியதில்லை!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையின் ´விடியும் வேளை´ நிகழ்ச்சிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரருமான ரவூப் ஹக்கீம் வழங்கிய நேர்காணல்.

கேள்வி: நீங்கள் இந்த அரசாங்கத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்?

பதில்: அரசின் பங்காளிக் கட்சி என்ற வகையில், எங்களுடைய சமூகம் சார்ந்த நலன்சார்ந்த விடயங்களான இனப் பிரச்சினைக்குரிய தீர்வு, அரசியல் யாப்பு திருத்தம், வெவ்வேறு சட்டவாக்க உருவாக்கம் போன்ற விடயங்களில் சமூகநலன் பாதிக்காது நாட்டின் தேசிய நலனை முன்னிறுத்தியும், இனங்களுக்கிடையிலான சமத்துவம் பேணும் விடயங்களில் மிக அவதானமாக இருந்து எங்களுடைய பங்களிப்பை நாம் செய்து வந்திருக்கிறோம்.

ஜனாதிபதியின் சில முரண்பாடான நடவடிக்கைகளின் காரணமாக சீர்த்திருத்த செயற்பாடுகள் பலவற்றில் இடையிடையே பலவித குறுக்கீடுகள் ஏற்பட்டு அவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளன. இரண்டு பிரதானமான கட்சிகளையும் பொருத்தமில்லாமல் இணைத்துக் கொண்டு செல்கின்ற நிலை சாத்தியமற்றது என்ற எண்ணப்பாட்டுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.

ஆகவேதான், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆளுமையாக அடையாளம் காணப்பட்ட ஒரு வேட்பாளரை முன்னிறுத்தினால் மாத்திரமே இவற்றிலே சரியான முன்னேற்றத்தை காணமுடியும் என்ற புரிந்துணர்வுக்கு நாங்கள் எல்லோரும் வந்திருக்கிறோம். இதன் அடிப்படையிலேயே தற்போதைய தெரிவும் அதன் பின்னரான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசின் அங்கமாகவிருந்து எல்லா பிரதேசங்களிலும் எங்களால் முடியுமான ஆகக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் செய்திருக்கிறோம். முன்னர் இருந்த அரசாங்கத்தைவிட பிராந்திய ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளை செய்திருக்கிறோம். குறிப்பாக, பல பிரதேசங்களில் வீதி புனரமைப்பு, நீர் வழங்கல் தொடர்பான அபிவிருத்தி வேலை திட்டங்களை என்னுடைய அமைச்சின் நிதியொதுக்கீட்டில் செய்து முடித்திருக்கிறோம்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்களின் மூலமாக ஒவ்வொரு துறையிலும் அனைத்து இன மக்களும் பயன்பெறும் வகையில் சமத்துவம் பேணும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்து கொடுத்துள்ளேன்.

யாழ். குடாநாட்டில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் வரட்சி நிலையை நிவர்த்தி செய்யவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்களை முன்னெடுப்பதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உடன்பாடின்மை போன்ற விடயங்களில் தடைகள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்துக்கு கிளிநொச்சியிலிருந்தும் இரணைமடு குளத்திலிருந்தும் நீரை கொண்டுசெல்வதில் காணப்படும் அரசியல் முரண்பாடுகள், குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இத்திட்டத்தை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் மிக விரைவாக இவற்றை நிவர்த்தி செய்து இத்திட்டத்டை முன்னெடுப்போம்.

இதற்காக இரணைமடு குளத்தை பாரிய செலவோடு இரண்டு அங்குளம் அளவுக்கு உயர்த்தி பாரிய வேலைத்திட்டத்தை செய்துள்ள போதிலும், நிலவிவரும் முரண்பாடு காரணமாக இத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு புறம்பாக முதன்முறையாக கடல் நீரை சுத்திகரித்து யாழ். குடாநாட்டுக்கு வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியோடு மிகப்பெரிய செயற்றிட்டத்தை அமுலாக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதேபோல் மன்னார் பிரதேசத்திலும் கூட பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம்.

சில இடங்களில் கேள்விப்பத்திரங்கள் கோருவதற்கு தாமதங்கள் ஏற்பட்டாலும் பாரியளவில் அபிவிருத்தி திட்டங்களை செய்து முடித்துள்ளோம். பல இடங்களில் அபிவிருத்திகளை செய்து கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் அந்த அபிவிருத்தி திட்டங்கள் யாவற்றையும் வெற்றிகரமாக முடிக்கவுள்ளோம்.

கிழக்கில் பொத்துவில் பிரதேசத்துக்கு ஹெடஓயா நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திட்டத்தை வழங்கும் திட்டத்திலும் பல முரண்பாடுகளுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்து வெற்றிகண்டுள்ளோம். ஓட்டமாவடி, வாழைச்சேனை, திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை போன்ற உல்லாசப் பயணிகள் அதிகமாக வருகை தரும் பிரசேதங்களுக்கு சுத்தமான நீரை கொண்டு செல்வதற்குரிய பல திட்டங்களை இப்போது முன்னெடுத்துள்ளோம்.

இதுவரையில் சுமார் 17 நீர் வழங்கல் திட்டங்களை 300 பில்லியன் ரூபா செலவில் இலகு கடன் முறையில் நிதிகளைப் பெற்று அமுல்நடாத்தியுள்ளோம். இவ்வளவு பெரிய தொகையை முன்னைய எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத நிலையில், எமது இந்த அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்திக்காக இவ்வளவு நிதிகளை இலகு கடன் முறையில் பெற்றுக்கொண்டுள்ளோம்.

உயர் கல்வி அமைச்சை பொறுப்பெற்று 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதிய வளாகங்களை அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக வவுனியா பல்கலைக்கழகத்தை தரமுயர்த்தியுள்ளோம். அதற்கான ஒரு வளாகம் மன்னாரிலும், முல்லைத்தீவிலும் அமைய வேண்டுமென்ற செயற்றிட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளள.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக கல்வி பீடமொன்றை உருவாக்குவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்மாந்துறையில் விவசாயத் துறைக்கு புதிய கல்வி பீடமொன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மிக துரிதமாக முன்னெடுத்துள்ளோம்.

உள்ளூரில் இருக்கின்ற பல பிரச்சினைகளில் மிக முக்கியமான பிரச்சினைதான் காணிப் பிரச்சினை. மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்ட இந்தக் காணிகளை விடுவிக்கின்ற விவகாரங்களில் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம்.

கேள்வி: 7ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வித நிபந்தனைகள் அற்ற நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரிப்பதான ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: நிபந்தனைகள் என்பதை விடவும் பரஸ்பர இணக்கப்பாட்டின் மூலம் ஒரு செயற்பாட்டுக்காக இணங்குதல் என்பதே மிக முக்கியமான விடயமாக நோக்கப்பட வேண்டும். ஒரு தரப்பினரை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி, வலியுறுத்தி ஆட்சித் தலைவரை செய்விப்பது போன்ற பார்வை ஏற்படும்போது அது இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தை பொறுத்தமட்டில், நாட்டுப்புற பௌத்த சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் தவறான அபிப்ராயத்தை தோற்றுவிக்கின்றது.

இதனால், நாங்கள் இந்த தரப்பை வெல்லவைப்பதற்கான நோக்கத்தை தவறவிடும் அபாயம் இருக்கின்றது. இந்நிலையில்தான் ஒரு உபாயமாகவே இதனை கையாண்டுள்ளோம். நாங்கள் மாத்திரமல்ல, நாட்டிலுள்ள அரசாங்கத்தை ஆதரிக்கின்ற அனைத்து சிறுபான்மை கட்சிகளும் இந்த அணுகுமுறையை கையாள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

குறிப்பாக, மலையக கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேரடியாக தமது ஆதரவுகளை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றன. இரு கட்சிகளும் கடந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதன் அடிப்படையில், ஆரம்பித்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்து முடிக்கவும், எஞ்சியுள்ளவற்றை எதிர்வரும் காலங்களில் செய்வதற்கு ஒத்துழைக்கவும் புதிய வேட்பாளரை தெளிவுபடுத்தி அவரிடமிருந்து உத்தரவாதங்களை நேரடியாக பெற்றிருக்கிறோம். அத்தகைய தலைமையொன்றையே நாம் தெரிவு செய்துள்ளோம். இத்தகை தருணத்தில் தலைமைகள் மீது நம்பிக்கை வைப்பது மக்களின் பாரிய தார்மீக பொறுப்பாகும்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு, இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், தலையீடுகள், எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள கெடுபிடிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கின்றபோது, நாங்கள் எந்த தரப்பை தெரிவுசெய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவான நிலைப்பாடு இருக்கவேண்டும். இத்தெரிவில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது.

ஏனென்றால், கடந்தகால நடவடிக்கைகளை ஒப்பீட்டு ரீதியாக பார்க்கும்போது இந்த செயற்பாடுகளின் பின்னாலிருந்த சக்திகளை ஊக்குவித்தது யார்? எந்த சக்திகள் எந்த தரப்பின் மேடைகளில் இன்று முழங்கித் திரிகின்றன என்பதை அவதானித்தாலே, இது சம்பந்தமான சரியானதொரு புரிந்துணர்வை மக்கள் அடைந்து கொள்ளலாம்.

என்னைப் பொறுத்தமட்டில் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டுவதில் பாரபட்சம் இருக்க முடியாது. அதை நாங்கள் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். நாட்டில் பயங்கரவாத கெடுபிடி இருக்கின்றபோது கடுமையான நடவடிக்கைகள் நடக்கத்தான் வேண்டும். ஆனால், முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரித்த நடவடிக்கைகளினால் மிகவும் புண்பட்டு போயிருந்த எமது சமூகத்தை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது மட்டுமல்லாது சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்திலும் சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஏனைய புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வுத்துறைக்குள்ளே இருந்த அசமந்தப்போக்கு இந்த நிலைமைக்கு காரணமாக இருந்தது. அது மட்டுமல்லாது இப்போது எங்களுக்கிடையே தெளிவொன்றும் பிறந்துள்ளது. ஒரு கும்பல் முஸ்லிம் சமூகத்துக்குள் ஒழிந்துகொண்டு செய்த இந்த நாசகார வேலை இனிமேலும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வேட்பாளர்கள் மேடை மேடையாக புலனாய்வுத்துறையை கட்டியெழுப்புவோம், நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவோம் என்று முழங்கித் திரிகின்றனர். இவர்கள் என்னதான் முழங்கினாலும், இன்று முஸ்லிம் சமூகமானது சுயமாகவே நாட்டின் பாதுகாவலராக மாறியிருக்கின்றனர். எங்களது சமூகத்துக்குள் இவ்வாறான பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான அறிகுறி ஏதும் தென்பட்டால், அவர்களை காட்டிக்கொடுத்து அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதில் சமூகம் முனைப்புடன் இருக்கிறது.

மதத்தின் பெயரைப் பாவித்து புத்தி பேதளித்த இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மதத்துக்கு இழி பெயரை கற்பிக்கின்ற இவ்வாறாக கூலிப்படைகளின் மோசமான செயற்பாடுகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. இதற்கு சமூகம்தான் முதலாவதாக பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இந்தப் பிரச்சினையின் பின்னணியில் நாம் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கினோம். இதற்காக நிறைய சங்கடங்களை எமது சமூகம் சந்தித்தாலும், அவற்றையெல்லாம் சட்டத்தின் மூலம் நியாயமான முறையில் தீர்த்துக் கொண்டோம். இன்றும் கூட அந்தப் பிரச்சினைகள் முழுமையாக தீர்ந்துவிடவில்லை.

இருப்பினும் நாட்டின் நீதிச் சேவைகளை சரிவர நெறிப்படுத்துகின்ற இந்த அரசாங்கத்தின் முக்கியமான முன்னேற்றங்களுள் ஒன்றான நீதித் துறையின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளோம். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பலவந்தமாக இந்த நாட்டின் ஜனநாயகம் பறிபோனபோது அதை பாதுகாப்பதிலே நீதிமன்றங்கள் வழங்கிய பங்கை மக்கள் மறந்துவிடலாகாது.

இவற்றையெல்லாம் இயலச்செய்த ஓர் அரசு, இதை முன்கொண்டு செல்வதற்கும் எங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள், கஷ்டங்கள் இனியும் நிகழாதிருக்க சரியான உத்தரவாதங்களோடு புதிய ஆட்சித் தரப்பை வலுப்படுத்துவதன் மூலம் அதனை செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

கேள்வி: சிறுபான்மை வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பில்லாத சூழலில், முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக ஹிஸ்புல்லாஹ் போன்றோர் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: அண்மைய பயங்கரவாத செயலோடு பேசப்பட்ட பூர்வீகமாக கருதப்பட்ட காத்தான்குடி நகருக்கு நான் சென்றிருந்தேன். அந்த மண்ணிலிருந்து வேட்பாளர் ஒருவர் வெளிவந்து, நாடு பூராகவும் தனக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்கும் என்ற மாயையில் மிக அபத்தமான வங்குரோத்து அரசியல் செயற்பாட்டை செய்துகொண்டிருக்கிறார். இதுதொடர்பில் காத்தான்குடியில் மிக விரிவாகப் பேசியிருந்தேன்.

இந்தப் பேர்வழிகள் ஏதோ பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதாக ஒரு பார்வையை பரப்புவது மிகவும் பிழையான விடயமாகும். அவரை பச்சாதாபமடைய வேண்டியுள்ளதே ஒழிய, இதை பெரிய விடயமாக கருதி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நான் அங்கு பேசிய பேச்சினாலே, மாற்றுத்தரப்பு தற்போது கடுமையாக பயந்துபோய் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தமட்டில் மறைமுகமாக முஸ்லிம்களின் வாக்குகளை திசைதிருப்புவதற்கு எடுத்த முயற்சி வீணாகுவது ஒருபுறம், இவ்வாறு செய்த சிங்கள பெரும்பான்மையின மக்களின் வாக்குகளும் வீணாகிப்போகும் என்ற அச்சம் மறுபுறம் தோன்றியுள்ளது. முஸ்லிம் ஜனாதிபதி வேட்பார் ஒருவர் களமிறங்குவதைப் பார்க்கிலும், வெற்றி பெறக்கூடிய தரப்பை ஆதரிப்பதன் மூலமே எங்களது தரப்பு நியாயங்களை சரியாக முன்வைக்க முடியும்.

எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய தரப்புக்கு ஆதரவை வழங்கி நிம்மதியான, சுபீட்சமான வாழ்க்கையை ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தக்கூடிய வேட்பாளரை தெரிவுசெய்வதில் எங்களுக்கு சிக்கல்களும் இருக்கவில்லை. இதனடிப்படையில்தால் இந்த நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: நிச்சயமாக கடந்த தேர்தலில் இடம்பெற்ற 80% வாக்குப் பதிவானது இம்முறை அதை விடவும் மேலாக வாக்குப் பதிவுகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய என்னிடம் கூறினார். கடந்த தேர்தலில் கல்முனை, மூதூர் போன்ற பிரதேசங்களில் அதிக வாக்களிப்பு பதிவாகியுள்ளன. சில வாக்குச் சாவடிகளில் 12 மணியளவில் வாக்குப் பதிவுகள் நிறைவு பெற்றன.

இப்போது வெறும் முகஸ்துதிக்காக முஸ்லிம்களின் பாதுகாப்பு, தமிழ் மக்களின் சுபீட்சம் சம்பந்தமாக இப்போது மேடைகளில் பேசித்திரிகின்ற இந்த தரப்பு கடந்த காலங்களில் எவ்வாறு நடந்துகொண்டன என்பதை நாம் மறந்து விடலாகாது. முஸ்லிம் சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியான நிலையில், தமது கௌரவத்தையும் தனித்துவத்தையும் காண்பிப்பதற்காகவும் தமக்கான தலைமையை தெரிவுசெய்வதில் மும்முரமாக தங்களது பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சிறுபான்மை பிரதேசங்களில் அச்சத்தை ஏற்படுத்தி தமது இருப்பை தக்கவைப்பதற்காக கிறீஸ் மனிதன் போன்ற திட்டங்களை திட்டமிட்டு மேற்கொண்ட ஆட்சியாளர் கூட்டம்தான் இப்போது புதிய முகமூடி போட்டுக்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு குரல் கொடுப்பவர்களாக பிரதிபலிக்க முற்படுகின்றனர். இதை விடவும் பெரிய ஏளனம் இருக்க முடியாது.

கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் முழு சர்வதேசமும் எம்மை விட்டு விலகக்கூடிய அபாயம் ஏற்பட்டது. நாங்கள் சர்வதேசத்தின் ஓர் அங்கமாக இருக்கின்ற நிலையில், அதன் நியதியை மீறிச் செயற்பட்டு ஒருநாளும் இந்நாடு சுபீட்சத்தை எட்டமுடியாது. இந்த விவகாரங்களில் நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகள், அவற்றினால் ஏற்பட்ட தாக்கங்கள், பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து பொருளாதார தடையை விதிக்கக்கூடிய அபாயத்தை எட்டியது. அச்சமயத்தில் நாங்கள் ஒற்றுமையாக இருந்த காரணத்தினால் அதிலிருந்து தப்பித்துவிட்டோம்.

அடுத்த கட்டமாக நாட்டின் ஊழல் விவகாரங்கள் தொடர்பிலும் பேசுகின்றனர். முக்கியமாக மத்திய வங்கியின் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அதிலும் வெளிப்படைத் தன்மையோடு நடந்துகொண்டமையினால் அனைத்தையும் மூடிமறைக்க எத்தனித்த போதிலும் அது கிட்டவில்லை. மாறாக அந்த இயந்திரங்கள் சரியாக இயங்கின. சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு மோசடி செய்யப்பட்ட 11 பில்லியன் ரூபா இப்போது முழுமையாக அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதுவே முன்னைய அரசாங்கமாக இருந்தால் இத்தொகை முடக்கிவிடப்பட்டிருக்கும். வெளிப்படைத் தன்மையோடு அணுகும்போதே அதில் உண்மை தன்மை இருக்கும்.

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் இரு தரப்பினரும் அரசியல் பின்புலம் சார்ந்தவர்களாக இருக்கும் நிலையில் சமூகத்துக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இரு தரப்பினருடனும் பேச்சுவார்தை நடத்தி தனது ஆதரவை தெரிவித்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் நிலவுகின்றதல்லாவா?

பதில்: இந்த தேர்தலை பொறுத்தமட்டில் எங்களுக்கு வேறெந்த தெரிவுகளும் இருக்கவில்லை. வெறும் சாட்டுக்காக மாத்திரம் பேச்சுவார்த்தைக்கு செல்வதில் அர்த்தமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற சில பலவீனங்களை களைவதன் மூலம்தான் வெற்றியடையலாம் என்பதில் நான் தனித்துநின்று போராடியிருக்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எங்களது பங்காளிக் கட்சிகளும் எனது முடிவை ஏற்றுக்கொண்டன. அதன் விளைவுதான் புதியதொரு இளம் வேட்பாளர் களமிறங்கியுள்ளார்.

இந்த புரிந்துணர்வு என்றோ நிகழவேண்டியது. அவ்வாறு ஏற்பட்டிருந்தால் நாங்கள் அன்றே வெற்றியை கிட்டியிருப்போம். இவ்வாறான யுக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருவர் திடீரென தொப்பி பிரட்டியாக மாறி, பேரம்பேசிக் கொண்டிருக்கின்றார் என்பது அரசியல் நம்பகத்தன்மையை முழுமையாக வீணடிக்கின்ற செயலாக அமைந்துவிடும். நான் சிறுபான்மை சமூகமொன்றின் அரசியல் தலைமை என்ற அடிப்படையில் என்னைப் பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் அரசியல் நேர்மை என்ற விவகாரங்களில் நான் என்றுமே தவறியதில்லை.

கடந்த காலத்தில் கட்சி பாதிக்கப்படக்கூடாத சில முடிவுகளின் பின்னணியில் முன்னைய ஆட்சியை ஆதரிக்க வேண்டிய பலவந்த நிலைக்குள்ளானோம். கட்சிக்குள் பிளவு ஏற்படலாகாது, உறுப்பினர்களை காவுகொள்ளக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்த பிரயத்தனங்கள் வெளியில் பலருக்குத் தெரிவதில்லை.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் நான் அடைந்த கஷ்டம் எவரும் அடைந்திருக்க மாட்டார்கள். 8 பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பதற்காக புனித மக்கா நகருக்கு அழைத்துச் சென்று வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டுதான் மீளழைத்து வந்தேன். அவ்வளவு தூரம் அழுத்தம் கொடுத்தார்கள். நாட்டின் ஜனநாயகத்தை பின்கதவால் பறிக்க முற்பட்ட ஒருதரப்பு, இப்போது முன்கதவால் ஜனநாயகம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. இதனை முறியடித்து, நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட்டது குறித்து நாங்கள் பெருமைகொள்கிறோம்.

கேள்வி: ஏப்ரல் தாக்குதலைத் தொடர்ந்து குருநாகல், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களை இலக்குவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது நீங்கள் வழங்கும் ஆதரவின் மூலம் இப்படியான இனவாத தாக்குதல்களை முறியடிக்கப்படுமா?

பதில்: சட்டத்தின் ஆட்சியை எவ்வித தலையீடுகளும் இல்லாமல் நடைமுறைப்படுத்துவதற்கு சரியான தலைமையிடம் ஆட்சி போவதன் மூலமே சாத்தியமாகும். இதைத்தான் நாங்கள் சட்டத்தின் ஆட்சி என்று சொல்கிறோம். இது ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும். இது இல்லாமலாகும்போது வெவ்வேறு தலையீடுகள் எட்டிப் பார்க்கும். சுயாதீன செயற்பாடுகளில் பலவீனங்கள் ஏற்படாது செயற்படுத்துவதற்கு ஒரு பொறிமுறை அவசியமாகின்றது. அதற்கான பொறிமுறை பற்றித்தான் நாங்கள் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

பாராளுமன்றத்தை பொறுத்தமட்டில் தனியான தெரிவுக் குழுவொன்றை அமைத்து, இது தொடர்பான சிபாரிசுகளை செய்துகொண்டிருக்கிறது. இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். அதில் கூறப்படும் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக யாரையும் விலைக்கு வாங்கி, கூலிக்கமர்த்தி செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு மிக மோசமான ஊடுறுவல் நடந்திருக்கின்றது என்பது மிக துலாம்பரமாக தெரிகின்றது. என்னைப் பொறுத்தமட்டில் ஐ.எஸ். என்று சொல்லப்படுகின்ற விடயங்கள் யாவுமே வெளிப் பார்வைக்கு மாத்திரமே ஒழிய, நிச்சயமாக ஒரு வெளிச்சக்தியின் தலையீடும் இருக்கத்தான் செய்கின்றது.

நாட்டின் ஸ்திரத்தன்மையை குழைக்கச் செய்து தமது சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தேவையேற்படும்போது ஆட்சி மாற்றத்தைக்கூட கொண்டுவந்து விட்டால் என்னவென்று சிந்திக்கின்ற அளவுக்கு இந்த சக்திகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எங்கள் மத்தியில் இருக்கின்றன.

அண்மைக்கால நிகழ்வுகளோடு சேர்த்து, யார் யாரெல்லாம் அங்கு போய் சேர்கிறார்கள் என்பதை கவனிக்கும்போது, அதிலே வெளிச்சக்தியின் செயற்பாடு இருந்திருக்கிறது என்றும் இதுவொரு சங்கிலித் தொடரான நிகழ்ச்சிநிரல் என்று யூகிக்க முடிகின்றது. ஒக்டோபர் 26 முதல் ஏப்ரல் 21 வரை இடம்பெற்ற விடயங்கள் யாவுமே இயல்பாக நடந்த விடயங்களல்ல. எல்லாமே திட்டமிட்டு சங்கிலித் தொடராக அரங்கேற்றப்பட்டு, கைதேர்ந்தவர்கள் செய்ய முற்பட்டு சில இடங்களில் தோற்றுப்போய் சில இடங்களில் வெற்றிபெற்றாலும் இன்னும் முற்றுப்பெறாத நிகழ்ச்சி என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்தகைய கும்பல்கள் வெற்றிபெற இடமளிக்கக் கூடாது. ஏனென்றால் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களின் சகவாழ்வுக்கு வேட்டு வைத்தாயினும் சரி, ஆட்சியை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நடத்தப்படுகின்ற பெரியதொரு நாடகத்தின் அங்கமாகத்தான் இந்த விடயங்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி: பிரதான வேட்பாளர்கள் இவரும் சிறுபான்மை மக்களுக்காக அதை தருகிறோம், இதை தருகிறோம் எனக்கூறி அணிதிரட்டுவதை அவதானிக்க முடிகிறது. இதுதொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்: கேள்வியில் சிறிய திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இரு தரப்புமே சிறுபான்மை மக்களுக்கு எதை வழங்குவார்கள் என்பதை இதுவரையில் தெளிவாக எங்குமே கூறாமல் நழுவி செல்லும் பாங்கையே காணக்கூடியதாக இருக்கிறது. கூர்மையாக அவதானித்தால் இதை விளங்கிக் கொள்ளலாம். மேலோட்டமாக சில விடயங்களை பேசிப் போகின்றார்களே ஒழிய, பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்குகளில் குறியாக இருக்கின்றனர். எங்களுடைய தரப்பு இதனை ஓர் உபாயமாகவே பார்க்கின்றது.

கேள்வி: அவ்வாறானால், கோட்டாபே ராஜபக்ஷ பள்ளிவாசல்களுக்குச் சென்று தமது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் பாதுகாப்பதாக கூறுகின்றாரே?

பதில்: சட்டமும் ஒழுங்கும் இல்லாத நாட்டில் ஒருபோதும் சுபீட்சம் மலராது. ஆட்சி நீடிப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு சிறுபான்மைகளை இலக்கு வைத்து செய்கின்ற திருவிளையாடல்கள் இனியும் பலிக்காது. காலம் கடந்தாவது ஞானம் பிறந்திருக்கலாம் என்ற அடிப்படையில் பள்ளிவாசல்களிலும், கத்தோலிக்க தேவாலயங்களிலும் சென்று கதைத்திருக்கலாம்.

ஏப்ரல் தாக்குதலின் பின்னர் கத்தோலிக்க சமூகமும் முஸ்லிம் சமூகமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்விரு தரப்புமே கடந்த தேர்தலில் அதிக பெரும்பான்மையாக ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை திசைதிருப்ப அரங்கேறிய நாடகமே அது. இதைவைத்து பிழைப்பு நடத்துகின்ற வங்குரோத்து அரசியலுக்கு நாங்கள் முடிவுகட்ட வேண்டும். அதைத்தான் இந்த தேர்தலில் சிறுபான்மையின மக்கள் விளங்கிகொள்ள வேண்டும்.

Comment (0) Hits: 154

வாகனங்களின் Dash Boardஇல் புத்தர் சிலைகளுக்கு தடை - கொட்டோக்களின் மற்றுமொரு சேறுபூசல் நடவடிக்கை!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தரப்பினாரல் மற்றுமொரு சேறுபூசல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
மோட்டார் வாகனமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புத்தரின் சிலையொன்றை அகற்றுமாறு, மோட்டார் போக்குவரத்து பொலிஸார் உத்தரவிட்டதாக, சமூக வலைத்தளங்களின் ஊடாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
எனினும், இந்தச் செய்தியில்  எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், பிரதான விண்ட்ஸ்கிரீனுக்கு இடையூறாக மையக் கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த பூ மாலையை அகற்றுமாறு, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி அறிவுரை வழங்கியமையை, திரிபுபடுத்தி ஊடகங்களில்  செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, பொலிஸ் தலைமையகத்தின் மோட்டார் போக்குவரத்து கட்டுப்பாட்டு பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில், சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த சம்பவம் குறித்து, வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ வை மையப்படுத்தி, அரசுக்கு எதிராக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவான தரப்பினரினால்,  சமூக ஊடகங்கள் வாயிலாக போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
 
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
Comment (0) Hits: 232

'மாத்தறைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கிடையாது' – ஜனாதிபதி செயலகம்!

மாத்தறை மாவட்டத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
  
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரட்ன ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தற்போதைக்கு நாட்டில் எவ்விதமான அவசர பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கிடையாது என அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில், தேவையற்ற பீதி கொள்ள அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டின் பொது நிறுவனங்களினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாட்டில் அவசர பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்பட்டு வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

Media Release

 
Comment (0) Hits: 139

லசந்த படுகொலை; கோட்டாவுக்கு எதிரான வழக்கில் அமெரிக்க நீதிமன்றின் அறிவிப்பு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் முடிவிற்கு  எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக  லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

எனது தந்தையின் சார்பில்  நீதிக்காக நீண்ட காலமாக எனது குடும்பம் மேற்கொண்ட போராட்டத்திற்கு கிடைத்துள்ள ஏமாற்றம் தரும் பின்னடைவு இதுவென  அகிம்சா விக்கிரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பத்திரிகையாளர்களை படுகொலை செய்தவர்களிற்கு நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இயக்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது தந்தை ஒரு சாதாரண பிரஜை. அவர் தனது அலுவலகத்திற்கு தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தவேளை, வீதியில் ஈவிரக்கமற்ற விதத்தில் படுகொலை செய்யப்பட்டார் எனவும் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ஒருவரின் செய்திக்காக அவரை கொலை செய்வதை அரச நடவடிக்கையாக கருதக் கூடாது என தெரிவித்துள்ள அவர், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்புவதை தடுப்பதற்காக நான் தொடர்ந்தும்  போராடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட "சண்டே லீடர்" ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க,  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபயவிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை,  அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையிலேயே, அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கோத்தாபய சட்டவிரோத படுகொலைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சித்திரவதைகள் ஆகியவற்றில் ஈடுபட்டார் என அகிம்சா விக்கிரமதுங்க குற்றம்சாட்டியிருந்தார்.

கோத்தாபய, பொதுச்சட்டத்தின்  வெளிநாட்டு அதிகாரிகள் விடுபாட்டுரிமைக்கு தகுதியானவர்  என்ற அடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள  சித்திரவதை, சட்டவிரோத படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய குற்றங்களிற்கு, பொதுசட்ட அதிகாரிகள் விடுபாட்டுரிமையின் கீழ், கோத்தாபய ராஜபக்சவிற்கு விடுபாட்டுரிமை உள்ளதால், அகிம்சா விக்கிரமதுங்கவின் கோரிக்கையை பரிசீலனை செய்வதற்கான  நியாயாதிக்கம் தனக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வாறன வழக்குகளில்  நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே, சித்திரவதைக்கு உட்பட்டவரை பாதுகாக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது என அகிம்சா விக்கிரமதுங்கவின் சட்டத்தரணி நட்டலி எல் ரீட் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள், தங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களிற்கு அப்பால் பத்திரிகையாளர்களை சித்திரவதை கொலை  செய்வது போன்றவற்றில் ஈடுபட்டால், அவர்களிற்கு நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்க பிரஜையான கோத்தாபய ராஜபக்சவை  அமெரிக்க நீதிமன்றங்கள் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 176

Page 10 of 103