V2025

'தேர்தல் கருத்துக்கணிப்பு: அரச புலனாய்வு சேவை தகவல் பொய்' - பொலிஸ் தலைமையகம்!

அரச புலனாய்வு சேவை பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் அறிக்கையை நிராகரிப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி அரச புலனாய்வு திணைக்களத்தினால், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அரச புலனாய்வு அறிக்கை என்ற பேரிலேயே, இந்த அறிக்கை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரப்பப்பட்டுள்ளது.    

இந்த அறிக்கை உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளர் யார்? என்பது தொடர்பில் புலனாய்வு பிரிவு கருத்துக் கணிப்பு மேற்கொண்டதாக போலியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசாங்க புலனாய்வு திணைக்களம், இலங்கை பொலிஸ் திணைக்களம் இவ்வாறான கருத்துக் கணிப்புக்களை மேற்கொள்வதில்லை" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும் சுமுகமான முறையிலும் நடைபெற வேண்டும் என்பதனால் பாதுகாப்பான சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு பொலிஸார் முழுமையான அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

இவ்வாறான போலி கடிதம் தயாரித்து, சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found