V2025

ரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு!

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று பிற்பகல் (22) இடம்பெற்ற பேச்சுவார்த்தை  வெற்றிகரமாக நிறைவடைந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியில் எந்தவொரு பிரிவினையும் இல்லாமல், வாக்கெடுப்பின்றி, செயற்குழுவின் ஒப்புதலுடன் வேட்பாளரை தெரிவு செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் செயற்குழுவில் புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் அலரி மாளிகையில்  இடம்பெற்ற இந்த சந்திப்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐ.தே.மு யின்  ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக   கட்சியின் உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க்கும் விதத்தில், கூட்டத்தின் மத்தியஸ்தராக செயல்பட்டிருந்தார்.

இதேவேளை, இந்த விடயம் சம்பந்தமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான  மற்றுமொரு  சந்திப்பு, நாளை (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found