V2025

"நாட்டு மக்கள் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்துவிட்டனர்" - மங்கள!

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என  நிதிஅமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய  இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
"என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று (07) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த  நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று (06) விஜயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர,   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்  சஜித்  பிரேமதாஸவிற்கு ஆதரவாக பதுளை, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டங்களில்  அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டிருந்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஐனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித்  பிரேமதாஸவை மக்கள் தெரிவுசெய்துவிட்டனர் எனவும்  அவர் மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found