V2025

'சஜித்தின் வெற்றி மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது' - இராதாகிருஷ்ணன்!

சஜித் பிரேமதாசவின் வெற்றியானது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவுள்ளதென பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறுவது பிரதேச சபைத் தேர்தலோ, நகரசபைத் தேர்தலோ, மாகாண சபை தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ அல்ல. இது இந்த நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் தேர்தல்.

எதிர்வரும் ஜந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டையும் மக்களையும் முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

அவர் அனுபவமும் திறமையும் உள்ளவராகவும் மக்களின் மனங்களை புரிந்தவராகவும் ஊழலற்றவராகவும் இருக்க வேண்டும்.

அப்படியானால் அதற்கு பொருத்தமானவர் அமைச்சர் சஜித் பிரேமதாச என்பதை இன்று இந்த நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். எனவே அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found