V2025

'அரசாங்கத்தை ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடகிழக்கு தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை' - மஹிந்த!

அரசாங்கத்திற்கு எல்லாவிதத்திலும் ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடகிழக்கு தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.தமிழ்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் கல்விகற்பதுடன், அங்கு சுகபோகத்தை அனுபவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாள் 10.11.2019 முல்லைத்தீவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கோத்தாபய ராஜபக்ச ஒருபோதும் தென்பகுதியில் சிங்கள மொழியில் ஒரு விதத்திலும், வடக்கிலே தமிழ மக்களுக்கு வேறு விதத்திலும், சர்வதேசத்திலே ஆங்கில மொழியில் வேறு ஒரு விதத்திலும் கூறியதில்லை.

ஏன் அப்படி கூறுகின்றேன் எனில் ஐக்கியதேசியகட்சி வேட்பாளர், சிங்களமொழியில் ஒருவிதத்திலும், தமிழ்மொழியிலே ஒரு விதத்திலும், ஆங்கிலமொழியில் வேறுவிதத்திலும் கூறிக்கொண்டிருக்கின்றார்.

அதேபோன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு, அரசாங்கத்தோடு இணைந்து எல்லாவிதத்திலும் ஆதரவு வழங்கி, அவர்களுக்கு வாக்குகளைவழங்கி இருந்ததோடு மட்டுமல்லாது, வடகிழக்கு தமிழ்மக்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யவில்லை.

இந்த தமிழ்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் அனைவரும், வெளிநாட்டில்தான் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்தோடு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை.

எமது ஆட்சிக்காலத்திலே நாம் செய்த அபிவிருத்தியைத் தவிர இந்த அரசாங்கம், என்ன அபிவிருத்தியைச் செய்ததென ஒவ்வொருவரும் சிந்தித்துப் பாருங்கள்.

அவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மட்டுல்ல, நாடு முழுவதும் எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.

உண்மையில் எமது ஆட்சிக் காலத்தில் பார்த்தால், இந்தப் பகுதியிலும் சரி, அனைத்துப் பகுதிகளிலும் வீதி அபிவிருத்தி, பாலங்கள், பிரதேசமட்டங்களிலும் எமது அபிவிருத்தியில்தான் இவற்றை நாம் சிறப்பாக அமைத்திருந்தோம்.

அதேபோல இந்தக் கடற்கரைப் பிரதேசம் மிக அழகிய பிரதேசமாகும். இந்தப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் நாம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செய்யவேண்டும்.

இந்தப் பகுதியிலே விசேடமாக, ஜீவனோபாய விடயங்களை முன்னேற்றவேண்டிய கட்டாயம் இருக்கின்து.

விவசாயத்தொழிலை மேம்படுத்த நாம் இலவசமாக உரங்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம். அந்த வேலையை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

அதேபோல இந்த பகுதியில் அபிவிருத்தி வேலைகள் இடம்பெறும்போது, வேலைவாய்ப்புகள் கிடைக்கும்போது, கையில் பணம் கிடைக்கும்போது அது தானாகவே உங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துகின்றது.

நாம் எமது காலத்தில் 14ஆயிரம் விடுதலைப்புலி போராளிகளை புணரவாழ்வளித்து, சமூகமயப் படுத்தினோம். அவர்களுக்கு சிவில் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினூடாக வேலைவாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தோம். சிலரை இராணுவத்தில் சேர்த்துக்கொண்டோம், சிவரை பொரிஸ் திணைக்கத்திலே இணைத்துக்கொண்டோம். அவர்கள் தற்போது நன்றாக சேவைசெய்கின்றனர்.

இந்த அரசாங்கம் வந்தவுடன் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திலிருந்து சிலரை வெளியேற்றினர். அவற்றை சிறந்த முறையில்கட்டியெழுப்ப வேண்டுமென நாங்கள் நினைக்கின்றோம்.

இந்த இடங்களில் காணிப் பிரச்சினைகள் இருக்கின்றது அவற்றை தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

நந்திக்கடல் களப்பு பாலத்தினை மறுசீரமைப்புச் செய்வோம் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன். அந்தக் களப்பையும் நீர்நிலையினையும் மீன்பிடித்துறைக்கென ஒதுக்குவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

யுத்தம் என்று வந்தால் இரு தரப்பிற்கும் காயங்கள் ஏற்படும், தமிழ் இளையோரும் மரணிக்கின்றனர். சிங்கள இளைஞர்களும் மரணிக்கின்றனர்.

அவ்வாறு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களைக்கூட சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழக்கூடியவகையில் ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருதரப்பிலும் இருக்கின்றனர். அங்கவீனர்கள் இருக்கின்றனர். அவர்களை நிர்வகிக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அந்தபொறுப்பையும் நாம் நிறைவேற்றுவோம்.

எனவே எதிர்வரும் 16ஆம் திகதி வாக்குச் சாவடிகளுக்குச்சென்று கோத்தாபயவிற்கு வாக்களித்து  வெற்றிபெற செய்யுங்கள் என்றார் .

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found