V2025

ரவூப் ஹக்கீம் மீது கை வைக்க இடமளியோம் - நீதி அமைச்சர்! (VIDEO)

(VIDEO)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் மீது கை வைக்க இடமளியோம் என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கூட்டுத் தீர்மானத்திற்கு புறம்பாக செயற்படுகின்றார் என்ற அடிப்படையில், ஹக்கீமிற்கு எதிராக எவ்வித விசாரணைகளுக்கும் இடமளிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அமைச்சர் ஹக்கீமிற்காக அனைவரும் இணைந்து குரல் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக, 1994ம் ஆண்டு முதல் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அனைவரும் வாக்குறுதி அளித்து வந்துள்ளனர், சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இவ்வாறு உறுதிமொழி வழங்கியிருந்தனர்.
 
எனினும், இந்த மூன்று ஜனாதிபதிகளில் தனது அதிகாரங்களை குறைத்துக் கொள்வதற்கு தன்னார்வ அடிப்படையில் இணங்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமேயாகும். ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் மாற்றம் ஏற்படும் என பலர் கருதினார்கள்.
 
எனினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தல் மற்றும் தேர்தலை இரத்து செய்தல் என்பனவற்றுக்கு நாம் இணங்கப் போவதில்லை.
 
நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்வது தொடர்பில், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயிருந்தால் அதனை கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் மேற்கொண்டிருக்க வேண்டும்.
 
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
 
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்வதாக அறிவிப்பது நியாயமற்றது, இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல.
 
கட்சியின் ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கும் கடப்பாடு காணப்படுவதனால், இந்த விடயம் தொடர்பில் அதிகமாக எதனையும் பேச விரும்பவில்லை என தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found