V2025

தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய முன்னிலையில் - நாடளாவிய ரீதியிலான முடிவுகளில் சஜித் முன்னிலையில்!

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் தபால்மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகிப்பதாக தெரியவருகிறது.

எனினும், நாடளாவிய ரீதியலான வாக்கு எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாக தெரயவருகிறது.

அத்துடன்,  2015ஆம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும் போது, வடக்கு - கிழக்குப் பிரதேசத்தில் வாக்களிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. எனினும், தெற்குப் பிரதேசத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்துள்ளது.

அத்துடன், 2015ஆம் ஆண்டிலும் மஹிந்த ராஜபக்ஷ தபால்மூல வாக்களிப்பில் வெற்றிபெற்றிருந்தாலும். தேர்தலில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
வடக்கு, கிழக்கில் சஜித் பிரேமதாசவிற்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கணிப்புக்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவான தென் இலங்கைப் பிரதேசத்தில் வாக்களிப்பு வீதத்தில் சரிவு காணப்படுவதானால்,  கோட்டாபய ராஜபக்ஷவிற்கான வெற்றிவாய்ப்புக்கள் குறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
 
 
 
 
 
 
 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found