செய்திகள்

வெளிச்சத்துக்கு வரும் ஹிஸ்புல்லாவின் மறுபக்கம்!

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவை நிச்சயித்ததன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் சமூகத்துக்கு மீண்டும் துரோகம் இழைத்துள்ளார். சிறுபான்மை சமூகத்தில் பெரும்பான்மையானோர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு மாற்றமாக, ஹிஸ்புல்லாஹ் தனது சுயநலத்துக்காகவும் பதவி ஆசைக்காகவும் கோட்டாவை வெல்ல வைப்பதற்காக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தற்போது உறுதியாகியுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து, சஜித்துக்கு கிடைக்கவிருக்கும் முஸ்லிம் வாக்குகளை குறைத்து, கோட்டாவை வெல்ல வைப்பதற்கு இவருக்கு வழங்கப்பட்ட கொந்தராத்தை அவர் கச்சிதமாக செய்து வருகின்றார்.

இலங்கை வாழ் முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக அரபு நாடுகள் வழங்கிய பணமும் சஜித்தை தோற்கடிப்பதற்காக பசில் வழங்கிய பணமும் ஹிஸ்புல்லாவின் பிரசாரத்துக்கு இலட்சக் கணக்கில் அள்ளி வீசப்படுகின்றது. புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலரும் வியாபாரிகளும் இவரது வலையிலே சிக்கியுள்ளனர்.

ஹிஸ்புல்லாஹ் ‘துரோகத்தின் அடையாளம்’ என்பதை கடந்த காலங்களில் நிரூபித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் முகவரி கொடுத்தவருமான மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கே துரோகமிழைத்தவர் தான் இவர். மொஹிதீன் அப்துல் காதருக்கு பாராளுமன்ற பதவியில் அரைவாசிக் காலத்தை வழங்க வேண்டுமென்று, மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் வழங்கிய எழுத்துமூல ஒப்பந்தத்தையும் அவர் மீறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் முரண்பட்டு, அவருக்கும் துரோகமிழைத்தார். மர்ஹூம் அஷ்ரபின் பாரியார் திருமதி.பேரியல் அஷ்ரபிற்கு துரோகம் செய்து, வேறுவழி சென்றவர். அதேபோன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து எம்.பியாகிய பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்கட்சி மைத்திரிக்கு ஆதரவளித்த போது, சமூக இருப்புக்கு மாறாக ஹிஸ்புல்லாஹ், மஹிந்தவுக்கு ஆதரவளித்தார்.

மேடைகளிலே மைத்திரியை மிக மோசமாக ஏசித் திரிந்த அவர், தேர்தலில் தோற்ற பின்னர் தேசியப் பட்டியலுக்காக, மைத்திரியின் கால்களில் விழுந்து சாஷ்டாங்கம் செய்து, எம்.பி பதவியையும் ஏக காலத்தில் இராஜாங்க அமைச்சர் பதவியையும் பெற்றார். இப்போது, கோட்டாவை வெல்ல வைப்பதற்காக அவரது கொந்தராத்தை எடுத்து, சமூகத்துக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் எவருடைய காலைப் பிடித்தாவது, சஜித்திடம் எம்.பி பதவியை பெற்றுகொள்ள கெஞ்சுவார்.

தேர்தல் பிரசாரங்களில் அவர் அவ்வாறுதான் கூறியும் வருகின்றார். அவரது “நமது கனவு” இவ்வாறுதான் இருக்கப்போகின்றது.

Comment (0) Hits: 813

தற்போதே முஸ்லிம்களை புறக்கணித்த கோட்டா! அண்ணனை காட்டி தம்பிக்கு திருமணம்! முஸ்லிம்கள் ஆதரிப்பார்களா?

முதற் கோணல் முற்றிலும் கோணலென்பார்கள். கோத்தா இப்போதே முஸ்லிம்களை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார். நேற்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அம்பாறை மாவட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இருந்த போதிலும் அம்பாறை முஸ்லிம் கிராமங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பொதுவாக ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு விசேட வருகை தருவார்கள்.

கோத்தா சிறுபான்மை மக்களிடையே சந்தைப்படுத்த முடியாத காலாவதியான ஒருவர் என்பது யாவரும் அறிந்த ஒன்று. இத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை கருத்தில் கொண்ட வியூகம் வகுத்திருந்தால், நிச்சயம் கோத்தாபாயவை தெரிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வியூகங்கள் தனி சிங்கள வாக்குகளையே மையப்படுத்தியிருந்தன. இப்போது சஜிதின் வருகையால் ஐ.தே.முவிற்கு ஏற்பட்ட எழுச்சியை பார்த்து மிலைத்து நிற்கின்றனர் மொட்டு அணியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாய்ந்தமருது, அக்கறைப்பற்று ஆகிய ஊர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குபற்றுதலுடன் மொட்டு அணியினரின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடாகியிருந்தன. இதில் கோத்தா கலந்து கொள்வார் என்றிருந்த போதும் கலந்துகொள்ளவில்லை. குறித்த தினம் கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோத்தாவை முஸ்லிம்கள் ஏற்பதை விட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஓரளவு ஏற்பார்கள். மஹிந்தவை காட்டி கோத்தாவுக்கு வாக்கு சேகரிக்கும் உத்தியே அங்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. சிங்கள வாக்குகளை மையப்படுத்தி வியூகம் வகுத்தவருக்கு, முஸ்லிம்களிடம் சென்று என்ன பேசுவதென அறியாமல் புறக்கணித்தாரோ தெரியவில்லை. இது தங்கச்சியை காட்டி, அக்காவை திருமணம் செய்து கொடுப்பது போன்றல்லவா உள்ளது? மொட்டு அணியினருக்கே கோத்தாவை முஸ்லிம்களிடையே சந்தைப்படுத்த முடியாதென தெரிந்துள்ள போது, ஏன் எம்மவர்கள் அவரை சந்தைப்படுத்த இத்தனை பிரயத்தனங்களை எடுக்கின்றனர்.

நேற்று அம்பாறையில் கோத்தாவின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற மொட்டுவின் பிரச்சார மேடைக்கு முஸ்லிம் மொட்டு அணியினர், தங்களது பிரதேசங்களிலிருந்து ஆட்களை அழைத்து சென்றிருந்தனர். தங்களது ஜனாதிபதி வேட்பாளரை, தங்களது பிரதேசங்களுக்கு அழைத்து வர திராணியற்றவர்களுக்கு, அம்பாறைக்கு ஆட்களை அழைத்து செல்ல வெட்கமில்லையா? கோத்தா வென்றால், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அம்பாறைக்கே செல்ல வேண்டுமென கோத்தா கூறாமல் கூறுகிறாரோ?

இப்போதே எம்மை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார். ஆட்சியமைத்தால் சொல்லவா வேண்டும். நாம் தேவையில்லையென தேர்தல் வியூகமமைத்தவர்களுக்கும், தங்களது செயற்பாட்டை முன்னெடுப்பவர்களும், நாம் ஏன் வலிந்து சென்று ஆதரவளிக்க வேண்டும். அதனைப் போன்ற மடமை, சுயநலம், இழிவு வேறேதுமிருக்குமா? இம் முறை சிந்தித்து வாக்களிப்போம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

Comment (0) Hits: 287

கோட்டாவுக்கு ஹஷன் அலி குழுவினர் ஆதரவு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய  சமாதான கூட்டமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொதுஜன  பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. 

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க, முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர்  ஹஷன் ஹலியின் தலைமையிலான ஐக்கிய சமாதான  கூட்டமைப்பு தீர்மானித்ததை தொடர்ந்து, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் தலைமை  காரியாலயத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (01) கைச்சாத்திடப்பட்டது.பொதுஜன பெரமுன சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்  சாகர காரியவசமும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஹஷன்  ஹிலியும் கைச்சாத்திட்டனர்.

முஸ்லிம் காங்கிரசின்  பொதுச்செயலாளர் பதவியை வகித்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹஷன் ஹலி, முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பினை ஸ்தாபித்தார்.

கடந்த வாரம் அக்கட்சியிக் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க கட்சி ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு  கைச்சாத்திடல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் யாப்பா அபேவர்தன , டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Comment (0) Hits: 132

ஈஸ்டர் தாக்குதல்; வெளிவரவிருக்கும் VIDEO - கோட்டா பயப்படுவது ஏன்?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாக சேறுபூசும் காணொளி ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரப் பிரிவு வெளியிட உள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக சந்திப்புகளில் தெரிவித்து வருகிறது.

இந்தக் காணொளி சம்பந்தமான சில விடயங்களை பொதுஜன பெரமுனவினர் கூறியுள்ளனர். இதில் ஒரு காணொளியை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் துஷார வன்னியாராச்சி தயாரித்து வருவதாக பொதுஜன பெரமுனவினர் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள துஷார வன்னியாராச்சி, தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

உண்மையில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இப்படியான காணொளி தயாரிக்கப்பட்டுள்ளதா? அல்லது தயாரிக்கப்படுகிறதா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் ராஜபக்ஷ தரப்பின் பிரசாரப் பிரிவினர், இது குறித்து கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

பொய்யான காணொளி என்றால், எவரும் இந்தளவுக்கு அச்சப்பட வேண்டிய தேவையில்லை எனவும் பொய்யானது என்பதை உறுதிப்படுத்த காரணங்களை முன்வைக்க முடியும் எனவும் பொய்யான காணொளியை தயாரித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரான் உட்பட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு புலனாய்வு ஒற்றர்கள் என்ற ரீதியில், ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் வசதிகளை வழங்கி, சம்பளம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவே அண்மையில் கண்டியில் மாநாயக்க தேரர் ஒருவரிடம் கூறியிருந்தார்.

அதேவேளை தான் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிக்க உள்ளதாக அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலுக்கு செல்ல முடியாமல் போனதாகவும் குண்டுகளை வெடிக்க செய்த சஹ்ரான்கள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டியதில்லை எனவும் குண்டு வெடிக்க போவது தெரிந்தும் உறங்கிக் கொண்டிருந்த ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கத்தோலிக்க பங்கு தந்தை ஒருவர், இந்த தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அறிந்திருந்ததாக கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக முதலை கண்ணீர் வடிக்கும் ராஜபக்சவினர், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 
 
Comment (0) Hits: 868

MCC ஒப்பந்தம்; அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பு!

அனைத்து பங்காளி நாடுகளிலுமான மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனின் (Millennium Challenge Corporation - MCC) உலகளாவிய கொள்கைக்கு இசைவானதாக, இந்த (கடனற்ற) நிதியுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் இலங்கை அரசாங்கம் அதை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம், இந்த நிதியுதவி ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய பாராளுமன்றத்துக்கு போதிய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமெரிக்க தூதரகம் அறிவித்திள்ளது.

இந்த மீளாய்வு காலப்பகுதியில், நிதியுதவி ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிப்பதற்கும் போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் செயற்படும். இந்த நிதியுதவி ஒப்பந்தமானது 11 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு நேரடியாக நன்மைபயக்கும் என்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும் அர்த்தபுஷ்டியான வகையில் ஊக்குவிக்கும்.

இந்த நிதியுதவி ஒப்பந்தத்திற்கு அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆதரவு இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொள்வதற்கு பாராளுமன்றத்தினது மீளாய்வு மற்றும் ஒப்புதல் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனுக்கு தேவைப்படுகிறது.

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் போக்குவரத்துத் திட்டம்

போக்குவரத்துத் திட்டமானது 350 மில்லியன் டொலர்களைக் கொண்டது என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன் இது மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களில் நகர மற்றும் கிராமிய நகரும் தன்மையை இருவழியில் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். முதலில் கொழும்பு பெருநகரப் பிராந்தியத்தில் காணப்படும் வாகன நெரிசலை எளிதுபடுத்துவதுடன், பொதுப் போக்குவரத்தை முன்னேற்றும். கொழும்பை மேலும் வாழக்கூடிய, நன்கு செயற்படக்கூடிய நகரமாக்குவதற்கு போக்குவரத்து உரிமையைப் பெறுவது முக்கியமானதாகும். இரண்டாவதாக, போக்குவரத்துத் திட்டமானது மேல் மாகாணத்திலுள்ள துறைமுகங்கள் மற்றும் சந்தையுடன் நாட்டின் மத்திய பகுதியை இணைப்பதை மேம்படுத்தும். போக்குவரத்துத் திட்டமானது போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் பொறிமுறைகளை தரமுயர்த்தும். இது மூன்று செயற்பாடுகளைக் கொண்டதாகும்:

* கொழும்பு பெருநகர பிராந்தியத்தின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறைக்காக (Advanced Traffic Management System) 160 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது மத்திய கொழும்பை புறநகர் பகுதிகளுடன் இணைக்கும் அதிக போக்குவரத்துக்களைக் கொண்ட எட்டு பாதைகளில் உள்ள வீதி வலையமைப்புக்களை தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் பௌதீக ரீதியாக முன்னேற்றுவதுடன், சிவில் வேலைகளை முன்னேற்றுவதாகும். இந்த செயற்பாடானது வாகனங்களை கண்டறிவதற்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல், நிகழ்நேர தகவல் சேகரிப்பு, போக்குவரத்தை ஆய்வுசெய்தல், போக்குவரத்து சமிக்ஞைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தல் மற்றும் முழுமையான வலையமைப்பிலும் பஸ் முன்னுரிமை முறைக்கு இடமளித்தல் என்பன உள்ளடங்குகின்றன. பாதசாரிகள், உலகின் பல நகரங்களில் பொருட்கள் மற்றும் பயணிகள் நகர வீதிக் கட்டமைப்பில் நெரிசல்கள் இன்றி பயணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கியமான கருவியாக மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறை நிரூபணமாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து முகாமைத்துவப் பொறிமுறையானது கொழும்பு மாகரில் உள்ள 132 சந்திகளில் சிவில் செயற்பாடுகளை முன்னேற்றுவது மற்றும் ஏறத்தாழ 205 கிலோமீற்றர் வீதி வலையமைப்பில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞை திட்டங்களை வினைத்தினறாக நடைமுறைப்படுத்துவதையும் மேம்படுத்தும்.

* 50 மில்லியன் டொலர்கள் கொழும்பு மாநகரில் பஸ் சேவையை மேம்படுத்த பஸ் சேவை நவீனயப்படுத்தல் செயற்பட்டுக்கு ஒதுக்கப்படும். கொழும்பு மாநகரில் உள்ள பயணிகளில் 45 வீதமானவர்களே பஸ் சேவையைப் பயன்படுத்துவதுடன், குறைந்தவருமானம் பெறும் நபர்களாலேயே இது அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயற்பாடானது ஸ்மார்ட் அட்டையின் அடிப்படையில் தன்னிச்சயாக கட்டணங்களை அறவிடும் பொறிமுறையை அறிமுகப்படுத்தும். ஒரு அட்டையை பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைவதுடன், பஸ்கள் சரியான முறையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்பதைக் கண்டுகொள்வதற்காக ஜிபிஸ் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்குகிறது. சரியான நேரசூசியில் பஸ்கள் செயற்படுகின்றனவா, பஸ்களில் பயணிக்கும் பெண்கள், வயது வந்தவர்கள், மாற்றுவலுவுடையவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் இது உதவியாகவிருக்கும். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் செயற்பாட்டாளர்கள் அதிநவீன போக்குவரத்துக்கான புதிய பஸ்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஏற்பாடுகளை செய்வதற்கு மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் உதவியளிக்கும்.

* 140 மில்லியன் கிராமிய போக்குவரத்து செயற்பாடானது மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களுக்கிடையிலான ஏறத்தாள 131 கிலோமீற்றரைக் கொண்ட மத்திய வளைய வீதி வலையமைப்பை மேல் மாகாணத்தின் சந்தைகள் மற்றும் துறைமுகங்களுடன் இணைப்பதை மேம்படுத்தும். மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் பல்வேறு பிரிவு வலையமைப்புக்களை புனரமைக்கும். கிழக்கு மாகாணத்திலுள்ள பயணிகள் மற்றும் பொருட்கள் இந்த வலையமைப்பின் ஊடாகப் பயணப்படும். இந்த வலையமைப்பை மேம்படுத்துவது விவசாயம், சுற்றுலாத்துறை என்பவற்றின் மையமாகவிருக்கும் மத்திய பிராத்தியத்துக்கும், அங்குள்ள இன பல்வகைமை மற்றும் வறுமைநிலையில் உள்ள அதிகமானவர்களுக்கும் நன்மையாக அமையும்.

மிலேனியம் சலெஞ்ச் காணித் திட்டம்

காணித் திட்டமானது 67 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டது என மதிப்பிடப்பட்டிருப்பதுடன், இடஞ்சார் தகவல்கள் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் காணி உரிமைத் தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை விஸ்தரிப்பது மற்றும் முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். இந்தத் திட்டமானது பயன்படுத்தப்படாதுள்ள அரசாங்க காணிகளை அடையாளம் கண்டு அவற்றை முடிந்தளவு வினைத்திறனாகப் பயன்படுத்தவும், அவற்றை அரசாங்கம் குத்தகைக்கு வழங்கி ஆகக்கூடியளவு வாடகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாகவிருக்கும். அத்துடன் பணிக்காலப் பாதுகாப்பு மற்றும் சிறுகாணி உரிமையாளர்கள், பெண்கள் நிறுவனங்களுக்கான காணி வர்த்தகத்தன்மை என்பவற்றை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட காணி உறுதிகளைப் பேணவது போன்றவற்றால் பாதிப்புக்கள், திருட்டுக்கள், இழப்புக்களிலிருந்து தவிர்த்தல் என்பவற்றுக்கு உறுதுணையாக இருப்பதுடன், தலைப்புப் பதிவு முறையிலிருந்து காணி உறுதி முறைக்கு சொத்துக்களை மாற்றுவதாகும். காணித் திட்டமானது ஐந்து செற்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள முயற்சிகளை மேம்படுத்துவதாக இவை அமையும். அவையாவன:

* நிலம் தொடர்பான காணி வரைபடத்தை உருவாக்குவது மற்றும் அரசாங்க காணிகள் குறித்த முழுமையான இருப்புக்களைப் பெறுதல், ஈ-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமைக்கு தகவல்களை வழங்குதல். மதிப்பீடு 23,400,000 டொலர்கள்;

* கணினி மயப்படுத்தப்பட்ட வெகுஜன மதிப்பீட்டுக்கு உதவியாக அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான தகவல் சேகரிப்பை மேம்படுத்துதல், மதிப்பீட்டுத் திணைக்களத்தைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பலப்படுத்துதல். மதிப்பீடு 6,5000, 000 டொலர்கள்;

* காணி உறுதி பதிவேட்டில் உள்ள பதிவுகளை டிஜிட்டல் மயப்படுத்தி மேம்படுத்தல், டிஜிட்டல் தகவல் கட்டமைப்பில் அவற்றை இணைத்தல், அரசாங்கத்தின் ஈ-பதிவு முயற்சிகளைக் கட்டியெழுப்புதல். மதிப்பீடு 11,400,000 டொலர்கள்;

* காணி உறுதி முறையிலிருந்து தலைப் பதிவேட்டு முறைக்குச் சொத்துக்களை மாற்றுவதன் ஊடாக காணி உரிமையாளர்களின் உரிமையை மேம்படுத்தல். அரசாங்கத்தின் பிம் சவிய திட்டத்தை விஸ்தரித்தல். மதிப்பீடு 19,300,000 டொலர்கள்;

* காணி நிர்வாக கொள்கைத்திட்டங்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கான ஆய்வுளுக்கு உதவியளித்தல். மதிப்பிடு 6,700,000 டொலர்கள்;

ஈ-அரச காணிகள் தகவல் முகாமைத்துவ முறைமை என்பது அரசாங்கத்தின் பல்வேறு முகவர்களிடம் உள்ள அரச காணிகள் தொடர்பான காணி வரைபடைத்தை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப பொறிமுறையாகும். இந்தப் பொறிமுறையானது அரசாங்கம் ஏற்னவே குத்தகைக்கு வழய்கிய அரச காணிகள் குறித்த தகவல்கள் பற்றிய விண்ணப்பங்களை பின்தொடர்ந்து அவற்றிலிருந்து வருமானங்களை சேகரித்துக் கொள்ளும். அரசாங்கம் தற்பொழுது காணி மதிப்பீட்டு செயற்பாட்டை தானியங்குமுறைக்கு மாற்றி வருகிறது. இது வரி மதிப்பீடு மற்றும் ஏனைய தேவைகளுக்காக சொத்துக்கள் மதிப்பிடப்படுவதை விரைவுபடுத்தும். ஈ-காணி பதிவேடு முறைமையானது காணி பதிவுத் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்துவதுடன், காணி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கான தகவல்களை இலகுவாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் வழிகோலும். பிம் சவிய திட்டமானது தனியார் காணிகளை காணி உறுதி முறையிலிருந்து மிகவும் பாதுகாப்பான தலைப்பு பதிவு முறைக்கு மாற்றுவதாகும். துரதிஸ்டவசமாக போதிய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இன்மையால் இந்த முயற்சிகள் யாவும் அங்கும் இங்குமாக இழுபடுவதுடன் சரியான ஒருங்கிணைப்பின்றிக் காணப்படுகின்றன. மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் காணி திட்டமானது இந்த வளப் பிரச்சினையை நிவர்த்திசெய்யும்.

Comment (0) Hits: 153

சந்திரிகா புதிய கூட்டணியில் இணைந்தமை ஜனநாயக ஆட்சிக்கு முக்கியமான விடயம் - சஜித்!

புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும்.

நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே எமது இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்கு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதை நோக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு 'ஜனநாயக தேசிய முன்னணி' என்ற பெயரில் ஒன்றிணையும் நிகழ்வு இன்று காலை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இன்று கைச்சாத்திடப்படும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது நாட்டில் ஜனநாயகம், சமூக சமத்துவம், நியாயாதிக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கிய பயணத்தில் மற்றொரு படியாகும்.

புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளிக்கும் இத்தருணம் மிகவும் முக்கியமானதாகும். நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்காகும்.

மேலும் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் அதேவேளை, அதன்மூலம் பெறப்படும் வருமானம் மக்கள் மத்தியில் சமனாகப் பகிரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். சட்டத்தின் கீழ் அனைவரும் ஒரே விதமாக நடத்தப்படுவதுடன், சமுதாய சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் என்பன பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

நாட்டில் அறிவை மையப்படுத்திய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி பாரம்பரிய கைத்தொழில் துறையை நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்புடன் வலுப்படுத்த வேண்டும். 

தனியொரு குடும்பமோ அல்லது குறித்தவொரு பிரிவினரோ மாத்திரமன்றி நாட்டு மக்களனைவரும் அனுபவிக்கக்கூடிய விதமாக பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் அடையப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். மக்கள் செலுத்தும் வரியின் ஊடாக அரசிற்குக் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முதலீடு செய்வதற்கு எதிர்காலத்தில் நான் நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

Comment (0) Hits: 428

சஜித்திற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிகா கைச்சாத்து!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமயிலான ஐக்கிய தேசிய முன்னணியானது தனது பங்காளி அரசியல் கட்சிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சிவில் அமைப்புகளுடன் இன்று (01) கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.

அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, றிசாட் பதியுதீன், றவூப் ஹக்கீம், மனோகனேசன், வி.ராதாகிருஷ்ணன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    

Comment (0) Hits: 146

தேர்தல் காலத்தில் அதிகரிக்கும் போலிச் செய்திகளை அடையாளம் காண்பது எப்படி?

'அர அபி' என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியதை அராபி என்றும் கோட்டாபயவை 'பரதன்ன' ஓன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய முன்னணி பக்கம்மாறிய சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் கூறிய கருத்தை கோட்டாபயவை 'மரன்ன' ஓன என்றும் இலங்கையிலுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட செய்திகள் தேர்தல் காலத்தில் ஆக்கிரமித்துள்ள போலிச் செய்திகளை வெளிச்சம் போட்டுக்காண்பித்துள்ளன. 
 
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் பேசிய வார்த்தைகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமார்த்தியமாக உண்மையாகவே அவர்கள் பேசுவது போன்று அதனைத்தயாரித்தவர்கள் வடிவமைத்துள்ளனர். 
 
காணொளிகளை திரிவுபடுத்துவது இலங்கையில் மிகக்குறைவாக நடந்துள்ள போதும் புகைப்படங்கள்  ஆவணங்களில் திரிவுபடுத்தல்களை மேற்கொண்டு போலித் தகவல்களை பரப்பும் நடவடிக்கை கடந்த காலமுதல்  இடம்பெற்றுவருகின்றது . தேர்தல் காலம் என்றபடியால் போலியான தகவல்களை கொண்ட புகைப்படங்கள் அதிகமாக இந்த நாட்களில் வெளியாகி மக்கள் மத்தியில் குழப்பமான மனநிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
 
அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுண கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களின் புகைப்படமென ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 
 
FakeNews 1
 
உண்மையில் ஆராய்ந்து பார்த்தபோது அது கடந்தவருடம் பிரான்ஸில் இடம்பெற்ற கால்பந்து உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்ட படத்தைத் தான் அநுராதபுரப் பொதுக்கூட்டம் எனப்பகிர்ந்துகொண்டுள்ளனர். 
 
அதுபோன்றே ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் காலி முகத்திடல் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த ஆதரவாளர்கள் தமக்கிடையே மோதிக்கொண்டதாக புகைப்படமொன்று வெளியாகியிருந்தது. 
 
FakeNews 2
உண்மையில் ஆராய்துபார்த்ததில் அது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. 
 
இதனைத் தவிர ஐக்கிய தேசிய முன்னணியின் காலிமுகத்திடல் பொதுக்கூட்ட்த்தில் சஜித் பிரேமதாஸவிற்கு பின்னால் நின்றுகொண்டிருந்தவர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டது. 
FakeNews 4FakeNews 4
 
இப்படியாக பலதரப்பினையும் பாதிக்கும் வகையில் போலிச் செய்திகள் தற்போது அதிகளவில் பரப்பப்படுகின்றன. 
 
போலித்தகவல்களை நாம் ஆராய்ந்தால் அதன் உண்மையைக் கண்டறியமுடியும் . கடந்த காலத்திலும் இவ்வாறு போலிச் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஆனால் இணைய யுகத்தில் சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் போலிச் செய்திகளைப் பரப்பும் வேகம் அதிகரித்துவிட்டமை அதாவது போலிச் செய்திகள் வைரலாக துரித கதியில் பரப்பப்படும் சாத்தியம் உள்ளதால் அதனால் ஏற்படும் தாக்கம் அபாயகரமானதாகக் காணப்படுகின்றது. 
 
போலித்தகவல் என்பது இரண்டு வகைப்படும்  . தவறான செய்தி என்று தெரியாமலேயே அதனைப்பரப்புகின்றமை மற்றையது தவறான செய்தி என்று தெரிந்தும் அதனைப் பரப்புவது. 
FakeNews5
 
இதில் எது அபாயமானது என்று கேட்டால் இரண்டுமே அபாயகரமானது அவை வைரலாக மாறுமிடத்து என்பதே பதிலாக இருக்கும். 
 
2016ம் ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலின் போது பரப்பப்பட்ட போலிச் செய்திகளால் அமெரிக்க ஜனாதிபதியாக யாருமே எதிர்பாராத டொனால்ட் ட்ரம்ப் வந்த கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தநிலையில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்றுவாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இங்கு சமூக ஊடகங்களிலும் பிரதான தொலைக்காட்சி மற்றும் ப்த்திரிகைகளிலும் பரப்பப்படும் போலிச் செய்திகளால் இறுதி வெற்றியில் தாக்கம் செலுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது. 
FakeNews7FakeNews7
 
அப்படியானால் எவ்வாறு துரிதமாக தகவலை போலித்தகலென்றோ அன்றேல் ஒரு செய்தியை போலிச் செய்தியென்றோ அடையாளம் காண்பது என நீங்கள் அறிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.  
 
அருண் ஆரோக்கியநாதர் 
தொடரும்...
Comment (0) Hits: 158

தமிழ் அரசியல்வாதிகள் பிரதான கட்சிகளுடன் இணையும் நாள்? - ரணில்!

தேசிய பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக்கொள்ள முடியுமாக  இருந்தால் தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு, பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரத்மலானை சில்வாஸ் மண்டபத்தில் இடம்பெற்ற கல்வியியலாளர்களுடனான சந்திப்பின் போது, தேசிய பிரச்சினை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது,

“அரசியலமைப்பு தொடர்பில் அனேக யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் நாம் அனேக பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம். கூட்டணி இதனை எதிர்த்ததால் அன்று இதனைச் செய்ய முடியாது போனது.

ஜனாதிபதி தேர்தலில் பின்னர், பாராளுமன்றத்தில் 125 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக்கொள்ள முடியும். அப்போது குறித்த திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும்.

தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொள்வது ஒற்றையாட்சியினுள் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அதிகாரத்தைப் பகிர்வதேயாகும். தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தாருங்கள், அப்போது தமது கட்சிகள் தேவையில்லை என்றும், அக்கட்சிகளைக் கலைத்துவிட்டு பிரதான கட்சிகளோடு இணைந்து கொள்வதாகவும் அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்” என்றார்.

Comment (0) Hits: 175

கோட்டாவுடன் கூட்டுசேர குப்பையை சாட்டாக பயன்படுத்திய பாயிஸ்!!

 புத்தளம் நகரபிதா பாயிஸ் நீண்டகாலமாக மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடி.

முன்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றியவர். கடந்த தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள், மஹிந்த அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளை வெறுத்து, 2015 இல் மைத்திரிக்கு ஆதரவளித்த போது, இவர் வேறு வழியின்றி ஒட்டகத்தின் மீதேறி, தேர்தல் கேட்டு படுதோல்வி அடைந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி அஞ்ஞானவாசம் செய்தார். புத்தளத்தில் உள்ள தனது தோட்டத்தை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட இவர் முயற்சித்த போதும் அக்கட்சியின், புத்தளம் மாவட்ட முக்கியஸ்தர் அலி சப்ரியின் எதிர்ப்பின் காரணாமாக, அந்த முயற்சி கைகூடாமல் போனதால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டார்.

புத்தளம் மாவட்ட மு.கா முக்கியஸ்தர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே, அக்கட்சியின் தலைவரால் இவர் மீண்டும் உள்வாங்கப்பட்டு, மரத்தில் ஏறி நகரபிதா ஆனார். புத்தளத்தில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அத்தனை மாசடைதல் திட்டத்திலும் இவருக்கு பாரிய பங்குண்டு எனவும் அந்த திட்டங்களை புத்தளத்தில் கொண்டு வருவதற்கு, இவருக்கு கையூட்டல் கொடுக்கப்பட்டதாகவும் பரவலான கருத்துக்கள் உண்டு.

புத்தளம் சிறுகடலில் மீனவர்களுக்குத் தீங்கான மின்கம்பி போடல், இயந்திரக் காற்றாடி மற்றும் நுரைச்சோலை அனல்மின் நிலையம் போன்ற வேலைத்திட்டங்கள், இவரை கைக்குள் போட்ட பின்னரே புத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டமை, மக்கள் அறிந்த விடயம்.

மேலும், புத்தளம் குப்பை விவகாரத்திலும் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து அவர் சம்பிக்கவை சந்தித்து, அதற்கு அங்கீகாரம் வழங்கிய கதைகளும் உண்டு. மைத்திரிபால சிறிசேன புத்தளத்துக்கு வந்தபோது, பொலிஸாரின் காடைத்தனத்துக்கு புத்தளம் மக்கள் இரையாகியதற்கு இவரது நடவடிக்கையே காரணம். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் புத்தளக் குப்பையை கையில் எடுத்துக்கொண்டு, கோட்டாவுக்கு ஆதரவு வழங்கத் துடிக்கிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, புத்தளம் முக்கியஸ்தர்களான நியாஸ் போன்றவர்களின் முன்னிலையில் சஜித் பிரேமதாச வழங்கிய தீர்க்கமான உறுதிமொழி, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து யஹியா, அலி சப்ரி, முன்னாள் எம்.பி நவவி ஆகியோரின் முன்னிலையில் சஜித் வழங்கிய உறுதிமொழி மற்றும் அண்மையில் புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சஜித் வழங்கிய பகிரங்க உறுதிமொழிகளை நாட்டு மக்கள், பத்திரிகை வாயிலாகவும் புத்தள மக்கள், நேரடியாகவும் அறிந்த விடயமே.

“புத்தளம் குப்பை பிரச்சினையை இதயசுத்தியாக தீர்த்துத் தருகின்றேன்” என்று சமூக ஒப்பந்தம் செய்த சஜித்தை இவர் நம்ப மறுக்கிறார். இதற்குக் காரணம், கோட்டாவின் வலையில் சிக்கி இருப்பதாலாகும். எதிர்காலத்தில் பாயிஸ் கனவு காணும் கோட்டாவின் (Gota) அரசில், கோட்டா (Quota) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர், இப்போது புத்தளம் மக்களை பலிக்கடாவாக்க நினைகின்றார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற நகர சபை உறுப்பினர்களில் சிலரை அச்சுறுத்தி, தமது கைக்குள் போட்டுகொண்டு, இவர் எதிர்கால அரசியல் செய்யப் பார்க்கின்றார்

அந்தவகையில், சஜித்தின் மேடையிலோ சஜித்தின் சந்திப்புக்களிலோ இவர் கலந்துகொள்ளவில்லை. பாயிஸ் நேர்மையானவராக இருந்தால் அங்கு சென்று, புத்தளம் மக்களின் குப்பை பிரச்சினையை சஜித்திடமும் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். சஜித் நிராகரித்திருந்தால் அவர் நாடிய வழி சரியானதே. ஆனால், பாயிஸ் என்ற அரசியல்வாதி எப்போதும் நேர்மையானவர் அல்ல. சண்டித்தனமும் காடைத்தனமும் இவரின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.

இப்போது, கோட்டாவை சந்தித்து, புத்தளம் குப்பை பிரச்சினைக்கு கோட்டாவினால் தீர்வை பெற்றுவிட்டதாக கதை விடுகிறார். மிரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் சிலரையும் “கிளீன் புத்தளம்” அமைப்பிலுள்ள ஒரு சிலரையும் வண்ணாத்திவில்லில் மொட்டுக்கு ஆதரவளிக்கும் பௌத்த மதகுரு ஒருவரையும் மைத்திரியுடன் மிக நெருக்கமான கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரையுமே, இவர் புத்தளம் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு, ஒட்டுமொத்த புத்தள மக்களின் சார்பாக அழைத்துச் சென்று கோட்டாவை சந்தித்திருக்கிறார். கோட்டா உறுதிமொழி தந்ததாகவும் கூறுகிறார். பிரச்சினை எல்லாம் முடிவடைந்து விட்டதாகக்கதை அளக்கிறார். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், புத்தளத்தின் முஸ்லிம் பெரியார், கண்ணியத்துக்குரிய அப்துல்லாஹ் ஹஸரத்தும், பாயிஸின் இந்த சிக்குமுக்கு விளையாட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பதுதான்.

கோட்டாவை சந்தித்த பின்னர், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் எதிர்ப்பிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனிடம் சென்று, மழுப்பல் கதைகளை கூறியுள்ளதாக புத்தளம் மக்கள் தெரிவிக்கின்றனர். பாயிஸ், உண்மையான இதய சுத்தியான அரசியல்வாதியாக இருந்தால், கட்சியின் மீதும் தலைமையின் மீதும் விசுவாசம் உள்ளவராக இருந்தால், மு.கா தலைமையின் அனுமதியுடன் கோட்டாவை சந்திக்கச் சென்றிருக்க வேண்டும்.

73472487 412347359452826 1218751314461196288 n

புத்தளம் மக்களின் வாக்குகளை கோட்டாவின் குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு பாயிஸ் எடுக்கும் இந்தக் குப்பை தந்திரம், ஒருபோதும் பலிக்காது என புத்தளத்தின் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழ்க பாயிஸ்! வெல்லட்டும் அவரது சமூக அக்கறை!  

Comment (0) Hits: 666

'சஜித், சமூகப் புரட்சி பற்றி கனவு காண்பவர்' - விக்டர் ஐவன்!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சமூக புரட்சி பற்றி கனவை காண்பதாகவும் அது சிறந்த கனவு எனவும் மூத்த அரசியல் வர்ணனையாளரும்  சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (31) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல்  விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

"இந்த சமூக புரட்சியை நாடாளுமன்றத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாது முழு முறைக்கும் சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை சமூக மறுசீரமைப்புக்கு அஞ்சும் நாடு. உள்நாட்டு போருக்கு பின்னர் சமூக மறுசீரமைப்பை மேற்கொள்ள சிறந்த காலமாக இருந்தது. அப்போது அதனை செய்ய முடியாமல் போனது.

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான தொடர்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையில் பார்க்கும் நிலைமை காணப்படுகிறது. அரசு, நிறுவன கட்டமைப்புகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. இவற்றை மாற்றாமல் நாடு ஒரு அடியை கூட முன்நோக்கி வைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

ராஜபக்ஷ ஆட்சியின் பின்னர் அமைந்த அரசாங்கம் பெரியளவில் சமூக மறுசீரமைப்பை மேற்கொள்ளவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தற்போது பேசப்படுகிறது. நவீன உலகில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் அனைத்து நாடுகளிலும் தோல்வியடைந்துள்ளது. பல புதிய அங்கங்களை பல நாடுகள் இதற்கு சேர்த்து வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்ப பெறும் உரிமை அப்படியான ஒன்று.

இலங்கையில் சமூக முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஏற்பட்டால், முதல் சந்தர்ப்பத்திலேயே இலங்கை பல படிகள் முன்நோக்கி செல்லும்.

இதற்காக பொதுஜன அரசியலமைப்பு தொடர்பாக கனவு காண வேண்டும். அதன் மூலம் குரல் எழுப்ப முடியாத மக்களுக்கு, குரலாக மாறும் பொறுப்பு இருக்கின்றது என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.உலகில் இலங்கையை போல் வீழ்ச்சியுற்ற நாடுகள் பொதுஜன அரசியலமைப்பை உருவாக்கியதன் மூலம் வெற்றிகரமாக முன்னேறியுள்ளது" என்று  கூறினார்.

Comment (0) Hits: 166

'தயாசிறி ஒரு வங்கிக் கொள்ளையன்' - கோட்டா தரப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தரப்பே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
 
கோத்தாபய ராஜபக்ஷவின் பிரச்சார நடவடிக்கை குறித்த வேலைத்திட்டங்களில்  ஒன்றாக, கலாநிதி ராஜா தர்மபாலவினால் எழுதப்பட்ட “வீர சபுமல் யலி எவித்” என்னும் நூல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலிலேயே தயாசிறி ஜயசெகர தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது 
 
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
தயாசிறி ஜயசேகரவும் இந்த பட்டியலில் உள்ளடங்குவதாக நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பணத்தைக் கொள்ளையிடவே வெளிநாட்டவர் ஓருவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Comment (0) Hits: 158

'தயாசிறி ஒரு வங்கிக் கொள்ளையன்' - கோட்டா தரப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தரப்பே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
 
கோத்தாபய ராஜபக்ஷவின் பிரச்சார நடவடிக்கை குறித்த வேலைத்திட்டங்களில்  ஒன்றாக, கலாநிதி ராஜா தர்மபாலவினால் எழுதப்பட்ட “வீர சபுமல் யலி எவித்” என்னும் நூல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலிலேயே தயாசிறி ஜயசெகர தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது 
 
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
தயாசிறி ஜயசேகரவும் இந்த பட்டியலில் உள்ளடங்குவதாக நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பணத்தைக் கொள்ளையிடவே வெளிநாட்டவர் ஓருவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Comment (0) Hits: 177

சுதந்திரக் கட்சி – மொட்டு கட்சி ஒப்பந்த இரகசியம் அம்பலம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மொட்டு கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பிலான இரகசியம் அம்பலமாகியுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதநதிரக் கட்சிக்கான சலுகைகள் அனைத்துமே 2018ம் ஆண்டு பிரதேச சபை தேர்தலின் அப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த உடன்படிக்கையின் மூலம், தமது கட்சிக்கு பாரியளவிலான அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் 12ம் சரத்தின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெறும் தேசிய ரீதியான, மாகாண சபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களின் போது வேட்பாளர் எண்ணிக்கை நிர்ணயம் குறித்து விதந்துரைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியினால் ஈட்டப்பட்ட வெற்றிகளின் அடிப்படையிலேயே வேட்பாளர் எண்ணிக்கை பகிரப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சுதந்திரக் கட்சிக்கு அநீதி ஏற்படுத்தக் கூடிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்ட காரணத்தினால் இந்த உடன்படிக்கை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என குறித்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
 
2018ம் ஆண்டு தேர்தலின் அடிப்படையில், வேட்பாளர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டால் சுதந்திரக் கட்சி பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.
Comment (0) Hits: 206

ஐக்கிய தேசிய முன்னணியுடன் கைகோர்க்கும் சந்திரிக்கா!

ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் நாளைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் இடையில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது.

இவ்விரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கிறது.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீனைத் தலைவராகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக ரணவக தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதுடன், அவையனைத்தும் ஒன்றிணைந்து ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் செயற்பட்டு வந்தன. 

இந்நிலையில் இக்கட்சிகள் அனைத்தும் இணைந்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகவே சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டிருக்கின்றார். அ

அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்தாகின்றது.

Comment (0) Hits: 182

சஜித்தின் தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளியிடப்பட்டது!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார்.

கண்டி, குயின்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனாதிபதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து மகாநாயக்கர், அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனம் " சஜித் சமூக புரட்சி" என பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவால் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இதன்போது தௌிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 173

தபால்மூல வாக்களிப்பு - சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை!

தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்றும் நாளையும் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 131

'தேசப்பற்று, தேசியவாதத்தை சுயநலத்துக்கு பாவிக்க முயற்சி' - ஹக்கீம்!

இந்த ஜனாதிபதித் தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்குமிடையில் நடக்கின்ற பாரிய போட்டியாகும். தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்கலமாக வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் பயன்படுத்தும் கும்பலுக்கு எதிராக மக்கள் தங்களது வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (30) வவுனியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

கடந்த அரசாங்கத்தில் பெருந்தொகையானோர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கு எவ்விதமான பொறிமுறைகளுமின்றி அவர்களின் அப்பாவி உறவினர் செய்வதறியாது தவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தின் உத்தரவின் பிரகாரம் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்துள்ளோம்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவில்

பதிவுசெய்ய முடியும். இதன்மூலம்,காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் விதத்தில், அவர்களது குடும்பத்தினரின்பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படும். அத்துடன் இழப்பீடுகளை வழங்கவும் அவர்களின் குடும்பத்துக்கு மறுவாழ்வாழ்வு அளிக்கவும் எம்மிடம் திட்டங்கள் உள்ளன.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களை மீளமைப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனிப்பட்ட வன்மங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல், அட்டூழியங்கள், அட்டகாசங்கள் இனியும் தொடராமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களை தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமூலமாக அமுல்படுத்தியுள்ளோம்.

நாட்டின் இளம் சந்ததியினருக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உருவாக்குகின்ற இளம் தலைவராக சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ளோம்.

இதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, சகவாழ்வை விரும்பும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அவருக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இதைவிட பெரியதொரு ஆறுதலை மக்கள் அடையப் போவதில்லை

Comment (0) Hits: 142

Page 7 of 103