V2025

கோட்டா வெற்றிபெற்றால் சஜித்,சம்பிக்க,ராஜித சிறையில்!!!

தனது ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் சஜித் பிரேமதாச, பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகிய மூன்று அமைச்சர்களை சிறையில் அடைக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இந்த அமைச்சர்கள் மூவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து தமது அமைச்சுக்கு சொந்தமான மக்கள் பணத்தை வீணடிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (22) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இன்னும் 89 நாட்களின் பின்பு அவர்களை கட்டாயமாக சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அமைச்சர்களை சிறையில் அடைக்க தான் தயாராக இருப்பதை நினைவில் கொண்டு வேலை செய்யுமாறு சம்பந்தபட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிதி மேலாளர்களையும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found