V2025

1326 : சஜித்தின் ஜனாதிபதி போராட்டத்துக்கு மாத்தறையில் இலக்கம் அறிமுகம்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பளராக நியமிக்கப்படவிருக்கும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தகவல்களை தெரிந்துகொள்வதற்கும், உங்களது ஒத்துழைப்பை வழங்குவதற்கும்  விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று இன்று (23) மாத்தறையில் இடம்பெறவுள்ள மக்கள் பேரணியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்களது தொலைபேசியில் 1326 என்ற இலக்கத்துக்கு அழைப்பை (மிஸ்கோல்) ஏற்படுத்துவது மாத்திரமே. அதன் பிற்பாடு தேர்தல் நடவடிக்கைகளின் சகல தகவல்களையும் உங்களுக்கு பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

WhatsApp Image 2019 08 23 at 10.54.42 AM

சஜித் பிரேமதாஸ பங்கேற்கும் மக்கள் பேரணி இன்று பி.ப 3.00 மணிக்கு மாத்தறை, சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள அதேவேளை, மாலை 5.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை "சிரச" தொலைக்காட்சியில் நேரலையாக இந்த நிகழ்வுகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

Sirasa Post

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found