V2025

வடக்கு முதலமைச்சரைச் சந்தித்தார் ஆறுமுகம் தொண்டமான்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.சிக்னேஸ்வரனுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஆறுமுகம் தொண்டமான் கேட்டுக்கொண்டதற்கு அமைய, இச் சந்திப்புக்கு முதலமைச்சர் இணங்கியதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பின்போது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிச் தேர்தல் நிலவரங்கள், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் சிறுபான்மை மக்களின் அரசியல் முன்னெடுப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found