V2025

"நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தக்கூடிய நபருக்கே எமது ஆதரவு" - ரிஷாட்!

{VIDEO}

தங்களுடைய கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், ஜனாதிபதி தேர்தலிற்கான நாள் குறிக்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"தற்போது நாம் ஐக்கிய தேசிய முன்னணியிலேயே இருக்கிறோம். புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. அதுதொடர்பில் உறுதியான முடிவுகள் எதுவும் இதுவரையில்  எடுக்கப்படவில்லை. 

நாட்டிற்கு அன்பு செலுத்தும், சமதானம் மற்றும் நல்லினக்கத்தை நாட்டினுள் ஏற்படுத்தக்கூடிய, பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ஒருவருக்கே எமது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவோம்" என்றார்.

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என ஊடகவியாலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

"அந்த விடயம் தொடர்பில், முதலில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் எமது கட்சி அது குறித்து முடிவு எடுக்கும். வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இறுதி தீர்மானத்தை நாம் எடுப்போம்" என்றார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found