V2025

ஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்!

இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நேற்றைய தினம் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட கோத்தாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் (19) காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதையடுத்து உடனடியாக சில நியமனங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தில் மத்திய வங்கியின், நிதி அமைச்சின் செயலாளராக இவர் கடமையாற்றி இருந்தார்.

நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர்.ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மத்திய வங்கியில் 27 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றியுள்ளதுடன் பிரதி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் பதவியினை வகித்து, திறைசேரிக்கான துணைச் செயலாளராக பணியாற்றுவதற்கு நிதி அமைச்சுக்கு விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் (TRC) பணிப்பாளர் நாயகமாக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.
 
 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found