V2025

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு!

சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் டி.வி.சானக உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று (11) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். 

முறைப்பாடளிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தாவது,

"முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழ் நாடளாவிய ரீதியில் 42 நிறுவனங்கள் காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றான சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுகின்றன. 

அத்தோடு ரிஷாட்டுக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்யும் 52 ஊழியர்களுக்கு சதொச நிறுவனத்திற்கூடாகவே சம்பளம் வழங்கப்படுகின்றது. இது மாத்திரமின்றி அவருக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியொன்றின் ஊழியர்களுக்கு அரச நிதியிலிருந்தே சம்பளம் வழங்கப்படுகிறது. இவற்றுக்கான ஆதாரங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. அந்த ஆதரங்களுடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளோம். 

ரிஷாட் பதியுதீன் மாத்திரல்ல. தற்போது அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற 30 அமைச்சர்களில் 20 பேர் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பிலும் வெகு விரைவில் வெளிப்படுத்துவோம்." என்றார்.

அண்மைக்காலமாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பலரும் சுமத்தி வருகின்ற நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கள் எதுவுமே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அந்தவகையில் அதன் ஒரு அங்கமாக தற்பொழுது இன்று இந்த முறைப்பாடு மேற்கொள்ளபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found