V2025

"தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இல்லை; சஹ்ரானை இயக்கியவர்கள் யார்?"- தயாசிறி

(Video)

ஈஸ்டர் தாக்குதல் அன்று முக்கிய ஹோட்டல்களில் குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாத்திரம் ஏன் குண்டு வெடிக்கவில்லை. அப்படியென்றால் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்தவர்கள் யார்? இது பாரிய சந்தேகமாக உள்ளது என பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர எம்.பி தெரிவித்தார். 

சஹ்ரானை யாரோ சிலர் இயக்கியுள்ளனர். இவர்கள் ஐ.எஸ் சார்ந்தவர்கள் அல்ல எனவும் சர்வதேச சக்திகளின் தலையீடுகள் இருந்துள்ளது என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறினார். 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில்  நீங்கள் கூறிய விடயம் தொடர்பாகவே விளக்கமளிக்க வேண்டும். ஆங்கில பத்திரிகை  ஒன்றிற்கும் தனியார் தொலைக்காட்சியிலும்   ஈஸ்டர் தாக்குதல் குறித்து உங்களுக்கு தெரிந்திருந்தது என கூறியுள்ளீர்கள். 

தயாசிறி :- எனக்கு தெரியும் என நான் கூறவில்லை. 

தெரிவுக்குழு:- அந்த காணொளியை நாம் தற்போது கட்டுகின்றோம்  பாருங்கள் அதன் பின்னர் நீங்கள் தீர்மானிக்கலாம்.  (தெரண தொலைகாட்சியில் தயாசிறி எம்.பி வழங்கிய  பேட்டி திரையிடப்பட்டது) 

கேள்வி:-  உங்களிடம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அரசாங்கதின் பக்கமோ பாதுகாப்பு தரப்பிடமோ குறைபாடுகள் இருக்கின்றதாக இருந்தால் அதனை நிவர்த்திசெய்யவே நாம் இந்த விசாரணைகளை நடத்துகின்றோம். 

பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்கு நாம் ஆழ்ந்த அனுதாபங்களை கூறவேண்டும். இதனால் பல பாதிப்பு ஏற்பட்டது. எனினும் இந்த தாக்குதலுக்கு பின்னர் நிலைமைகளை கட்டுப்படுத்த கர்தினால் மற்றும் ஏனைய தலைமைகள் எடுத்த முயற்சிகளை நாம் மதிக்க வேண்டும். அத்துடன் இந்த தாக்குதலை பாராளுமன்றத்தின் 225 பேரும் அறிந்திருந்தனர் என கூறுகின்ற கருத்து தவறானது. 

எனக்கு இது குறித்து தெரியாது. இந்த விடயம் தொடர்பாக எனது பாதுகாப்பு பிரிவினர் எனக்கு எதனையும் கூறவில்லை. இவ்வாறான காரணிகளை என்னிடம் கேட்கும்போது நாம் சில காரணிகளை கூறுவோம். அவ்வாறான ஒரு ஊடக சந்திப்பில் கூறிய காரணிகளை தான் தெரிவுக்ககுழுவும் இன்று வினவுகின்றது. உண்மையில் தாஜ் சமுத்திராவில் ஏன் குண்டு வெடிக்கவில்லை என்ற கேள்வி என்னிடம் உள்ளது. ஏன் ஏனைய இடங்களில் வெடித்த குண்டுகள் தாஜ்சமுதிராவில் வெடிக்கவில்லை. ஏன் அந்த நபர் வெளியில் சென்று வேறு இடத்தில் வெடிக்க வைத்தார். ஏனைய மூன்று ஹோட்டல்களில் குண்டு வெடித்தது அப்படி இருக்கையில் தாஜ் சமுத்திரஹோட்டலில் மாத்திரம் வெடிக்காமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வியை நான் எழுப்பினேன். இது குறித்து தேடிப்பார்க்க வேண்டும். தெரிவுக்குழு இதில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டு இது செய்யப்பட்டதா? ஹோட்டலில் முக்கிய நபர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது ஆகவே இது குறித்து ஆராய வேண்டும். 

கேள்வி:- உங்களுக்கு இது குறித்து விசேடமாக ஏதேனும் தெரியுமா?

பதில்:- விசேடமாக ஏதும் தெரியாது. பல பல காரணிகளை கூறுகின்றனர் அதில் உண்மையும் இருக்கலாம் பொய்யும்  இருக்கலாம், அகவே தான் நான் இது குறித்து கேள்வி எழுப்பினேன். 

கேள்வி:- உங்களின் கருத்துக்களை   கேட்டதும் உங்களுக்கு தெரியும், யாரோ  ஒருவர் மீது உங்களுக்கு  சந்தேகம் இருக்கிறது. ஆனால் எதோ ஒரு காரநிக்காக நீங்கள் மூடி மறைக்கின்றீர்கள் என்றே விளங்குகின்றது. இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவேன்டுமென நீங்கள் நினைகின்றீர்களா?

பதில்:- ஆம் விசாரணைகள் நடத்தப்பட  வேண்டும்.  மூன்று ஹோட்டல்களில் குண்டு வெடிக்கிற நிலையில்  தாஜ் சமுத்திராவில் குண்டு வெடிக்காது இருக்கவும் அந்த நபர்  தெஹிவளையில்  வேடிக்கவைக்கவும் என்ன காரணம்.  ஏன் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிக்கவில்லை என்பது எம் அனைவருக்கும் உள்ள பிரச்சினையாகும். வேறு இடங்களிலும் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் இதனை சாதாரணமாக கருத முடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லையே.

கேள்வி:-  அந்த குண்டு வெடிக்காததால் ஏதோ  ஒரு காரணத்துக்காக வெடிக்க வைக்கப்படவில்லை என கருதலாமா?

பதில்:- உங்களுக்கு அவ்வாறு எண்ணத்தோன்றும். எனக்கு நான் கூறியதை போன்று எண்ணத்தோன்றுகின்றது. ஏன் வெடிக்கவில்லை என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. 

கேள்வி:- நீங்கள் கூறுவதை போல் பார்த்தால் இந்த ஹோட்டலில் எவராவது முக்கிய நபர் இருந்திருக்க வேண்டும் அதனால் வெடிக்காது தடுக்கப்பட்டுள்ளது என்ற கற்பனைக் கதைகள் மாதிரி உருவாகும்.

பதில்:- இது கட்டுக்கதை இல்லையே.  இது குறித்து சரியான விசாரனையை மேற்கொள்ளுங்கள். கடந்த கால தாக்குதல்கள் தொடர்பாக நீங்கள் சரியான தகவல்களை  பெறலாம். நீங்கள் இராணுவத் தளபதியாக இருந்தவர். அது உங்களுக்கு மிகவும் இலகுவானதாக அமையும் என நினைக்கிறேன். கடந்த காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து தெரியும். இதன் உண்மைகளை கண்டறிவது பெரிய விடயம் அல்ல. தாஜ் ஹோட்டலில் இருந்தவர்கள் யார் என கண்டறிந்தால் அடுத்த கட்ட விடயங்கள் வெளிவரும். 

கேள்வி:- நீங்கள் கூறுவதை போல் பார்த்தல் எல்.ரி.ரி.இ காலத்தில் தெஹிவளை புகையிரதத்தில் வெடிகுண்டு இருந்தது. வெயாங்கொட புகையிரதத்தில் வெடிக்கவில்லை. அப்படியென்றால் அதில் கூற முடியுமா வெயாங்கொட புகையிரதத்தில் யாரோ இருந்தார்கள் அதனால் வெடிக்கவில்லை என கூறமுடியாதே?

பதில்:- அவ்வாறு இல்லை இன்னொரு மாதிரி கூற முடியும். வெயாங்கொட  புகையிரதத்தில் சென்ற நபர் வெடிக்க வைக்காது சென்றார் என்று கருதலாம். அது மாதிரியே இதுவும். 

கேள்வி:- அப்படியென்றால் தாஜ் ஹோட்டலில் இருந்தவருக்கு ஏதேனும் கருத்து பரிமாற்றல்கள் இடம்பெற்றது என்றால் அவர் தொலைபேசியில் பேசியதையோ அல்லது வேறு விதத்தில் எதையாவது பார்க்க வேண்டுமே. ஆனால் அவ்வாறு எதுவும் இல்லையே. அப்படி இருக்கையில் எவ்வாறு அவ்வாறு கருதுவது?

பதில்:- நான் அவ்வாறு கூறவில்லையே நீங்கள் தான் இவ்வாறான காரணிகளை கூறுகின்றீர்கள். நான் கூறுவது என்னவென்றால் ஏன் அவர் ஹோட்டலில் இருந்து வெளியேறினார், அன்று ஹோட்டலில் இருந்தது யார்? யார் காலை உணவு உன்ன வந்தவர்கள்? இரவு தங்கியிருந்த நபர்கள் யார்? இந்த விடயங்களை கண்டறிய வேண்டும். தாஜ் சனுத்திர ஹோட்டலில் இருந்தவர்கள் யார் என்ற காரணியை கண்டறிந்தால் பல உண்மைகள் வெளிவரும். உண்மையிலேயே குண்டு வெடிக்காத காரணத்தினால் தான் அவர் வெளியேறினாரா இல்லை வேறு காரணமாக் என ஒரு முடிவுக்கு வர முடியும். 

கேள்வி:- . இந்த கூற்றை  வெளியிடுவதற்கு நீங்கள் ஏதாவது தகவலை பெற்றிருந்தீர்களா ? ஏனென்றால் எம்மிடம் இந்த காரணிகள் ஏதும் இல்லை. உங்களுக்கு தெரியுமாக இருந்தால் அது உதவியாக இருக்கும்.?

பதில்:- நான் நம்புவது என்னவன்றால் சஹாரானை யாரோ ஒரு குழு பயன்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை தாரியாக இருந்தால் அவருக்கு என்கிருது இந்த அழுத்தம் வந்தது யார் வழிநடத்தியது என்றதை கண்டறிய வேண்டும். ஒரு அரசியல் வாதியாக இந்த நோக்கத்தில் நான் பார்க்கின்றேன். இன்று நாட்டில் நடக்கும் அரசியல் நிலைமைகளில் பல்வேறு நாடுகளின் தலையீடுகள் இதில் உள்ளது. பல நாடுகள் இந்த நாட்டில் ஆட்சியை வீழ்த்த ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆகவே அரசாங்கத்தை மாற்றவோ நாசமாக்கவோ ஜனாதிபதியை நாசமாக்கவோ அல்லது வேறு அதிகாரங்களை கைப்பற்றவோ ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச தலையீடுகள் உள்ளது என்றே நான் கருதுகிறேன். 

கேள்வி:- கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்  இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் ஆலயங்களுக்கும் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக கூறப்பட்டது. இதில் கத்தோலிக்க தேவாலயங்கள் தாக்கப்பட்டது ஆனால் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்படவில்லை. இதில் ஏதேனும் தொடர்புகள் இருக்கும் என நினைகிறீர்களா?  

பதில்:- அவ்வாறு என்னால் எதனையும் கூற முடியாது. தற்கொலைதாரி ஒருவர் ஒரு இடத்துக்கு சென்று ஏன் அங்கு தற்கொலை செய்யவில்லை என்ற கேள்வியே எனக்கு இருந்தது. வேறு காரணிகள் எனக்கு தெரியவில்லை. 

கேள்வி:-  இலங்கையில் இந்த தாக்குதலின் பின்னால் ஐ.எஸ் உள்ளதாக நிரூபிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் வேறு தரப்பை குற்றம்  கூற முடியுமா? இதனை திசைதிருப்பும் வகையில் அமையாதா? இப்போதே இது ஐ.எஸ் என்று உறுதியாக தெரிகின்றது, அவ்வாறு இருக்கையில் ஏன் கதையை மாற்றவேண்டும்? 

பதில்:- நான் திசைதிருப்பவில்லை, இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை. பிரதமரின் உரையினை பாருங்கள், அமைச்சர் கிரியெல்ல கூறிய காரணிகளை பாருங்கள். அவர்கள் ஆரம்பத்தில் இதனை ஏற்றுகொள்ளவில்லை. 

கேள்வி: அரசியல் வாதிகள் பல பல கதைகளை கூறினார்கள் ஆனால் ஐ,எஸ். என உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 

பதில் :-  இந்த தாக்குதலில் ஐ.எஸ் தொடர்பு பட்டதனை யார் உங்களுக்கு கூறினார்கள் . எந்த அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது? அதனை வெளிப்படுத்துங்கள் நான் நம்புகின்றேன். ஐ,.எஸ் தான் என உறுதியாக கூறுங்கள் அப்போது நான் நம்புகின்றேன். இன்றும் இது குறித்து விசாரணைகள் சரியான நடக்கவில்லை என கர்தினால் கூறுகின்றார். வத்திகானில் சென்று அழுகின்றார். 

கேள்வி : அப்படியென்றால்   தெரிவுக்குழு  விசாரணைகள் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. ஏனைய விசாரணைகளில் நம்பிக்கையில்ல என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?   

பதில்:- நான் அவ்வாறு கூறவில்லை, நீங்கள் தான் கூறுகின்றீர்கள். விசாரணைகள் கைதுகள் இடம்பெற்றுள்ளன. கர்தினால் வத்திகானில் அழுதுகொண்டு கருத்து கூற நேர்ந்தது குறித்தே நான் கூறினேன், எதிர்காலத்தில் தாக்குதல் நடக்கும் என மக்கள் நினைக்கின்றனர்.   இரண்டு வருடங்களில் இந்த பிரச்சினையை முடிக்கலாம் என கூறினீர்கள் ஆனால் அது முடியாது. இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதில் நம்பிக்கையில்ல என்றே கூறினேன். 

கேள்வி:- நானும் அதைத்தான் கூறுகின்றேன். கண்டிப்பாக இன்னொரு தாக்குதல் நடக்கும் என்றே நான் கூறுகின்றேன். அப்படியென்றால் நீங்களும் எனது நிலைப்பாட்டில் தான் உள்ளீர்கள் என?

பதில்:- இல்லை நான் உங்களின் நிலைப்பாட்டில் இல்லை. இன்று உலகில் அணைத்து பகுதிகளிலும் பயங்கரவாதம் உள்ளது. அகவே தான் பாதுகாபு வேண்டும் என்று கூறுகின்றேன் . இன்று சர்வதேச நாடுகளில் இந்த அச்சுறுத்தல் சகல பகுதிகளில் உள்ளன. யார் இயக்குவது என தெரியாது. நாம் அன்றாட அரசியல் விளையாட்டில் உள்ளோம், இதனை அரசியலாக்க வேண்டாம், ஜனாதிபதியை, ஏனையவைகளை சாட்டி அரசியல் செய்ய வேண்டாம். நாம் பலமாக தேசிய பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்றே கூறுகின்றேன். 

கேள்வி:- இங்கு உங்களு கூப்பிட்டது அரசியல் பிரசாரம் செய்வதற்காக அல்ல. . மற்றவர்களின் நிலைப்பாட்டை தவிர நீங்கள் என்ன நினைக்கின்றீர் என கூறுங்கள். எந்த சர்வதேச நாடுகளின் தலையீடுகள் உள்ளது என கூறுங்கள். 

பதில்:- இந்த நாட்டில் உள்ள நிலையில் என்னால் சர்வதேச நாடுகளின் மீது குற்றம் சுமத்த முடியாது. இந்த நாட்டில் நிலைமைகளை பாருங்கள், தெற்கில் துறைமுக போராட்டம், திருகோணமலை சிக்கல்கள், சர்வதேச உடன்படிக்கைகள் என அனைத்தையும் பாருங்கள். இதில் பல நெருக்கடிகள் உள்ளது. ஏனைய நாடுகளை விட எமது நாட்டில் மக்கள் அச்சுருதளில் உள்ளனர். அதனையே நான் சரியாக கண்டறிய வேண்டும் என கூறுகின்றேன். 

கேள்வி:- : திரை மறைவில் ஒரு சக்தி இருப்பதாக கூறுகின்றீர்கள் இது வரை வெளிப்படுத்தப்பட்ட தகவல்களில் ஒருவர் துருக்கி சென்றார் ஆனால் அவர் சிரியாவுக்கு சென்றாரா என்று உறுதியாகவில்லை. அதேபோல் இந்த தாக்குதலை ஐ.எஸ் ஏற்றுகொள்ள வேண்டும் என இலங்கையில் இருந்து ஒருவர் கூறிய பின்னரே அவர்கள் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு அர்துவரை தெரியாது என இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுதியுள்ளார். இது குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? 

பதில்:- இந்த விடயங்கள் குறித்து எனக்கும் தெரியாது நானும் தேடுகின்றேன். ஆரம்பத்தில் சில தகவல்கள் கிடைத்தது. தெற்காசியா இந்த பயங்கரவாத தாக்குதலில் சிக்கியுள்ளது என தெரியும் ஆனால் இலங்கையில் எவரும் தற்கொலை தரியாகா மாறுவார்கள் என நினைத்துப்பார்க்கவில்லை.   இந்த விடயத்தில் எதனையும் உடனே கூற முடியாது. இதனால் தான் இது வேறு சக்தியில் அழுத்தம் என நான் கூறுகின்றேன். ஆனால் இலங்கையில் முஸ்லிம்கள் அடிப்படிவாத பக்கம் தள்ளபடுகின்றனர் என்று தெரிகின்றது. சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் பாரிய பிரச்சினை வரும். 

கேள்வி:- தாஜ்சமுச்திரா விடயம் மற்றும் நீங்கள் கூறிய காரணிகளை கூற முடியாதா?

பதில்;- முடியாது 

கேள்வி:- சர்வதேச நாடுகளின் தொடர்பு குறித்தும் தெளிவான பதில் ஒன்று கூற முடியாது?

பதில் :- முடியாது. 

கேள்வி:- நீங்கள் அன்று கூறினீர்கள் தெளிவாக கூற முடியும் என. இப்போது தெளிவாக கூற முடியாது என கூறுகின்றீர்கள்? 

பதில்;- இவர்தான் என தெளிவாக கூற முடியாது. யாரையும் என்னால் கூற முடியாது. எனக்கு தகவல் பல வருகின்றது. ஆனால் ஆதாரம் இல்லாது எதனையும் கூற முடியாது என்றே நான் கூறுகின்றேன்.  நான் கூறிய முழுமையான விடயங்களை கேட்டுவிட்டு பின்னர் கேள்வி கேட்ட வேண்டும். நான் கூறிய காரணிகளை முழுமையாக கேட்காது ஒரு காரணிகளை வைத்துகொண்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளது. 

கேள்வி :நீங்கள் இருவரின் பெயரை கூறியுள்ளீரகள்.ஏன் இருவர் என கூறினீர்கள்?

பதில்:- யார் இருவர்

கேள்வி:- இல்லை இருவர் குறித்து அவ்வப்போபோது கூறினீர்கள்?

பதில்:-  இல்லை நான் இருவர் குறித்து கூறவில்லை. அந்த தாக்குதலின் பின்னை குறித்தும் ஏன் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிக்கவில்லை என்றுதான் கூறினேன். யார் யார் என என்னால் கூற முடியாது நாம் பெயர் விபரங்களை கூற முடியாது ஹோட்டல் விபரஙக்ளை பெறும் போது அது குறித்த தகவல்கலை உரிய  அதிகாரிகளிடம் பெறமுடியும். உங்களுக்கு விசாரணைக்கு அது தேவை எனில் அதனை பெற்றுக்கொள்ளுங்கள்.

கேள்வி:- வெளிநாட்டு சக்தி என இந்த விடயத்தில் கூறினீர்கள். அவ்வாறான  நிலை உள்ளதா

பதில்:- அப்படி நான் கூறவிலை, இன்று வெளிநாட்டு சக்திகள் இந்த நாட்டில் இயங்கும் செயற்பாடுகள் குறித்தே நான் கூறினேன். இப்போது என்னால் இது குறித்து என்னால் ஒன்றும் கூற முடியாது. பின்னர் என்னை மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரிப்பார்கள். அது பரவாயில்லை. 

கேள்வி:- ஊடகங்கள் இல்லாது எதாவது கூற விரும்புகின்றீர்களா?

பதில்:- இல்லை

கேள்வி;- உங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிந்துகொள்ளவே உங்களை நாம் வரவழைத்தோம். ஆகவே நீங்கள் கூறுவதே நல்லது?

பதில்;- மத்திய வங்கியில் மற்றும் ஏனைய வங்கிகளில் அவர்களுக்கு வந்த பணம் குறித்து ஆராயுங்கள் அப்போது தெரியும் சர்வதேச தொடர்பு என்ன என்பது. 

தெரிவுக்குழு:- நீங்கள் கூறிய காரணிகள் குறித்து நாம் மத்திய வங்கியிடம் மீண்டும் கேட்போம். நீங்கள் கூறுவதால் நாம் மீண்டும் கேட்கிறோம். 

பதில்:- சஹ்ரானுக்கு சர்வதேச பணம் நீண்டகாலமாக வந்துள்ளது. அது எவ்வாறு வந்தது. யார் அனுப்பியது என ஆராயுங்கள். 

கேள்வி:- சஹாரானுக்கு சர்வதேச பணம் வந்தது என்பது உங்களுக்கு உறுதியாக தெரியுமா? 

பதில்:- ஆம் அது தெரியும் தானே 

கேள்வி;- சஹ்ரானுக்கு எவ்வளவு பணம் வந்தது யார் மூலமாக வந்தது என்ற எந்த காரணிகளும் எமக்கு தெரியாது. அதுதான் கேட்கின்றோம். 

பதில்:- இந்த பொலிஸ் விசாரணைகளில் பல காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது. பலகை வீட்டில் இருந்த நபர் எவ்வாறு இவ்வளவு கோடி பணம் கிடைத்தது. பள்ளிவாசல் எவ்வாறு புனரமைக்கப்பட்டது. அவர்களின் தொடர்பாடலை பாருங்கள் அனைத்துமே பல கோடி பணங்களை கொண்டுள்ளது. அதுதான் கூறினேன். 

கேள்வி:- உங்களை அழைத்தமைக்கனா நோக்கம் ஊடாக உங்களிடம் சில தகவல்கள் இருப்பதனை அறிய முடிகிறது. ஆனால் அதனை முழுமையாக கூற  முடியாத நிலைக்கு சென்றுவிட்டீர்கள். 

பதில்:- எனது கூற்று  தொடர்பாக பல கருத்துக்களை  நிலைப்பாடுகளை நீங்கள் எடுக்கலாம். ஆனால் அது தொடர்பான பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நீங்கள் விசாரித்து விடை காணமுடியும்.

கேள்வி:- குருநாகல்  கைதில் தங்களால் ஒருவர் விடுவிக்கப்பட்ட  விடயம் என்ன?  

பதில்:-  அன்று எனது பகுதியில் சில கடைகள் தாக்கப்பட்டது. பலர் ஒன்றுகூடி இருந்தனச்ர். அங்கு நாமல் குமார என்ற நபரும் இருந்தார். அவர் என்னமோ திட்டம் தீட்டுகின்றார் என தெரிந்துகொண்டேன். நான் யாரையும் விடுவிக்க வில்லை. முன்னரேயே அவர்கலை விடுவிக்க முடிவுகல் எடுக்கப்பட்டது. 

இதன் பின்னர் மே 12 இல் குளியாப்பிடியவில் தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் பலர் கைது செய்யப்பட்டிருன்ர்தனர்.  அன்றிரவு பள்ளி வாசலும் தாக்கப்பட்டது.   நான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கதைத்தேன். நான் தலையிடாவிடில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும். அதனை தாக்க முயற்சித்தார்கள். அதன் பின்னர் நான் எனது வாகனத்தை இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுத்து விடுதலையானவர்கலை பாதுகாப்பாக கொண்டு சென்றேன். . மக்கள் தாக்குதலை நடத்துவார்கள் என அச்சம் ஏற்பட்டது. நான் அன்று மதிய உணவை உண்டபோது தமது கடைகள் மீது தாக்குதல் நடத்துவதாக இருவர் கூரிறினார். அங்கு சென்ற போது என் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அங்கு இரு கடைகளை தீ வைப்ப்திலிருந்து தடுத்தேன். இது தான் நடந்தது. கடைகளை தாக்கும் வரை நான் காத்திருக்கவில்லை. இவ்வாறே நானும் வாக்கு மூலம் கொடுத்தேன். சிங்கள முஸ்லீம் கலவரத்தை தடுக்க நான் முயர்சித்தேன்..தாக்குதலின்  3 கிழமைக்கு பின்னர். தான்  நடந்த்து. முஸ்லீம் கிராமங்களை சோதனை செய்யுமாறு கோரினேன். 21 தாக்குதலின் பின்னர். சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் தூங்காத நிலை இருந்தது. இந்த நிலை காரணமாக பொலிசார் சோதனைகளை மேற்கொள்ளவில்லை. சில பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்படவில்லை.  இன்னொரு விடயத்துக்காக நாம் இந்த கேள்வியினை முன்வைக்கின்றேன். இந்த தாக்குதலில் மூன்று வாரங்களுக்கு பின்னர் இந்த தாக்குதலை தடுக்கும் நோக்குடனேயே இந்த விசாரனைகளை நடத்துகின்றோம். முஸ்லீம் மக்கள் தொடர்பாக பல அச்சம் கானப்பட்டது. ஆயுதங்கள் காணப்பட்டது மீட்கப்பட்டது. இந்த பின்னணியில் சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.. முஸ்லீம்கள் மத்தியில்  பயங்கரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதலாளிகள் எவ்வாறு வந்தார்கள் என தெரியாது.

கேள்வி:-  நீங்கள் ஒரு முக்கிய கட்சியின் பிரமுகர் கடந்த ஞாயிறு கண்டி கூட்டம் ஒன்றில் இந்த நாடு சிங்கல நாடு என கூறப்பட்டது. இரு வர்ணம் அகற்றப்பட்ட  கொடி கொண்டுவரப்பட்டது இது குறித்த தங்கலின் நிலைப்பாடு என்ன?.

பதில்:- : தமிழ் தரப்பினர் தமது தலைவர் பிரபாகரன் என கூறுகின்றனர். சிங்கள அடிப்படை வாதிகள் சிங்கள  தரப்பு வாதங்களை முன்வைக்கின்றனர். இவ்வாறான விடயங்களால் மக்கள் அடிப்படை வாதங்கலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இது சிங்கள நாடு என அந்த தரப்பினர் நினைக்கின்றனர்.  முஸ்லீம் அமைச்சர்கள் உறுப்பினர்கள் இணைந்து முஸ்லீம் அரசையும் தமிழர்கள்  இணைந்து தமிழ் அரசையும் அமைக்க முடியுமா. சிங்கள மக்கள் பாரிய பிரச்சனைகலை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில் நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள்  என்ற வகையில் ஒன்றுபட வேண்டும். 

கேள்வி:- வெளிநாடு சக்திகளின் ஈடுபாடிருந்தால் இந்த விடயத்தில் அதனை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஜனாதிபதியை கொலை செய்வதற்கு வெளிநாடு சக்திகலின் சதி இருப்பதாக கூறப்பட்டது. இந்த இரண்டுக்கும் தொடர்பிருப்பதாக கூறமுடியுமா?

கேள்வி:- அவ்வாறு கூறமுடியாது. இது வேறு பிரச்சனை நான் அவ்வாறு கூற முற்படவில்லை. இந்த விடயம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனையாகும் 

கேள்வி:-  உயிர்த்த ஞாயிறு தாகுதலின் பின்னர் சகல பாதுகாப்பு கூட்டங்கலிலும் கலந்து கொண்டீர்கலா?

பதில் :- இல்லை

கேள்வி:- எப்போது கலந்துகொண்டீர்கள்?

பதில்:- தாக்குதல் ஆண்டு கூடிய கூட்டத்தில். 

கேள்வி:- அன்றா அடுத்த நாளா?

பதில்:- அடுத்த நாள். 

கேள்வி:- யார் உங்களை அழைத்தது?

பதில்:- ஜனாதிபதி

கேள்வி:-  தேசிய பாதுகாப்பு கூட்டங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள கூடாது. எத்தனை எதிர்கட்சி எம்பிக்கள் அதில் பங்கேற்ரனர். 

பதில் :- இவர்கள் தான் இருக்க வேண்டும் என சட்டம் இல்லை. தனக்கு தேவையானவர்களை  ஜனாதிபதி அழைப்பார்.  அவருக்கு நபிகையுள்ள நபர்களை அவர் அழைத்தார் அதில் எம்மையும் அழைத்தார் என்றே நினைக்கிறன். 

கேள்வி:- பாதுகாப்பு குழுக் கூட்டங்களில்நினைக்கும் நபர்களை அழைக்க முடியாது. இது அரசாங்கம் மட்டுமே ஆராய வேண்டிய விடயம். எதிர்கட்சிக்கு இது செள்ளக்கொடது?

பதில்:- ன்காவது அவ்வாறு கூறப்பட்டுள்ளதா, ஏதாவது புத்தகத்தில் அது உள்ளதா, இருந்தால் கூறுங்கள் நான் ஏற்றுகொள்கிறேன். 

கேள்வி:- வர்த்தமானியில் உள்ளது. பின்னர் இது மாற்றப்பட்டது. ஆனால் அதிலும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களை தான் வரவழைக்க முடியும். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைக்க முடியாது? 

பதில்:- நாம் இன்று எதிர்கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதியுடன் உள்ளோம். ஆகவே நாம் ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் எடுக்கின்றோம். ஆனால் பாதுகாப்பு கூட்டங்களின் காரணிகளை ஒருநாளும் நாம் அரசியலுக்காக பாவிக்கவில்லை. 

கேள்வி:- ஜனாதிபதிக்கு கட்சி உறுப்பினர்களுடன் பேச வேண்டும் என்றால் வேறு இடத்தில் பேச வேண்டும். ஜனாதிபதி இதனை தெரிந்துகொள்ள வேண்டும்?

பதில்;- ஜனாதிபதிக்கு நீங்கள் கற்பிக்க முடியாது. எங்காவது அப்படி இருந்தால் கூறுங்கள். 

கேள்வி;- பேரவை விடயங்களை அடிப்படையாக கொண்டு நீங்கள் சில விடயங்களை வெளிப்படுத்தினார்களா? 

பதில்: இல்லை நான் அதனை வெளிப்படுத்தவில்லை. 

கேள்வி:-  பேட்டியில் வழங்கிய தகவல்கள் அனைத்தும் நீங்கள் அறிந்த விடயஙக்ளாக இருக்கின்றனவா?

பதில் : ஆம் நான் அதனை அறிந்தே கூறினேன். 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found