V2025

கோட்டா கடவுச்சீட்டு விவகாரம் - விசாரணைகள் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு முறையற்றது என, காவல்துறையில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
கடந்த 14 ஆம் திகதி காவல்துறை தலைமையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த முறைப்பாடு தொடர்பில், பரிசீலனைகளை மேற்கொள்வதற்காக குறித்த முறைப்பாடு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, குறித்த முறைப்பாடு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
இந்த நிலையிலேயே, முறைப்பாடு தொடர்பில் ஆரம்பக் கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, புதுக்கடை பிரதான நீதவானிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம், முதல் அறிக்கையொன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found