V2025

ஹெக்டர் அப்புஹாமியின் அழைப்பின் பேரில் சஜித் புத்தளம் விஜயம்!

புதிதாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை பொதுமக்களிடம் கையளிக்கவும், பல்வேறு புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்குமுகமாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியின் அழைப்பின் பேரில், அமைச்சர் சஜித் பிரேமதாஸ புத்தளத்துக்கு வருகை தரவுள்ளார்.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியின் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு எதிர்வரும் வெள்ளிகிழமை 06 ஆம் திகதி அமைச்சர் சஜித் பிரேமதாஸ புத்தளத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

“சிசு தஹாம் செவன” செயற்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி மூலம், எம்.பி ஹெக்டர் அப்புஹாமியால் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பௌத்த, கத்தோலிக்க, முஸ்லிம் மற்றும் இந்து மதஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found