V2025

கோட்டாவின் பிரஜாவுரிமை விவகாரம்; வெயங்கொட - சந்ரகுப்த CIDயில் முறைப்பாடு!

கோத்தாபயவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்த விவகாரம்தொடர்பில் நீதிமன்றில் எழுத்தாணை மனுத்தாக்கல் செய்த காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகி­யோர் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் குறித்து குற்றப்பு புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில்  'செட்­டி­யோ­ராரி' எழுத்­தானை  மனுவை தாக்கல் செய்தமைக்காக தாம் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளான காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகி­யோர் குற்றப்பு புலனாய்வுப் பிரிவினர் என்ற அழைக்கப்படும் சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்துள்ளனர்.

இவ்வாறு மரண அச்சுறுத்தலை எதிர்கொள்வதானது வேள்ளை வேன் காலாசாரத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும், அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் உருவாகுவதை தாம் விரும்பவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found