V2025

கோட்டாவின் சார்பில் செயற்படும் அமைச்சர் யார்?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் சார்பில், செயற்பட்டு வரும் அமைச்சர் யார்? என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதியுடனான தொலைபேசி உரையாடல் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தொலைபேசி உரையாடல், கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சாதகமான அடிப்படையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றி வரும் தில்ருக்ஷி, இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குரல்பதிவு வெளியிடப்பட்டதன் பின்னர், தொலைபேசி உரையாடல் முழுவதனையும் வெளியிடுமாறு தில்ருக்ஷி கோரியுள்ளார்.
ஏனெனில், முழு உரையாடலையும் வெளியிட்டால் எந்த அமைச்சர் தம்மிடம் தொலைபேசியை வழங்கினார்? எவ்வாறான ஓர் சூழ்நிலையில் தாம் இதனை தெரிவித்தேன்? என்பது பற்றிய விபரங்கள் அம்பலமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சி அமைச்சர்கள்,  மஹிந்த ராஜபக்ஷ  தரப்புடன் எவ்வாறு உறவு பேணி வந்தார்கள் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரே இந்த தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தில்ருக்ஷிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திக் கொடுத்த அந்த அமைச்சர் யார்? என்பதனை அவர் தெளிவுபடுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found