V2025

G20 மாநாடு ஜப்பானில்!

அண்மைக் காலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இவ்வருடத்துக்கான G20 உச்சி மாநாடு ஜப்பானின் பியுகோகா நகரில் ஜூன் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக G20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு கடந்த சனிக்கிழமை ஜூன் 08 ஆம் திகதி நடைபெற்றது.

உலகின் முக்கிய பொருளாதார வல்லரசுகள் சந்திக்கும் இந்த G20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்களிடையேயான சந்திப்பு அதிக கவனம் பெறுகின்றது. அதிலும் அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் இடையேயான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றது.

ஆர்ஜெண்டீனா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்துனீஸியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாபிரிக்கா, தென்கொரியா, துருக்கி, ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து G20 நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found