V2025

போலியான தேர்தல் முடிவுகள்; மொட்டுக் கட்சியினரின் போலிப் பிரசாரம் ஆரம்பம்!

தேர்தல் ஆணையகத்தினால் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள் இதுவரையில் அறிவிக்கப்படாத நிலையில்,  உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
 
மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்களினால் பரப்பப்படும் இவ்வாறான போலி தேர்தல் முடிவுகளில்  எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை. அத்துடன், மக்களை திசை திருப்பும் நோக்கிலும், தேர்தல் பணிகளிலும் வாக்கு என்னும் கடமைகளிலும்  ஈடுபட்டிருப்போரை அச்சுறுத்தும் வகையில் கோட்டாவின் ஆதரவாளர்களினால் இவ்வாறன முறைகேடான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகினறது.
 
எவ்வாறாயினும் இரண்டு இலட்சம் வாக்கு வித்தியாசத்தினால் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. 
 
இலங்கையின் 07ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (16) காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில் 5 மணிக்கு நிறைவடைந்தன.
 
இம்முறை ஜானதிபதி தேர்தலில் நாடு முழுவதும் அண்ணளவாக 80 % வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found