V2025

மைத்திரி - ரணில் சந்திப்பு இரத்து; நடக்காது அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்று (10) இரவு இடம்பெறவிருந்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

இன்று (11) அமைச்சரவைக் கூட்டத்தை நடாத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கலந்துரையாடவே இந்த சந்திப்பு இடம்பெறவிருந்தது. இந்த பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, நாளையும் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாது இருப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவிருந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் உள்ளிட்ட ஐ.தே.கவின் பிரதானிகள் பலருக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found