V2025

"வைராக்கியம் அற்ற காலம்" - மாத்தறையில்ஆரம்பம்!

புத்தரின் தர்ம போதனையின் பிரகாரம் அனைத்து இன மக்களும் சமாதானத்துடன் ஒற்றுமையுடனும் வாழ, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

WhatsApp Image 2019 06 10 at 8.04.02 PM3

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பங்கேற்பில் “வைராக்கியம் அற்ற காலம்” (அவைரயே ஹோராவ) என்ற கருப்பொருளில் மாத்தறை பஸ் தரிப்பிடத்தில் இன்று (10) இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“மாத்தறையில் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் இவ்வாறான சத்தியாகிரகங்கள் இடம்பெற வேண்டும். அதுவே எனது ஆசையாகும்.

மாத்தறை மாவட்ட மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்,  எவ்வாறான சூழ்நிலையிலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். இனவாதத்திற்கு எதிரானவர்கள். அந்தவகையில் மாத்தறையில் ஆரம்பமான இந்த சத்தியாகிரக முயற்சியானது,  உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயமாகும்.

WhatsApp Image 2019 06 10 at 8.04.02 PM4

இலங்கையில் இனங்களுக்கிடையிலான வைரத்தை தோற்றுவிக்கவும், இனவாதம், மதவாதத்தை பரப்பி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு இடமளிக்காமல், அதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.

மாத்தறை மாவட்டமானது 95% சதவீதம் சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும். அந்தவகையில், புத்த தர்மத்தின் போதனையின் அடிப்படையில் அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானமும் ஒற்றுமையும் நிலைக்க நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்”என்றார்.

 

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found