V2025

ரணில், கரு, சஜித் இன்று விசேட சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இன்று விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்றைய சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது என கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாகவும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை. இருப்பினும், இன்றைய பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு ஏறப்டுத்திக்கொள்ளப்படும் என இருதரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
 
இதேவேளை, பிரதமரின் தரப்பு முக்கியஸ்தர் ஒருவர், கரு ஜயசூரியவின் இல்லத்தில் வைத்து சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
செயற்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் உத்தேசம் கிடையாது என பிரதமர் தரப்பு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு எவ்வித முரண்பாடுகளும் இன்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found