V2025

ஒப்பரேசன் சக்ஸஸ்; ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷ என்பது உறுதியாகியுள்ளதாகவும், இதில் வேறெந்த  தெரிவும் எமக்கு இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்று (09) செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ போன்ற மக்கள் விரும்பும் தலைமைத்துவத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வலுவான வேட்பாளர் ஒருவரும், வலுவான வேலைத் திட்டமொன்றும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்த பின்னர், அடுத்த பொதுத் தேர்தலுக்கு பொது கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளையும் ஒரே குடும்பத்திற்கு வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மைத்திரிபால ஜனாதிபதியாகவே வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக வேண்டும். அவ்வாறு இல்லாது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்த இரண்டையும் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

"கோதா Full Fit"

இதேவேளை, கோத்தாபாய நோய்வாய்ப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருவது குறித்து, ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது, ''கோத்தாபாய ஃபுல் ஃபிட்டில் இருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.

எனினும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலையொன்றில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ராவய என்ற சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found