V2025

சுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்கும் போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
 
கட்சியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், சந்திரிக்கா அம்மையார் அரசியல் ரீதியான முனைப்புக்களை ஆரம்பித்துள்ளார்.
 
இந்த நடவடிக்கைகளுக்கு அர்ஜூன ரணதுங்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சந்திரிக்கா நாடு திரும்பியதும், இது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதியாக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்க எடுக்கபட்ட தீர்மானத்திற்கு, சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found