V2025

'அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவேன்' - கோட்டா! (VIDEO)

(VIDEO)

அறிவு மற்றும் தகைமைகளின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹா, கட்டான பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நடைமுறை உலகில் பொருளாதார மத்திய நிலையமாக ஆசியா விளங்குவதாகவும் அதிலும், முக்கியமான நாடாக இலங்கை விளங்குவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து சந்தர்பங்களிலும் மக்கள் உழைப்பில் நம்பிகை கொண்டுள்ளதாகவும் அதனூடாக, நாட்டில் உள்ள இளைஞர் - யுவதிகளுக்கு தொழில்வாய்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான சிறந்த வாய்பை ஏற்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் கல்விக்காக பெருந்தொகை நிதியை செலவிட எதிர்பார்ப்பதாகவும் அதனூடாக அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வியை வழங்க தீர்மானித்துள்ளதாகவும்  தெரிவித்த அவர், இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கு தாம் அளித்த அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found