V2025

முறைப்பாடளிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் காலஅவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டும், பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரிவில் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள கடந்த 4 ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரொருவரின் கீழ் இந்த முறைப்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found