V2025

கேம் பிளானை மாற்றும் ரணில் – செயற்குழுவுக்கு புதிதாக 30 உறுப்பினர்கள்! (VIDEO)

(VIDEO)

எதிர்வரும் புதன்கிழமை (25) நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாகவும், அச்சந்தர்ப்பத்தில சஜித் பிரேமதாஸ அல்லது வேறு யாருடைய பெயர்களேனும் முன்மொழியப்பட்டால், இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கோள்ளப்பட்டுள்ளன என்றும் பிரதமருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க வின் செயற்குழுவிற்கு பல புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக, வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் மேற்கண்டவாறு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின் படி, செயற்குழுவில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பொருத்தமான நபர்களை நியமிப்பதற்கான முழு அதிகாரமும் கட்சித் தலைவருக்கு உண்டு எனவும் எந்தவொரு சூழ்நிலையிலும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமாதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க செயற்குழு 90 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டிய நிலையில், தற்பொழுது 63 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு பகிரங்கமாக தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found