V2025

மைத்திரியின் அழைப்பை நிராகரித்த தெரிவுக்குழு!

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தாக்­குதல் குறித்து   விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும்   உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  பேச்­சு­வார்த்­தைக்கு  அழைத்­த­போ­திலும், ஜனா­தி­ப­தியின் கோரிக்­கை­யினை தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் நிரா­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்­க­ளுடன்   சந்­திப்­பினை மேற்­கொள்­வ­தற்கு  ஜனா­தி­பதி விருப்பம்  தெரி­வித்­தி­ருந்தார். ஆனாலும்  பாதுகாப்பு அமைச்­ச­ரான   ஜனா­தி­பதி தொடர்­பிலும் தெரி­வுக்­கு­ழுவில் தற்­போது ஆரா­யப்­ப­டு­வதால், அவரை   சந்­தித்துப் பேசுவதை தவிர்ப்­பது நல்­லது என்று  தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள்   தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும்   தெரி­ய­வ­ரு­கின்­றது. 

நேற்­றைய தினம் தெரி­வுக்­குழு விசா­ரணை  ஆராம்­ப­மா­வ­தற்கு முன்னர்,  ஜனா­தி­ப­தியின் இந்தக் கோரிக்கை குறித்து விரி­வாக  ஆரா­யப்­பட்­ட ­போ­திலும் ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திப்­பினை தவிர்ப்­பது நல்­லது என  பல உறுப்பினர்களும்   கருத்து தெரிவித்தமையினால்,  ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found