V2025

சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்க்ஷி கோட்டாவுக்கு வழங்கிய வாக்குறுதி அம்பலமானது! (VIDEO)

(VIDEO) 
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரலான தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்து குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னதாகவே அவர், இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளார்.
லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய போது, இவ்வாறு அவர்  உறுதிமொழி வழங்கியுள்ளார்.
கோத்தாபயவிற்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தாம் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என கூறியுள்ளார். அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளதுடன், அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தமைக்காக தாம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் உண்மையானதா? என்பதனை அறிந்து கொள்ளும் நோக்கில் தில்ருக்ஷியை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
இதேவேளை, அவருக்கு எதிராக ராவனா பலய மற்றும் சிங்களே ஆகிய அமைப்புக்கள் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளன.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் தலதா அதுகோரள, சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் அரசியல் தலையீடு எதுவும் கிடையாது எனவும் அவ்வாறு எவரேனும் குற்றம் சுமத்தினால், அது குறித்த கவல்களை எதிர்நோக்குவதற்கு தாம் தயார் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தில்ருக்ஸி பதவி விலகக் காரணம்!
 
லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய தில்ருக்க்ஷி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்படுத்திக்கொண்ட முரண்பாடுகளின் காரணத்தினாலேயே   தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found