V2025

சஜித்துக்கு எதிராக சேறுபூசும் காணொளியை வெளியிட தயாராகும் இராஜ்!

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன, புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சேறுபூசும் காணொளி ஒன்றை வெளியிட தயாராகி வருவதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன, “புதல்வரே! நவம்பர் 13ம் திகதி வடக்கு திசை நோக்கி உங்களது ஸ்மார்ட் போனை சுப நேரத்தில் பார்ப்பீராக?" எனக் கூறியுள்ளார்.

மறுபுறம் ஒரு வேட்பாளருக்கு தேர்தல் நெருங்கும் போது சேறுபூசுவது தார்மீகமானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இராஜ் வீரரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found