செய்திகள்

வாக்காளர் அட்டை - வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்; அட்டைகளை விநியோகிக்கும் முக்கிய பணி (28) ஆரம்பமானது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை சனிக்கிழமை ஆரம்பமான போதிலும் இதன் முக்கிய பணி இன்று ஆரம்பமானதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால்காரர் வீடுகளுக்கு வரும்போது, வீட்டில் நாய் முதலான செல்லப்பிராணிலிருந்து தபால்காரர்களை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தபால் மா அதிபர், வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
 
Comment (0) Hits: 209

'ஜனாதிபதி தேர்தல் முறை இருப்பதால்தான் சிறுபான்மையினரின் தேவை உணரப்படுகிறது'- ஹக்கீம்!

விகிதாசார தேர்தல் முறை, ஜனாதிபதி தேர்தல் முறை இருப்பதால்தான் சிறுபான்மை சமூகங்களின் தேவைப்பாடு உணரக் கூடியதாக இருக்கின்றது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் சனிக்கிழமை (26) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் , பயங்கரவாதம் என்பதை நினைத்துக் கூட பாரக்காதவர்கள் இன்று பயங்கரவாதிகள் என சொல்லப்படுவது மாத்திரமல்லாமல் காத்தான்குடி மண்ணே பயங்கரவாதத்தின் விளை நிலமாக பார்க்கப்படுகின்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

காத்தான்குடியை தீவிரவாதத்தின் விளை நிலமாக பார்க்கிற ஒரு நிலவரத்திலிருந்து ஏதோ ஒரு வகையில் மீண்டுகொண்டிருக்கின்ற தருணத்திலேதான் ஜனாதிபதி தேர்தலை எதிர் கொள்கின்றோம்.

இந்த தேர்தலில் ஜனாதிபதி முறைமையையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கிற ஒரு தரப்புக்கு தன்னுடைய வாக்குகளை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அல்லது அந்த தரப்புக்கு வெற்றி வாய்ப்புக்கு வசதியாக வாக்குகளை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டிக்கு சிலர் இறங்கியிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தல் என்பது கட்சியைப் பார்த்து வாக்களிப்பது என்பதை விடவும் தனி நபர்களுடைய குணாம்சங்களைப் பார்த்து அதி உச்ச பதவிக்கு தெரிவு செய்வதற்கான தேர்தலாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தீர்மானம் எடுப்பதற்கே தயங்கிக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சியாக இன்று உருவெடுத்திருக்கின்ற சிறீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைவராக உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இனி ஜனாதிபதி பதவியை நினைத்துப் பார்க்க முடியாது.

இரண்டு தடவைகள் இருந்து விட்டார். 18வது திருத்தத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் சதா காலமும் இருக்கலாம் எனப் பார்த்தால் அதையும் 19வது திருத்தச் சட்டத்தில் இல்லாமல் செய்து விட்டோம்.

ஜனாதிபதி தேர்தலில் 1988க்குப் பிறகு உண்மையாக ஐக்கிய தேசியக் கட்சிகாரர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வில்லை.

ரணசிங்க பிரேமதாசவுக்குப்பிறகு எல்லா தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்களே போட்டியிட்டனர்.

கடைசி நேரத்தில் இறக்குமதி செய்து வேட்பாளரை கொண்டு வருவது. இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே பெரிய விரக்தியாக இருந்தது.

போதாக்குறைக்கு அன்மைக்காலமாக உள் முறண்பாடுகளினால் இழுபறிப் பட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தான் புது தெம்​ைப கொடுத்தது.

நிச்சயமாக வெற்றியடையக் கூடிய ஒரு வேட்பாளர் இருக்கின்றார் என்பதை அம்பலத்துக்கு கொண்டு வந்து அடையாளப்படுத்தினோம்.

எல்லோருக்கும் தெரியும் ஆனால் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அடக்கி கொண்டிருந்தார்கள். இதை முதலில் முஸ்லிம் காங்கிரஸ் தான் சொன்னது.

எனவே இந்த தேர்தலில் மிக அவதானமாக நாம் நடந்து கொள்வதுடன் நமது சமூகத்தின் எதிர்காலத்தை மையமாக கொண்டு நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், யு.எல்.எம்.என்.முபீன் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Comment (0) Hits: 137

ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும்? - ஞானசார தேரர்! (VIDEO)

(VIDEO)

“இரண்டு வீதிகள் இருக்கலாம். அதில் ஒரு வீதியில் காபட் போடப்பட்டுள்ளது, குழங்காமல் பயணிக்க முடியும், ஆனால் அந்த வீதியில் புலி உள்ளது  என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அந்த வீதியில் நச்சுப் பாம்புகள் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களிடத்தில் அன்பாகக் கூறுவோம். இதனை நாம் வடக்கிற்குச் சென்ற போது நாம் கண்டோம். சற்று சிரமத்துடனாவது நச்சுப் பாம்பு பயமின்றி நேரான வீதியில் செல்ல, புலி பயமில்லாத வீதியில் செல்லவதற்கான வீதியைத் தெரிவு செய்ய” என கலகொடஅத்தே ஞானசார தேரர்  கூறினார்.

நேற்று (27) கேகாலை வட்டாராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பொதுபல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது உலகையே பீதிக்கு உள்ளாக்கும் அடிப்படை வாத கருத்தைக் கொண்டுள்ள தீவிரவாத குழுவை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் நல்லாட்சி அரசைக் கொண்டு வருவதற்கு உதவி செய்துள்ளதாகவும், இதனைப் பற்றி தான் அந்நாட்களில் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

நல்லாட்சியைக் கொண்டு வந்து அதன் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு ஒரே நாளில் முழு நாட்டினதும் பொருளாதாரத்தைச் சீர்குழைத்ததாகவும், தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்வதற்காக இஸ்லாமயி அடிப்படைவாத சக்திகள் பலவீனமான அரசாங்கத்தை தெரிவு செய்ததாகவும், அந்த பலவீனமான அரசாங்கம் தீவிரவாதிகளைப் போஷித்து அவர்கள் விரும்பியவாறு செயற்படுவதற்கு இடமளித்ததாகவும் அதன் இறுதி பெறுபேறாகவே 300க்கும் அதிகமான அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதாகவும் அவர் அங்கு கூறினார்.

2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்கு செயற்பட்ட குழுக்கள் தற்போதும் ஜனாதிபதி தேர்தலுக்கு உதவி வழங்கிக் கொண்டு இருப்பதாகவும் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்கும்? என்றும் ஞானசார தோர் கேள்வி எழுப்பினார்.

Comment (0) Hits: 314

அரச ஊழியர்கள் உட்பட மக்களுக்கு நிவாரணங்கள்!

எதிர்வரும் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு வாக்கெடுப்பினூடாக, அரசாங்க ஊழியர்கள் உட்பட மக்களுக்கான பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட இருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான முதல் 4 மாதங்களுக்கு இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க மீண்டுவரும் செலவினம் மற்றும் நிதிச் செலவுக்காக 1,470 பில்லியன் ரூபாவும், முற்கொடுப்பனவு கணக்கறிக்கைக்காக மேலும் 5 பில்லியனும் செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள நிதி அமைச்சு,

அரசாங்க உழியர்களுக்கு அனர்த்த கடன் மட்டம் 250,000 இலிருந்து 350,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வட்டி 4.2 வீதத்திலிருந்து 3 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் அலுவலர்களுக்கு மிதிவண்டி கொள்வளவு செய்வதற்காக வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா நிதி, 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டு, அதற்கான வட்டி 4.2 வீதத்திலிருந்து 3 விதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அலுவலக சேவை ஊழியர்களின் உத்தியோகபூர்வ சீருடைக்காக வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

தேசிய காப்புறுதி நிதியத்தில் அங்கம் வகிக்கும் ஊழியர்கள் 3 வருடத்துக்கு ஒரு முறை பெற்றுக்கொண்ட 5000 ரூபா மூக்குக் கண்ணாடி பெறுவதற்கான கொடுப்பனவு 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். அரச சேவையின் சாரதிகள், முகாமைத்துவ அதிகாரிகளுக்காக வருடாந்தம் ஆகக் குறைந்தது ஐந்து நாட்கள் கட்டாயப்பயிற்சி வழங்குவதற்கு வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். கிராம சேவை அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளில் மாநகரசபை மற்றும் நகர சபை பிரதேசங்களில் அலுவலகக் கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிக்கப்படும். அதே வேளை, பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களில் 1000 ரூபா இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். போக்குவரத்து செலவு 200 ரூபவிலிருந்து 6000 ரூபவாகவும் உத்தியோகப் பிரதேசத்துக்கு வெளியே அது 500 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும். அத்துடன், வருடாந்தம் காகிதாகிகளுக்கான கொடுப்பனவு 1000 ரூபாவிலிருந்து 1500ரூபவாக அதிகரிக்கப்படும். உத்தியோகபூர்வ கொடுப்பனவும் 4500 ரூபாவாக அதிகரிக்கப்படும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொடர்பாடல் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை இணைத்து பொதுக்கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

20 வருடங்களுக்குப் பின்னர், படையினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன. அங்கவீனர்களான படையினருக்கு வாழ்நாள் முழுவதும், முழுமையான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகளுக்கான சம்பளம் 23.8 வீதம் அதிகரிக்கப்பட்டு 14 நாட்கள் கொடுப்பனவுக்குப் பதிலாக, 20 நாட்களுக்கென கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Comment (0) Hits: 224

தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஏ.எச்.எம்.பௌசி முறைப்பாடு!

சில ஊடகங்களுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தான் கூறாத கருத்தொன்றை தவறான முறையில் ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாகவே, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது:

மாதம்பிட்டிய தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்வில் தான், ஆற்றிய உரையை திரிபுபடுத்தி ஹிரு தொலைக்ககாட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இதைக் கருதுகிறேன். இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளேன். நான் கூறாத கருத்தொன்றை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த கட்சியை நாம் பாதுகாக்க வேண்டும் எனின், இந்தத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என கூறினேன். தோற்கடிக்க வேண்டும் என கூறிய வார்த்தையை தவறான வகையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கியுள்ளது.

நான் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறேன். திரிபுபடுத்தப்பட்ட செய்தியால் எனது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொலிஸ் தலைமையகத்திலும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார். 

Comment (0) Hits: 142

கோட்டாவின் வருகையை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்!

பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஐபக்ஷவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோட்டாபய மற்றும் மஹிந்த ராஐபக்ஷ உள்ளிட்ட பலரும் இன்று (28) யாழ்ப்பாணத்திறகு விஜயம் செய்கின்றனர்.

இந்நிலையில், யாழ் சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கோட்டாபயவிற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, "கோட்டாபயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, வெள்ளை வான் முதலாளி கோட்டாவே வெளியேறு, எமது மக்களை கடத்தாதே, போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, இனப்படுகொலையாளி மகிந்த, கோத்தாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்து" உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

 

Comment (0) Hits: 169

"அன்று பெண்களின் பாதுகாப்பு கருதி செயற்படாதவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்" - பிரதமர்!

அன்று பெண்களின் பாதுகாப்புக்காக செயற்படாதவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உள்ளுராட்சி மன்ற அரசியல்வாதிகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போது, பெண்களை துஷ்பிரயோகம் செய்த போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறான நபர்கள் இன்று பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
 
நேற்றைய தினம் (27) நடைபெற்ற பெண்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
அன்று பெண்களை விளையாட்டுப் பொருட்களாக பார்த்தவர்களிடம் பெண்களின் பாதுகாப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், பிரதேச மட்ட அரசியல்வாதிகள் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விருந்து வைத்து கொண்டாடியிருந்தனர். தங்காலையில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை இந்த நாடு முழுவதுமே கேள்விப்பட நேரிட்டது. இவ்வாறு பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவாகியிருந்தன.
 
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சின் செயலாளர் விசாரணைகளை நடாத்தவில்லை. அந்தக் காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சரவை செயலாளராக கோதபாய ராஜபக்ஷ கடமையாற்றியிருந்தார். அவ்வாறான ஓருவருக்கு வாக்களிப்பதா என்பதனை பெண்களிடம் நான் கேள்வியாக கேட்கின்றேன்.
 
ராஜபக்ஷவின் பத்தாண்டு கால ஆட்சியின் போது, பெண்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட போது, அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
அவ்வாறானதொரு முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எவ்வாறு வாக்களிப்பது?
 
இவ்வாறான ஓருவர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால், பெண்களுக்கு எவ்வாறு நியாயம் கிடைக்கும்? என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
Comment (0) Hits: 159

“பிசாசு கதவுக்கு அருகில், வீணை வாசிப்பதில் பயனில்லை” - கலாநிதி ஜயம்பதி! (VIDEO)

2015 ஆம் ஆண்டில் பெற்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆதிக்கம், நீதிமன்ற சுயாதீனத் தன்மை போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் சஜித் பிரேமதாசாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.  

நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வரவிருக்கும் எதிரி மிகவும் ஆபத்தானவர். ஒரு வருடத்திற்கு முன்னர் வியத்மக சம்மேளனத்தில் வைத்து கமல் குணரத்ன என்ன கூறினார்?,  அரசியலமைப்பு மாற்றத்திற்காகச் செயற்படுபவர்கள் மாத்திரமல்ல, அரசியலமைப்பு மாற்றத்திற்கு ஒத்துழைப்பை வழங்குபவர்களையும் கூட கொலை செய்து, அந்த 87, 89, 90ம் ஆண்டுகளைப் போன்று அவர்களை உடல்களை முழுமையாகக் கொண்டு செல்ல முடியாதவாறு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அரசியல் அமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருபவர்கள் தேசத் துரோகிகள், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என கடற்படையில் உயர் பதவி வகித்த சரத் வீரசேகர கூறியிருந்தார்.  இவ்வாறான பாதாள உலகத்தினர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீதிமன்றத்திற்கு என்ன நடக்கும் என்பதை புதிதாகக் கூறத் தேவையில்லை. அவற்றை நாம் அறிவோம்.  எனவே இனிமேலும் பிசாசு கதவுக்கு அருகில் இருக்கும் போது வீணை வாசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

அதனை விட முக்கியமான அரசியல் காரணம் உள்ளது. நியாயமான காரணங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு ரத்துபஸ்வலவில், சிலாபத்தில் போன்ற இடங்களில் என்ன நடந்தது என்பதை நாம் கண்டோம். அவைகள்தான் இனி எதிர்காலம். இவை செயலாளர் பதவியில் இருக்கும் போது நடந்தவை. ஜனாதிபதி பதவி கிடைத்தால் எப்படி இருக்கும்?

இந்நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, 2015ம் ஆண்டில் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களைப் பாதுகாக்க, நீதிமன்ற சுயாதீனத்தைப் பாதுகாத்துக் கொள்ள, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள, பாராளுமன்றத்தை தொடர்ந்தும் பலமிக்க நிறுவனமாக முன்னெடுத்துச் செல்ல நாம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்” என்றார்

Comment (0) Hits: 171

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் வெளியீடு; மஹா நாயக்க தேரர்களுக்கு முதல் பிரதி - மங்கள! (VIDEO)

 (VIDEO )
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 31 ஆம் திகதி கண்டியில் வெளியிடப்பட உள்ளது.
 
கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள நிகழ்வில், அவருடைய தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெறும் என தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு குழுவின் தலைவர் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகள,  கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளிடம், சஜித் பிரேமதாச அவர்களினால் 31 ஆம் திகதி காலையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
இம்முறை 2015 ஆம் ஆண்டில் பெரும்பான்யைமான முற்போக்கு, புத்தாக்க முயற்சியுடைய நாட்டின் பெண்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
 
நாட்டின் பிரஜைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து உருவாக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் இதுவாகும் என அமைச்சர் மங்கள குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் தொடர்ந்து பேசுகையில்,
 
"ராஜபக்ஷக்களின் தேவதைக் கதைகளைப் போன்றல்லாது, நாம் இம்முறையும் சொல்வதை செய்வோம். நாம் எமது தேர்தல் விஞ்பானத்தை எதிர்வரும் 31ம் திகதி கண்டியில் வெளியிட உள்ளோம்.
 
ராஜபக்ஷக்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் தமது தேர்தல் விஞ்ஞாபனம் வித்தியாசமானது, நான் ராஜபக்ஷக்களின் அண்மைய தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி மட்டும் பேசவில்லை 2005 மற்றும் 2010ம் ஆண்டிலும் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
 
எனினும், ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சொல்வதை அவர்கள் செய்தது கிடையாது, சொல்வது ஒன்று அவர்களினால் செய்யப்படுவது வேறொன்று.
 
2005ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதாக கூறினார்கள். சம்பள அதிகரிப்பு செய்வதாகவும் மக்களுக்கு போசாக்கு பொதியொன்றை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தனர்.
 
எனினும், உறுதியளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.
 
அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டு, சர்வாதிகார ஆட்சியொன்றை மேற்கொள்வதற்கே ராஜபக்ஷ தரப்பு முயற்சிக்கின்றது. குடும்ப ஆட்சியை நிறுவிக் கொள்ளக்கூடிய, இழிவான சர்வாதிகார தீர்மானங்களையே எடுத்திருந்தனர்.
 
எனினும், நாம் 2015 ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளில் 80 வீதமானவை பூர்த்தி செய்துள்ளோம். இம்முறையும் நாம் சொல்வதை செய்வோம்.
 
இம்முறை மிகச் சிறந்த தேர்தல் விஞ்ஞாபனமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 627

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விவகாரம் - சஜித் கருத்து!

தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என யார் அழுத்தங்களை வழங்கினாலும் நாட்டின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீது கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.  

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல நகரில் இடம்பெற்ற (26) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிவித்திகல பிரதேச சபை உறுப்பினர் திலிப் ராஜபக்ஷ, கஹவத்தை பிரதேச சபை வேட்பாளர் திருமதி வீரகோன், ஸ்ரீ.ல.சு.கட்சியின் இரத்தினபுரி மாவட்ட ஊடக இணைப்புச் செயலளார் தனூஜ் கமகே உள்ளிட்ட ஏராளமான ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்குவதற்காக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,

“சஜித் வந்தாலும், கோட்டா வந்தாலும் தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என வெளிநாடு ஒன்று தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றது. அவ்வாறு குற்றம் சுமத்தும் நாட்டின் குடியுரிமை உள்ளவரிடத்தில் அந்த அழுத்தத்தைத் தெரிவிக்க முடியும். தாய் நாட்டின் சுத்தமான குடியுரிமையைக் கொண்டுள்ள இலங்கையரான என்னிடம் அவ்வாறான அழுத்தங்களைச் செய்வதற்கு அவர்களால் முடியாது. இரு பக்கத்திலும் கால்களை வைத்துக் கொண்டிருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை எனக்கில்லை. 

எனது எதிர்த்தரப்பு வேட்பாளர், இந்நாட்டின் நிரந்தர குடியுரிமையைக் கொண்டவரா? என்ற பிரச்சினை உள்ளது. அவர் இரு பக்கத்திலும் இரு கால்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றார். ஒரு கால் அமெரிக்காவிலும் அடுத்த கால் இலங்கையிலும்.  ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில், இராணுவத்தினைக் காட்டிக் கொடுத்துவிட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றார்” என்றார்.
Comment (0) Hits: 184

'பெரும் அரக்கனிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள சஜித்திற்கு வாக்களிப்போம்' - பாடகர் சுனில் பெரேரா! (VIDEO)

அநுர குமார திசாநாயக்கா அல்லது மஹேஸ் சேனாநாயக்கா அல்லது ரொஹான் பல்லேவத்தை போன்ற யாருக்கேனும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தாலும் அவர்கள் ஒருவராலும் வெற்றி பெற முடியாத காரணத்தினால், கோட்டாபய என்ற அதி பயங்கரமான பெரும் அரக்கனைத் தோற்கடிப்பதற்காக, சஜித் பிரேமதாசாவை வெற்றி பெறச் செய்வதற்கு வாக்களிக்குமாறு முன்னணி பாடகர் சுனில் பெரேரதா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இக்கோரிக்கையை விடுத்த அவர், அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் மேலும் கூறியதாவது,

“நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அவர்களால் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது.  மகேஸ் சேனநாயக்காவுக்கு, அநுர குமாரவுக்கு, பல்லேவத்தைக்கு என்று எவராலும் வெற்றி பெற முடியாது.

எனவே நாம் செய்ய வேண்டியது, இருக்கும் அரக்கனை விரட்டுவதாகும்.  தற்போது எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கும் வாக்கை அளிப்பதில் எந்தப் பயனுமில்லை. இவர்கள் யாராலும் வெற்றி பெற முடியாது என்பதாலும், இருக்கும் பயத்தினாலும் நான் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன்.

எனக்கு நன்கு தெரிந்த ஒரு சகோதரிகை கூடாத வார்த்தைகளால் கோட்டாபய திட்டினார். தற்போது அந்தச் சகோதரி இலங்கையில் இல்லை. அவர் கேட்டது ஒன்றும் தப்பான ஒன்றல்ல. “நாய் குட்டி ஒன்றைக் கொண்டு வரும் விமானம் சென்று விட்டதா?” என சாதாரணமாக ஊடகவியலாளர்கள் கேட்டதைப் போன்று கேட்டார்.  அப்போது மிகவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், அச்சகோதரியைத் திட்டினார். “நாய் குட்டியை அல்ல, தேவையாயின் யானையினையும் விமானத்தில் கொண்டு வர என்னால் முடியும். இதில் உனக்கு இருக்கும் வருத்தம் என்ன” எனக் கேட்டார். இவ்வாறு சூடாகும் தலைவர் நல்லவராக இருக்க முடியாது.

அச்சகோதரி லசந்த விக்ரமதுங்கவிடம் பணியாற்றியவர். லசந்த படுகொலை செய்யப்பட்டதும் அவர் பயந்து போனார். இப்போது அந்தக் குடும்பம் அமெரிக்காவில் வசிக்கின்து. அச்சகோதரியின் பெயர் பெட்ரிகா ஜான்ஸ்” என்றார்.

 

 

Comment (0) Hits: 277

ஈஸ்டர் தாக்குதலை மார்க்கட் செய்து வாக்கு கேட்பவர்களுக்கு பங்கு தந்தையின் சூடான பதில்! (VIDEO)

(VIDEO)

ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் அறிந்து கொண்டிருந்ததாக சமாதானம் மற்றும் சமூக மையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் உச்சநீதிமன்ற சட்டத்தரணி பங்குத்தந்தை அசோக் ஸ்டீபன் கூறினார்.

“சுருங்கக் கூறினால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடக்கவிருப்பதை அறிந்திருந்தார். இப்போது இவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு, எமது கத்தோலிக சபையின் வாக்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில், நாம் கவலையடைகின்றோம் என்பதை பகிரங்கமாகவே கூற வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக எமது கார்டினலிடம் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கூறியிருக்கின்றார். அது நல்லதொரு விடயம்.

அப்படியாயின் அவர்களது அரசாங்க காலத்தில், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிராக சிலாபத்தில் ஆர்ப்பாட்டம் செய்த எமது எண்டன் பெர்னாண்டோ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார், கட்டுநாயக்காவில் ரொஷேன் சானக படுகொலை செய்யப்பட்டார், ரத்துபஸ்வெலவில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள், லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். எனவே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து, கொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நியாயத்தை  வழங்குங்கள் என கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூற வேண்டும்.

இவர்கள் அனைவரும் ஒன்றே! இவர்கள் இந்த தற்கொலை குண்டு தாக்குதலை ஏற்கனவே அறிந்திருந்தார்கள். எனவே  இந்த தாக்குலை மார்க்கட் செய்து வாக்கு கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

 

Comment (0) Hits: 188

“சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின் மொட்டு வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும்” - வெல்கம! (VIDEO)

(VIDEO)

ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாப்பதற்காக, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சி வேட்பாளரைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியினர் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என ஸ்ரீ.ல.சு.கட்சி உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாறு குமார வெல்கம வலியுறத்தியுள்ளார்.

கொழும்பு கிரேண்ட ஒரியன்டல் ஹோட்டலில் (25) இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குமார வெல்கமவின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், முழு நாட்டையும் பிரதிநித்துவப்படுத்தி ஸ்ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஒன்று கூடலில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பின்னர், அதுவும் ஏற்பாட்டாளர்களால் இரத்துச் செய்யப்பட்டது.

இங்கு கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய குமார வெல்கம மேலும் கூறுகையில்,

“இந்த கூட்டம் மிகவும் வெற்றிகரமான ஒரு கூட்டமாகும். இந்த வெற்றிகரமான கூட்டத்தை முன்னே கொண்டு செல்ல வேண்டும். அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் இதற்கு குமார வெல்கம தலைமைத்துவத்தை வழங்குவேன். இனி நான் பின்வாங்க மாட்டேன்.

அத்தாவுட செனவிரத்ன கூறியதைப் போன்று நாம் முன்னேறி செல்ல வேண்டுமாயின் இந்த தேர்தலில் மொட்டு கட்சியைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமக்கு வேறு மாற்று வழிகள் இல்லை. மாற்று வழிகள் இருக்கின்றது என நினைக்க வேண்டாம். நான் ஒரு போதும் மொட்டுவுக்கு வாக்களிக்க மாட்டேன். ஆனால் எனது வாக்கை நான் ஒருவருக்கு அளிப்பேன். அது யாருக்கு என யாரும் என்னிடம் கேட்க வேண்டாம்” என்றார்.

Comment (0) Hits: 304

“எமக்குத் தேவை கோட்டாவின் அரசாங்கமே. மஹிந்தவின் அரசாங்கம் வேண்டாம்” - தேசிய உரிமைகள் அமைப்பு!

தேசிய சக்திகளின் பிரதான இலக்காக இருக்க வேண்டியது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே தவிற, மஹிந்தவின் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதல்ல என தேசிய சிந்தனை அமைப்பின் பிரதானி பேராசிரியர் நளின் த சில்வா வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் (24) தேசிய உரிமைகள் அமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோட்டாபய ராஜபக்ஷவை அபேட்சகராக  நியமித்துக் கொள்வதற்கு கடும் அழுத்தங்களை வழங்கியவர்களுள் முக்கியமானவரான பேராசிரியர் நளின் த சில்வா இதனைத் தெரிவித்தார்.

“கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் தவறுகள் இடம்பெறாமல் இருப்பதையே நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அமையப் போவது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அல்ல என்பதையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இது எமது பிரதான இலக்காகும். இது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமே தவிற வேறு ராஜபக்ஷ ஒருவரின் அரசாங்கம் அல்ல என்தையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்” என இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறினார்.

Comment (0) Hits: 138

சமூகத்திற்கு பிரச்சினை ஏற்பட்ட போது எட்டியும் பார்க்காதவர்கள் , இனவாதிகளை பலப்படுத்த வீடு வீடாக வாக்கு கேட்டு அலைகின்றார்கள் – ரிஷாட்!

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும் இன்னல்களும் ஏற்பட்ட போது அவர்களை எட்டியும் பார்க்காதவர்களும் நாசகார சம்பவங்கள் நடைபெற்ற குறிப்பிட்ட  இடங்களுக்கு என்றுமே செல்லாதவர்களும் இன்று மொட்டுக்கட்சியின் ஏஜெண்டுகளாக அலைந்து மக்களிடம் வாக்கு கேட்பதாக அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் தலைவரும்,  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (24) சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏறுபாடு செய்ய பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

சமூகத்தைப் பற்றி இதுவரை காலமும் எந்த விதமான அக்கறையும் கொள்ளாத இவர்கள் இப்போது அக்கறை கொள்ளாத இவர்கள் தமது சொந்த இருப்புக்காகவும் சுகபோகங்களுக்காகவும் சுயநலங்களுக்காகவும், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு வந்து வெட்கம் இல்லாமல் வாக்குக்காக அலைந்து திரிவது வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது.

மொட்டுக்கட்சியினர் சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை வசீகரிப்பதற்காக பல்வேறு யுக்திகளையும் ஏமாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பிரதேசத்திற்கு பிரதேசம், இனத்திற்கு இனம்,  ஊருக்கு ஊர்,  அவர்கள்  வித்தியாசமான பாணியில் தமது பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர். பெரும்பான்மை மக்கள் வாழ்கின்ற இடங்களில் இனவாதத்தை கக்கி, மக்களை உசுப்பேற்றி வாக்கு கேட்கின்றார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வேண்டுமென்றே என்னையும், டாக்டர் ஷாபி போன்றவர்களையும் பயங்கரவாத்துடன்  வேண்டுமென்றே முடிச்சிப் போட்டு  பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வந்த இந்த நாசகாரக் கூட்டம் இப்போது தேர்தலுக்காக அதனை மீண்டும் கையில் எடுத்து ஆடுகிறார்கள்.   இப்போது புதிதாக ஹக்கீமையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொண்டு வீட்டுக்கு வீடு சென்று பழைய வீடியோக்களையும், முன்னர் எடுத்த படங்களையும் காட்டி சிங்கள மக்கள் மத்தியிலேயே எப்படியாவது இனவாதத்தை  விதைத்து அவர்களின் மனதை மாற்றப்பார்க்கிறார்கள். கோட்டாபாய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக எத்தனையோ திருகுதாளங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் சமூகம் பயங்கவாதத்துடன் துளியளவும் தொடர்பு கொண்ட ஒன்றல்ல என்பதை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாம் துல்லியமாக நிரூபித்துக்காட்டியுள்ளோம். அது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை துடைத்தெறிய முழு ஒத்துழையப்பையும் பாதுகாப்பு படைக்கு வழங்கி எமது நாட்டுப் பற்றை  உலகுக்கு உணர்த்தியுள்ளோம். எனினும் இந்த நன்றிகெட்ட ஜென்மங்கள் தமது அரசியல் சுயநலத்திற்காகவும் அதிகாரத்தை பெறுவதற்காகவும் வெறி கொண்டு அலைகின்றார்கள். அதற்காக எம்மை பலிக்கடாவாக  பயன்படுத்து வருகின்றனர். அதுமாத்திரமின்று  சிறுபான்மை இன மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பிளவுகளையும் பிரிவினைகளையும் உருவாக்கி தமது கைங்கரியத்தை மேற்கொள்கின்றார்கள்.

முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தற்போது ஊடுறுவியுள்ள மொட்டுக்கட்சி ஏஜெண்டுகள், கோட்டாவை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக மேடை போட்டு கோஷமிடுகின்றனர். சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் போல நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். நடிக்கின்றார்கள்.  முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட போது இவர்கள் எங்கிருந்தார்கள்? நமது பிரதேசங்களுக்கு எப்போதாவது வந்திருக்கின்றார்களா? எட்டியும் பார்த்தார்களா? முஸ்லிம் பெண்களின் பர்தாக்களை நீக்க வேண்டும் என்று இவர்கள் கூடிக்குலாவும் இனவாத மதவாத மதகுரு மார்களும் இனவாத அரசியல் வாதிகளும் அப்போதும், இப்போதும் கொக்கரித்த  போதும் எப்போதவாது எதிர்த்து வாய் திறந்தார்களா? தட்டிக்கேட்டார்களா? முஸ்லிம் மக்களை ஆசுவாசப்படுத்தினார்களா? இப்போது இனவாத அரசியல் தலைமைகளுக்கு வால் பிடித்துக்கொண்டு சிறுபான்மை மக்களின் வாக்குகளை எப்படியாவது சுருட்டிக்கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள், மக்களின் ஏழ்மையையும் வறுமையையும் இயலாமையையும் இதற்காக பயன்படுத்துகின்றார்கள்.

வடக்கு- கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்று, பெரமுன வெற்றி பெறுவது உறுதியானதென்றும் கோட்டாவுக்கு வாக்களிக்காவிட்டால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஒரு வகையான அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வாக்குகளை கொள்ளையடிக்கும் ஒரு புதிய யுக்தி கையாள தொடங்கியுள்ளார்கள். பெரும்பான்மை மக்களால் ஆதரிக்கப்படும் கோட்டாவுக்கு வாக்களிக்காவிட்டால் நிம்மதியாக வாழ முடியாது என்றும் வியாபாரங்களை சரி வர செய்ய முடியாது என்றும் அச்சமூட்டுகின்றார்கள். மொட்டுக்கு வாக்களிக்காமல் விட்டாலும் பரவாயில்லை அன்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பயமுறுத்தல்களும் சில பிரதேசங்களில் இடம்பெற்றுவருகிறது. அதிகார வெறியும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டுமென்ற துடிப்புமே இவர்களின் இந்த நடவடிக்கைக்கு பிரதானம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது  இதனை ஒரு சாதரண தேர்தலாக நீங்கள் எண்ண வேண்டாம் சமுதாயத்தின் பாதுகாப்பு, இருப்பு பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாமே இதில் தான் தங்கியுள்ளது. இந்த தேர்தலில் நாம் ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும். காசுக்காகவும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும்  நீங்கள் விலைபோகிவிடக்கூடாது. இவர்களின் மாய வலையிலும் பசப்பு வார்த்தைகளிலும் நீங்கள் ஏமாறிட வேண்டாம். எனவே, சஜித் பிரேமதாஸவின் அன்னச்சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலமே சிறுபான்மை மக்களின்  நிம்மதியும் சுதந்திரமான  வாழ்வும் தங்கியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்..

டாக்டர். ஹில்மி கரீம் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜவாத், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாராப் , கட்சியின் முக்கியஸ்தர்களான அன்ஸில்,  தெளபீக், நிசார்டீன்  , வைகே. ரஹ்மான், நெளபர் மற்றும் பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள்  பங்கேற்று உரையாற்றினார்கள். 

Comment (0) Hits: 157

வெற்றிக்கு வித்திடும் பௌத்த மேலாதிக்கம்!

இலங்­கையின் எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் மூன்று முக்­கிய விட­யங்­களில் சுற்றிச் சுழல்­கின்­றது.  இரா­ணுவ நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­திய தேசிய பாது­காப்பு, பொரு­ளா­தார மேம்­பாடு, சிறு­பான்மை இன மக்­களின் தேவைகள், கோரிக்­கைகள் புறக்­க­ணிப்பு என்ற மூன்று  விட­யங்­க­ளுக்­கான பரப்­பு­ரைகள் தீவி­ர­மாக முடுக்­கி­வி­டப் ­பட்­டி­ருக்­கின்­றன.

ஜனா­தி­பதி தேர்தல் என்­பது மிக முக்­கி­ய­மா­னது. நாட்டின் அதி­உயர் அரச தலை­வ­ர் ஜனா­தி­ப­தியை நாட்டின் அனைத்து மக்­களும் ஒன்­றி­ணைந்து நேரடி வாக்­க­ளிப்பு மூலம் தெரிவு செய்­வது. இவ்­வாறு தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஒருவர் கட்சி அர­சியல் நலன்­க­ளுக்கு அப்பால் தேசிய அளவில் பொது­வா­ன­வ­ராக அனைத்து மக்­க­ளி­னதும் நலன்­களைப் பேணி பாது­காப்­ப­வ­ராகச் செயற்­பட வேண்டும்.

அந்த வகையில் நாட்டின் பொது­வான முன்­னேற்­றத்­தையும் பொது­மக்­களை சம­மான முறையில் முதன்­மைப்­ப­டுத்­திய நிலையில் தேசிய நலன்­க­ளையும் கருத்திற் கொண்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். அவற்றில் அக்­க­றையும் மிகுந்த கவனம் செலுத்­து­ப­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம்.

ஆனால் இந்தத் தேர்­தலில் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­வர்கள் பன்­ மு­கத்­தன்மை கொண்ட தேசிய கொள்கை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இன ரீதி­யான, பக்கம் சார்ந்த கொள்­கை­க­ளையும், அர­சியல் நிலைப்­பாட்­டையும் கொண்­ட­வர்­க­ளா­கவே தோன்றுகிறார்கள்.  அந்த வகை­யி­லேயே விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­தி­ருக்­கின்­றார்கள்.

இதனால் நாட்டின் பொது­மக்­க­ளா­கிய வாக்­கா­ளர்கள் இந்தத் தேர்­தலில் நியா­ய­மான நிலையில் யாரை ஆத­ரிப்­பது, எந்த வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வது என்­பதில் குழப்­ப­ம­டைய நேரிட்­டுள்­ளது. குறிப்­பாக சிறு­பான்மை இன மக்­களின் நிலைமை திரி­சங்கு நிலை­மையை ஒத்­த­தாக மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டும்.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அர­ச­ப­டை­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற நீண்­ட­கால யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்டு பத்து வரு­டங்கள் கழிந்­து­விட்­டன. யுத்­தத்தை  இரா­ணுவ  வழி­மு­றையில், வன்­முறை வடி­வத்தில் முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காகத் தலை­கீ­ழாக நின்று பல்­வேறு உத்­தி­களைக் கையாண்டு செயற்­பட்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக்ஷ அணி­யி­னரே இந்தத் தேர்­தலில் முதன்மை பெற்­றி­ருப்­ப­தாகத் தோன்­று­கின்­றது. யுத்த வெற்­றி வாதத்தை உயிர் மூச்­சாகக் கொண்டு அவர்கள் தங்­க­ளு­டைய தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றனர்.

தமிழ்மக்கள் தமது அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக மேற்­கொண்ட நீண்ட போராட்­டத்தில் வேறு வழி­யின்றி ஆயுதப் போராட்ட வழி­மு­றையில் கால் பதிக்க வேண்­டி­ய­வர்­க­ளா­னார்கள். அவர்­களின் அற­வழிப் போராட்­டத்தை அரச படை­களைக் கொண்டு அர­சுகள் அடக்கி ஒடுக்க முயன்­ற­தனால் ஏற்­பட்ட அச்­சு­றுத்­தல்கள், உயி­ரா­பத்­துக்­களில் இருந்தும் தங்­களைப் பாது­காத்துக் கொள்ள வேண்­டிய நிலை­மையும் அவர்­களை ஆயு­த­மேந்த நிர்ப்­பந்­தித்­தி­ருந்­தது.

அற­வழிப் போராட்­டங்கள் தோல்­வி­யுற்­ற­தனால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயுதப் போராட்­டத்தைப் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­தி­ரித்து, பயங்­க­ர­வா­தி­களை இல்­லாமல் செய்­வ­தற்­கான  இரா­ணுவ நட­வ­டிக்கை என்ற பெயரில் யுத்­தத்தைத் தீவி­ர­மாக முன்­னெ­டுத்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் அதீத இரா­ணுவ வலி­மையைப் பயன்­ப­டுத்தி யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து வெற்­றி­வாகை சூடி­யது. 

இந்த வெற்­றி­வா­தத்­தையே தமது வாழ்நாள் அர­சியல் கொள்­கை­யா­கவும் அர­சி­ய­லுக்­கான முத­லீ­டா­கவும் கொண்டு ராஜ­பக் ஷ குழு­வினர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.  இரா­ணு­வ­மயம் சார்ந்து, பௌத்த மதத்தை முதன்­மைப்­ப­டுத்தி மேலாண்மை நிலையில் வைத்துப் பேணி வளர்ப்­ப­து­வுமே அவர்­க­ளது அர­சியல் கொள்­கை­களின் உயிர்­நாடி. அர­சியல் போக்கில் குடும்ப ஆட்சி அர­சி­யலைப் பிணைத்து வளர்ந்­தோங்கச் செய்­வ­திலும் அவர்கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றனர்.

இத்­த­கைய அர­சியல் கொள்கைப் படிப்பின் பின்­ன­ணி­யி­லேயே மஹிந்த ராஜ­பக் ஷவின் சகோ­த­ர­ரான கோத்­த­பாய ராஜ­பக் ஷ வேட்­ப­ாள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டுள்ளார். விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராகக் கடும்­போக்­கி­லான தாக்­குதல் வழி­மு­றை­களைப் பின்­பற்றி எப்­ப­டி­யா­வது யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­து­விட வேண்டும் என்­ப­தற்­காக, பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என்ற வகையில் மிகத் தீவி­ர­மாக அவர் செயற்­பட்­டி­ருந்தார்.  

பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக பதவி வழியில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்­க­ளையே அரச அதி­காரி என்ற வகையில் அவர் கொண்­டி­ருந்தார். ஆனாலும் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை நிய­தி­க­ளுக்கு அப்பால் வரை­ய­றை­யற்ற முறையில் கொண்­டி­ருந்த ஜனா­தி­ப­தி­யா­ன தமது சகோ­த­ரரின் அதி­கார உரி­மை­க­ளையும் அவர் வலிந்து எடுத்துக் கொண்டு யுத்தச் செயற்­பாட்டில்  இரா­ணு­வத்தை வழி­ ந­டத்­தி­யி­ருந்தார்.

அதீத அதி­காரப் பிர­யோ­கத்தில்  இரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்தி மேற்­கொண்ட செயற்­பா­டு­களே அவரை போர்க்­குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆளாக்கி உள்­ளது.  இரா­ணுவ நட­வ­டிக்­கை­களின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­களின் அடிப்­ப­டையில் அவர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

மறு­பு­றத்தில் தனது சகோ­தரர் மஹிந்த ராஜ­பக்ஷ 2005ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட சூட்­டோடு சூடாக அவ­சர அவ­ச­ர­மாக பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் பத­வியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக, தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைத் துறந்து மீண்டும் இலங்கைக் குடி­யு­ரி­மையைப்பெற சட்ட நடை­மு­றை­க­ளுக்கு முர­ணான வழி­மு­றை­களே கையா­ளப்­பட்­டன என்ற குற்­றச்­சாட்­டுக்கும் அவர் பதி­ல­ளிக்க வேண்­டி­ய­வ­ரா­னார்.

இத்­த­கைய அர­சியல் மற்றும் மனித உரிமை மீறல் பின்­பு­லத்­தி­லேயே அவர் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான தேர்­தலில் வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டுள்ளார்.

வழ­மைக்கு மாறாக மும்­முனைப் போட்டி

மறு­பு­றத்தில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ ­வுக்கு எதி­ரான முன்­னணி வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாச, முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் புதல்வர் என்ற அர­சியல் அந்­தஸ்தைக் கொண்­டுள்ளார். இருப்­பினும் பல்­வேறு நெருக்­க­டி­க­ளையும் தகி­டு­தத்­தங்­க­ளையும் கொண்­டுள்ள நாட்டு அர­சி­யலில் முக்­கிய விட­யங்­களில் அவர் முன்­ன­ணியில் முகம் காட்­டாத ஒரு­வ­ரா­கவே திகழ்­கின்றார்.

தேசிய நலன்கள் சார்ந்த பல அர­சியல் விட­யங்கள் இடம்­பெற்­றி­ருந்த போதிலும் அவை எவற்­றிலும் அவரை முன்­னணி நிலையில் கண்ட அனு­பவம் நாட்டு மக்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. உள்­நாட்டு அர­சி­ய­லிலும் வெளி­வி­வ­கார அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஆளுமை உள்­ள­வ­ரா­கவோ பரிச்­சயம் உள்­ள­வ­ரா­கவோ அறி­யப்­ப­டாத ஒரு­வ­ரா­கவே அவர் கணிக்­கப்­ப­டு­கின்றார். ஜனா­தி­பதி தேர்தல் களத்தில் அவர் ஒரு புதிய வரவு.  

மற்­று­மொரு வேட்­பா­ள­ரா­கிய ஏ.கே.டி. என்ற பெயர் குறி­யீட்டைக் கொண்­டுள்ள ஜே.வி.பி. கட்­சியின் தலை­வ­ரா­ன அனு­ர­கு­மார திசா­நா­யக்க நாட்டின் மூன்­றா­வது அர­சியல் சக்­தியின் பிர­தி­நி­தி­யாகத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். இட­து­சாரி கொள்­கையைக் கொண்ட கட்­சியின் தலைவர் என்ற அடை­மொ­ழியைக் கொண்­டி­ருந்த போதிலும், அந்தக் கொள்­கைக்கும் அவர்­க­ளுக்கும் காத தூரம் என்றே கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் தேசிய அர­சியல் விவ­கா­ரங்­களில் பெரும்­பான்மை இன மக்­களின் மனங்­க­ளையே அர­சியல் ரீதி­யாக வெற்றி பெறு­வ­தற்குத் தொடர்ச்­சி­யாகப் போரா­டு­கின்ற வளரும் தலை­வ­ரா­கவே அவர் திகழ்­கின்றார்.

முப்பத்தைந்து வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்ள இந்தத் தேர்­தலில் இந்த மூன்று வேட்­பா­ளர்­க­ளுமே முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றார்கள். அதனால்; வழ­மை­யாக நில­வு­கின்ற இரு­முனை போட்டி என்ற நிலையைக் கடந்து இம்­முறை மும்­முனை போட்­டி­யாக இந்த ஜனா­தி­பதி தேர்தல் பரி­ண­மித்­துள்­ளது.

ஆனாலும், ஊழல், மோசடி, அதி­காரப் போட்டி, இன­வாத போக்கு,  இரா­ணுவ மய அணு­கு­முறை, வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாமை, மனித உரி­மைகள், அர­சியல் உரி­மை­களை மீறுதல், பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டில் இருந்து நழுவிச் செல்­லுதல், மக்கள் நலன்­களில் அக்­க­றை­யற்ற அர­சியல் போக்கு, தேசிய பாது­காப்பு விவ­கா­ரங்­க­ளில்­கூட போதிய அக்­க­றை­யற்ற அதி­காரப் போக்கு என்­ப­வற்றைப் பின்­பு­ல­மாகக் கொண்­டுள்ள அர­சியல் கட்­சி­களின் முகா­மைத்­து­வத்தில் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்­தலில் நிறுத்­தப்­பட்­டுள்­ளார்கள்.

இந்த இரு­த­ரப்பு அர­சியல் முகாம்­களின் செயற்­பா­டுகள் குறித்து இந்தத் தேர்­தல்­கால சூழலில் உள்­நாட்­டிலும், சர்­வ­தேச அள­விலும் கடு­மை­யான கருத்­துக்கள் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன.

நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் இடித்­து­ரைப்பு

ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் பற்­றிய உண்மை நிலையைக் கண்­ட­றி­வ­தற்­காக விசா­ரணை நடத்­திய பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­ வெளி­யி­ட்டுள்ள  அறிக்­கையில் தேசிய பாது­காப்­புக்குப் பொறுப்­பான பிரி­வினர் மட்­டு­மல்­லாமல் பல்­வேறு தரப்­பினர் மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, ஜனா­தி­பதி முக்­கி­ய­மான சந்­தர்ப்­பங்கள் பல­வற்றில் உரிய தலை­மைத்­து­வத்தை வழங்கத் தவ­றி­விட்டார் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள அந்த அறிக்கை தேசிய முக்­கி­யத்­துவம் மிக்க  விட­யங்கள் பேசப்­பட்ட கூட்­டங்­களில் இருந்த முக்­கி­யஸ்­தர்­களை விலக்கி வைத்­த­துடன், தேசிய பாது­காப்பு தொடர்­பி­லான கூட்­டங்­களை உரிய தரு­ணங்­களில் நடத்தத் தவ­றி­ய­துடன், முக்­கி­ய­மான அரச நிர்­வாக நடை­மு­றை­களைப் புறந்­தள்ளிச் செயற்­பட்­டி­ருந்தார் என்று சாடி­யுள்­ளது.

அர­சுக்குள் 2018 ஆம் ஆண்டு நெருக்­க­டி­களை உரு­வாக்கி அதன் மூலம் ஆட்சி நடை­மு­றை­களில் பிரி­வி­னையை ஏற் ­ப­டுத்தி அரச நடை­மு­றை­களை மலி­னப்  ­ப­டுத்­தி­யுள்ளார் என்றும் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்­லாமல் பிர­தமர், இராஜாங்க பாது­காப்பு அமைச்சர், சட்­டமா அதிபர் திணைக்­களம், பாது­காப்­புக்குப் பொறுப்­பான பாது­காப்புப் புல­னாய்வு பிரிவின் முக்­கி­யஸ்­தர்கள் என உயர் மட்­டத்தைச் சேர்ந்த பலர் மீதும் விரல் நீட்டி இந்த அறிக்கை குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றது.

பாது­காப்புப் பொறி­முறை, நீதிப்­பொ­றி­மு­றையில் சட்­டமா அதிபர் திணைக்­களம் என்­ப­வற்றின் மறு­சீ­ர­மைப்பு, மதத்­தீ­வி­ர­வாதச் செயற்­பாட்டில் கண்­கா­ணிப்பு, அதீத நிதி­தொ­டர்­பி­லான மேற்­பார்­வைக்­கான பொறி­முறை, போலிச்­செய்தி வெளி­யிடல், பயங்­க­ர­வாதச் செயற்­பாடு என்­ப­வற்றை உரிய முறையில் கண்­கா­ணித்தல், பொறுப்­பு­டை­ய­வர்­க­ளாக இருப்­பதன் அவ­சி­யத்தை   மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய அர­சி­யல்­வா­தி­களை உணரச் செய்தல் உள்­ளிட்ட 8 விட­யங்­களில் முக்­கிய கவனம் செலுத்­தப்­பட வேண்டும் என பாராளு­மன்றத் தெரி­வுக் ­கு­ழுவின் அறிக்கை பரிந்­து­ரைத்­துள்­ளது.

அர­சாங்கத் தரப்­பி­ன­ருக்கு பதவி           அந்­தஸ்து பாராமல் முகத்தில் அடித்­தாற்­போல அறி­வு­றுத்­தல்­க­ளுடன் கூடிய பரிந்­து­ரை­களை சட்­ட­வாக்­கத்­து­றை­யா­கிய பாரா­ளு­மன்­றத்தின் தெரி­வுக்­குழு இடித்­து­ரைக்கும் வகையில் அறிக்கை வடிவில் முன்­வைத்­துள்­ளது.

நாட்டின் முக்­கிய தேர்­த­லா­கிய ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பரப்­பு­ரைகள் இடம்­பெற்று வரு­கின்ற ஓர் அர­சியல் தரு­ணத்­தில் ­இ­ரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களைக் கள­மி­றக்­கி­யுள்ள நாட்டின் முக்­கிய இரண்டு கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­களை நோக்கி விரல் நீட்டி பல விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள இந்த அறிக்கை நெற்­றி­யடி பாணியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.  

நாட்டின் அர­சியல் நிலை­மை­களை அக்­கு­ வேறு ஆணி­வே­றாக மக்கள் இந்தச் சந்­தர்ப் ­பத்தில் உணர்ந்து கொள்­வ­தற்கு இந்த அறிக்கை வாய்ப்­ப­ளித்­துள்­ளது.  

இன­வாத மத­வாத பிர­சா­ரத்­தி­லேயே கவனம்

அதே­வேளை, யுத்தம் முடி­வுக்கு வந்து ஒரு தசாப்த காலம் கடந்­து­விட்ட போதிலும், போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்குப் பொறுப்பு கூறும் விட­யத்தில் ஏனோ­தானோ என்றும், மனித உரிமை நிலை­மை­களைச் சீர் செய்­வதில் அக்­க­றை­யற்றுச் செயற்­ப­டு­வ­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற வெளி­வி­வ­கார ஆசிய பசுபிக் பிராந்­திய துணைக்­குழு இலங்கை மீதான அமெ­ரிக்­காவின் கண்­கா­ணிப்­புடன் கூடிய அழுத்தம் கொடுக்கும் நட­வ­டிக்கை தொடர்ந்து இடம்­பெறும் என்று தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி ஒரு­வரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் நட­வ­டிக்­கை­களில் அர­சியல் கட்­சி­களும் நாட்டு மக்­களும் தீவிர அர­சியல் சிந்­த­னை­யிலும் செயற்­பா­டு­க­ளிலும் மூழ்­கி­யுள்ள தரு­ணத்தில் சர்­வ­தேச மட்­டத்­தில்­இ­ருந்து இலங்­கையின் நிலைமை குறித்து வந்­துள்ள அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு முக்­கிய கவ­னத்­திற்கு உரி­ய­தா­கி­றது.

நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறி­மு­றை­களை நிறுவி மனித உரிமை மீறல்கள் தொடர்­பி­லான விட­யங்­க­ளுக்குப் பொறுப்பு கூறவும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் நீதியை நிலை­நாட்டி உரிய இழப்­பீட்­டுக்­கான வழி­மு­றை­களைச் செயற்­ப­டுத்­தவும்,  இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணி­களை விடு­வித்தல், அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்­திற்குத் தீர்வு காணுதல், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­குதல், புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அர­சியல் தீரவு கண்டு நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கவும் அரசு முற்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஆனால் அவற்றில் அரசு தாம­த­மான அக்­க­றை­யற்ற போக்­கி­லேயே செயற்­பட்டு வந்­துள்­ளது. இது குறித்து அமெ­ரிக்க வெளி­வி­வ­கார ஆசிய பசுபிக் பிராந்­திய துணைக்­கு­ழுவில் ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அங்கு இந்த விட­யங்கள் தொடர்பில் ஆழ­மான கருத்­துக்­களும் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இலங்கை மீதான அமெ­ரிக்­காவின் அழுத்தம் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும் என்றும் பாது­காப்பு தொடர்பில் இலங்­கை­யு­ட­னான அமெ­ரிக்­காவின் செயற்­பா­டு­களில் முக்­கிய மாற்­றங்கள் நிகழும் என்றும் இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

முன்னாள்  இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும், முன்னாள் வட­மா­காண ஆளு­நராகச் செயற்­பட்ட ஒரு முன்னாள்  இரா­ணுவ அதி­காரி உட்­பட இரண்டு பேரையும் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ரா­ன கோத்­த­பாய ராஜ­பக்ஷ­வுக்­காக தமிழ்ப்­பி­ர­தே­ச­மா­ன வட­மா­கா­ணத்தில் பரப்­புரை நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­யி­ருப்­பது  இரா­ணு­வ­மய அர­சியல் போக்­கிற்­கான கட்­டி­யங்­கூ­று­கின்ற செயற்­பா­டா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

சிங்­கள பௌத்த தேசி­யத்தை வெளிப்­ப­டை­யா­கவே அர­சி­யலில் கையில் எடுத்­துள்ள ராஜ­பக்ஷ குழு­வினர் சார்­பி­லான வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தேர்­தலில் வெற்றிபெற்றால் நாட்டின் ஆட்சி முறை எவ்­வா­றி­ருக்கும் என்­ப­தையே இந்த அர­சியல் பிர­சார நட­வ­டிக்­கைகள் கோடிட்டுக் காட்­டி­யி­ருக்­கின்­றன.

மறு­பு­றத்தில் ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் வேட்­பா­ள­ரா­ன சஜித் பிரே­ம­தா­சவும் மஹிந்த ராஜ­பக்ஷ குழு­வி­னரைப் பின்­பற்றி இன­வாத, மத­வாத பிர­சா­ரங்­க­ளி­லேயே கவனம் செலுத்­தி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்­கு­வது குறித்து ஐக்­கிய தேசிய கட்சி அர­சி­யல்­வா­திகள் அவ்­வப்­போது கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­த­போ­திலும், வேட்­பா­ள­ரா­கிய சஜித் பிரே­ம­தாச பௌத்த மதத்தின் மேலாண்மை நிலை­மையில் அதிக அக்­கறை செலுத்தி சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­கான மத­வாத பிர­சா­ரத்­தி­லேயே கவனம் செலுத்­தி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

தேர­வாத பௌத்த நாட்­டுக்­கான சிந்­தனை

வர­லாற்றில் முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் பௌத்த சாசன மேம்­பாட்­டுக்கு நிதி­யொ­துக்கிச் செயற்­ப­டப்­போ­வ­தாக குரு­ணா­க­லையில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். அத்துடன் அரச திணைக்களங்கள் பலவற்றின் ஊடாக பௌத்த மத மேம்பாட்டுக்கான நிதியொதுக்கப்படும் என்பதுடன் நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மறுபுறத்தில் சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் மென்போக்கு அரசியல் நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பவராகக் காட்டிக்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தென்பகுதியில் கட்டுகம்பளை நகர தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில், உலகின் பொருளாதார வலிமைமிக்க தேரவாத பௌத்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே தங்களின் எதிர்பார்ப்பு என சூளுரைத்துள்ளார்.

சிறுபான்மை இன மக்கள் மீதும், சிறுபான்மை மதங்கள் மீதும் பௌத்த மத மேலாண்மை போக்கைக் கடைப்பிடித்து, பௌத்த மதத்தைத் திணிக்கின்ற ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு சூழலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து தேர்தல் கால கருத்தாக இலங்கையை வலிமையான தேரவாத நாடாக உருவாக்கவேண்டும் என்ற ஆவல் வெளிப்பட்டிருப்பது சிறுபான்மை இன மக்களை கவலையடையவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

இனவாதமும் மதவாதமுமே சிங்கள அரசியல்வாதிகளின் அரசியலுக்கான உயிர் மூச்சு. இதன் அடிப்படையிலேயே நாட்டின் அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது. தேர்தல்களில் வெற்றியை நிச்சயிப்பதும் இவையே. ஆனாலும் மோசமான நீண்டகால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டின் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி நாட்டை முன்னேற்றிச் செல்வதில் கவனத்தைக் குவிப்பதை விடுத்து, பௌத்த மதத்தின் மேம்பாட்டுக்காக அரசியல் நடத்துகின்ற போக்கு நல்லதல்ல.

தேர்தல் காலத்தில் மட்டுமல்ல. சாதாரண நிலைமையிலும்  ராணுவ மயப்போக்கும் பௌத்த மத மேலாண்மை கொண்ட ஆட்சி நிர்வாகச் செயற்பாடும் நாட்டில் நிலையான சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க மாட்டா என்பதே நிதர்சனம்.

பி.மாணிக்­க­வா­சகம்  

Comment (0) Hits: 144

அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு!

'நம்பிக்கையின் உதயம்' என்று பெயரிடப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) முற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

பல்வேறு துறைகள் தொடர்பில் கொள்கை மற்றும் திட்டங்களை கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌியிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் உள்ளடக்கி ´நம்பிக்கையின் உதயம்´ என்ற பெயரில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மகா சங்கத்தினர், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள், புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக தனது கொள்கை மற்றும் திட்டங்களை கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌியிட்டிருந்த நிலையில், அவை அனைத்தின் உள்ளடக்கமே ´நம்பிக்கையின் உதயம்´ என்ற பெயரில் தேர்தல் விஞ்ஞாபனமாக வௌியிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 144

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி!

இலங்கை அரசியல் வரலாற்றில் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி மறக்க முடியாத நாளாகும். ஏனெனில் அன்றைய தினம் தான் அரசியல் யாப்புக்கு முரணாக புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டார். சூழ்ச்சிகரமான முறையில் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் வரையான செயற்பாடுகள் இந்நாட்டு வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிவாகியுள்ளது. அதனால் சட்ட ரீதியான பிரதமர் தலைமையிலான அரசாங்கம் போலி பிரதமர் தலைமையிலான கும்பலுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்தது.

இதேவேளை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதை வாக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்தார். என்றாலும் சூழ்ச்சிக்காரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தைக் கருத்தில் கொள்ளாது பாராளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பு பாராளுமன்றம் கலைக்கப்படுவதைத் தவிர்த்தது.

அதேநேரம் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற குழு என்றும் சிவில் செயற்பாட்டாளர்களது வழக்கு தீர்ப்பின் படி போலி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது.

என்றாலும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு இவ்விருண்ட கரும் புள்ளியை இந்நாட்டு வரலாற்றால் மறக்க முடியாது.

அதனால் அது தொடர்பில் திரும்பி பார்ப்பது பயன்மிக்கதாக இருக்கும்.

இவ்வாறான ஒழுக்க மீறல்களிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் விதம் குறித்து சிந்திக்க வேண்டும்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன்

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஇலங்கையானது சிறந்த ஜனநாயகத்தை முன்னெடுக்கும் நாடொன்று அல்ல. இது மிகவும் பின்னடைந்த நாடாகும். கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வை மிகவும் கவலைக்குரிய கெட்ட நிகழ்வாகவே நான் நோக்குகின்றேன். இது நாட்டு ஜனாதிபதி இந்நாட்டு அரசியலமைப்பை மீறிய ஒரு சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னரும் இந்நாட்டு ஜனாதிபதிகள் அரசியலமைப்பை மீறியுள்ளனர். நீதிமன்றமும் அரசியலமைப்பை மீறியுள்ளன. பாராளுமன்றமும் அரசியலமைப்பை மீறி இருக்கின்றன. ஆனால் உலகில் நன்நடத்தை மிக்க நாடுகள் தம் அரசியலமைப்பை மிக உயர்வான  ஒன்றாகவே கருதி செயற்படுகின்றன. எனினும் அரசியலமைப்பு மீறப்படுவதை கூட்டு மனித படுகொலையை விடவும் பயங்கரமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அரசியலமைப்பை மீறும் செயல் அன்றாடம் இடம்பெற்ற போதிலும் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்காத சாதாரண விடயமாகவே உள்ளது. இந்நாட்டு அரசியல்வாதிகளும் சமூகத்தினரும் தான் இந்நாட்டை இந்நிலைக்கு உள்ளாக்கின்றனர். உதாரணமாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மிக முக்கிய விடயம் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற முடியாது என்பதாகும். அவ்வாறு கட்சி மாறினால் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதாகும். எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதனை மீறினார்.  அதற்கு முன்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்திலும் அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்றன.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பிரதம நீதியரசர் வெளியேற்றப்பட்ட விதம் முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இவ்வாறான நெருக்கடிகள் உருவாவது தொடர்பிலும் ஜனநாயகம் தொடர்பிலும் மக்கள் மத்தியில் காணப்படும் குறைந்த அறிவும் புரிந்துணர்வின்மையுமே இவற்றுக்கு காரணமாக அமைகின்றன. இவ்வாறான நிலைமைக்கு நாடு உள்ளாக அவ்வாறான ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் மக்களும் காரணகர்த்தாக்களாக உள்ளனர். அதனால் இவ்வாறான நற்பண்புகளற்ற நிலைமைகள் நாட்டில் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

சட்டம் பிழையாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் உள்ளனர் என்பது வெளிப்பட்டது

பேராசியர் சந்ரகுப்த தேனுவர

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryநாம் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கினோம். என்றாலும் அரசாங்கத்தின் தலைவரே அரசியலமைப்பை மீறி யாப்புக்கு எதிராக செயற்பட்டு பிரதமரை நீக்கினார். அவர் மக்களின் வாக்கின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதமராவார். இதனை அரசியல் கலாசாரம் எதிர்கொள்ளும் சவாலாகவே நான் பார்க்கின்றேன். அதேநேரம் இது தொடர்பில் நியாயத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற தேவை மக்களிடம் எவ்வளவு தூரம் இருந்தது என்பதையும் எம்மால் காண முடிந்தது. இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் பலவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. அவ்வாறு செயற்பட்டதன் விளைவாக நீதித்துறையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியது. அத்தோடு சுயாதீன நீதித்துறையையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விடயத்தைப் பாராளுமன்றம் மேற்கொண்டது.

இதன் பயனாக முதற்தடவையாக கடமையாற்ற தடை விதிக்கப்பட்ட பிரதமராகவும் பாராளுமன்ற குழுவாகவும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் உள்ளாகினர். இது சட்டத்தை பிழையாகப் பாவிப்பதற்கு எதிராக மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.  சட்டத்திற்காகப் போராடிய தரப்பினர் தமது பலத்தை உரசிப்பார்க்க இதனூடாக வாய்ப்பு கிடைத்தது. அது வெற்றிக்கும் இட்டுச்சென்றது. இந்நிகழ்வுகளை ஒரு வருடம் முடிந்துள்ள இந்நிலையில் திரும்பிப் பார்க்கும் போது அவ்வாறான துரதிஷ்டகர நிகழ்வுகளும் மோசமான அனுபவங்களும் நாட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் நினைவுக்கு வருவதைப் போன்று அதற்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றமை மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான சூழ்ச்சிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது

பேராசிரியர் ஜயதேவ உயங்கொட

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஓக்டோபர் 26ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வோடு நாடு சீரழிந்தது. அந்த 52நாட்களில் நாடே சீரழிவு நிலைமையை அடைந்தது. என்றாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்போடு மீண்டும் ஜனநாயகம் வெற்றி பெற்றது. அதன் ஊடாக தோற்றம் பெற்ற ஜனநாயக அரசியல் விவாதத்தை உரிய முறையில் பாவிப்பதற்கு ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்ட தரப்பினரால் வெற்றி பெற முடியாமல் போனது. எனினும் இலங்கையில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. அச்சூழ்ச்சியினால் ஏற்பட்ட பின்னடைவு நிலையோடு ஜனநாயகத்திலும் பின்னடைவைக் காண முடிந்தது. அதனை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவதானம் தற்போதைய ஆளும் தரப்பினரிடம் குறைவடைந்துள்ளது. ஜனநாயகத்தில் பின்னடைவைப் போன்று அதிகாரிகள் வாதமும் மேலெழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்போடு நீதித்துறை அரசியலமைப்பை பாதுகாத்ததாக எமக்கு விளங்கியது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறலாம். எவர் வென்றாலும் தோற்றாலும் அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடுகளைப் பாவித்து பல்வேறு தரப்பினரும் இவ்வாறான சூழ்ச்சிகளில் மீண்டும் மீண்டும் ஈடுபட முடியும். அதனால் எதிர்வரும் தேர்தலில் எவர் வென்றாலும் தோற்றாலும் அரசியலமைப்பிலுள்ள குறைபாடுகள் காரணமாக மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம்.

ஆகவே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாதிருக்கக்கூடிய வகையில் யாப்பில் சீரமைப்பை ஆட்சிக்கு வருபவர் முன்னெடுப்பாராயின் அதுவே நல்லது.

சுதந்திரத்திற்கு பின் ஜனநாயகத்தில் இருண்ட 52 நாட்கள்

புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஎமது நாட்டில் இடம்பெறவிருந்த பெரும் பேரழிவிலிருந்து நாட்டைப் பாதுகாத்த நிகழ்வுகளாக ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னரான நிகழ்வுகளை நான் நோக்குகின்றேன். என்றாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாம், நாடு என்ற வகையில் இன்னும் முகம் கொடுக்கின்றோம். அந்த 52நாட்களிலும் நாடு சென்ற இருண்ட பாதை எவ்வாறானதென்று குறிப்பிடுவதாயின் அது விலைமதிக்க முடியாத நஷ்டமாகும். இந்த சூழ்ச்சியின் பின்னர் அரச கட்டமைப்பு செயலிழந்தது. அதன் ஊடாக நாடு சீரழிந்தது. பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது. இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வந்த ஜனநாயக அரசியல் முறைமை முழுமையாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற பயங்கர அரசியமைப்பு சூழச்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

1963இல் இவ்வாறான அரச விரோத சூழ்ச்சியொன்று முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டதால் அந்த சூழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதன் விளைவாக எவ்வித பின் விளைவுகளும் ஏற்படவில்லை. ஆனால் இந்த சூழ்ச்சியின் ஊடாக ஜனநாயகத்தில் பெரும் கறைபடிந்தது. அத்தோடு நாட்டின் பொருளாதாரமும் பின்னடைவுக்கு உள்ளானது. சுதந்திரத்தின் பின்னரான ஜனநாயகம் ஏழு தசாப்தங்களை கடந்துள்ள போதிலும் இந்த 52நாட்களையும் நான் இருண்ட நாட்களாகவே நோக்குகின்றேன். நீதிமன்றம் அரசியலமைப்பை பாதுகாத்தது. அதன் மூலம் சூழ்ச்சியை தோற்கடிக்க முடிந்தது. என்றாலும் அதன் பின்னர் இதிலிருந்து மீட்சி பெற முடியாதுள்ளது. இவ்வாறான ஒன்றை ஜனநாயக நாடொன்றில் மேற்கொண்டால் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அது இங்கு இடம்பெறவில்லை. அது ஒரு குறைபாடாகும். 

நீதித்துறை தொடர்பான நம்பிக்கை உறுதியானது

ஊடகவியலாளர் கபில எம். கமகே

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஇந்த சம்பவத்தை அசிங்கமான அரசியல் காரணமாக ஏற்பட்டதாகவே நான் பார்க்கின்றேன். பொதுவாக அரசாங்கம் ஒன்றின் அதிகாரம் சட்டப்படி ஜனநாயக முறையில் தான் மாற்றப்படும். ஆனால் இங்கு வேறுவிதமாகவே ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. அரசியல்வாதிகளுக்கு சட்டம் குறித்த தெளிவு கிடையாது. அந்த தெளிவின்மை காரணமாக அவர்கள் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றனர். என்றாலும் நீதிமன்றம் அவர்களுக்கு சட்டம் இது தான் என தெளிவுபடுத்தியது. நீதித்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனத்தன்மையின் பிரதிபலனாவே நான் அத்தீர்ப்பை பார்க்கின்றேன். நீதித்துறை சுயாதீனத்தன்மையை நாம் பாராட்ட வேண்டும். ஜனநாயக நாடொன்றில் அதனை மிகவும் சிறந்த தீர்மானமாக நோக்க முடியும். அத்தீர்ப்பின் ஊடாக நீதித்துறை தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது ஜனநாயக ரீதியிலான தீர்ப்பாகும். அதனால் இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாதிருக்க முழு சமூகமும் பொறுப்பாக இருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன்.

(தினகரன்)

Comment (0) Hits: 158

Page 9 of 103