V2025

சுதந்திரக் கட்சி கோட்டாவிற்கு ஆதரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் பொதுஜன முன்னணியுடன்; சுதந்திர கட்சி நாளை கைச்சாத்திடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்காக பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
 
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவுக்கே ஆதரவினை வழங்கவுள்ளதாக நிமல் சிறிபாலடி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found