V2025

ரணில்-ரவி-லசந்த பிரிவினரின் இரகசிய திட்டம்; குறுக்குவழியில் வேட்பாளராகும் ரணில்!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிலரினால் இரகசியமாக மேற்கொள்ளபட்ட திட்டம் குறித்து சிங்கள இணையத்தளமான “தி லீடர்” செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த இரகசிய கூட்டத்தில் “கிரீன் பிளட்” அமைப்பின் அமைப்பாளர் லசந்த குணவர்தன மற்றும் ரவி கருணநாயக்க, வஜிர அபேவர்தன, அகில விராஜ் காரியவசம், சாகல ரத்நாயக்க, திலக் மாரப்பன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த வாரம் தொடக்கத்திலேயே பிரதமர் உடனடியாக ஐ.தே.க செயற்குழுவைக் கூட்டவுள்ளார்.

ஐ.தே.க செயற்குழுவானது 90 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், இதுவரையில் 63 பேர் மட்டுமே அதில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்துவதற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செயற்குழுவில் 30 புதிய நியமனங்கள்!

இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு உடனடியாக 30 உறுப்பினர்களை செயற்குழுவிற்கு பரிந்துரைக்க இந்தக் கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டதுடன், அதற்குரிய பெயர்களும் அத்தருணத்திலேயே முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பெயர் பட்டியல் தொடர்பில் நாளை (26) தேர்தல் ஆணையாளர் செயலகத்திற்கு அறிவிக்கப்பட உள்ளதுடன் செயற்குழுவைக் கூட்டி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீமாணிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான சட்டரீதியான விடயங்கள் அமைச்சர் திலக் மாரப்பனவிடமும் ஊடக நடவடிக்கைகள் லசந்த குணவர்தனவிடமும் ஏனைய கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு விடயங்கள் ரவி கருணாநாயக்கவுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ரணிலின் வாக்குறுதியின் இறுதி தினம்!

ஐ.தே. கட்சியின் யாப்பின் படி, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினரின் ஆதரவின் பேரிலேயே ஜனாதிபதி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் செயற்குழுவையும் ஒருமிக்க அழைக்குமாறு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையான ஐ.தே.க எம்.பிக்களினால், கடந்த திங்கட்கிழமை 19 ஆம் தேதி பிரதமரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த புதன்கிழமை (21) பிரதமரை சந்தித்த கட்சியின் மூத்த அமைச்சர்களான கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டாரா ஆகியோரும் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இது குறித்து நாளை திங்கட்கிழமை (26) முடிவெடுப்பதாக பிரதமர் உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியின் நாளையுடன் நிறைவடைகிறது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found