V2025

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்படவிருந்த சலுகையை நிறுத்திய மங்கள!

மாகாணசபைகளின் முன்னாள் அமைச்சர்களுக்கு வரிச் சலுகை அடிப்படையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.
 
பதவிக்காலம் பூர்த்தியாகியுள்ள மாகாணசபைகளின் முன்னாள் அமைச்சர்களுக்கு, இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினால், இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
எனினும், இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என நிதி அமைச்சர் திட்டவட்டமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து குறித்த யோசனை, பின்னர் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
35000 அமெரிக்க டொலர்கள் வரையில் தீர்வையற்ற அடிப்படையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
 
வட மாகாணசபையின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தோருக்கு, இந்த தீர்வையற்ற வாகன இறக்குமதி சலுகை வழங்கப்பட்ட போதிலும், ஏனைய மாகாணசபைகளுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.
 
எனினும், பதவிக் காலம் பூர்த்தியாகியுள்ள மாகாணசபைகளின் முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு இந்த சலுகையை எவ்வாறு வழங்குவது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found