V2025

இராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல்  ஆணைக்குழு எவ்வாறு பக்கச்சார்ற்ற நிலையில் செயற்படும்? என்பது குறித்து மக்கள் மத்தியில் பாரிய கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பிரபல அரசியல் விமர்சகரும் மூத்த ஊடகவியலாளருமான குசல் பெரேரா இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
ஓய்வு பெற்றுக்கொண்ட படை அதிகாரிகள் மற்றும் தற்போதைய இராணுவத் தளபதியையும் உள்ளடக்கி சிங்கள பத்திரிகையொன்றில் தேர்தல் பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு அசமந்த போக்கினைப் பின்பற்றி வருகின்றமை கவலையளிக்கின்றது என அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தேர்தல் ஆணைக்குழு உரிய முறையில் தனது கடமையை செய்யத் தவறியுள்ளதாக, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு குசல் பெரேரா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
 
வாக்காளர்களுக்கு கடுமையான தாக்கத்தைச் செலுத்தக் கூடிய இந்த சட்டவிரோத விளம்பரம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  அவர் அக்கடிதத்தில்  சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found