V2025

'கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது; போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்' - மங்கள! (video)

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, அனுமதியின்றி கோதுமை மாவின் விலையைஅதிகரித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சபை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட வாழ்க்கை செலவுக் குழு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதி இல்லாமல் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த்துள்ளார்.

அவ்வாறு ஒருசில ஊடக நிறுவனங்கள் வழமை போன்று, மேற்கொண்டுள்ள பொய்  பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Man

இது சட்டவிரோத நடவடிக்கை. கோதுமை மாவின் விலை 8.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found