செய்திகள்

அகதி வாழ்வில் 29 வருடங்கள்; மீள்குடியேற்றம் நிறைவேற்றமடைய பிரார்த்திக்கின்றேன் - ரிஷாட்!

வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து, இழந்து போன நமது சமூகத்தின் உரிமைகளை  பெற்றுக்கொடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னை முழுமையாக தொடர்ந்தும் அர்ப்பணிக்குமென  அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் (31) 29 வருடங்கள் நிறைவடையும் நிலையில், இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வரும் மக்கள் துரிதகதியில் மீள்குடியேறவும், மீள்குடியமர்ந்து இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவுபெறாத வகையில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுக்காக இன்றைய நாளில் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.  

1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் வடக்கு முஸ்லிம்களுக்கு நேர்ந்த அவலத்தை, அகதிகளில் ஒருவனாக நின்று அனுபவித்தவன் என்ற வகையில் நாம் பட்ட வலிகளை நினைத்துப்பார்க்கின்றோம் . சொந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்டு, ஒரே நாளில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு  கடல் வழியாகவும் , தரை வழியாகவும் நாள் கணக்கில் நடந்து தென்னிலங்கை வந்தபோது நமது சகோதரர்கள் எங்களை அரவணைத்து முடிந்தளவு வசதிகளை செய்து தந்த்தை நன்றி உணர்வுடன் நினைத்துப்பார்க்கின்றோம்.

புத்தளம் வாழ் மக்கள் வடபுல அகதிகளை பெருமளவு உள்வாங்கி தமது வீடுகளிலும், பாடசாலைகளிலும், மதராசக்களிலும், தோட்டங்களிலும்  தற்காலியமாக குடியேற்றி ஆசுவாசுப்படுத்தினர். பசி பட்டினியுடன் வெறுங்கையோடு வந்த அகதிகளான எம்மை ஆதரித்து, அனுசரித்து முடிந்தளவு உதவி வழங்கிய  நல்லுள்ளங்களை நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றோம். வடபுல முஸ்லிம்கள் தென்னிலங்கையின் புத்தளம், குருநாகல், அநுராதபுரம் , நீர்கொழும்பு, பாணந்துறை  உள்ளடங்கிய முஸ்லிம்களையும் பரோபகாரிகளையும் எந்தக் காலத்திலும்  மறப்பதற்கு இல்லை.

கடந்த காலத்தில் வடக்கிலே மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றன. தற்போதும் அந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இருந்த போதும் இன்னும் முழுமையாக பூரணப்படுத்தப்படவில்லை. அமைச்சராக இருந்து என்னாலான முழு முயற்சிகளையும் உதவிகளையும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மேற்கொண்டிருக்கின்றேன் மேற்கொண்டும் வருகின்றேன். என்ற திருப்தி நிரம்ப உண்டு. இனிவரும் காலங்களிலும் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் ஈடுபட்டு என்னாலான பணிகளை மேற்கொள்வேன். வடபுல முஸ்லிம்களாகிய நீங்கள் கடந்த காலங்களில் மீள்குடியேற்ற முயற்சிக்கு எவ்வாறன ஒத்துழைப்பை வழங்கினீர்களோ அதேபோன்ற ஒத்துழைப்பையும் உத்வேகத்தையும் வழங்குவீர்கள் என நம்புகின்றேன். 

Comment (0) Hits: 206

தபால் வாக்களிப்பு இன்றும் நாளையும்!

வாக்களிக்க தவறுவோர் நவ. 07 மாவட்ட செயலகத்தில் அல்லது நவ. 16 இல் வாக்களிக்கலாம்

நாடாளாவிய ரீதியில் தபால் மூலமான வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இதற்காக 7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 659,514 பேர் தகுதிபெற்றுள்ளனர். எதிர்வரும் 4ஆம் திகதி பொலிஸார் மற்றும் தேர்தல் செயலகத்தின் அதிகாரிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள், எதிர்வரும் 7ஆம் திகதி மாவட்ட செயலகங்களில் அல்லது தேர்தல் தினமான நவம்பர் 16 இல் வாக்களிக்க முடியும். காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, தகுதி பெற்ற அரச அதிகாரிகள் தமது வாக்குகளை பதிவு செய்ய முடியுமெனவும்,  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைக்காக தேர்தல்கள் செயலக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், "கபே" மற்றும் "பெப்ரல்" அமைப்பின் அதிகாரிகள் என ஒட்டுமொத்தமாக 40ஆயிரம் முதல் 50ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடக்கூடுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிவிசேட பாதுகாப்பு கோரப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வண்டிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிக்கடி பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபடவும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பில், நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், பெப்ரல் அமைப்பு சார்பில், தபால்மூல வாக்களிப்புக்காக 1,000 பேர் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது

Comment (0) Hits: 187

பிரதமர் பதவி : ரணில் கூற்றுக்கு சஜித்தின் பதில்

ஜனாதிபதித் தோ்தல் வெற்றியின் பின்னர் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களிடையே தான் நியமிக்கத் தீர்மானித்திருப்பது ஒரே ஒரு பதவி மாத்திரமே என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பை பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்திருப்பது மாத்திரமே தான் இதுவரை தீர்மானித்துள்ள ஒரேயொரு பதவி என இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இதனைத் தெரிவித்திருப்பது அவர் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னரும் பிரதமராகப் பதவி வகிப்பது தானே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு அலரி மாளிகையில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியதைத் தொடர்ந்தேயாகும்.

தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதா? இல்லையா என்ற விடயத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதுவரை சரியான பதிலை வழங்கவில்லை என்பதோடு, இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இத்தேர்தல் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை தவிற பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அல்ல எனத் தெரிவித்து வந்தார்.

Comment (0) Hits: 172

'சஜித் ஜனாதிபதியானாலும் நானே பிரதமர்' - ரணில்!

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தானே பதவி வகிப்பேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக செயற்படும் அதேவேளை, இப்போது முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் புதிய அரசாங்கத்திலும் தொடர்வதற்கு அவ்வரசின் பிரதமர் என்ற அடிப்படையில், சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் தமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பன தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில், அலரி மாளிகையில் இன்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"நாம் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு பெருமளவு கடனை மீளச்செலுத்த வேண்டிய நிலையிலிருந்த பொருளாதாரத்துடனேயே அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டோம். அவ்வாறிருந்தும் கூட பொருளாதாரத்தை வலுப்படுத்திய அதேவேளை, ஆக்கபூர்வமான அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்தோம். அவற்றை விடவும் முக்கியமாக, சுதந்திரமானதொரு சமுதாயத்தை உருவாக்கினோம். அதனூடாக இன்றளவில் ஊடகவியலாளர்கள் பெருமளவு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருகின்றனர்" என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

2015 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை வாக்குகளால் பிரதமராகத் நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 16 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின்படி யார் ஜனாதிபதியானாலும், 19 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லாமல், அடுத்த வருடம் (2020) மார்ச் மாதத்திற்கு முன்னர், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 152

'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' புதிய லொத்தர் டிக்கட் அறிமுகம்!

அரசாங்கத்தின் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், தேசிய லொத்தர் சபையினால் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செல்வப் புதையல்” என்ற பெயரில் புதிய லொத்தர் டிக்கட் இன்று (30) வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சீட்டிழுபில், முதல் பரிசாக 08 கோடி ரூபாவை வழங்கும் இந்த லொத்தர் டிக்கட்டின் முதல் பிரதி, இன்று (30) நிதி அமைச்சில், தேசிய லொத்தர் சபையின் பொதுமுகாமையாளர் தர்சன விஜேசிறிவர்தன அவர்களினால் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செல்வப் புதையல்’ லாட்டரி டிக்கட் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம், என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக. பொது திறைசேரியில் வரவு வைக்கப்படும்.

இந்த நிகழ்வில், பொது திறைசேரியின் பிரதி செயலாளர் திரு.ஏ.ஆர்.தேசப்பிரிய, பொது திறைசேரியின் பிரதி செயலாளர் திரு.ஏ.எம்.பி.எம்.வி.அத்தப்பத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comment (0) Hits: 172

சந்திரிகா வருகின்றார் : நவம்பர் 05 கொழும்பில் பிரமாண்டமான மாநாடு!

ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு தலைமையை வழங்குவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக அவரது பணியாளர்களின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், அவர் அடுத்த சில தினங்களினுள் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்டம் கட்டமாக அழைத்து, அவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நவம்பர் 05ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சி அங்கத்தவர்களின் மாநாடு ஒன்றை கூட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

மொட்டு கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த சில தினங்களினுள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Comment (0) Hits: 227

'தேசிய பாதுகாப்பு பற்றி தம்பட்டம் அடித்த போதிலும் கோட்டாவுக்கு முதுகெழும்பு இல்லை' - குமார் குணரத்னம்!

சஜித் பிரேமதாசக்கள், கோட்டாபய ராஜபக்ஷக்கள் தேசிய பாதுகாப்பை பற்றி கூறும் விடயங்களால் மாத்திரம் மக்கள் தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும், கோட்டாபய ராஜபக்ஷ தான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ந்து வருவதாகவும் பெரட்டுகாமி சமாஜவாதி கட்சி தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (28) பிலியந்தளையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் பொது செயலாளர் குமார் குணரத்தினம் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“நான் இன்று உங்கள் முன் உரையாற்றும் நேரம் கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். எமக்குள்ள பிரச்சினை அதுவல்ல. செப்டெம்பர் 27ம் திகதி கோட்டாபயவை யாழ் நீதிமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

எமது கட்சியின் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் 2012ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி கோட்டபாய பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய காலத்திலேயே கடத்திச் செல்லப்பட்டனர். அப்போது மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக இராணுவத்தையும், பொலிஸையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலமாகும். எனவே இந்தக் கடத்தலுக்கு கோட்டாபய பொறுப்புக் கூற வேண்டிய ஒரவராகும்.  அவரை சாட்சியமளிக்கவே யாழ் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் 27ம் திகதி  நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் 24ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்று தனக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளது,  எனவே யாழ் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அந்த உத்தரவைப் பெற்றுக் கொண்டு கோட்டாபய நீதிமன்றத்திற்கு வராதிருப்பது பாதுகாப்பு பிரச்சினையினால் அல்ல என நாம் கூறினோம்.

இன்று யாழ் சென்று கோட்டாபயவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியுமாக இருந்தாலும் யாழ் நீதிமன்றம் சென்று லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிக்க அவரால் முடியாது. காரணம் கோட்டாபய தேசிய பாதுகாப்பை பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி எதனைக் கூறினாலும் அவர்களது காலத்தில் எவ்வாறு லலித், குகன் ஆகியோர் காணாமல் போனார்கள் என்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்.  

இன்று அவர் எதனைப் பேசினாலும், ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியதைப் பற்றி அவருக்குத் தெரியும். கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டமை அவருக்குத் தெரியும். பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அண்ணனும், பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய தம்பியும் இந்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரானவர்களுக்குச் செய்த துன்புறுத்தல்கள், தாக்குதல்கள், மற்றும் படுகொலைகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்” என்றார்.

Comment (0) Hits: 149

கோட்டாவின் மேடையில் வைத்து சு.க ஆரியவதிக்கும் “ஹூ” - (VIDEO)

(VIDEO)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கந்தளாய் நகரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது ஸ்ரீ.ல.சு.கட்சி திருகோணமலை மாவட்ட தலைவியும், கிழக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான ஆரயவதி கலப்பதிக்கும் மொட்டு கட்சியின் ஆதரவாளர்களால் “ஹூ” கோஷமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹூ கோஷமிடப்பட்டதால் தனது உரையினை இடைநடுவில் கைவிட்ட ஆரியவதி, பின்னர் ஹூ கோஷம் முடிவடைந்ததும் உரையாற்றுமாறு அழைத்த போதிலும் அவர் அந்த அழைப்பை நிராகரித்தார்.

Comment (0) Hits: 241

கோட்டா விடுவிக்க முயற்சிக்கும் 'படைவீரர்கள்' யார்? - மகேஷ் சேனநாயக்க!(VIDEO)

(VIDEO)
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விடுதலை செய்வதற்கு நினைக்கும் படைவீரர்கள் யார்? என்பது குறித்து ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க விளக்கம் அளித்துள்ளார்.
 
 யூ.ரீ.வி. (UTV) தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலன் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ஊடகவியலாளர்களை தாக்கியமை, ஊடகவியலாளர்களை காணாமல் போகச் செய்தமை, மாணவர்களை காணாமல் போகச் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டவர்களையே இவ்வாறு விடுதலை செய்யப் போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த படைவீரர்களை ஒர் குழு அல்லது தனி நபர் வழிநடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
போரில் ஈடுபட்டவர்கள் என்ற காரணத்தினால் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும்  அவர் இதன்போது  தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 288

‘ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ள சிறுபான்மையினரின் வாக்குகளை சின்னாபின்னமாக்க சதி’ - ரிஷாட்!

ஏமாந்துவிட வேண்டாமென வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை! 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தினால் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
இந்த நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பி.ஹரிசன், சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், ஜெயதிலக, நியாஸ் மற்றும் ஐ.தே.க முக்கியஸ்தர்களான கருணாதாஸ, திருமதி. டயானா கமகே, முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,
 
“அராஜக ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கில், இனவாதக் கூட்டம் ஒன்று திட்டமிட்டு செயற்படுகின்றது. சிங்கள பிரதேசங்களில் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் சிறுபான்மைத் தலைமைகள் தொடர்பிலும் முரண்பாடான, திரிவுபடுத்தப்பட்ட வதந்திகளையும் செய்திகளையும் பரப்பி, பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென முயற்சிக்கின்றனர்.
 
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை மூவின மக்களும் அதாவது, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்றனர். அந்த மக்களின் பிரதிநிதிகளும் தலைமைகளும் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். “இன ஒற்றுமையையும் மத ஒற்றுமையையும் ஏற்படுத்தி, இந்த நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவமாகவும் சமாதானமாகவும் வாழச் செய்வேன்” என இதயசுத்தியுடன் பகிரங்கமாக கூறிவரும் சஜித் பிரேமதாசவை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் சிறுபான்மை தலைமைகள் அனைத்தும் அவருடன் இணைந்து செயற்படுகின்றனர்.
 
என்னைப் பொறுத்தவரையில், சிறுபான்மை மக்களின் 90 % சதவீதமான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றேன். இறைவனைத் தவிர, வேறு எந்த சக்திகளாலும் இதனைத் தடுக்க முடியாது. 
 
சஜித் பிரேமதாசவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்த பல்வேறு உபாயங்களும் யுக்திகளும் கையாளப்படுகின்றன. முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக, கொழும்பிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கூட்டம், இந்தப் பிரதேசத்துக்கு வந்து, முஸ்லிம் தலைமைகளைப் பற்றி இல்லாதபொல்லாத விடயங்களைக் கூறி, சஜித்தின் வாக்குகளை உடைக்கப் பார்க்கின்றது. அதேபோன்று, முஸ்லிம் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு வேட்பாளருடன் இன்னொரு கூட்டம் இணைந்து, முஸ்லிம் வாக்குகளை சஜித்துக்கு போகவிடாமல் புறம்பாக்கப் பார்க்கின்றது. அதுமாத்திரமின்றி, தமிழ் மக்களின் வாக்குகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரி, ஒரு கூட்டம் செயற்படுகின்றது. இன்னுமொரு சாரார் மூன்றாம் அணிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற ஒரு கோஷத்தை முன்னெடுக்கின்றனர்.
 
தமிழ் மக்களை பொறுத்தவரையில், பட்ட கஷ்டங்கள் சொல்லொனாதவை. நமக்கு மட்டுமே அது தெரியும். யுத்தத்தால் அகதிகளானோம். சிதறடிக்கப்பட்டோம். வாழ்விழந்தோம். துயரங்களை சந்தித்தோம். எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டனர். அந்த உறவுகளைத் தேடி தாய்மார்கள் கண்ணீருடன் இன்னும் அலைந்து திரிகின்றனர். சிற்சில தவறுகளுக்காக இன்னும் பலர் “அரசியல் கைதிகள்” என்ற போர்வையில், சிறையில் வாடுகின்றனர். இவ்வாறான துன்பங்களுக்கு மத்தியில் வாழும் நமது மக்களுக்கு, இனி மேலாவது நிம்மதி கிடைக்க வேண்டும். அதற்காக சஜித் பிரேமதாசவை நாட்டுத் தலைவாரக்குவோம்” என்றார்.
Comment (0) Hits: 199

குண்டு தாக்குதல் காயம் எங்கே? - கோட்டாவுக்கு படை வீரரின் சவால்! (VIDEO)

(VIDEO)

கொழும்பு பித்தளை சந்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆடையில் இரத்தம் வடிந்திருப்பதை படங்களில் காணக் கிடைத்தாலும், அந்த இரத்தம் அவருடையதாயின் அதற்குரிய காயத்தைக் காட்டுமாறு ஓய்வு பெற்ற இராணுவ படைவீரர் ஒருவர் கோட்டாபயவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடும் போது,

“பொதுஜன பெரமுணவுக்கோ, மொட்டு கட்சியில் இருக்கும் எவருக்குமோ, ராஜபக்ஷக்களுக்கோ நாம் பயப்படப் போவதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுர தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள படை வீரர்களை விடுதலை செய்யப் போவதாகக் கூறியுள்ளார். அவரது கொள்கைப் பிரகடணத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லை.

நான் படையினரின் போராட்டம் மற்றும் அரசியல் இரண்டையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நான் இராணுவ பேராட்டத்தினால் பிரபலமடையவில்லை. பொதுஜன ஐக்கிய முன்னணியில் அன்று நாம் ஒன்றிணைந்து பணியாற்றியிருந்தாலும், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தாலும் மற்றவர்களைப் போன்று நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.

அவ்வாறு செய்திருந்தால் 2009ம் ஆண்டில் படைவீரர்கள் மாகாண சபைக்கு வந்த போது, மாகாண சபை மேடையில் நான் பிரதான பேச்சாளர். மாகாண சபை அல்லது இப்போது நான் பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன். நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.

அதே போன்றுதான் எம்மால் இருக்க முடியாத சந்தர்ப்பங்கள் இருந்தது. 2000ம் ஆண்டில் ஆணையிறவில் நாம் ஆயிரக்கணக்கான படையினர் தனிமைப்பட்டுப் போயிருந்தோம். அப்போது கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை. ஜெனரல் ஜானக பெரேரா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதான் எம்மை மீட்டெடுத்தார்கள். இரண்டு கப்பல்கள் வந்துள்ளது, காங்கேசன்துறைக்குச் செல்ல ஆயத்தமாகுமாறு சொன்னார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினை மீட்டெடுத்த போது கோட்டாபய இருக்கவில்லை.

இப்போது நான் எனது ஆடையைக் கழட்டிக் காட்டுகிறேன். எனது நெஞ்சில் 11 தையல்கள் போடப்பட்டுள்ளது. முடிந்தால் கோட்டாபயவின் உடம்பில் ஒரு காயத்தைக் காட்டுமாறு அவருக்கு சவால் விடுகின்றேன்" என்றார்.

 

Comment (0) Hits: 745

கொலைகார 'வெள்ளை வேன்' ஆபரேஷன் யாருடைய வேலை? - மகேஷ்!(VIDEO)

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தெற்கில் இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியும், படுகொலை செய்யும் கொலைகார வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கி முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்துள்ளார். இலங்கையர்களிடத்தில் பிரபலமாகியுள்ள SL VLOG சமூக வலைத்தளத்துடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“வெள்ளை வேன் கலாசாரம் ஒன்றிருந்ததை நாம் எம் இரண்டு கண்களாலும் கண்டோம். இது ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?” என SL VLOG பிரதானி தர்சன ஹந்துன்கொட கேட்ட கேள்விக்கு தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“மிகத் தெளிவாகவே ஏற்றுக் கொள்கின்றேன். பிரச்சினை இருப்பது யார் செய்தது? யாரின் தேவைக்காகச் செய்யப்பட்டது? என்பதில்தான். அப்பாவியான சில இராணுவ படை வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியது அந்த இராணுவ வீரர்கள் அல்ல. அதனைச் செய்ய உத்தரவிட்டவர்களேயாகும்”

அவருடனான பேட்டியின் சில கேள்வி பதில்களை இங்கு தருகின்றோம்.

SL VLOG - கோட்டாபய ஒரு ஜனாதிபதி வேட்பாளர். கோட்டாபய தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

மகேஸ் - இராணுவத்தில் நான் குறுகிய காலம் பணியாற்றியிருக்கின்றேன். அவர் தொடர்பில் என்னிடத்தில் மதிப்பிருக்கின்றது. அந்த மதிப்பு இருப்பது இராணுவ அதிகாரிகளால் அதிகாரிகளுக்கு இருக்கும் மதிப்பு மாத்திரமேயாகும். அதற்கு அப்பால் இந்த அரசியலில் நான் ஒரு போதும் அவரை மதிக்கப் போவதில்லை. காரணம் அவரைச் சுற்றியிருப்பது மீண்டும் அந்த திருட்டுக் கும்பலேயாகும்.

SL VLOG - 2019 நவம்பர் 17ம் திகதி  ஒரு வேளை கோட்டாபய இந்நாட்டின் ஜனாதிபதியானால் நீங்கள் மீண்டும் டுபாய் போய்விடுவீர்களா?

மகேஸ் - நான் இலங்கையிலேயே இருப்பேன். அன்று செய்தவற்றை அவர்களால் இப்போது செய்ய முடியாது. அவ்வாறு செய்யுமளவுக்கு அவர் முட்டாள் அல்ல என்றே நான் நினைக்கின்றேன். அன்றிருந்தவர் அல்ல இன்றிருப்பது. மற்றது கடந்த ஐந்து வருடங்களில் எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்நாட்டில் மனித உரிமைகள் இருக்கின்றன. இந்நாட்டில் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புள்ளது. அந்தக் காலத்தில் இவைகள் எதுவும் இருக்கவில்லை. அவை அவர்களது கைகளிலேயே இருந்தது. அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது.

SL VLOG - அதாவது கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுயாதீன நீதிமன்றம், சுயாதீன பொலிஸ் போன்ற எதுவும் இருக்கவில்லை என்றா கூறுகின்றீர்கள்?

மகேஸ் - ஆம். அவற்றை அழித்து சேதமாக்கினார்கள் என்றே நான் கூறுகின்றேன். அப்படி இல்லை என்றால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காக அவரை சிறையில் அடைத்திருக்க மாட்டார்கள்தானே. அந்தக் காலத்தில் மக்கள் மிகவும் அச்சத்துடனேயே வாழ்ந்தார்கள். வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்டமை, ஊடகவியலாளர்களை வீதியில் படுகொலை செய்தமை, தாக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் அந்தக் காலத்தில்தானே இடம்பெற்றது.

Comment (0) Hits: 220

மாவனல்லை வந்த ஹிஸ்புல்லாஹ் குழுவினர் திருப்பி அனுப்பி வைப்பு!

மாவனல்லையில் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டம், அந்த ஊர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக கை விடப்பட்டது.

மாவன்னலை ராழியா வரவேற்பு மண்டபத்தில் இந்தக் கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் இணைப்பாளர் ஒருவரினால் இந்த கூட்டத்தை நடாத்துவதற்கு மண்டபத்துக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டிருந்தன. இந்த விடயத்தை அறிந்த ஊர் மக்கள், குறிப்பிட்ட இணைப்பாளரை கடுமையாக எச்சரித்ததுடன், இனிமேல் இவ்வாறான கூட்டங்களை காத்தான்குடியில் வைத்துக்கொள்ளுமாறும் சமூகங்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை, மாவனல்லை மண்ணில் நடாத்த வேண்டாமெனவும் எச்சரித்தனர்.

ஏற்கனவே, காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக, மாவனல்லை மண் சந்தித்திருந்த அவல நிலையை சுட்டிக்காட்டிய ஊர் மக்கள், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவரும் துணைபோவதை மாவனல்லை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.

மேலும், காத்தான்குடியில் உருவாகிய சில பயங்கரவாதிகளினால், இந்த நாடு சந்தித்த அவலங்களையும் துயரங்களையும் மாவனல்லை ஏற்பாட்டாளர்கள் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டுமென கடுந்தொனியில் சுட்டிக்காட்டியதோடு, இனிமேல், மாவனல்லை மண்ணில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எவருமே ஆதரவளிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, காத்தான்குடியில் இருந்து ஐந்து பஸ்களில் மாவனல்லைக்கு அழைத்து வரப்பட்ட ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களும் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவும் ஊர்மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து, இடைநடுவே திரும்பிச் சென்றதாக தெரிய வருகின்றது.

Comment (0) Hits: 1036

தாக்கப்படுவோம் என்பதற்காக கோட்டாபயவிற்கு வாக்களிக்க வேண்டுமா?

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்காவிடின் தாக்கப்படுவோம் என்ற பொய்யான பரப்புரையை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறுகிய அரசியல் இலாபத்திற்காகவும் பணத்திற்காகவும் முஸ்லிம்கள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலர் கீழ்த்தரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Photo

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டதற்கான நன்றிக் கடனை அடைப்பதற்காக அலி சப்ரி என்ற நபர், இந்த செயற்பாடுகளுக்கு தலைமை வகித்து வருகிறார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசியலுக்குள் வந்து பின்னர், தமக்கு எதிர்காலத்தில் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில், முஸ்லிம் மக்களை அனைத்து ரீதியாகவும் துன்புறுத்திய ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்திருக்கும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் முசம்மில் உள்ளிட்ட, இன்னும் சிலரும் முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் காட்டிக்கொடுப்பிற்கு இணங்காத முஸ்லிம் மக்களை, அச்சுறுத்தும் பாணியில் அவர்களை நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

'கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் வென்றுவிடுவார். எனவே, அவருக்கு வாக்களிக்காவிட்டால் முஸ்லிம் மக்கள் தாக்கப்படுவோம்." என்று முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு முஸ்லிம்கள் குறைவாக வருவதால் தற்போது, மூடிய அறைக்குள் கூட்டங்களை நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு ஷெங்கிரில்லா விடுதியில் இவ்வாறு ஒரு கூட்டத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சில வர்த்தகர்களை அழைத்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினர், 500 மில்லியன் ரூபா நிதியை திரட்டித் தருமாறு கோரியுள்ளனர். ஆடை உற்பத்தி வியாபாரத் துறையைச் சேர்ந்த 8 வர்த்தகர்களிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், ஷெங்கிரில்லா ஹோட்டலுக்கு முஸ்லிம்களை அழைத்து, தனது பக்க நியாயத்தை எடுத்துரைக்கும் நடவடிக்கைகளை  கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.

'முஸ்லிம்கள் இன, மத ரீதியாக ஒடுக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் தாக்கப்பட வேண்டும். மத ரீதியான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் வியாபாரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். வர்த்தக ரீதியாக முஸ்லிம்கள் முடக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் ஓதுவது தடுக்கப்பட வேண்டும்' போன்ற பல இனவாத ரீதியான பரப்புரைகளை மேற்கொண்ட ராஜபக்ஷ தரப்பினர், தற்போது முஸ்லிம்களின் பணத்தையும் அவர்களின் வாக்குகளையும் கொள்ளையிட திட்டமிட்டுள்ளனர்.

அலி சப்ரி போன்ற குறுகிய அரசியல் இலாபம் பெற முயற்சிப்போர் கூறுவதைப் போல, கோட்டாபய ராஜபக்ஷ சிங்களப் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் பட்சத்தில், தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மட்டும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டுமா?

அப்படியெனில், முஸ்லிம்களைத் தாக்கும் கும்பல், கோட்டாபய ராஜபக்சவுடன் இருப்பதை அலி சப்ரி போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

அப்படி முஸ்லிம்களுக்கு எதிரான கும்பல்கள் கோட்டாபயவுடன் இருக்கும் பட்சத்தில், அவர்களை ஜனநாயக ரீதியாக எதிர்ப்பதை விடுத்து, அவர்களின் கால்களில் விழுவது எந்த வகையில் சமூகத்தைக் காப்பாற்றப் போகிறது?  என்ற கேள்விகளுக்கு அலிசப்ரி உள்ளிட்ட கொள்ளைக் கும்பல் பதில் தர மறுக்கிறது.

 
Comment (0) Hits: 215

'நாட்டை அபிவிருத்தி செய்ய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' - கோட்டா!

விவசாயத்தின் மேம்பாட்டிற்காக விவசாயியைப் பாதுகாத்துக் கொள்ள தெளிவான கொள்கை ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்ட பிரசார கூட்டம் ஒன்று கந்தளாய் பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும். அதனால்தான் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய நான் முன்மொழிந்தேன்.

நாட்டைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களின் மனநிலையை தற்போதைய அரசாங்கம் சிதறடித்துள்ளது. நாட்டை  அபிவிருத்து செய்ய வேண்டுமானால் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

Comment (0) Hits: 132

தமிழர் விடுதலை கூட்டணியின் 11 தீர்மானங்கள்!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (28) உப தலைவர் கா. குலசேகரத்தின் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.

கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், இதற்காக போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைச் சந்திக்க 4 பேர் கொண்ட குழுவையும் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் இருந்து புறப்பட்ட பிரதிநிதிகள் அங்கு நிலவிய பதற்றத்தால் ஏற்பட்ட சுற்றி வளைப்பால் கலந்து கொள்ள முடியாதென அறிவித்ததாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,

1. இந்தியாவின் அரசியல் சாசனத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒத்த அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தென் ஆபிரிக்க அரசியல் சாசனத்திலுள்ள உரிமைகள் சட்டத்தையும் (Bill of Rights) இணைத்துக் கொள்ள வேண்டும்.

2. தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பொது மன்னிப்புடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.

3. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மைத் தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. வடக்கு கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்க முன் இருந்த இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனைய அனைத்து முகாம்களும் மூடப்பட வேண்டும்.

5. இன – மத குரோதங்களை தூண்டும் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் கடும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும்.

6. வடக்கு கிழக்கில் புதிதாகத் திட்டமிட்டு நடைபெறும் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த சிங்கள மயமாக்கல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

7. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும், போராளிகளுக்கும் இதுவரை எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படாதுள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் மீள இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. வடக்கு கிழக்கில் வேலை வாய்ப்புக்களில் நியமனங்களை அந்தந்த மாகாணங்களில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கத் தவறும் அதிகாரிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி – நியாயமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

9. காலத்துக்குக் காலம் இயற்கை அனர்த்தங்களினாலும், வேறு வகையிலும் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

10. தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட மற்றும் கடனாக வழங்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதி கொடுக்கப்பட்ட நிலையில் எஞ்சியோருக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. நாடு பூராவும் குறைந்த வருமானமுடையவர்களுக்கு 1970 க்கு முன்பிருந்தது போல இலவசமாக அல்லது குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை (கூப்பன் அடிப்படையில்) மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comment (0) Hits: 172

நோ பென்ஷன்; மைத்திரி அறிவிப்பு!

ஓய்வெடுப்பதை விட செயற்பாட்டு அரசியலில் இருக்கவே விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கில் இடுகையொன்றை இட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 

"ஓய்வெடுக்கும் சுகத்தை விட செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதை நான் விரும்புகிறேன்"
என தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று இரவு நாடு திரும்பினார்.

தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடவில்லை என்பதோடு, பதவியிலுள்ள ஜனாதிபதியொருவர் இரண்டாவது முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக களமிறங்காத முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 138

'சஜித் பிரேமதாச 2020 இல் ஜனாதிபதியாவது உறுதி' - தலதா!

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 2020 இல் ஜனாதிபதியாவது உறுதி. இதனை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாதென நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.

நிவித்திகலையில் கடந்த சனிக்கிழமை (26) புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது-,

2020 இல் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவது உறுதியாகி விட்டது. எதிர்வரும் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குப் புள்ளடியிடும் ஒவ்வொருவருக்கும் இந்நாடு சொந்தமாகும்.இதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் போதைப்

பொருளையும் பாதாள உலகக் கோஷ்டியையும் ஒழிப்பதாக ராஜபக்ஷ குடும்பத்தினர் சவால் விடுத்துள்ளனர். இந்த நாட்டில் போதைப்பொருள் சர்ச்சை ஏற்படுவதற்கு காரணமானவர்களே அவர்கள்தான்.

வெளிநாட்டு ஜோடியின் கணவரைக் கொலை செய்த பின்னர் மனைவியை வன்புணர்வுக்குட்படுத்திய தங்காலை தலைவர் மற்றும் 100 கன்னிப்பெண்களை வன்புணர்வுக்குட்படுத்திய அக்குரஸ்ஸ தலைவர் என்போரை உருவாக்கியவர்கள் யார்?

நிவித்திகலை என்றதும் மக்கள் முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்துக்குச் செல்வதுபோல் அஞ்சுவர். எமது மக்களுக்கு சுதந்திரமாக அரசியல் நடத்த முடியாததொரு சூழ்நிலை உருவானது. அவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இதற்கு முன்னர் எனக்கு மிக நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை கஹவத்தையில் கொலை செய்தார்கள். இன்று சுதந்திரமாக அரசியல் செய்யும் நிலைமையை நாம் நிவித்திகலையில் உருவாக்கியுள்ளோம்.

Comment (0) Hits: 150

Page 8 of 103